vanam-வானம் திரைவிமர்சனம்.



மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்ட திரைக்கதை படங்கள் நாம் நிறைய பார்த்து இருக்கின்றோம்..  உதாரணமாக 21கிராம்ஸ், பேபல் போன்ற திரைப்டங்களை உதாரணமாக சொல்லலாம்.. அது போலான திரைக்கதை வடிவம், சிம்பு பரத் நடித்து வெளிவந்து இருக்கும் வானம் திரைப்படம்....
 ==============



வானம் திரைப்படத்தின் கதை என்ன???

சிம்புவுக்கு தன் காதலியோடு நியூஇயர் கொண்டடாட தேவை...40,000..

பரத் நியூயர்  இசை நிகழ்சியில் அவரது டீமோடு கலந்து கொள்ள பெங்ளூருவில் இருந்து  சென்னை வருகின்றார்....

அனுஷகா 40,000 பணத்துக்காக விபச்சாரதொழில் செய்ய சென்னை வருகின்றார்...

வட்டிக்கொடுமை காரணமாக கொத்தடிமையாக துத்துக்குடி உப்பளத்தில் வேலை செய்யும் தன் மகனை மீட்க கிட்னி விற்று அதன் மூலம் வரும் 40,000 பணத்தை வைத்து தன் மகனை விடுவிக்க, பணத்துக்காக சென்னை வரும் சரண்யா....

தொலைந்து போன தனது தம்பியை சென்னையில் இருப்பதாக தகவல் அறிந்து தம்பியை தேடி வரும் பிரகாஷ்ராஜ் இப்படி இருக்கும் கேரக்டர்கள் எல்லாம் எப்படி ?ஒரே புள்ளியில் இணைகின்றார்கள் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...
 ===================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படத்தின் டைரக்டர் போல நான் எந்த டைரக்டரிடமும் பணி புரிந்தது இல்லை என்று வானம் பாடல் வெளியீட்டு விழாவின் போது ரொம்பவும் சிலாகித்தார்...தெலுங்கு சூப்பர் டூபபர் ஹிட் வேதம்தான்.. தமிழில் வானம்...

படம் அந்தளவுக்கு இருக்கின்றதா என்றால் ஏதோ இருக்கின்றது.... பெரிதாய் மனதில் நிறைய காட்சிகள் ஒட்ட மறுகின்றன...

ஒரு காட்சியில் நான் மெய்சிலிர்த்தேன்... சிம்பு பணம் கட்டாமல் அழுதுக்கொண்டே அந்த பணத்தை ஒரு கர்ச்சிப்பில் வைத்து கூடுதலாக கையில் இருக்கும்  மூவாயிரம் பணத்தையும்  அந்த பணத்தோடு சேர்த்து வைக்கும் காட்சியில் சிலிர்த்தேன்.....

அந்த சிலிர்ப்பு படம் முழுவதும் அங்காங்கே விரவி இருந்து இருந்தால் இந்த படத்தின் வெற்றி தாறுமாறாக இருந்து இருக்கும்.


கிளைமாக்சில் சிம்புவின் முடிவு பார்வையாளரை உலுக்க வேண்டும்... அது சுத்தமாக இல்லை...ஒரு  நேட்டிவிட்டி டச் ஏதும் இல்லாமல் இருப்பது போல ஒரு பிரமை...


பரத் வேதிகா நடித்து இருக்கின்றார்கள்..


பட் பிரகாஷ்ராஜ் கேரக்டர் மீது எப்படி எல்லாம் அதிகாரவர்கம் தீவிரவாதி சாயத்தை எப்படி அப்பாவி முஸ்லிம்கள் மீது திணிக்கின்றது என்பதும் அந்த போலிஸ் மனம் திருந்துவதும் சிறப்பான காட்சிகள்..

சிம்பு சந்தானம் கூட்டனி அங்காங்கே சில இடங்களில் அசத்தி இருக்கின்றார்கள்...


அனுஷ்க்காவின்  அகன்ற இடுப்பும், சின்ன மார்பும் பார்வையாளனின் ரசனையை பரிசோதிக்கின்றன...
 ==============

படக்குழுவினர் விபரம்...

 Directed by Krish
Produced by VTV Ganesh
R. Ganesh
Written by S. Gnanagiri(dialogues)[1]
Screenplay by Krish
Story by Krish
Starring Silambarasan
Bharath
Anushka Shetty
Prakash Raj
Saranya
Music by Yuvan Shankar Raja
Cinematography Nirav Shah
Gnanasekaran
Editing by Anthony Gonsalves
Studio VTV Productions
Magic Box Pictures
Distributed by Cloud Nine Movies
Release date(s) April 29, 2011 (worldwide)
Country India
Language Tamil
 ==========
பைனல்கிக்.........

வழக்கமான திரைக்கதை அமைப்பு இல்லை.. நல்லகதைக்களம் சமுக பிரச்சனையை பொட்டில் அடித்து சொல்லும் காட்சிகள்... இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகின்றது... அது என்ன?? ஒரு வேளை இந்த படம் உங்களுக்குரொம்பவும் பிடித்து இருக்கலாம்....இருப்பினும் பார்க்கலாம் ஒரு முறை....இந்த படம் டைம்பாஸ் படம்தான்..

பார்க்கவேண்டியபடம் என்ற வாக்கியத்தை சொல்ல ஏதோ ஒன்று தடுக்கின்றது.....

==========
பிரியங்களடன் 
ஜாக்கிசேகர்.


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS...





  =====

12 comments:

  1. அணைவரையும் மருத்துவமனைக்குள் சேர்த்த விதம்
    பாடல் படமாக்கிய விதம்
    கிளைமேக்ஸில் அழுத்தம்

    இவைகளை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம்.. உங்கள் விமர்சனத்தைதான் எதிர்பார்த்திருந்தேன்.
    அதிக அலட்டல்கள் இல்லாமல் அருமையாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  3. Correct Review.. Enakum appadi than thonuchu...

    ReplyDelete
  4. பரத் வேதிகா நடித்து இருக்கின்றார்கள்..//


    அண்ணே அது வேகா..

    ReplyDelete
  5. time pass movie/????
    movie was nice
    grow up jackie

    ReplyDelete
  6. I am afraid of Simbu's Acting!!

    ReplyDelete
  7. //இந்த படத்தின் டைரக்டர் போல நான் எந்த டைரக்டரிடமும் பணி புரிந்தது இல்லை என்று வானம் பாடல் வெளியீட்டு விழாவின் போது ரொம்பவும் சிலாகித்தார்...//

    யார்?

    ReplyDelete
  8. மகனின் படிப்பிற்காக தனது சிறுநீரகத்தை விற்க, சென்னை வரும் சரண்யாவைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். நல்லதொரு விமர்சனம் - நல்வாழ்த்துகள் ஜாக்கி - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. hai vedham telugu-la paakum pothu nalla irunthuchu..ana vaanam paakum pothu parava illanu solla thonuthu..yen-nu yosicha neraya idam namma nativity-a vitu thalli nikuthunu sollalam..oru feelings-oda poga vendiya padam yen ippadi achu-nu director-kitta kekanum pola..

    ReplyDelete
  10. பரத்துடன் நடித்தது வேதிகா அல்ல வேகா

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner