
லட்சிய இளைஞர்கள் (தமிழ் சினிமா உதவி இயக்குநர்கள்)
அழுக்கேறிய ஜுன்சும்
ஆறுமாதகால தாடியும் தான்
இவர்களின்
அடையாளங்கள் ...
தொடர்ந்து புகைப்பதால்
தடித்த உதடுகளும்
எண்னைப் பார்க்காத தலையும்
அவர்களின்
அக்மார்க் முத்திரைகள்...
தூக்கம் தொலைந்த
கண்களில்
அரை நூற்றாண்டு
சரித்திரத்தை மாற்றும்
கனவுகள் இலவசம்.
புரிந்தாலும்
புரியாவிட்டாலும்
ஒரு நாவல் புத்தகம்
ஒரு கைக்குறிப்பேடு
இவர்களின் கையில்
நிச்சயம் இருக்கும்
தெருவோர
டீக்கடைகள் தான்
இவர்கள் இளைப்பாறும்
வேடந்தாங்கல்.
இவர்களின்
பெற்றோர்களின் கனவு
தன் மகனை
மருத்துவராகவோ
பொறியாளனாகவோ
பார்க்கத்தான் ஆசை
ஆனால்
இவர்களின் கனவோ
வேறானது...
திருமண வயதை தாண்டி
ஜன்னல் வழியாக
சாலை வெறித்துப்
பார்க்கும்
சகோதரிகள்...
ஒரு பக்க நுரையீரலை இழந்து
காச நோயால் அவதிப்படும்
அம்மா...
வெள்ளாமை பொய்த்தால்
ஐம்பது வயதிலும்
வேதனைப்படும்
அப்பா...
இது
எதுபற்றியும் இவர்களுக்கு
கவலை இல்லை
இவர்களின் ஒரே கவலை
"வாழ்நாள் கவலை"
நல்ல தமிழ் சினிமா
எடுப்பது தான்...

(சமர்ப்பணம் சினிமா பற்றிய புரிதல் இல்லாது சினிமா பார்ப்பதாலேயே தாணும் ஒரு இயக்குநராக மாறவேண்டும் என்று தென்மாவட்டங்களிலிருந்து பஸ் பிடிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும்)
தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நொந்தபடியே,
அன்புடன் - ஜாக்கிசேகர்
(புகைபடத்துக்கும் கவிதைக்கும் எந்த தொடர்பும் இல்லை)
(குறிப்பு தமிழ்மணத்தில் நான் இனைவதற்க்குமுன் எழுதிய பதிவு இது மீண்டும் நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க....)
பதிவர்கள் படித்து ரசித்து கருவிபட்டையில் ஓட்டு போடவும்
/
ReplyDeleteஎதுபற்றியும் இவர்களுக்கு
கவலை இல்லை
இவர்களின் ஒரே கவலை
"வாழ்நாள் கவலை"
நல்ல தமிழ் சினிமா
எடுப்பது தான்...
/
கவர்ச்சி "குத்து பாட்டுடன்"
என்பதை குறிப்பிட மறந்தீர்களா? இல்லை வேண்டாம் என விட்டுவிட்டீர்களா?
:))))))
குத்து பாட்டு எடுக்க சொல்லி நிர்பந்த படுத்துகிறார்கள், பேரரசு போன்ற ஆட்களை யாரும் நிர்பந்த படுத்துவது கிடையாது,,,, நன்றி சிவா
ReplyDelete