
கலைஞர் குடும்பத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தனது மகன் அழகிரி பேச்சை கேட்டு சன்டீவியை பகைத்து கொள்ள கூடாது. ஏனெனில் அழகிரியின் ஆளுமை என்பது மதுரை நகர் மட்டுமே ஆனால் சன் டீவியின் ஆளுமை என்பதுஉலகளாவிய ஆளுமை.. அதனை கலைஞர் புரிந்து கொள்ள வேண்டும். பாசம் கண்ணை மறைக்க கூடாது.ஏனெனில் இப்போதே அவர்கள் வாரம் இரண்டு சரத்குமார் படம் ,இரண்டு விஜயகாந் படம் போடுகிறார்கள் .அதே போல் விலைவாசி உயர்வை பாரபட்சம் இல்லாமல் காட்டுகிறார்கள் இவைகளை வர வேற்க்க வேண்டும்தான்.ஒரு நல்ல மீடியா எப்படி இருக்க வேண்டுமோ, அதுபோல் இப்போது பாரபட்சம் இல்லாமல் சன்டீவி நடந்துகொண்டு இருக்கிறது. (உம்) வைகோ நடந்துவருவதை மட்டும் காண்பிக்காமல் அவர் பேசுவதை காட்டி அவர் பிறவி பயன் அடைய காரணமாக இருக்கிறார்கள், அதே போல் சிலை போல் இருக்கும் ஜெயலலிதா போட்டோவை காட்டி செய்திகள் போடும் அவர்கள் இப்போதெல்லாம் அன்னை மலர்ந்த முகத்துடன் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடும் காட்சிகளை காட்டுகிறார்கள்.நல்ல விஷயம்தான் இப்போதாவது அவர்களுக்கு புத்தி வந்ததே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும். அதே போல் ஜெயாடீவி சரியாக நான்கு வருடங்கள் சின்ன எதிர்ப்புகள் தெரிவித்துவிட்டு தேர்தலின் போது சாக்கடையோரம் வாழும் மக்களை படம் எடுத்து போட்டு விட்டு தமிழ்நாடே அதுபோல் இருப்பதாக தொடர்ந்து தேர்தல் வரை அவதூறு பரப்புவார்கள். இதுதான் கடந்தகாலங்களில் நடந்தது. அதேபோல் தேர்தல் நேரத்தில் சன்டீவியும் சாக்கடைப்க்கம் போய் படம் எடுக்க விட கூடாது. என்னதான் மாய்ந்து மாய்ந்து செய்தாலூம் தேர்தலின் போது சாக்கடை காட்டி நம் தமிழ்நாடு இப்படிதான் இருக்கிறது என்றால்அதை கண்ணை முடி எற்றுக்கொள்வார்கள். எனெனில் காமராஜரை தோற்கடித்து ,அரிதாரம் பூசியவர்களை 5 தடவை முதல்வராகஆக்கியவர்கள் நாம்.. கலைஞர் உள்ளாட்சி தேர்தல் வைத்து எல்லா கிராமங்களிளும் வளர்ச்சி பணிகளை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன். ஆத்திரத்தில் தற்கொலை செய்து கொண்ட என்கிராமத்து பக்கத்துவீட்டுகாரர் மனைவி (சித்ரா) நான்கு பெண்களுடன் தேங்காய் நாரில் கயிறு திரித்து காலம் தள்ளி கொண்டு இருந்தார் கெரசின் வாங்க நாய் போல் அலைவார் ,டீவி பார்க்க அந்த பிள்ளைகள் என் விட்டுக்குவருவார்கள்,அரிசி வாங்க ரெஷனுக்கு அலைவார், என் அம்மா எங்களை சின்ன வயதில் வளர்க்க கஷ்ட்டப்ட்டதுபோல் அவரும் கஷ்டப்பட்டு கொன்டுஇருந்தார். கலைஞர் அரியனை ஏறினார், அந்த குடும்பம் 3 வேளை வயிறார இரண்டு ருபாய் அரிசியில் சாப்பிட்டார்கள். இலவச டீவி கொடுத்தார்கள் கொஞ்சம் குடும்பம் கலகலப்பானது. கேஸ் அடுப்பு கொடுத்தார்கள் நாயாய் கெரசினுக்கு அலைவது நிறுத்தப்பட்து , கிராமங்களுக்கு சிமெண்ட் ரோடு போடபட்டது. விஷம் போல் ஏறும் இந்த பெட்ரோல் வி

அன்புடன் /ஜாக்கிசேகர்
நன்றி நொந்தகுமரன்,
ReplyDeleteஅவர்களின் (சன் தொலைக்காட்சி) திமிரை தான் எதிர்க்கிறார், தாங்கள் நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்ற நினைப்பை தகர்க்க ஒரு ஆண்பிள்ளை நினைப்பது தவறா? ரத்த பாசத்தில் கலைஞர் தவறு செய்தார் அவர் இன்று திருந்தி விட்டார்.உண்மையாக பார்த்தால் நல்லது செய்யும் கலைஞர் இன்று ஈழ தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியாமல் போனதற்கு சன் தொலைக்காட்சியும் ஒரு காரணம்,இவர்கள் அன்றே வைகோ வை தங்கள் தொலைக்காட்சிகளில் காட்டி இருந்தால் இன்று தனித்து ஆட்சி அமைத்து இருப்பார் காங்கிரஸ் கட்சிக்கு பயப்பட தேவையில்லை தானே. அன்று, என் தந்தை நெஞ்சு வலி வந்தது போல் நடிக்கிறார் அதனால் அவர் முகத்தை என் தொலைக்காட்சிகளில் காட்ட மாட்டேன் என்று தன் தாத்தா சொல் மீறிய பேரன் இன்று எந்த முகத்தை வைத்து கொண்டு வைகோ முகத்தை காட்டுகிறார். கலாநிதி மாறன் இன்று மாறியதற்கு அன்றே மாறி இருந்தால் கலைஞருக்கு பலம்தானே. கலாநிதி மாறன் பணத்திற்காக எதையும் செய்வார். எதையும் ...................
நன்றி திலீபன் உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன். மிகச் சரியாக
ReplyDeleteஎன் எண்ண ஓட்டத்திற்க்கு ஏற்ப எழுதியிருக்கிறீர்கள்
jackiesekar said..."வைகோ நடந்துவருவதை மட்டும் காண்பிக்காமல் அவர் பேசுவதை காட்டி அவர் பிறவி பயன் அடைய காரணமாக இருக்கிறார்கள்"
ReplyDeleteதீலிபன் said..."இவர்கள் அன்றே வைகோ வை தங்கள் தொலைக்காட்சிகளில் காட்டி இருந்தால் இன்று தனித்து ஆட்சி அமைத்து இருப்பார்"
ஏன்யா வைகோவ இப்பிடி கேவலப்படுத்துறீங்க.
குளத்தோட கோவிச்சுக்கிட்டு குண்டி கழுவாம போன கத தான் இந்தாளு கத.
இன்னைக்கு எங்கண்னே ராயல் கேபிள் ஆரம்பிச்சுருக்காருல்ல. சன் டிவிகாரய்ங்களுக்கு இனிமே ஆப்புதான்.
தல இருக்கும்போது வாலு ஆடக்கூடதுண்னே.ஆடுனா அப்புறம் அண்டிராயர கழட்டிருவாய்ங்க. அரசியல்னா என்னான்னு அண்னன்,தம்பிகளுக்கு இப்ப கொஞ்சம் புரிஞ்சிருக்கும்.
எம்.ஜி.ஆர், வைகோ, மாறன் குரூப்பு இப்பிடி எத்தன பேர் மோதினாலும் அவிய்ங்க மண்டதாண்னே ஒடயும்.
தி.மு.க. ஆலமரம்.சன் டிவி இல்லாமலும் அது தழைக்கும்.
கழகத்தின் மீதும், தலைவர் கலைஞர் மீதும் நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு நன்றி.
மேற்கோள் காட்டிய வரிகள் அருமை .. அவர்கள் இல்லாமலூம் கழகம் தழைக்கும் அவர்கள் நடுநிலையோடு செய்தி வெளியிட்டால், நன்றி ஒரிஜினல
ReplyDelete/ எம்.ஜி.ஆர், வைகோ, மாறன் குரூப்பு இப்பிடி எத்தன பேர் மோதினாலும் அவிய்ங்க மண்டதாண்னே ஒடயும். /
ReplyDeleteஎம்.ஜி.ஆர் Joke.....Everyone knows who's got hurt....and why தி.மு.க suffering till now.....