ஒரு விபத்து நேரில் பார்த்தேன் ஆனால் ஏதும் செய்யமுடியவில்லை நீங்களாக இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்??
நேற்று இரவு மிகச்ரியாக 10,15 க்கு பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வழியாக நான் கிண்டி வரவேண்டும். லேசாக மழை தூரிக்கொண்டு இருந்தது. நானும் எனது நண்பியும் எனது இரண்டு சக்கர வாகனத்தில் பயணப்பட்டோம். தாம்பரம் மேம்பாலம் ஏறும் போது சரியாக சொல்வதென்றால் பழைய அனுராக தியேட்டர் எதிரில் பலவாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
நான் வாகனங்கள் உள்ளே பயணித்து சில வாகனங்களை கடந்த போதுதான், அது மிகப்பெரிய விபத்து என்பது புரிந்தது. ஒரு பெரிய சரக்கு லாரி ரோடு ஓர மீடியனில் மோதி கவிழ்ந்து இருந்தது. லாரிக்கு கீழே 45 வயது மதிக்கதக்க ஒருவர் தலை முழுவதும் ரத்தத்துடன், கால் கை கொஞச்ம் வெட்டி வெட்டி சுய நினைவு இல்லாமல் இழுத்துக்கொண்டு இருந்தார்,இன்ஸ்பெக்டர் விறைப்பான உடுப்புடன் மேலதிகாரிகளுக்கும் , தகவல் சொல்லி கொண்டு இருந்தார் . லாரியின் டிரைவரும் கிளினரும் அதற்க்குள் புற முதுகிட்டு ஓடி இருந்தார்கள்.
யாரோ ஒரு புண்ணியவான் ரத்தத்துடன் துடித்து கொண்டுஇருந்தவருக்கு தவித்த வாய்க்கு தண்ணி ஊற்றினார் முன்று அடி தூரத்தில் டீவிஎஸ் 50தன் உருவத்தை இழுந்து அலங்கோலமாகி இருந்தது. விபத்தை பார்த்ததும் என் நண்பி என் தோள் பட்டைபிடித்து கடவுளே என்று முனகினாள் கொஞ்சம் தூரத்தில் சரவணஸ்டோர்
கட்டை பை அந்த உயிருக்கு போராடும் மனிதர் போல் அனாதையாக கிடந்தது.
எல்லா வாகனங்களும் வழிகிடைத்தால் ஓடி விடும் மனநிலையில் இருந்தன...
எனக்கு போக வழி இருந்தும் எனக்கு போக மனம் இல்லை. என்வாகனத்தையும் நண்பியையும் அங்கே நிறுத்திவிட்டு நான் விபத்து நடந்த இடம் நோக்கி நடந்தேன் அதற்க்குள் பின்னால் இருக்கும் வாகனங்கள் விழி ஏற்படுத்தி ஒரு பெரிய பேருந்து செல்ல அதன்பிறகு வந்தத ஒரு பிரஸ் வண்டி அந்த வண்டி எங்கிருந்து வநத்து என்று தெரியவில்லை...
நான்கு பேர் சின்ன டிஜிட்டல் கேமரா உடன் துடித்து கொண்டு இருப்பவரை சேர்த்து படம் எடுத்து கொண்டு இருந்தனர் . தூரத்தில்ஒரு ஏட்டு ஐயா வாக்கிடாக்கியுடன் இன்ஸ்பெக்ட்ருக்கு மிக பவ்யமாக சலாம் போட்டார். இன்னும் அந்த ஒருவர் துடித் கொண்டு இருந்தார். யாரோ ஒருவர் மிக அருகில் பார்த்து விட்டு காது வழியாக ரத்தம் வந்து விட்டது அதனால் பிழைப்பது கடினம் என்றார்.
நான் எதாவது உதவலாம் என்று சென்றேன் இன்ஸ்பெக்டர் இருந்ததால் கூடும் கூட்டம் நேற்று இல்லை, இன்ஸ்பெக்டர் அது ஒரு கடுமையான வேலை பளு என்பதால் அவர் கடுகடுப்புடன். இருந்தார்
தூரத்தில் எங்காவது சைரன் சத்தம் கேட்கிறதா? என்று பார்த்தேன் அதற்க்கான எந்த சாத்திய கூறும் இல்லை. ஒரு வேளை ரத்த சேதம் அதிகம் என்பதால் அம்புலன்ஸ் இன்னும் வர வில்லையோ? இன்ஸ்பெக்டர் இப்போது பேசினார்
செல்போனில் இன்ஸ் பேசியது தெளிவாக கேட்டது “ சார் இப்பதான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் நடந்தது ஆம்புலண்ஸ்க்கு சொல்லிட்டேன்..
ஆனால் அந்த இன்ஸ்பெக்டர் நினைத்து இருந்தால் எதாவது மீன்பாடி வண்டி பிடித்து அந்த ஒருவரை அனுப்பி இருக்கலாம். இன்னும் அந்த ஒருவர் ரத்த சகதியில் துடித்து கொண்டு இருந்தார்.
தூரத்தில் என் நண்பி நிற்க்கும் இடம் நோக்கி நான் பார்த்த போது அவள் லேசாக தள்ளாடுவது தெரிந்தது. அருகில் செல்லவும் அவள் என்மீது சரியவும் சரியாக இருந்தது. மயக்கம் வந்தது ஒரு பெண் என்பதால் திடிர் என்று நாலு பேர் வந்தார்கள் . ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் ஓடி வந்தார்
வந்த நாலு பேரில் ஒருவர் என்னை ரொம்ப உரிமையுடன் திட்டினார்.
“ என்சார் இந்த மாதிரி இடத்துல லேடிஸ் சோட நிக்கறீங்க” முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை மயக்கம் தெளிவித்து வண்டியில் உடக்ர்ந்து மெதுவாக வண்டி
கிளப்பினேன். அவள் என்னை முதகு பின்னே அனைத்து கொண்டாள். அவள் கைகளில் நடுக்கத்தை உணரமுடிந்தது. யாரோ ஒருவர் திட்டியது ஞாபகம் வந்தது. அந்த விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சீக்கிரம் முதலுதவி கிடைத்து உயிர் பிழைக்க வேண்டினோம்
எப்போதும் வேகம் எடுக்கும் வண்டி நேற்று நாற்பதுக்கு மேல் தாண்டவில்லை, வீடு திரும்பும் வரை நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. வரும் வழி முழுவதும் வேகமாக அம்புலன்ஸ் ஏதாவது வருகிறதா என ஆர்வத்துடன் பார்த்தேன் மிஞ்சியது ஏமாற்றமே...
இதுவே கிரமமாக இருந்தால் அந்த ஒருவர் அம்புலன்ஸ் வரும் வரை துடித்து கொண்டு இருக்கமாட்டார், இந்நேரம் ஒரு டிராக்டர் அல்லது எவருடைய தோள்களே அம்புலன்ஸ் ஆகியிருக்கும் ..
வீடு வந்து வெகு நேரம் நான்துங்கவில்லை. அலங்கோலமான டீவிஎஸ் 50யும் ,சரவணாஸ்டோர் கட்டை பை யும் நினைவில் வந்து போயின....
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
:-(((((((((((((((((((
ReplyDeleteமனிதம் மரித்துவிட்டது ஜக்கிசேகர்... சும்மா ஜாலியா ஒரு பின்னுட்டம் போடலாம் என்றுதான் பார்த்தேன் ஆனால் என் மனிதாபிமானம் தடுக்கிறது.... முடிந்து போன இந்த நிகழ்வுக்காக எதுவும் செய்ய முடியாது... ஆனால் இது போல் இனிமேல் நடக்காமல் தடுக்க முடியுமே... அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஜாக்கிசேகர்??
ReplyDeleteஇவன், பார்க்காத உங்களுக்கே இவ்வளவு வலி என்றால் பார்த்த எனக்கு எப்படி இருக்கும், ஒரு விபத்து நடந்த உடன் சட்டென்று அந்த இடத்தை விட்டு அகலவே நினைகிறோம் . அதுபோல் இல்லாமல் கூடுமானவரை அந்த இடத்தில் இறங்கி நம்மால் ஏதாவது செய்யமுடியாமா என்று பார்க்க வேண்டும்
ReplyDeleteஎன்ன சின்ன இது வெறும் சோக சிம்பிள் மட்டும்
ReplyDeleteI've undergone the same trauma...Still I shiver thinking of the scene but could do nothing on the spot..
ReplyDeleteanbudan aruNaa
மனதை வருத்தும் ஒரு சோக நிகழ்வுதான், கட்டாயமாக உதவி செய்ய வேண்டும். போலீசாரின் தொல்லைகளுக்குப் பயந்தே பலர் உதவ முன் வருவதில்லை.
ReplyDeleteநானும் இதுபோல் ஒரு விபத்தைப் பார்க்க நேரிட்ட எனது அனுபவத்தை ப்ளாக்கில் எழுதியிருக்கிறேன், வாசித்துப் பாருங்கள்..............
மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த நிலையில் யார் இருந்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது ஏனென்றால் நம் சட்ட திட்டங்கள் அப்படி
ReplyDelete:(((((((((
சரியாக சொன்னீர்கள் சிவா, நம் சட்டதிட்டங்கள் அப்படித்தான்
ReplyDeleteநன்றி விபி அருணா அவர்களே. சில இடங்களில் பரிதாபத்தை தவிர வேறு என்ன செய்து விட முடிகிறது
ReplyDeleteஆதி அவர்களே உங்கள் கருத்து தான் என் கருத்தும்
ReplyDelete//ஆனால் இது போல் இனிமேல் நடக்காமல் தடுக்க முடியுமே... அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஜாக்கிசேகர்??//
ReplyDelete108 ”டயல்” செய்யுங்கள் . அக்டோபர் மாதத்திலிருந்து.
மேலும் விபரங்களுக்கு அவசர பிணியாளர் ஊர்தி சேவை - சில கருத்துக்கள் மற்றும் விபரங்கள்
மற்றும்
http://payanangal.blogspot.com/2008/05/108.html
//ஏனென்றால் நம் சட்ட திட்டங்கள் அப்படி //
ReplyDeleteஇல்லை. சட்டங்கள் மாற்றப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டது
//சில இடங்களில் பரிதாபத்தை தவிர வேறு என்ன செய்து விட முடிகிறது//
1. வருங்காலங்களில் உங்கள் அலைபேசியிலிருந்தே 108 எண்ணிற்கு ”டயல்” செய்து விபத்து குறித்து கூறவும். அவர்களே காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு கூறிவிடுவார்கள்
2. உங்கள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றில் இரத்த தானம் செய்யலாம்
3. 108 சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின் (அக்டோபர் மாதம்) அது குறித்து பரவலாக தெரிவிக்கவும்
4. (அடிபட்டவருக்கு தண்ணீர் தருகிறேன் என்று அவரது) கழுத்தை அசைக்க வேண்டாம்
5. காதில் இரத்தம் வந்தால் பிழைக்க மாட்டார் என்பது வதந்தி. காதில் இரத்தம் வந்தாலும் பிழைக்கலாம். காதில் இரத்தம் வராத பலர் பிழைக்க வில்லை
6. விபத்து நடந்த உடன் வாகன ஓட்டிகளை அடிக்காமல் இருந்தால், அவர்களே மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பார்கள்
அந்த இடம் எப்பொழுதுமே பல விபத்துக்கள் நடக்கும் இடம். ஒரு முறை பாரத் கல்லூரி இளைஞர் அடிப்பட்டு மரணிக்கக் காரணமாக இருந்ததும் இதே ஆம்புலன்ஸ் பிரச்சினைதான். அப்பொழுது மாணவர்கள் வன்முறையில் இறங்கியதால் பின்னர் சில நாட்கள் கொஞ்சம் சரியாக இருந்தது. ஆனால் திரும்பவும் பழையக் குருடி கதவத் திறடி கதையாகவே மாறிவிட்டது போலும்
ReplyDeleteநன்றி புருனோ தங்கள் விரிவான பினனுட்டத்திற்க்கு நன்றி
ReplyDeleteபுருனோ சட்டதிட்டங்கள் மாற்றப்ட்டு விட்டன, ஆனால் நம் மக்கள் மன நிலை மாறிஇருக்கிறதா? நான் ஆம்புவன்ஸ்க்கு போன் செய்யவே நான் சென்றேன். இன்ஸ்பெக்டர் அம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லிவிட்டார் என்று தெரிந்த பிறகுதான் நகர்ந்தேன்
ReplyDeleteநன்றி ராப் விபத்து நடந்த அடுத்த நிமிடம் லாரி டிரைவர் எஸ்கேப். நண்பர் புருனோ சொல்வது போல் வாகன ஓட்டிகளை அடிக்காமல் இருந்தாலே அவர்களும் உதவி செய்வார்கள். எனெனில் அவர்களும் மணிதர்கள் தானே...
ReplyDeleteஎன் தந்தை ஒரு விபத்தில் எங்கள் கிராமத்தில் அடிபட்டார். தஞ்சையிலிருந்து 32 கிமீ தொலைவில் இருக்கும் எங்கள் கிராமத்திலிருந்து தஞ்சைக்கு அவரை அழைத்துவரும் வரை காதில் இரத்தம் வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் பரிசோதித்து பார்த்த போது அது ஒன்றும் பயப்படும்படியானது அல்ல என்று சொன்னார்கள் ( மூளையில் அடிபடவில்லை). மிக ஆரோக்கியமாக இருக்கின்றார். காதில் இரத்தம் வந்தால் பிழைப்பது சிரமம் என்று சில புரியாதவர்கள் தங்களுக்கு தெரிந்த அரைகுறை மருத்துவ அறிவுடன் கூறுவது மிக வேதனைக்குறியது. அது பாதிக்கப்பட்டவரது குடும்பத்தினரை எந்த அளவு மனதளவில் பாதிக்கும் என்பது புரியாமல் அவர்களிடமே கூட சொல்பவர்களும் உண்டு என்பது கொடுமையிலும் கொடுமை.
ReplyDeleteநம் நாட்டின் மக்கள் தொகை 110 கோடியை தாண்டிவிட்டதால் தான் மனித உயிர்களுக்கு இங்கே மதிப்பில்லாமல் போய்விட்டதோ?
ஆமாம் ஜோசப். இங்கே மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லாமல் தான் போய்விட்டது
ReplyDeleteசேகர் ரொம்ப வருத்தமா இருக்கு.. ரெண்டு நாள் ஒண்ணுமே ஓடாது இல்ல? ரெண்டு முறை சாலை விபத்தில் அடிபட்டு ஒரு முறை மரணத்தின் வாசலை நெருங்கி விட்டு இன்னும் சரி வர நடக்க முடியாமல் இருப்பவன் என்ற அளவில் சொல்கிறேன் நகரங்களில் மனிதாபிமானம் குறைந்து தான் போய்விட்டது. பெங்களூர் மற்றும் சென்னை இரு மகா நகரங்களிலும் அடிபட்ட என்னை சீந்துவார் யாரும் இல்லை. உங்களுக்கு அந்த மனிதர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் இருக்குது பாருங்கள் அது ரொம்ப சங்கடமாக இருக்கும். மருத்துவர் ப்ருனோ சொன்னது போல் இனி 108 போன்ற வசதிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.
ReplyDeleteஆம் jackiesekar உங்கள் ஊரில் மட்டுமல்ல இலங்கையிலும் அப்படித்தான்.சரி நாம தான் உதவுவம் என போனாலும் கூடி உள்ள சனம் "பொலிஸ் கேஸ் தலையிடாதை" எண்டு தடுக்கும்.வண்டி காரர்களும் தப்பியோடிவிடுவார்கள்.கூடி விடுப்பு மட்டும் பார்ப்பார்கள். இது மட்டுமல்ல பஸ்சில் பிற் பொக்கற் அடிப்பார்கள் சனம் கண்டு கொள்ளாத மாதிரி நடந்து கொள்வார்கள்.
ReplyDeleteபிரேம் இதனால் நான் மறுநாள் தந்தி கூட வாங்கவில்லை,ஏதாவது அந்த சேதி பற்றி சோகமான செய்தி வந்தால் படிக்க நேரிடும் என்ற பயம், என்னை பொருத்த வரை அந்த நபர் மருத்துவ உதவி கிடைத்து நலமுடன் இருப்பார். நம்பிக்கையே வாழ்கை....
ReplyDeleteநன்றி வருன் தேடிப்பிடித்து பின்னுட்டம் இட்டதிற்க்கு
ReplyDelete//ஆமாம் ஜோசப். இங்கே மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லாமல் தான் போய்விட்டது//
ReplyDeleteகசப்பான உண்மை
தமிழகத்தில் 108 சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஏற்படும் மரணங்கள் பாதியாக குறைந்து விடும்.
ReplyDeleteமேலும் 40 சதம் குறைய வேண்டுமென்றால் மற்றொரு சட்டம் கடுமையாக்கப்படவேண்டும் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 2 நாட்கள் ஜெயில் என்று !!!
ஆமாம் புருனோ நிறைய சாலை விபத்துகள் நடக்க முக்கிய காரணம் போதை தான் . உங்கள் கருத்தை நான் வரவேற்க்கிறேன்
ReplyDelete////ஆனால் இது போல் இனிமேல் நடக்காமல் தடுக்க முடியுமே... அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஜாக்கிசேகர்??//
ReplyDelete108 ”டயல்” செய்யுங்கள் . அக்டோபர் மாதத்திலிருந்து.
மேலும் விபரங்களுக்கு அவசர பிணியாளர் ஊர்தி சேவை - சில கருத்துக்கள் மற்றும் விபரங்கள்
மற்றும்
http://payanangal.blogspot.com/2008/05/108.html//
இதோ இருக்கிறதே ஜாக்கி வழி நன்றி புருனே இதப்பற்றி ஒரு பதிவும் அப்படியே போட்டிடுங்க....
மன்னிக்கனும் புரூனே இப்பொழுதான் உங்கள் பதிவைப்பார்த்தேன்
ReplyDelete