சென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வை....

நேற்று ஞாயிறு....முந்தாநாள் சனிக்கிழமை... இரண்டு நாளும் எக்ஸ்பிரஸ் அவென்யூ போகும்  வாய்ப்பு கிடைத்தது.. நான் போக வேண்டும் என்றால் ஒரு வாரத்துக்கு மேல்  ஆகும்... ஆனால் என் மச்சான் பெங்களுரில் இருந்து வந்தான்.. இன்னும் சில மச்சான்கள்  வந்தார்கள்.. அவர்கள் எல்லாம் ஐடியில் வேலை செய்யும் மச்சகாரர்கள்... அதனால் எந்த மாலிலும் நுழையும் ஆற்றல் பெற்றவர்கள்...



எங்காவது குடும்பத்துடன் வெளியே போக வேண்டும்... என்று முடிவு எடுத்த போது எக்ஸ்பிரஸ் மாலுக்கு போக வேண்டும்.. அதிலும்   சத்தியத்தின்  எஸ்கேப் தியேட்டரில் படம் பார்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கபட்டது.. ஆனாலும் நெட்டில் நோண்டும்  போது எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல் என்று காட்டிக்கொண்டு இருந்தது....

இதே இடத்தில் முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாட்டு எடுக்கும் போது இந்த இடத்தை பார்த்து விட்டு ஏதாவது டைம் மெஷினில் ஏறி பார்க்கும் வாய்பு எனக்கு கிடைத்து இருந்தால்  இந்த இடம் ஒரு பதினைந்து வருடத்தில் எப்படி இருக்கும்? என்று டைம்மெஷினில் பார்த்து விட்டு .......நான் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்... இண்டியன் எக்ஸ்பிரஸ் பழைய பில்டிங்... எல்லா இடத்திலும் செடிகொடிகள்   நிறைந்து காணப்படும்....புதர்களும் பழமைதனமும் வியாபித்து இருக்கும்...


எல்லா தமிழ் படத்திலும்... வில்லன் அனேகமாக கதாநாயகியை கடத்தி  வந்து வைத்து இருக்கும் இடமும்.. அதிக சண்டைகாட்சிகள் எடுத்த இடமும் இந்த இடம்தான்... ஆனால் இந்த இடம் அடைந்து இருக்கு மாற்றம் என்பது கனவில் நினைத்து கூட பார்க்கமுடியாத மாற்றம்....

மால் மூன்று மாடிகளுடன் பல எக்கரில் பறந்து விரிந்து கிடக்கின்றது.. பெங்களுர்  போரமை பார்த்தவர்களுக்கு, இந்த மால் பெரிய ஆச்சர்யத்தை  உண்டு செய்யாது... காரணம் ஏறக்குறைய அதே போல் இருக்கின்றது...... பறந்து விரிந்த பார்க்கிங் ஏரியா...பேஸ்மென்ட்டில் மூன்று அடுக்கு பார்க்கிங்....

உள்ளே நுழைத்தும் கடுமையான குளிர் வாட்டி வதைத்தது.... அந்த அளவுக்கு ஏசி போட்டு இருந்தார்கள்.... எல்லோரையும் செக் செய்துதான்.. உள்ளே அனுப்புகின்றார்கள்...

முதலில் பெண்களுர் என்று பெங்களூருவை குறிப்பிடுவோம்.. இப்போது அப்படி கூப்பிட முடியாது போல் இருக்கின்றது.... மால் முழுவதும் பெண்கள்... எல்லா இடத்திலும் காற்றை போல் வியாபித்து இருக்கின்றார்கள்...சென்னையில் இவ்வளவு பெண்களை ஒரு சேர எங்கேயும் சமீபகாலத்தில் நான் பார்த்து இல்லை... சினிமாவில் ரிச் கேர்ள்ஸ் என்று சொல்லுவார்கள்.. அது போல் இருந்தார்கள்.....


இருப்பதிலேயே பெரிய கடை லைப் ஸ்டைல் கடைதான் இரண்டு தளத்தை வாடகைக்கு எடுத்து இருக்கின்றார்கள்... அவர்கள் கடையில் மினி எக்சலேட்டர் வைத்து இருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.... உள்ளே எல்லா பொருட்களும், யானைவிலை குதிரை விலை இது போலான கடைகளில் நான் உள்ளே போவதையே கூச்சமாக கருதுவேன்... அது போலான கடைகள் எனக்கு எவ்வளவு பணம்  காசு வந்தாலும்  அது அன்னியம்தான்...எல்லா இ,டத்திலும் மாடல் பொம்மைகள் ஸ்டைலாக உட்கார வைத்து இருந்தார்கள்... அது நன்றாகவும் ரிச்சாகவும் இருக்கின்றது....

என் மனைவிக்கு கடைகளில் போய் எல்லா பொருட்களையும் பார்க்க வேண்டும்.. ஓரளவு நியாயமான விலையில் ஏதாவது பொருள் இருக்கும் அதை வாங்கலாம் என்பது போல் பார்வையிடுவாள்... அது போல் எதாவது ஒரு பொருள் மாட்டும்.... ஒரு சுடிதார் செட்டை பார்த்தாள் மிக அழகாக இருந்தது... அவள் விலை பார்த்து விட்டு உதடு பிதுக்கி  அடுத்த செக்ஷன் சென்றுவிட்டாள்..  நான் ஆர்வத்தில்  போய் அந்த விலையை பார்க்க...4500 ரூபாய்  என்று விலை போட்டு இருந்தது....

 நிச்சயம் அது பதுமைதான் எக்ஸ்கியூஸ்மீ என்று  சொல்லிவிட்டு, நான் அந்த சுடிதாரை வைக்க வேண்டும் என்று மனதில் அந்த பதுமை வேண்டிக்கொண்டது போல் இருந்தது... அந்த பெண் சாரி அந்த பதுமை..அந்த சுடிதாரை எடுத்த வேகம்.... நான் ஏதோ எடுத்துவிடுவேன் என்று பயத்தில் எடுத்தாள்... கிறுக்கு பயபுள்ள அவ்வளவு விலையில் நான் எங்க எடுக்க போகின்றேன்...அந்த பதுமை ஜஸ்ட் ரெண்டு சுடிதார் எடுத்து சென்றது... ரங்கநாதன்  தெருவில் அதே மெட்டீரியல் 1000க்கு கிடைக்கும்...

டாய்லட் ரூம் மிக நேர்த்தியாக விசாலமாக கட்டி இருக்கின்றார்கள்...எதாவது விபத்து  என்றால் அவசரகால வழி பெரியதாகவே இருக்கின்றது.. ஸ்கைமால் போல் எல்லாவற்றையும் குறுக்கி வைக்கவில்லை.... இரண்டாவது இவர்களுக்கு கடலும் காவேரியும் போல் இடம் இருப்பதால் எல்லாவற்றையும் மிக  பெரிதாக கட்டி இருக்கின்றார்கள்...நிறைய இடங்களில் இறங்கி  ஏற  லிப்டு எக்ஸ்லேட்டர்கள் வைத்து இருக்கின்றார்கள்.....
(மாலில் இருக்கும்  அந்த இரண்டு லிப்ட்கள்..)

இந்த மாலில் லிப்ட் டிராண்ஸ்பரண்டாக இருக்கின்றது... கண்ணாடியில் செய்து வைத்து இருப்பதால் அதில் எத்தனை பேர் போகின்றார்கள்... என்பதை எந்த தளத்தில் இருந்தும் பார்த்துக்கொள்ளலாம்...சினிமாவில் கதநாயகி லிப்ட்டில் ஏறியுதும் எந்த தளத்தில் இறங்க போகின்றாள் என்று கதாநாயகன் தவிக்க வேண்டாம்... ஒரு பிகரை பார்த்து அது எந்த மாடியில் இறங்குகின்றது என்பதை எந்த இடத்தில் இருந்து  வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்..

ஆண்கள் விதவிதமான ஹேர்ஸ்டைல்களில் இருந்தார்கள்..முக்கியமாக ஏசிவென்சுரா படத்தில் தலையில் கூம்பு வடிவ ஹேர் ஸ்டைலில் ஜிம்கேரி இருப்பார் அது போல் வயது பையன்கள் இருந்தார்கள்.முக்கியமாக பாத்ரூமில் சூசு போய்விட்டு கை கழுவும் போது  கம்பெல்சரியாக எல்லோரும் முகம் கழுவிக்கொண்டு இருந்தார்கள்.. காரணம் வெளியே சாரை சாரையாக போகும் பெண்கள்தான் அதுக்கு காரணம்....தலையில் எந்த மாற்றத்தையும் என்னால் செய்ய முடியாத காரணத்தால் நான்  அவர்களோடு சேர்ந்து முகம் கழுவினேன்... நிறைய பசங்கள் காதில் கடுக்கன் போட்டு இருந்தார்கள்...

வம்சம் படத்தில் மருதானி பூவை போல பாட்டிலும் படம் நெடுகிலும்...சமீபத்தில் சுனைனா தாவாணி அணிந்து பார்த்து இருக்கின்றேன்.. மாலில் அப்படி ஒரு உடையை பார்க்க முடியவில்லை....புடவை எங்காவது தென்பட்டது...சுடிதார் ஒரளவுக்கும்....நிறைய ஜீன்ஸ் டிஷர்டு அல்லது டாப்ஸ் அணிந்த பெண்களை பார்க்க முடிந்தது....

ஏன் என்று தெரியவில்லை... எல்லா  மைதாகலர் பெண்களும் புல் பிளாக்காக உடை தேர்ந்து  எடுக்கின்றார்கள்....நிறைய பெண்கள்  மெல்லிசான உடை உள்ளே அணிந்து மேலே ஒரு ஓவர் கோட் போட்டு இருக்கின்றார்கள்.. இரண்டு சின்ன பெண்கள்... உள்ளே பிராவுக்கு பதில் கடலில் குளிக்கும் போது அணியும் டூபிஸ் கலர்  உள்ளாடைகளை அணிந்து மேலே வெள்ளை மெல்லிசான சட்டை அணிந்து போனார்கள்... எல்லா பசங்களும் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்... அந்த சின்ன பெண்களும் அதைதான் விரும்பினார்கள் என்பதை அவர்கள் பேசி சிரித்து அரக்கி நடப்பதிலும் ஓரக்கண்ணில்  எல்லோரையும் பார்த்து நடப்பதிலும்  தெரிந்தது.....

ஒவ்வொரு தளத்திலும் பெண்களை விட ஆண்கள் விளிம்பில் நின்று எட்டி பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..நான் ஏதோ டாப் ஆங்கிளில் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று பார்த்தால்.. என் மச்சான் ஐயோ.. மாம்ஸ் அங்க நின்னு பார்த்த எல்லா   பொண்ணுங்க மேல்பக்கமும் கொஞ்சம் தெரியும்..  என்று சொன்னான்... அதில்   உண்மை இல்லாமல் இல்லை...

எல்லாவற்றையும் விட 3ம் தளத்தில் இருக்கும்... குழந்தைகளுக்கான விளையாட்டு மையம் இருக்கின்றது... அந்த இடம்   போகும் அத்தனை பேருக்கும் நிச்சயம் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கும்....குட்டி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடும் அந்த இடம் நிச்சயம் மகிழ்வை கொடுக்கும்....

(குழந்தைகளின் மகிழ்ச்சி)
சின்ன பிள்ளைகள் கார் மற்றும் பைக் வீடியோ கேம் விளையாடுகின்றார்கள்...டேஷிங் கார் இருக்கின்றது... அதை விட ஒரு ரவுண்டாக ஒரு சமாச்சாரம் இருக்கின்றது அதில் ஏறி உட்கார்ந்ததும் ஆட ஆரம்பிக்கின்றது சாப்பிட் சாப்பாட்டை வாந்தியாக எடுக்கும் வரை ஆட்டுகின்றார்கள்...அதிலும் கொஞ்சம் அழகான  இளம் பெண்கள் ஏறிவிட்டால் இன்னும் கொஞ்ச நேரம் அதிகம் ஆடுகின்றது...

 (பால் பொந்தில் போடும் விளையாட்டு...)
  எனக்கு எப்பவும் பால் தூக்கி பொந்தில் போடும் விளையாட்டுதான் எனக்கு பிடிக்கும்... அதுதான் ரொம்ப சேலன்சிங்காக இருக்கும்...
(குத்து விட்ட களைப்பில் ஜாக்கி...)
இந்த முறை கையில் கிக் பாக்சிங் போல ஒரு கிளவுஸ் எடுத்து என் கையில் மாட்டி ஓங்கி ஒன்றை குத்த வேண்டும் என்று என் மச்சான் சொல்ல...நானும் அது போல் செய்தேன்... இரண்டு முறையும் ஜெயிக்க முடியவில்லை..

ஒரு பெண் ஒரு கேம் மிஷினில் எறி இசைக்கு தகுந்தது போல ஆடினாள்.. அதாவது மானிட்டரில் சொல்லும் இடத்தில் காலை வைத்து ஆட வேண்டும்.. அதே போல் ஆடினாள்..

(தாளம் தப்பாமல் ஆடும் அந்த பெண்...)
அந்த மானங்கெட்ட மானிட்டர் மதி மயங்கி... சூப்பர் ஆஹோ,ஓஹோ என்று  பாராட்டி பாயிண்டுகளை அள்ளிக்கொட்டிக்கொண்டு இருந்தது...ஆனால் அந்த பெண் மிக நேர்த்தியாக விளையாடினால் அதுதான் உண்மை... இந்த இடமே பிள்ளைகளின் ஆசையை தூண்டி விட்டு பணம் புடுங்கும் இடம்.என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது.....

ஒரு பெரிய புட் கோர்ட் இருக்கின்றது சென்னையில்  இருக்கும் பிரபல உணவு  கடைகளை அங்கே கடை பரப்பி வைத்துக்கொண்டு இருக்கின்றன...மொத்தமாக  ஒரு இடத்தில் 500 அல்லது ஆயிரம் பணம் கட்டிவிட்டால் ஒரு கார்டு கொடுக்கின்றார்கள்.. அதை வைத்து தேய்க்க தேய்க்க பணம் சாப்பிடும்பொருள் கொடுக்கின்றார்கள்... ஹாட்சிப்சில் மினி காப்பிக்கு ஒரு கப் வைத்து இருப்பார்கள்...அந்த கப்பு போல் ஒரு  கப்பில் இரண்டு சின்ன கரண்டி ஜஸ்கிரீம் சொரண்டி வைத்து விட்டு50 ரூபாய் என்று சொல்கின்றார்கள்..

அதாவது பாக்கெட்டில் இருந்து காசு எடுத்து கொடுக்கும் போதுதான்... ஐயோ
இவ்வளவு பணமா??? என்ற எண்ணம் தோன்றும்... ஆனால் முன்னையே பணம்  கட்டிவிட்டால் அந்த எண்ணம் தோன்றாது அல்லவா அதுக்குத்தான்.. முன்னையே பணம் கட்ட சொல்கின்றார்கள்..இதே டெக்னிக்தான்.. அந்த கேம் சோனிலும் நடக்கின்றது....

