கலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)
கூட்டனி ஆட்சி என்பதால் அதிக முறை அனைத்து கட்சி கூட்டம் கூட்டியது முதல்வர் கலைஞர் அவர்கள்தான். போன ஆட்சியில் எப்படி ஆட்சி நட்ந்தது ,எப்படி எல்லாம் கூட்டனி தலைவர்கள் நடத்தப்பட்டார்கள் என்பதை நாடும் அறியும் ,தைலாபுரத்துகாரரும் அறிவார். எந்த செயல் செய்தாலும் மக்கள் தொலைகாட்சியை, லாபத்துக்காக நடத்தாமல் தமிழை வளர்க்க நடத்தப்படுவது பாராட்டுக்குறியதே... ஆனால் நீண்ட கால திட்டங்களான விமான நிலைய விரிவாக்கம், புதிய நகரம் போன்றவற்றை எதிர்த்ததை, யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதற்க்குகாரணம் தன் ஜாதி மக்கள் குடியிருப்புகளை கலைத்தால் தன் சாதி ஓட்டுக்கள் கலைந்து விடும் என்பதே... இதனால் வளரும் சென்னைக்கு ஏற்ற விமானநிலையத்தை இன்னமும் விரிவாக்க முடியாமல் அரசு இருக்கிறது. போன ஆட்சியில் எவராலும் எந்த கருத்தையும் அம்மாவிடம் துணிந்து சொல்ல முடியாது.மரியாதை கிடையாது. கூட்டனி கட்சி தலைவர்கள் கிள்ளுகிரையாகவே நடத்தப்பட்னர். அம்மா தரிசனத்துக்காக தைலாபுரத்துக்காரர் காத்து இருந்ததை போயஸ் தோட்டத்து பல்லி,பறவைகள் போன்றவைகள் பார்த்து எள்ளி நகையாட, எங்களுக்கு உரியமரியாதை இல்லை என்று வெளியே வந்ததை நாடு அறியும் . ராமதாஸ் மேல் ஒரே ஒரு விஷயத்தில் அவர்மேல் என்க்கு மரியாதை உண்டு ,அது கல்வி கட்டண உயர்வுக்கு குரல் கொடுத்தால் போன கல்வியாண்டில் நிறைய நண்கொடை வசூலிக்கப்பட்ட கல்வி நிறுவணங்கள் கண்காணிக்கப்பட்டதால், பெற்றோர் சுமை ஓரளவுக்கு குறைக்கப்பட்டது. தன் கலைஞர் ஆட்சியில் எல்லாவற்றிர்க்கும் ஒருநொட்ட சொல் ஒரு நொள சொல் சொன்னால் எவரால் ஏற்றுக்கொள்ள முடியும். பொதுவாக டென்டர்கள் கூட்டனி கட்சி அலோசனை படியே பிரித்து ஆர்டர் கொடுக்கப்படுகின்றது உம் கலர் டிவி, மணல் டெண்டர் போன்றவை.. பா ம க வுக்கு என்று ஓட்டு வங்கி தென்னாற்காடு மாவட்டத்தை தவிர்த்து எங்கும் இல்லை, அதே போல் போன தேர்தலில தென்னாற்காடு மாவட்டம் விருதாசலத்தில், தே,மு,தி,க விடம் தோற்றதே அதற்க்கு ஒப்பற்ற சாட்சி. அதே போல் 2011 ல் நல்லாட்சி பா.ம.க அமைக்க நல்வாழ்த்துக்கள், நமக்கு ராமன் ஆண்டாலும் ஒன்றுதான் ராவணன் ஆண்டாலும் ஒன்றுதான். எம்மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
(குறிப்பு /கட்ந்த சில பதிவுகளின் பின்னுட்டத்தில் நான் கலைஞர் விட்டு பக்கத்து விட்டுகாரன் போல் சிலர் எழுதினார்கள். நான் ராதகிருஷ்ணன் ரோட்டில் கடற்கரை செல்லும் வேளையில்,சட்டென மனசு மாறி சினிமா பார்க்கும் ஆசையில் கோபாலபுரம் வழியாக சத்தியம் தியேட்டர் செல்வேன். அவ்வளவே கலைஞருக்கும் எனக்குமான சம்பந்தம்...)
