ஜாக்கெட் போடாமல் ஆடிய நயன்தாரா... திருந்துமா ? தினத்தந்தி....


தினத்தந்தி ரொம்ப நாளைக்கு பிறகு நேற்றுதான் ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும விபத்து குறித்து ரொம்ப விளாவரியாக எழுதியது. அதற்க்கு நல்ல ரெஸ்பான்ஸ். நேற்று பஸ் நிறுத்தங்களில், போலிஸ் ஷேர் அட்டோக்களை கண்கானித்தது. அதனால் சென்னை போக்குவரத்து நெரிசல் ரொம்பவும் குறைவாக இருந்தது.


இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து , வெகு ஜன மக்களால் பெரிதும் விரும்பி வாசிக்கபடும் பத்திரிக்கைகளில் வந்தால் அரசு அதிகாரிகளுக்கும் ஒருபயம் வரும். ஆனால் தினத்தந்தி எந்த கட்சி ஆளுங்கட்சியாக வந்தாலும் அதற்கு ஜால்ரா போட்டு, எழுதுவதையே வடிக்கையாக கொண்டுள்ளது. ஏனெனில் அரசு விளம்பர வருவாய் போய் விடும் என்ற பயம் காரணம். சரி நேற்று வெளியிட்ட செய்திக்கு இன்றைக்கு நகரில் என்ன நிலமை அதற்க்கு அதிகாரிகள் என்ன மாதிரி நடவடிக்கை எடுத்தார்கள் என்பது பற்றி ஒரு பாலோ அப் கொடுத்தால் என்ன குடி மூழ்கியா போய்விடும்???


நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பாராட்டினால் இன்னும் மேலும் நல்லது நடக்கும்அதை செய்யாமல் நயன்தாரா சத்யம் படத்துக்காக, ஜாக்கட் அணியாமல் துணிச்சலாக ஆடினார் என்பதை கட்டம் கட்டி போட்டு இருக்கிறார்கள். நயன்தாரா காசு கொடுத்தால் அவுத்து போட்டுகூட ஆடுவார். அதுவும் ஜாக்கட் இல்லாமல் துணிச்சலாக ஆடினாராம். அவர் என்ன துணிச்சலாக விபத்தில் கவிழப்போகும் ரயிலை நிறுத்தினாரா? அல்லது துணிச்சலாக வேறு ஏதாவத செய்தாரா? முதல்மரியாதையில் நடிகை ராதா ஜாக்கெட் போடாமல் நடித்தார்,அது வேறு காலகட்டம் இப்போது பல கதாநாயகிகள் பிரா உடன் ஆடுகிறார்கள். அது இன்னும் அந்த செய்தி சேகரித்த நிருபருக்கு தெரியவில்லை போலும்,

நயன்தாரா, ஜாக்கட் ,துணிச்சல் போன்றவை விடுத்து இன்னும் மக்களுக்கு பயன் தரும் பல விஷயங்களை தந்தியிடம் எதிர்பார்க்கிறோம். எனென்றால் எத்தனை பத்திரிக்கை வந்தாலும் தந்திக்கு தமிழ் மக்களுக்குமான உறவு ரத்த சம்மந்தமான உறவு, அதை புரிந்து மக்கள் பிரச்சனைகள் அதிகம் முன்வைக்கபட வேண்டும் என்பதே எனது விருப்பம்

அன்புடன்/ ஜாக்கிசேகர்...

25 comments:

  1. //நயன்தாரா காசு கொடுத்தால் அவுத்து போட்டுகூட ஆடுவார்//

    ஜாக்கீ சேகர் ..இந்த வரி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது..உங்களுக்காக கூறியது.. பதிவு சிறப்பாக இருந்தாலும்..இதை போல வரிகள் அதன் நோக்கத்தை குறைத்து விடுகிறது ..இதை வெளியிட வேண்டாம்..உங்களுக்காக நான் கூறியது..

    முடிந்த வரை இதை போல வரிகளை தவிருங்கள்

    ReplyDelete
  2. ஜாக்கெட் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையா... அது சரி நீர் இப்போது தான் தந்தி படிக்கிறீரா... தமிழ் சினிமாவின் தரம் எப்போதோ பரணில் ஏற்றப்பட்டு விட்டது. இப்போது ரசிகர்கள் உட்பட அனைவருமே எடுப்பான... பகட்டான காட்சிகளை விரும்புகிறார்கள் என்பதே உண்மை. இந்த கால மாற்றத்துக்கு தகுந்தாற்போல நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வெகுஜன ஊடகங்கள் பயணத்தை தொடர்கின்றன. ஒரு வார்த்தையில் சொல்லப்போனால்...
    மீடியாக்களுக்கு வேற வழியில்லைங்க..

    ReplyDelete
  3. //நயன்தாரா சத்யம் படத்துக்காக, ஜாக்கட் அணியாமல் துணிச்சலாக ஆடினார் என்பதை கட்டம் கட்டி போட்டு இருக்கிறார்கள்.//
    இப்படி செய்தி போட்டாத்தாங்க என்னைப்போல் இளசுகள் எல்லாம் படிப்பாங்க.... அது மட்டுமில்ல நயன்தாராதான் அடுத்த முதல்வர் என்று கூட எங்கையோ படித்த ஞாபகம்...

    // நயன்தாரா காசு கொடுத்தால் அவுத்து போட்டுகூட ஆடுவார்.//
    ஜாக்கிசேகர் பாய் அது எப்படி உங்களுக்குத்தெரியும்?? :-)))))

    ReplyDelete
  4. //நயன்தாரா காசு கொடுத்தால் அவுத்து போட்டுகூட ஆடுவார்.//

    இந்த வரியைத் தவிர்த்து இருக்கலாம். ஒரு நடிகை என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் எழுதலாமா?

    ReplyDelete
  5. கிரி உங்கள் தாழ்மையான கருத்துக்கு எனது நன்றி,நான் சீனுவாசன் மகனாக அல்லது ரங்கராஜன் மகனாக இருந்தால் அது போன்ற வாக்கியம் வராது ஆனால் நான் தெரு தெருவாய் ஜாக்கட் துணி விற்ற சத்யாவிடன பேரன் நான் , வார்த்தைகளும் வாக்கியமும் சூழ்நிலை போன்றவைகள்தான் தீர்மானிக்கின்றன. இதுபோல் எழுத மாட்டேன் என்று என்னால் உறுதி சொல்ல முடியாது . ஆனால் குறைக்க முயற்ச்சிக்கிறேன் கிரி... தொடர்ந்து என் பதிவை படித்து பின்னுட்டம் இடுவதற்க்கு என் நன்றிகள்

    ReplyDelete
  6. இவனே, ஏதோ, ஒரு ஃபளோவில் எழுதி விட்டேன் மன்னியுங்கள்

    ReplyDelete
  7. //அதுவும் ஜாக்கட் இல்லாமல் துணிச்சலாக ஆடினாராம்//
    அந்த படம் எங்கே? :P

    ReplyDelete
  8. ரொம்ப அலையாதிங்க சன்ஜய் தலைவரே

    ReplyDelete
  9. நயனிடம் இன்னும் நிறைய்ய்ய.... துணிச்சலை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  10. அதாவது நீங்க பில்லாவை விட அதிகமான துணிச்சலை எதிர்பார்ப்கிறீர்கள் என்பது புரிகிறது இந்தியன்...

    ReplyDelete
  11. //எனென்றால் எத்தனை பத்திரிக்கை வந்தாலும் தந்திக்கு தமிழ் மக்களுக்குமான உறவு ரத்த சம்மந்தமான உறவு, அதை புரிந்து மக்கள் பிரச்சனைகள் அதிகம் முன்வைக்கபட வேண்டும் என்பதே எனது விருப்பம்//

    அது என்ன ரத்த சம்மந்தம்? எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் விளக்குவீர்களா?

    ReplyDelete
  12. என்ன கொடுமைங்க இது?

    ஃபோட்டோ கீட்டோ போட்டிருப்பீங்கன்னு ஓடி வந்து பாத்தா, ஒரே பொலம்பல்ஸா இருக்கே? :)

    ReplyDelete
  13. பொதுவாக அம்மா ,அப்பாமற்றும் உறவினர்கள் ஆசிரியர்கள் எழுத்து கூட்டி படிக்க உதவுவார்கள். நாங்கள் கிராமத்தில் படிக்கக தந்தி ஏற்படுத்திய ஆர்வமே காரணம் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்காகது என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள் என்பதை விளக்க அப்படி எழுதினேன்.. சூர்யா கேள்வி கேட்பது ரொம்ப ஈசி.. ஆனா இதுக்கு பதில் மழுப்பலா எழுதறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு..

    ReplyDelete
  14. //அவர் என்ன துணிச்சலாக விபத்தில் கவிழப்போகும் ரயிலை நிறுத்தினாரா? அல்லது துணிச்சலாக வேறு ஏதாவத செய்தாரா?

    :-)

    ReplyDelete
  15. /
    தந்திக்கு தமிழ் மக்களுக்குமான உறவு ரத்த சம்மந்தமான உறவு, அதை புரிந்து மக்கள் பிரச்சனைகள் அதிகம் முன்வைக்கபட வேண்டும் என்பதே எனது விருப்பம்
    /

    இதுவரை தந்தியில் வந்த எத்தனை செய்திகளை பாராட்டி பதிவு வந்திருக்கும் நயந்தாரா செய்தி என்றவுடன் பதிவு வருதுல்ல!?

    :))

    ReplyDelete
  16. /
    SanJai said...

    //அதுவும் ஜாக்கட் இல்லாமல் துணிச்சலாக ஆடினாராம்//
    அந்த படம் எங்கே? :P
    /

    ரிப்பீட்டேஏஏஏஏஏய்

    ReplyDelete
  17. ரவி எனக்கு கோபம் நயன் மேல் இலலை கோபம் செய்தி வெளீயிட்டில்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்ணணணணடும்

    ReplyDelete
  18. நன்றி சரவனகுமார் தங்களி்ன் கருத்துக்கு

    ReplyDelete
  19. சிவா உண்மைதான் நயன் என்றவுடன்தான் நிறையபேர் படிக்கிறார்கள்

    ReplyDelete
  20. சர்வேசன் போட்டோ இருந்தா நான் ஏன்க போட போறேன், நானே வச்சுக்கமாட்டேன்

    ReplyDelete
  21. //சர்வேசன் போட்டோ இருந்தா நான் ஏன்க போட போறேன், நானே வச்சுக்கமாட்டேன்//
    photoவைப்போட்டு திரும்ப பதிவ போடுங்க.... குறைந்தது தலைவியின்(தலைவிதி) பெரிய photoவாவது போடுங்க

    ReplyDelete
  22. //நயன்தாரா காசு கொடுத்தால் அவுத்து போட்டுகூட ஆடுவார்//

    Correct-ta sonninga Boss...

    ReplyDelete
  23. நன்றி சென் உங்கள் ஆதரவுக்கு

    ReplyDelete
  24. நீ ரொம்ப நல்லவனா இருப்ப போலிருக்கே! இதுவரை இவ்வளவு (பத்து நிமிடம்னு வச்சுக்கங்க)நேரம் ஒரே வலைப்பதிவை தொடர்ந்து மேய்ந்ததில்லை, உங்களது தவிற.

    ReplyDelete
  25. நன்றி சத்யா, என் பக்கத்தில் பொன்னான நேரத்தை ஒதுக்கியமைக்கு

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner