இலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....
இலங்கை தமிழனாக பிறந்து இருந்தால் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனாவது தட்டி கேட்பார். எம் மக்கள் மீது கை வைக்க நீ யார் என்று கேள்வி கேட்பார், இந்திய தமிழனாக பிறந்ததால் யாரும் கேட்க நாதியில்லை இதுவரை 400 க்கு மேற்பட்ட மீனவர்கள் சிங்கள படையால் சுடப்பட்ட இறந்து இருக்கிறார்கள்.
கர்நாடகத்தில் உதை வாங்குகிறோம், கேரளா அனை உயரம் ஏற்ற மறுக்கிறது, ஆந்திராவில் பாலாற்றில் அனைகட்ட போகிறார்கள்.
இதுவரை யாரும் கேட்டதில்லை, தலைவர் கலைஞருக்கு டயட் கன்ட்ரோல் இருக்க வேண்டும் என்று யாரோ சொல்ல அதை தவறுதலாக தன் உடன்பிறப்புகளுக்கு சொல்லி உண்ணாவிரதத்தை அறிவித்து இருக்கிறார்
விடுதலைபுலி திலீபன் இந்திய அரசு கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் இருந்தார்
அவருக்கு என்ன நிலமை ஏற்பட்டது என்று உலகம் அறியும்....
அதனால் யாராவது உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் எனக்கு சிரிப்புதான் வருகிறது...
காவிரி பிரச்சனைக்கு புரட்சி தலைவி உண்ணாவிரதம் இருந்தார்கள் , காவிரி பிரச்சனை தீர்ந்து விட்டதா என்ன???
அன்புடன்/ ஜாக்கிசேகர்
Labels:
செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
அக்கரைக்கு இக்கரை பச்சைங்க..வேற என்னாத்தச் சொல்ல..
ReplyDeleteமதுவதனன் மௌ.
ஒரு ஆதங்கத்துல சொல்லிட்டேன், எம் உறவுகள் நிலை இதை விட மோசம் என்பது அறியாதுதா???
ReplyDeleteமிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். என்ன செய்வது, இப்படி பட்ட தலைவர்கள் தானே நமக்கு கிடைத்தவர்கள்.
ReplyDeleteஆட்சியிலே இருந்தா உண்ணாவிரதம் - இல்லேன்னா அறிக்கை - அவ்வளவுதான்.
ReplyDeleteபொதுமக்கள் பிரச்சினையை followup செய்து முடிப்பதெற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லைங்க...
நன்றி சின்ன பையன் , ரொம்ப நபளா ஆளையே கானோம், அப்ப வந்து தரிசனம் கொடுங்க, தன் பொறுப்பை மறந்தவர்கள்தான் நமக்கு தலைவராக இருக்கிறார்கள்
ReplyDeleteஜோ நன்றி ,
ReplyDeleteஅய்யா தயவு செய்து ஈழத் தமிழர் என்று எழுதவும். இலங்கை தமிழர் என்பது ஏதோ உறுத்துவது போல் உள்ளது
ReplyDeleteசரிதாங்க சேகர்...
ReplyDeleteநம்மால ஒண்ணும் பண்ண முடியாது.. இப்படி பதிவு போட்டோ,பின்னூட்டமிட்டோ ஆதங்கப் பட்டுக்க வேண்டியதுதான்...
மத்தியிலும் இவர்கள், மாநிலத்திலும் இவர்களே... பின் எவர் கவனத்தை கவர உண்ணாவிரதமோ? இருக்க இருக்க அரசியலையும் அரசியல்வாதிகளையும் நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி கிரேட் அடுத்த முறை ஈழத்தமிழர் என்று எழுதுகிறேன்
ReplyDeleteதமிழ் ரொம்ப சரியா என் எண்ணத்தை வெளிப்படுத்தினிங்க.... எழுதிதான் கோபத்தை தீர்த்துக்க வேண்டியதா இருக்கு...
ReplyDeleteவெண் சில நேரங்களில் கடிதம் எழுதிகிறேன் என்கிறார் அதற்க்கான பதில் இதுவரை மக்கள் மன்றத்தில் சொன்னது இல்லை..
ReplyDeleteஉண்ணாநோன்பு அறிவிப்பைக் கேட்டவுடன் எனக்கும் சிரிப்பு தான் வந்தது. அதிலும் அவர் சொன்ன காரணம் இருக்கே ரொம்ப மொக்கையா இருந்தது. "தமிழக மீனவர்கள் சிங்களப் படையால் கொல்லப்படுவதைக் கண்டித்தும், நடுவன் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும்".
ReplyDeleteஏற்கனவே மன்மோகன் அரசு தொங்கிக்கொண்டு இருக்கிறது. அவிங்க நல்ல காலத்திலேயே தமிழக மீனவர் பிரச்சினயைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இதுல ஆட்சியே போகப்போற நேரத்துல பெருசா என்ன நடவடிக்கை எடுத்துக் கிழிக்கப்போறாங்கன்னு இவரு போராட்டம் நடத்துறாருன்னு தெரியலை.
அதே நாளில் அ.தி.மு.க நாகையில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு Counter செய்யத்தான் இந்தப் போராட்ட அறிவிப்பு.
மீனவர்களின் சாவில் வைத்து செய்யப்படும் ஒரு கீழ்த்தரமான அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.
இரண்டு கட்சிகளுமே அரசியல் செய்ய மட்டுமே மீனவர் பிரச்சினையை பயன்படுத்துவது வேதனையான ஒன்று தான். என்ன செய்ய?
நன்றி முத்து எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்வதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
ReplyDeleteஇரண்டு கட்சிகளுமே அரசியல் செய்ய மட்டுமே மீனவர் பிரச்சினையை பயன்படுத்துவது வேதனையான ஒன்று தான். என்ன செய்ய?
ReplyDeleteபிரச்சினையே இதுதான்.இந்த இரு கட்சிகளின் காழ்ப்பு அரசியல் முடியும்வரை(????)தமிழ்நாட்டுக்கு விமோசனம் இல்லை.