மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை (பாகம் 2)(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)கமல் தன் இளவயதில் எந்த விஷயத்தை ஒருமுறைக்கு இரு முறை யோசித்து பார்த்து முடிவு எடுக்க கூடியவன். கிரிகெட்டா? படிப்பா? என்ற கேள்வி எழுந்த போது, படிப்பு மட்டுமே என்று விளையாட்டுக்கு டாட்டா சொன்னவன்.

பண்ணிரெண்டாம் வகுப்பு வரை கேந்திரிய வித்யாலயாவில் படித்தவன்.நல்ல மதிப்பெண் பெற்று , அலுவலக சகாக்கள் மத்தியில் தன் அப்பாவை, தலைநிமர வைத்தவன். வளர்ந்த பையனிடம் அம்மா உச்சி முகர்ந்த போது ரொம்பவே வெட்கப்பட்டவன். தன் தங்கையின் நண்பிகள் கை குலுக்க முன் வந்த போது ,கை கூப்பி வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டவன்.

அவன் வயது ஒத்த நண்பர்கள் எல்லோரும்,கிண்டி ஜோதி தியேட்டருக்கும்,இல்லையென்றால் சரோஜா தேவியும் படித்த போது அதை விடுத்து என்டரண்ஸ் எக்ஸாமுக்கு படித்தவன், உழைப்பின் பலனாக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பொறியியல் கல்லுரரியில் சீட் கிடைத்தது நன்கு படித்தான் . கமல் எந்த ஆசிரியரையும் பட்ட பெயர் வைத்து அழைத்துது இல்லை.

கமலுக்கு நிறைய பெண் நண்பிகள் வட்டம், எனென்றால் சின்ன மார்போ, பெரிய மார்போ, எந்த பெண்ணாக இருந்தாலும் கண் பார்த்து பேசுபவன். ஒரு முறை அவன் தங்கை அவனை மிகவும் பாராட்டினால் காரணம் , அவள் நண்பிகள்
“ ஹேமா அண்ணன் போல் பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்தாபோல பார்க்காம ” இவ அண்ணன் ரொம்ப ஜென்டிலா இயல்பா நட்ந்துக்கிட்டான்டிஎன்று சான்றிதழ் கொடுத்தற்க்காக...

கமலுக்கு ஒரே அசைதான் தான் நன்கு படித்து நல்ல நிலையில் இருக்க வேண்டும் அம்மா , அப்பா பார்த்த மணப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். தான் எப்படி கற்புள்ள பெண்ணை எதிர்பார்க்கிறோமோ, அதே போல் தானும் ஊர் மேயவே கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டவன்.

பொறியியல் நான்கு ஆண்டு முடிந்து மேற்படிப்புக்கு அவன் தேர்வு செய்த கல்லுரரி, பீர் முப்பதுரூபாய்க்கு கொடுத்து விட்டு சைட்டிஷ் அறுபது என கொள்ளை அடிக்கும் பாண்டிச்சேரி அருகே உள்ள கல்லுரரி. எம்பிஎ நன்றாக படித்தான்.

நிறைய விஷயங்களில் கமல் நல்ல பையனாக இருந்தாலும், அவன் பீர் குடிப்பான் அதுவும் வாரத்தி்ற்க்கு ஒருமுறை. எனென்றால் அப்போதுதான் பீர் கூல்டிரிங்ஸ் லி்ஸ்டில் சேர்க்கப்ட்டது( நீங்கள் முந்திரி கொட்டை போல் அவன் குடிகாரனாகி இருப்பானோ? என்று யோசிக்க கூடாது)அப்போது கல்லுரரியில் அறிமுகமானவள் தான் நம்ம ஹிரோயின் லட்சுமி. மன்னிக்கவும் நாம என்ன ஜெயகாந்தன் காலத்துலயா இருக்கறோம்? அவ பேரு மார்டனா நிருபமானு பேர் வைக்கலாம் செல்லமா நிரு... நிருவை பார்த்த உடனே கமல் திருதிருன்னு முழிச்சான்.


சொர்னமால்யாவை பார்த்ததும் பிரகாஷராஜிக்கு எப்படி லைட் எறிஞ்சு மணி அடிச்சதோ? அதே போல இரண்டு பேருக்குமே இங்க மணி அடிச்சு லைட் எறுஞ்சுதுதான் ஆச்சர்யம்.

இப்போது நிருவை பற்றி சொல்வது என் கடமையாகிறது. கமல்ஒரு பெண்ணின் கண் தவிர்த்து பிற இடங்களை, அவன் கவனிக்கிறான் என்றால் அவளின் அழகை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

ஒருவரியில் சொல்வதென்றால் அந்த பெண்ணுக்கு எல்லாமே எடுப்பாக இருந்ததால் கமல் மனது எகிடுதகிடாக தடுமாற ஆரம்பித்தது. லோக்கல் பாஷையில் சொல்வதென்றால் அவள் குமால்டிக்கான அழகாக இருந்தாள்.

அந்த நொடியில் இருந்து சனியனை அவன் பனியனுக்குள் பிடித்து போட்டான், கமல் எனும் நல்லவன்....
( தொடரும்)


அன்புடன்/ ஜாக்கிசேகர்

16 comments:

 1. /
  அந்த பெண்ணுக்கு எல்லாமே எடுப்பாக இருந்ததால் கமல் மனது எகிடுதகிடாக தடுமாற ஆரம்பித்தது
  /

  சும்மா 'நச்'னு இருக்கு

  கதை கதைய சொன்னேன்!!


  சீக்கிரம் தொடருங்கள்.

  ReplyDelete
 2. ம்.. தொடரட்டும் ஆட்டம்..

  ReplyDelete
 3. சிவா நச்சுன்னு நீங்க கதையதான் சொல்லி இருக்கிங்க....

  ReplyDelete
 4. எழுத்தை தேடி அடிக்கறதுக்குள்ள போதும் போதும் னு ஆயிடுத்து நன்றி பாபு ட்டியன்

  ReplyDelete
 5. நல்லாருக்கு
  (சிவாண்ணன் மாதிரி சொல்ல முடியலை...)

  ReplyDelete
 6. /
  தமிழன்... said...
  நல்லாருக்கு
  (சிவாண்ணன் மாதிரி சொல்ல முடியலை...)
  /

  தமிழனா இருந்து இதுக்கெல்லாம் தயங்கினா எப்படி!?!??

  ReplyDelete
 7. //சொர்னமால்யாவை பார்த்ததும் பிரகாஷராஜிக்கு எப்படி லைட் எறிஞ்சு மணி அடிச்சதோ? அதே போல இரண்டு பேருக்குமே இங்க மணி அடிச்சு லைட் எறுஞ்சுதுதான் ஆச்சர்யம்//
  super

  ReplyDelete
 8. //செய்த கல்லுரரி, பீர் முப்பதுரூபாய்க்கு கொடுத்து விட்டு சைட்டிஷ் அறுபது என கொள்ளை அடிக்கும் பாண்டிச்சேரி அருகே உள்ள கல்லுரரி//

  புதுவையில் இப்படி நடப்பதாக நான் இதுவரை கேட்டதில்லை (நான் புதுவைக்காரன் தாங்க)
  அதெப்படிய்யா பாண்டிச்சேரின்னாலே உங்களுக்கு குடிக்கிறது மட்டும் தான் நினைவுக்கு வருது. முடியல சாமிகளா

  ReplyDelete
 9. நன்றி ராப் ,ஸ்பெல்லிங் கரெக்டா தலை

  ReplyDelete
 10. பிரேம் நீயாவது பாண்டி நான் கடலுரர்காரன். உங்களை விட எங்களுக்குதான் அதிகம் தெரியும் தலை.நுற்றுக்கு 90 சதவிகிதம் பேர் பாண்டின்னா தண்ணிதான் ஞபகத்துக்கு வரும் நண்பரே

  ReplyDelete
 11. படிக்கிறோம்ல, நல்லா நகருது... அடுத்து.. அடுத்து :)

  ReplyDelete
 12. நன்றி தெகா.தங்கள் ஊக்குவி்ப்புக்கு

  ReplyDelete
 13. நொந்தகுமாரன் அவர்களே நல்ல சுவாரஸ்யமாய் கதை எழுதியுள்ளீர்கள். எனக்கு உங்கள் எழுத்துநடை ரொம்பப் பிடிச்சிருக்கு. ''அந்த நொடியில் இருந்து சனியனை அவன் பனியனுக்குள் பிடித்து போட்டான், கமல் எனும் நல்லவன்...." ‍இதெல்லாம் புதுசு. அப்புறம் நீங்க நிருபமான்னு பேர் வச்சதும் பிடிச்சிருக்கு. நிருபமாவையும் பிடிச்சிருக்கு.

  தொடரட்டும் உங்கள் பணி.

  ReplyDelete
 14. நன்றி சத்யா, தாங்கள் அனுபவித்து படித்துள்ளீர்கள் என்பதை உங்கள் மடல் சொல்கிறது

  ReplyDelete
 15. ஆஹா இப்பத்தான் ஆப்பு ரெடியாகுதா?? மீதி எப்போ??

  ReplyDelete
 16. நன்றி இவன் , வைத்துக்கொண்டு வஞச்னை செய்யவில்லை, யோசிக்கிறேன் . இன்னும் சிறப்பாக எழுத.....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner