May 28th Helmet compulsory in chennai--மே28 முதல் ஹெல்மட் கட்டாயம்.தமிழக காவல்துறைக்கு சில கேள்விகள்..



கிடைக்கறது எல்லாம் விட்டு விட்டு கிழவனை தூக்கி மடியில வச்சிக்கறவங்க யாருன்னா....
அது நம்ம, சென்னை மாநகர கால்துறையும், சென்னை போக்குவரத்து போலிசாரரும்தான்.....

மே 18 முதல் ஹெல்மட் சென்னையில் கட்டாயம்...300 இடங்களில் தனிப்படை அமைத்து ஒரு இடத்தில் மாட்டி தப்பித்தாலும், அடுத்த இடத்தில்மாட்டினாலும் பைன் கட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள்...ச்சே தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு...

நேற்று ஒரு செய்தி வெளியிட்டு இருக்கின்றார்கள்... அதாவது முதல் முறை ஹெல்ம்ட் இல்லையென்றால் பைன் அடுத்து முறை மாட்டினால் லைசென்சு ரத்து செய்து விடுவார்களாம்.... அட அட தனி மனித உயிர்கள் மீது இந்த அரசுக்கும்  சென்னை மாநகர காலதுறைக்கும்தான் என்ன ஒரு அக்கறை....

முதலில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் ஹெல்மட் அணிவதால் சலைவிபத்துகளில் பெருமளவு உயர் சேதம் தடுக்கபடுகின்றது... அதனால் ஹெல்மட் கட்டாயத்தை நான் ஆதரிக்கின்றேன்... அதே வேளையில் சில கேள்விகளை தமிழக காவல் துறை மற்றும் சென்னை போக்குவரதுது போலிசாரிடம் கேட்கின்றேன்.... மனசாட்சி இருந்தால் பதில் சொல்லுங்கள்...

ஒரு சாப்பாடு ரெடி செய்ய முதலில் என்ன செய்ய வேண்டும்...தீப்பெட்டி உதவியுடன் அடுப்பை பற்ற வைக்க வேண்டும்... குக்கர் எடுத்து அதில் தண்ணி விட்டு, அதனுள் வைக்கும் அரிசி பாத்திரத்தில் சம அளவில் தண்ணிர் விட்டு,அரிசியை நீரில் களைந்து, அதை சமைக்கும் பாத்திரத்தில் உள்ள தண்ணியினுள் வைத்து, குக்கரை மூடி, அரிசிக்கு ஏற்றது போல ஐந்து விசில் வந்ததும் திறக்க வேண்டும்..... அதுவும் உடனே  எல்லாம் திறந்து விட முடியாது விசில் அடங்கி சற்று நேரம் கழித்து திறந்தால்தான் சாதம் பொல பொல வென்று இருக்கும்...ஆனால் சென்னை போலிசார் சாதம் பொல பொல என்று இருக்க வேண்டும் என்று எதுவுமே செய்யாமல்  அசைபடுவதில்தான் இந்த பிரச்சனைகள்....

ஹெல்மட் அணிந்தால் உயிர் இழப்பை தடுக்கலாம் ஆனால் விபத்தை ஏற்படுத்தும் பல  காரணங்களை இதே போல கடுமையான சட்டங்கள் மூலம் மாற்றி விட்டு தனிமனிதன் மீது பாயுங்கள் என்று சொல்கின்றேன்...அப்படி அவைகளையும் செய்தால் பொதுமக்கள் நிச்சயம் ஹெல்மட் எதிர்ப்பு தெரிவிக்காமல் அணிவார்கள்..

சரி அப்படி என்ன மூலகாரணிகள் என்று சொல்லுங்கள் என்று சொல்கின்றீர்களா??

1,சாலையில் இருக்கும் சாக்கடை மேன்  ஹோல்கள், திடிர் பள்ளங்கள் இவைகளை சரி செய்யாத காரணத்தால் வேகமாக வரும் வாகனம் சட்டென பிரேக்அடிக்க பின்னால் வரும் வாகனங்கள்  மோதி விபத்துக்குளளாகின்றன.....அதை  சரி செய்யவோ அல்லது அதை விரைந்து முடிக்கவோ எந்த நடவடிக்கையும் இல்லை..... இன்னும் சாலை பள்ளங்கள் அறிவிக்க இன்னும் மரக்கிளைகளைதான் நம்பி இருக்கின்றீர்கள்......

2,சிக்னல் ரெட்டில் இருக்கும் போதே நிறுத்துக்கொட்டை தாண்டி20 அடிக்கி முன்னே போய் நின்று,  போகும் வாகனங்களை மறித்து நிற்க்கும் செயலுக்கு என்ன செய்ய போகின்றீர்கள்...??? அதுக்கு எதாவது கடுமையான சட்டங்கள் இயற்றி இருக்கின்றீர்ளா??

3,நிறுத்து கோட்டை தாண்டினால் 500 அபராதம் என்று உங்களால் கடுமையான உத்தரவு போட முடியாது?? ஏன் என்றால் டூவிலர் மட்டும் நிற்பது இல்லை.. கார்காரன், ஆட்டோக்காரன் எல்லாரும்  கோட்டை தாண்டி நிறுத்துவார்கள்.. ஒரு பத்து கார்காரர் மற்றும்  ஆட்டோகாரர்மேல இது போல வழக்கு போடுங்க.. அவ்வளவுதான் சைதாபேட்டையில் ஆட்டோ டிரைவர்கள் ரோட்டுக்கு குறுக்கே போட்டு போலிஸ் அராஜகம் ஒழிக என்று சொல்லுவார்கள்.....


4, இவ்வளவு ஏங்க.... ரோட்டுல குறிப்பிட்ட கிலோமீட்டர் வேகத்துல போனாலும் யார் கை கைட்டினாலும் பின்னாடி வரும் வாகன ஓட்டிகள் பற்றி கவலைபடாமல் அப்படியே ஷேர் ஆட்டோவை நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் எத்தனை பேர் பிரேக் போட்டு  அல்லது நிலைதடுமாறி விழுந்து ஹெல்மெட் போட்டும் உடல் மேல் பேருந்து ஏறி நசுங்கி இறந்தவர்கள் அதிகம்... இது ஷேர் ஆட்டோ மட்டும் அல்ல.. பல வாகனங்களை சொல்லுவேன்.........


5. போத்தீஸ் எதிரே துரைசாமி பாலத்துக்கு முன் இருக்கும் பேருந்து நிறுத்ததில் நின்று பயணிகள் ஏற்றும் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோகாரர்களினால்தான் பெருமளவு   விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது என்று உங்களுக்கு தெரிந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதில்லை...காரணம் அவர்கள் குழு...பொது ஜனமோ தனிமனிதனோ அல்ல....எல்லா பேருந்து நிறுத்தத்திலும் சீட் ஏற்ற ஷேர் ஆட்டோ மற்றும் அட்டோவை நிறுத்து வைத்து இருக்கின்றார்களே அவர்கள் மீது உங்கள் நடவடிக்கை என்ன??

6,கார்காரர்கள் கண்ட இடத்தில் நிறுத்தி விட்டு பர்சேஸ் செய்வதும், நடு ரோட்டில் நிறுத்திவிட்டு,எனக்கென்ன என்று இருக்கும் கார்காரர்கள் மேல் என்றுமே உங்கள் நடவடிக்கை இருக்காது... ஆனால்  அதே இடத்தில்அப்பாவிகள் யாராவது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு போய் இருந்தால் அதனை உங்கள் லாரியில் ஏற்றி அவனை போலிஸ் நிலையத்துக்கு அலையவிட்டு தேவையான அளவு வாங்கிக்கொண்டு வெளிய விடுவீர்கள்.....காரணம்  கார் எடுத்து செல்ல உங்களிடம் தில் இல்லை... அப்படியே எடுத்து போனாலும் அவன் வட்டம் மாவட்டைத்தை அழைத்து வந்து காரை எடுத்து போய்விடுவான்... பட் டூவிலர் எடுத்து வந்தால் ரெண்டு வட்ட செயலாளர்கள் வந்தாலும் மீதி இருக்கும் இரண்டு சன்னர வாகனங்களுக்கு கல்லா கட்டலாம் அல்லவா???...

7, எந்த மாநகர பேருந்து ஓட்டுனராவது அவர்களுக்கு ஒதுக்கபட்ட வழியில்  வண்டியை நிறுத்துகின்றார்களா??,நடுரோட்டில்  அவ்வளவு பெரிய பேருந்தை நிறுத்திய பயணிகளை ஏற்றுவதும் இறக்குவதும் அவர்களை என்றைக்காவது கண்டித்து இருக்கின்றீர்களா?? இவ்வளவு ஏன்... புது அரசு பதவு ஏற்று இருக்கின்றது ... இனி பொதுமக்களுக்கு இடைஞ்சலாக பேருந்தை ரோட்டில் நிறுத்தி போராட்டம் செய்தால் உங்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து என்று சொல்லி பாருங்களேன்... அல்லது பேச்சுக்காவது ஒரு அறிக்கை விட்டு பாருங்களேன்... சொல்ல வாய்ப்பு இல்லை.. அவுங்ககளுக்கு சங்கம் இருக்கு..அதனால் சொல்ல மாட்டிர்கள்... ஆனால் பொது ஜனத்துக்கு????


8,தமிழகம் முழுவதும் நின்ற லாரியில் இடித்து ஏற்படும் விபத்துகள்  நிறைய...ஹெல்மட் போடாமல் இறந்து போகும் பொதுஜனத்தை காட்டிலும் கொத்து கொத்தாக தினமும் விபத்தில் மடிகின்றார்கள்...நெடுஞ்சாலையில் லாரிநிற்க்க ஒதுக்கி இருக்கும் இடத்தில்தான் வாகனத்தை நிறுத்தவேண்டும்... டயர் பஞ்சர் ஆகி  அல்லது ரிப்பேர் ஆகி ரோட்டில் நிற்கும் எந்த கனரக வாகனமும்
இலை தழைகள், மரக்கிளைகள் வைத்து பின்வரும் வாகனங்களுக்கு அறிவிக்காமல் பத்து மீட்டருக்கு அப்பால் முக்கோண ரிப்ளெக்டர் வைக்க வேண்டும் என்று உங்களால் சொல்ல முடியுமா? உங்களுக்குதான் தனிமனித உயிர்மேல் கவலை அல்லவா?? அதனால்தான் சொல்லுகின்றேனன்... அல்லது அவர்களுக்கு எதிராக சட்டம் இயற்றமுடியமா?? உங்களால் முடியாது என்று எனக்கு தெரியும்......


9, குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்கள் மேல் உங்கள் நடவடிக்கை என்ன? சென்னையில் இன்னும் பல இரு சக்கர  மற்றும் கார்களின்  பேய் வேகத்தை பார்க்கும் போது உடல் வெடவெடக்க வைக்கும்,  அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க என்ன விதமான நடைமுறைகள் செய்தீர்கள்...

10,கனரக வாகனங்கள் முக்கியமாக லோடு லாரிகள் பகலில் சென்னையில் நுழைய கூடாது என்பது விதி... ஆனால் அப்படி பகலில் அலையும் வாகனங்கள் மேல் என்ன நடவடிக்கைஎடுத்து இருக்கின்றீர்கள்...?? மறைமலைஅடிகள் நகர், காட்டங்களத்துர் என புறநகர் ரோடுகளில் பேய் வேகத்தில் செல்லும் மணல் லாரிகள் மீது எதாவது அறிக்கை விட்டு இருக்கின்றர்களா? மறைமலை அடிகள் நகர் அருகில் செங்கல்பட்டில் இருந்து பேய் வேகத்தில் வந்த லாரி மீடியன் தாண்டி  செங்கல்பட்டு நோக்கி சென்ற பேருந்தில் மோதி அப்பாவிகள் பலர் பலியாகி இருக்கின்றார்கள்... விபத்துக்கு காரணமான மணல்லாரிகள் மீது ஒரு நடவடிக்கையும் இருக்காது......



எந்த அரசாக இருந்தாலும் தனிமனிதனை டர்சர் செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே காரணம் அவன்தான் எந்த கூப்பாடும் போடமாட்டான்... சட்டத்தின் பெயரை காரணம் காட்டி வெகு அழகாய் 100ரூபாயை ஆட்டையை போடலாம்...


போன ஆட்சியில் காரில் கருப்பு ஸ்டிக்கர் கம்பல்சரி, ஹெல்மட் கட்டாயம் என்று சொன்னார்கள்... அவர்களால் கடைசிவரை காரில் கருப்பு ஸ்டிக்கரை எடுக்க முடியவில்லை... அதே போல் நாளடைவில் ஹெல்மட் கட்டாயம் என்றாலும் பெரிதாக இந்த விஷயத்தில் அலட்டிக்கொள்வில்லை...

உங்களுக்கு ஒரு சவால் காரில் கருப்பு கண்ணாடிடிய பொருத்தக்கூடாது, கார்
ஓட்டும் போது  பெல்ட் அணிவதும் கட்டாயம் என்று சொல்லிபாருங்களேன்... வாய்ப்பே இல்லை.. அட்லிஸ்ட் கார் ஓட்டும் போது போன் பேசுபவர்கள் மீதாவது நடவடிக்கை எடுத்து இருக்கின்றீர்களா என்றால் அதுவும் இல்லை....


இப்போதும் சொல்கின்றேன்.. மேல் சொன்ன மாற்றங்கள் எல்லாம் கொண்டு வந்த பிறகு ஹெல்மட் கட்டாயம் என்று சொல்லுங்கள் வரவேற்கின்றேன்..இல்லை முதலில் ஹெல்மட்டில் இருந்து ஆரம்பிக்கின்றோம் என்று சொல்லுகின்றீர்களா??


முதலில் சென்னை பெருநகரத்தில் நோ பார்க்கிங் என்று போர்டு போட்டு இருந்தும் அதை மதிக்காத கார், ஆட்டோ, டூவிலர்,மீது என்ன நடவடிக்கை எடுக்க போகின்றீர்கள்...

எல்லா விஷயத்துக்கும் எப்படி எல்லாம் சப்பை கட்டு கட்டுவது என்று உங்களிடம் மற்றும் புது அரசிடம் கேட்கவா வேண்டும்...??? ஊரில் ஒரு பழ மொழி சொல்லுவார்கள்... தாயை போல பிள்ளை நூலை போல சேலை என்று.... அதனால் இந்த அறிவிப்பு ஆச்சர்யம் கொடுக்கவில்லை....

ஹெல்மட் இருசக்கர வாகன ஓட்டிக்கு நிச்சயம் தேவைதான்.. அதை சட்டத்தின் மூலம் கட்டாயமாக்குகின்றீர்கள்.. வரவேற்கின்றேன்... அதே போல கட்டாய சட்டத்தின் மூலம் இதே சாலை தொடர்பான பல விஷயங்களில் நீங்கள் ஏன் மெத்தனம் காட்டுகின்றீகள் என்பதைதான் மேல பல விஷயங்களில் கேட்டு இருக்கின்றேன்...காரணம் தனிமனிதனிடம் உன் நல்லதுக்கு செய்கின்றேனன் என்று சொல்லி எதையும் இம்ப்லிமென்ட் செய்யலாம் எதிர்ப்பு இருக்காது... ஆனால் குழுவிடமோ அல்லது பணம் படைத்தவர்களிடமோ இந்த பாட்சா பலிக்காது...அதனால் இந்த கேள்வியை தனிமனிதனோ அல்லது பொது ஜனமோ உங்களை பார்த்து கேள்வி எழுப்பாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதில் எனக்கு கிஞ்சித்தும் உடன்பாடு இல்லை...முக்கியமாக இந்தியாவில் அதிலும் அதி முக்கியமாக தமிழகத்தில்...............




பார்ப்போம் மே 28ல் பொதுமக்கள் ரியாக்ஷன் என்னவென்று????

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

 


=====================================

11 comments:

  1. பாஸ் இது நல்ல விஷயம்தான.. கொஞ்சம் கொஞ்சமாத்தான் எல்லாத்தயும் மாத்த முடியும் இத பண்ணிட்டு அத பண்ணுனா பின்னாடி எதயுமே பண்ண முடியாது

    ReplyDelete
  2. உங்கள் கருத்துகளை வலிமொலிக்கிறேன் .

    ReplyDelete
  3. கல்லுமேல கண்ணாடி பட்டாலும், கண்ணாடிமேல கல்லு பட்டாலும் உடையுறது என்னவோ கண்ணாடிதாங்க! அதுபோல இருசக்கரவண்டி மகிழுந்துல மோதுனாலும் மகிழுந்து இருசக்கரவண்டில மோதுனாலும் அதிகம் பாதிக்க போறது இருசக்கரவண்டி ஓட்டுறவங்க தாங்க! அதனால நம்ப புள்ள குட்டிகளோட நிலமைய நினைத்து தலை கவசத்தை மகிழிச்சியோட போட்டுபோங்க தல!! என்ன நினைக்கறிங்க??

    ReplyDelete
  4. It is compulsory in Bangalore for a while..no one is complaining about this!

    ReplyDelete
  5. மிக சரியான பதிவு

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வது தவறு. ஹெல்மெட் கட்டாயம் என்பது சரி. மற்றவற்றையும் செய்யவேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு.

    ReplyDelete
  8. ஒரு சில விஷயங்கள் தவிர்த்து, அருமையான கேள்விகள் ஜாக்கி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner