சன் நியுஸில் பேட்டி கொடுக்கும் தமிழர்கள் பேச்சை கேட்டுஇருக்கிறீர்களா?
சன்நியுஸ் சேனல் அரை மணிக்கு ஒருமுறை செய்திகள் தருவதால் ஏதாவது செய்திகள் உடனுக்கு உடன்தந்தே ஆக வேண்டும்.சில செய்திகள் மிக சிறப்பாக இருக்கும், சிலது அட்டு கேசாக இருக்கும். நாம் செய்தி தரத்தை பற்றி பேச வர வில்லை. செய்திகளில் தலைகாட்டும் தமிழர்கள் மனைவியர் பற்றி பேச இருக்கிறோம். உ/ம் ஊட்டியில் மலர் கண்காட்சி என்று வைத்துக்கொள்வோம். அதை சன்நியுஸ் பேட்டியாளர், ஒரு இடை சிறுத்த இளம்பெண், இடுப்பு சுற்றளவு பெரிதாக கொண்ட நடுத்தர வயது பெண்மணி, ஒரே ஒரு ஆண் அதுவும் கடமைக்காக. பேட்டி எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள், ரொம்ப என்ஜாய்புல்ல இருக்கு, இந்த கிளைமேட் ரொம்பவும் சூப்பர், பிளவர்ஸ்லாம் ரொம்ப பியுட்டிபுல்ல இருக்கு, எங்கப்புல்ஸ் நிறைய பேர் வராங்க பட், ரொம்ப கிரவுடு அதிகம். பொதுவாக இப்போதெல்லாம் ஆங்கிலகளப்பில்லாமல் தமிழ் பேச முடியாது. அப்படி பேசினாலும் இயக்குனர் சீமானை நக்கலாக பார்பதுபோல் பார்க்கும் நம் சமுகம், பொதுவாக நடுத்தர வயது குடும்ப பெண்கள் பேட்டி கொடுக்கும் போது, கஷ்டப்பட்டு ஆங்கில வார்த்தைகள் யோசித்து இணைத்துபேசுவதுதான் ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இயக்குனர் சீமான் மிக அழகாக சொல்வார், வெள்ளகாரன்கிட்ட வணக்கம் சொல்லாதிங்க, பெத்த அம்மாகிட்ட குட்மார்னிங் சொல்லாதிங்க. எவ்வளவு சத்தியமான வார்த்தை இது. ஆகவே தமிழர்களே ஒரு வாக்கியத்ததை ஒன்று முழுதாக ஆங்கிலத்தில் பேசுங்கள், அல்லது தமிழில் பேசுங்கள நடுநடுவே ஆங்கிலவார்த்தைகள் யோசித்து பேச வேண்டாம் என்கிறேன் செய்வீர்களா?
முக்கியமாக சீரியல் பார்த்து ரொம்பவே கெட்டுபோயிருக்கும் நடுத்தர குடும்ப தமிழ் பெண்மணிகள்...
அன்புடன் /ஜாக்கிசேகர்
Labels:
செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
//சீரியல் பார்த்து //
ReplyDelete//ஜாக்கிசேகர்//
இவையெல்லாம் எந்த தமிழ் இலக்கியத்தில் இருக்கும் வார்த்தைகள் ஐயா??????????
காலை செய்திகள் பார்த்ததில் வந்த வினையா இது!!
ReplyDeleteso,because இப்படி பல இங்கும் தமிழ் ஆகிவிட்டது.
தலைவா, font size கம்மி பண்ணுங்க... எல்லோரும் படிக்க வசதியா இருக்கும்.
ReplyDelete