“ எத்தனை நாளைக்கு மேயற மாட்டை, நக்கற மாடு உதைப்பதை பொறுத்துக்கொள்ளும்.” கலைஞர் எடுத்த முடிவு சரியே....
அன்புடன் / ஜாக்கிசேகர்
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு இது சரியாக தான் படுகிறது.
ReplyDeleteஉட்கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முனைந்ததாக தகவல்,
திரு.கருணாநிதி ஒரு சிறந்த அரசியல்வாதி தான்
வால்பையன்
இது உங்களை பின்தொடர
ReplyDeleteவால்பையன்
idhuvae ennaip poruththa varai miga migath thaamathamaana mudivu.
ReplyDeleteநம்ம தோள்ல ஒக்காந்துட்டு.. நீ ஒயரம் போதல.. சரியா நடக்க மாடங்கறன்னு கொற சொல்லிட்டு திரியிற கொழுப்பெடுத்தவனுக..
ReplyDeleteமத்ததெல்லாம் இனி கட்சிக்காரங்க பாத்துப்பாங்க.. தொவச்சி காயபோட்றுவாங்கல்ல.. :)
//போன ஆட்சியில் எப்படி ஆட்சி நட்ந்தது ,எப்படி எல்லாம் கூட்டனி தலைவர்கள் நடத்தப்பட்டார்கள் என்பதை நாடும் அறியும்//
ReplyDeleteஇது புதுசாகீதே மேட்டரு. இப்போ இருக்கிறது தான் மைனாரிட்டி ஆட்சி. போன தபா இருந்ததுமா?
அப்புறம் விருத்தாசலத்திலே பா.ம.க. தோத்ததினால அம்புட்டு தான் அப்படீன்னு ரொம்ப பேரு அலப்பறை கொடுத்துகிட்டு இருக்காங்க.
நிற்க.
தமிழகத் தேர்தல்களிலேயே அதிக இடங்களில் அதிக முறை மரண அடி வாங்கியது தி.மு.க. தான் என்றொரு புள்ளி விபரம் இருக்கிறது. மறுக்க யாராவது இருக்காங்களா? இப்போ ஜெயிக்கறதை, தோக்குறதை மட்டும் வெச்சு பேச ஆரம்பிச்சா 77லேயே தி.மு.க. கிடையாது சார்.
***
கொஞ்சம் எழுத்துப் பிழைகளை தவிருங்கள் ஜாக்கி சார்
Only one point. Why kalaignar is giving this much importance to alliance members is because it is a minority government. if it is a majority government then you could have felt the way kalaignar would have behaved. History speaks tose for itself. Thanks,
ReplyDelete(குறிப்பு /கட்ந்த சில பதிவுகளின் பின்னுட்டத்தில் நான் கலைஞர் விட்டு பக்கத்து விட்டுகாரன் போல் சிலர் எழுதினார்கள். நான் ராதகிருஷ்ணன் ரோட்டில் கடற்கரை செல்லும் வேளையில்,சட்டென மனசு மாறி சினிமா பார்க்கும் ஆசையில் கோபாலபுரம் வழியாக சத்தியம் தியேட்டர் செல்வேன். அவ்வளவே கலைஞருக்கும் எனக்குமான சம்பந்தம்...)
ReplyDelete“ எத்தனை நாளைக்கு மேயற மாட்டை, நக்கற மாடு உதைப்பதை பொறுத்துக்கொள்ளும்.” கலைஞர் எடுத்த முடிவு சரியே....)
:-)))
puduvai siva.
நன்றி வால்பையன்,சிவா,மாயவரத்தான்,பாலாஜி,இசை ராப், எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நேரமின்மை காரணமாக எல்லோருக்கும் பின்னுட்டம் இட முடியாததுக்கு வருந்துகிறேன்
ReplyDelete