(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)
மன்மோகன் சிங் எப்படி அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கிறாறோ, அதே போல் கமல் நிருவை காதலித்த நாட்களில் துடித்து போனான்.
உலகத்தில் எல்லோரும் அழாகாக தெரிந்தார்கள் எல்லோரையும் நேசிக்க தொடங்கினான். உலகத்தில் எவறும் தவறு செய்யாதது போல் உணர்ந்தான். மொத்ததில் பருத்திவீரன் கார்த்தி போல் மாறி போய் இருந்தான்.
கடந்த மூன்று மாதகாலமாக தமிழக எதிர்கட்சி தலைவர் கோடநாட்டில் ஓய்வு எடுத்து ஜாலியாக இருப்பதுபோல் எதுபற்றியும் கவலை கொள்ளாது ரொம் ப ஜாலியான வாழ்க்கை வாழ்ந்தால் நிருபமா...எனெனில் கமல்தான் தினமும் செல்போனில் அவள் அழகை புகழ்கிறானே.
நடிகர் சத்யராஜ் மேல் புவனகிரியில் வசிக்கும் ஒருவன், இந்திய இறையான்மைக்கு வேட்டு வைத்தார் என்று பொதுநல வழக்கு போட்டு தமிழனுக்கு தமிழனே எதிரி என்று எப்படி மீண்டும் நிருபித்தானோ, அதே போல் கமலின் நண்பன் ஒருவன் கமல் பைனல் இயர் படிக்கும் போது நிருபமா அப்பாவிடம் போட்டு கொடுத்தான்.
உண்மை தமிழர்கள் எப்படி சுப்ரமணிய சுவாமியை பார்பார்களோ அதே போல் நிருவை அவள் வீட்டில் வெறுப்பாக பார்த்தார்கள் கமலின் தராதரம் தகுதி போன்றவை குறித்து கேள்வி எழுப்பபட்டது. எதிர்பார்த்த தகுதி இல்லாத காரணத்தில் நிரு பெற்றோர் கம்லை புறக்கனிக்க சொன்னார்கள். நிரு காதலித்தாலும் தொடர்ந்து பிரைன் வாஷ் செய்ததால் அவள் குழப்பிபோனாள் எனென்றால் நிருபமா பணக்கார பெண் என்று வாசகர்கள் எற்கனவே அறிந்ததுதான்
கமல் வீட்டில் அவன் காதல் தெரிந்த போது முதலில் தயங்னகினாலும் பின் தன் மகன் ஆசைக்கு குறுக்கே நிற்க்கவில்லை, ஒரே கேள்விதான் கேட்டார்கள்
“ ஏன்டா இந்த பொண்னு உனக்கு சரியா வருவாளா?” அது சொத்துள்ள பெண் என்பதற்க்கான கேள்வி அல்ல. அவள் உடை உடுத்தி கொண்ட விதம் கமல் பெற்றோரிடம் கேள்வியாக வந்தது.
கமல் எப்படியாவது அவளை கரம் பிடிக்க, நிறைய சம்பாதித்து அவள் எப்படி பிறந்த வீட்டில் இருந்தாலோ அதை விட இன்னும் சிறப்பாக அவளை வாழ
வைக்க உறுதி எடுத்தான் அவன் நேரம் அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா பக்கம் பார்வையை திருப்பிய நேரம் அது...
அப்போது அம்மா ஆட்சி தொழில் தொடங்க வந்த பன்னாட்டு நிறுவனங்களிடம்
100சி என்றால் பத்து சி எனக்கு என்று கணக்கு போட, எல்லோரும் பிடரியில் கால் பட துண்டை காணோம் துணியை காணோம் என பென்ஷனர் பாரடைஸ் பெங்களுர் ஓடினார்கள் அதனால் பெங்களுருக்கு கமலும் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐமேக்ஸ் தியேட்டர் எப்படி ஐதராபாத்துக்கு ஓடியதோ அதே போல் கமலின் நண்பர்கள் சிலர் ஐதராபாத்துக்கு ஓடினார்கள்.
கமல் நிரு உதட்டில் ஊர்வலம் நடத்தி இருந்தாலும் கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்ததால் பெங்களுருவில் அவனுக்கு மாதம்15000 சம்பளத்தில் வேலை கிடைத்தது கமல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாண்டிச்சேரி மகளிர் கல்லூரியில் நிரு கம்யுட்டர் சயின்ஸ் முடித்தால்.
பெங்களுரில் வேலை கிடைத்ததை போன் மூலம் விஷயத்தை சொன்னான் ஏனெனில் நேரில் சென்றால் தன் மனது அவளை பார்த்ததும் மாறி விட கூடாது என்பதற்க்காக. கமல் பெற்றோரிடம் ஆசி பெற்ற பெங்களுர் வந்து வேலையில் சேர்ந்த முதல்நாள் கமல் யோசித்தான்
தான் அவசரப்பட்டுவிட்டோமோ? நிருதான் பேரழகி என்று நம்பி இருந்தான், அவன் வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் நிறைய நிருபமாக்கள் இருந்தார்கள்
காரணமே இல்லாமல் கொஞச்ம் வெயிட் பண்ணி இருந்தால் நல்ல செல்போன் வாங்கி இருக்கலாம் .... என்ற ஜோக் ஞாபகத்துக்கு வந்தது ..உங்களுக்கு தெரியுமா? அந்த ஜோக்???
(தொடரும்)
அன்புடன் /ஜாக்கிசேகர்
/
ReplyDeleteமன்மோகன் சிங் எப்படி அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கிறாறோ, அதே போல் கமல் நிருவை காதலித்த நாட்களில் துடித்து போனான்.
/
ஹா ஹா
நக்கலு!?
:))))
/
ReplyDeleteகடந்த மூன்று மாதகாலமாக தமிழக எதிர்கட்சி தலைவர் கோடநாட்டில் ஓய்வு எடுத்து ஜாலியாக இருப்பதுபோல் எதுபற்றியும் கவலை கொள்ளாது ரொம் ப ஜாலியான வாழ்க்கை வாழ்ந்தால் நிருபமா...எனெனில் கமல்தான் தினமும் செல்போனில் அவள் அழகை புகழ்கிறானே.
/
இது அதுக்குமேல டாப்பு
:))))))
/
ReplyDelete"எதிர்பார்த்த" தகுதி இல்லாத காரணத்தில் நிரு பெற்றோர் கம்லை புறக்கனிக்க சொன்னார்கள்.
/
சாதி மதத்துக்கு அப்புறம் அடுத்தது இதுதான்!
/
ReplyDeleteஅப்போது அம்மா ஆட்சி தொழில் தொடங்க வந்த பன்னாட்டு நிறுவனங்களிடம்
100சி என்றால் பத்து சி எனக்கு என்று கணக்கு போட, எல்லோரும் பிடரியில் கால் பட துண்டை காணோம் துணியை காணோம் என பென்ஷனர் பாரடைஸ் பெங்களுர் ஓடினார்கள் அதனால் பெங்களுர் கமலும் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐமேக்ஸ் தியேட்டர் எப்படி ஐதராபாத் ஓடியதோ அதே போல் கமலின் நண்பர்கள் சிலர் ஐதராபாத் ஓடினார்கள்.
/
:))))))))))))
/
ReplyDeleteதான் அவசரப்பட்டுவிட்டோமோ? நிருதான் பேரழகி என்று நம்பி இருந்தான், அவன் வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் நிறைய நிருபமாக்கள் இருந்தார்கள்
/
ஹா ஹா செம ட்விஸ்ட்டு!!
கலக்குங்க
கலக்குற ஜாக்கி!
ReplyDeleteஇந்தக் கதை ரொம்ப இன்ட்ரஸ்ட்டா போவுதே! நீ கதை சொல்ற ஸ்டைலும் சூப்பரா இருக்கு. தொடர்ந்து எழுது. கொஞ்சமா ரீரைட் பண்ணிப் போட்டீன்னா இன்னும் பெட்டரா இருக்கும்.
நன்றி சிவா வேறு என்ன செய்ய
ReplyDeleteவரி வரியாக வாசித்து பாராட்டியமைக்கு நன்றி சிவா
ReplyDeleteஇப்போது சாதி மதத்தை விட தராதரம் பார்க்கிறார்கள் சிவா , சரியாக சொன்னீர்கள்
ReplyDeleteசத்யா தொடர்ந்து உங்கள் வாசிப்புக்கும் உங்கள் அறிவுரைக்கும் நன்றி, முயற்ச்சி செய்கிறேன்
ReplyDelete//கொஞச்ம் வெயிட் பண்ணி இருந்தால் நல்ல செல்போன் வாங்கி இருக்கலாம் .... என்ற ஜோக் ஞாபகத்துக்கு வந்தது ..உங்களுக்கு தெரியுமா? அந்த ஜோக்???//
ReplyDeleteதெரியும் அடுத்து என்ன புது நிருபமாவா இல்ல பழைய நிருபமாவா??
நிறைய தமிழ் சினிமா பார்க்கிறாய் இவன்
ReplyDelete//நிறைய தமிழ் சினிமா பார்க்கிறாய் இவன்//
ReplyDeleteகொஞ்சம் ஓவராத்தான் பாக்கிறமோ??
அப்படி போடு அருவாள... வேகமா போய் ஒரு யு டர்ன் போட்டுடீங்க..
ReplyDeleteஇது 3 பாகம் வரைக்கும் கதையாத்தான் போனுச்சு, ஆனா இப்ப அரசியல் பக்கம் திரும்பிடுச்சு. ஆனாலும் உவமை எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteகலக்குங்க. சீக்கிரம் எழுதுங்க.
//நிறைய தமிழ் சினிமா பார்க்கிறாய் இவன்//
ReplyDeleteகொஞ்சம் ஓவராத்தான் பாக்கிறமோ?
இவன் என்னையும் ஏன்யா சேத்துக்கறீறு
வெண் இன்னும் நிறைய டேர்ன் இருக்கு
ReplyDeleteஜோசப் சமகாலத்தில் நடந்த விஷயங்களை என் கதைகளில் சேர்க்கிறேன்
ReplyDelete//நிறைய தமிழ் சினிமா பார்க்கிறாய் இவன்//
ReplyDeleteகொஞ்சம் ஓவராத்தான் பாக்கிறமோ?
இவன் என்னையும் ஏன்யா சேத்துக்கறீறு
என்ன்ங்கண்ணா இதெல்லாம் பெருசா எடுத்துக்கலாமா??
யோவ் பெருசால்லாம் எடுத்துக்கல
ReplyDelete//யோவ் பெருசால்லாம் எடுத்துக்கல//
ReplyDeleteok ok leave it ennala mudiyala
100சி என்றால் பத்து சி எனக்கு ---- Ithu than Super!!!!
ReplyDeleteநன்றி எஸ் எஸ் பி.
ReplyDeletecellphone joke theriyaadhe?
ReplyDeletepazhaso, pudhuso, edho oru model vaangithaane aaganum. oru varusham kazhichu maathikkalaam! hehe ;-)
கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்த நல்ல செல்போன் வாங்கலாம் அதே போல் கொஞ்சம் வெயிட்பண்ணி இருந்தா நல்ல பொண்ணு கிடைக்கும் அதுதான் செல்போன் ஜோக்
ReplyDelete