எல்லோரும் சாப்பிடுவதை  பார்க்கும் போது அவர்கள் வீட்டில் அடுப்பு பற்ற வைத்து வெகு நாள் ஆனது போல்  சாப்பிடுகின்றார்கள்...நிறைய பெண்கள்தன் நண்பர்களுடன் வந்து சாப்பிட்டு சிரித்து ,உதடு துடைத்து செல்கின்றார்கள்... காதலன்கள் பர்ஸ் கிழியும் இடத்தில் இந்த இடமும் ஒன்று....

மேலே சத்தியம் தியேட்டரின் எஸ்கேப்பில் டிக்கெட் டிரை செய்தோம் இல்லை ஆனால், அது ஏதோ பாரினில் இருப்பது போல் அந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தை  செட் செய்து வைத்து இருக்கின்றார்கள்....
 (மூன்றாம் மாடியில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு ஒரு எரியல் ஷாட்)
மாலில் பார்க்கிங் பைசாவில் நம்மை நிறைய கொள்ளை அடிக்கின்றார்கள்...டைம் பாஸ் செய்ய ஏற்ற இடம்தான்.... ஆனால் ஒரு பானி பூரி ஒன்றின் விலை ஏழு ரூபாய்... அதாவது ஒரு பூரியின் விலை.. பூரி ஜஸ்ட்35ரூபாய்தான்.... இதில் இருந்து மாலின் காஸ்ட்லிதனத்தை யூகித்துக்கொள்ளங்கள்.. பானி பூரிக்காக அந்த இடத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது...

இன்னும் மால் முழுமை அடையவில்லை.. நிறைய வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது...காதலர்களுக்கு  நகரின் மத்தியில் ஒரு இடம் கிடைத்து இருக்கின்றது இளைப்பாற.......

நடுத்தர குடும்பம்  உள்ளே போய் சுற்றி பார்க்கலாம் ஆனால் எதையும் வாங்க முடியாது... அப்படி வாங்க வேண்டும் என்றால் நிறைய யோசிக்க வேண்டும்...

(புகைபடங்கள் ஜாக்கிசேகர் செல்போன்...)

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

30 comments:

  1. ஊருக்கு வந்து 6 வருசத்துக்கு மேல ஆய்டுச்சி ஜாக்கி. இன்னும் 1 வருசம் ஆகிடும் போல இருக்கு. மெட்ராஸ்ல வந்து இறங்கினா, வேற எங்கயோ இறக்கி விட்டுடானுங்கன்னு நினைச்சிக்குவேன் போலயிருக்கு.

    ReplyDelete
  2. உண்மைதான் பாலா.. மிக முக்கியமா..ஒஎம் ஆர் ரோட்டுல நைட்டோட நைட்டா வந்து நட்டு வச்சிட்டு போனது போலான கட்டிடங்கள்... நிச்சயம் நமக்கு ஆச்சர்யம் கொடுக்கும்...

    ReplyDelete
  3. ஊருக்கு வந்து 4 மாசத்துக்கு மேல ஆய்டுச்சி இன்னும் 1 வருசம் ஆகிடும் போல இருக்கு. மெட்ராஸ்ல வந்து இறங்கினா, வேற எங்கயோ இறக்கி விட்டுடானுங்கன்னு நினைச்சிக்குவேன் போலயிருக்கு.சேம் பிளட்

    ReplyDelete
  4. அண்ணா நீங்க பயனக்கடுரைகள் எழுதினால் ரெம்ப நல்லாய் இருக்கும் நீரில் பார்ப்பதை போல உள்ளது ,அண்ணா நீங்க ஏன் புகைப்படக் கருவிகள் மற்று அதன் தொழில் நுட்பம் சார்ந்து ஒரு பதிவு எழுதகூடாது நிறைய பேருக்கு பயன் உள்ளதாய் இருக்கும்
    //தலையில் எந்த மாற்றத்தையும் என்னால் செய்ய முடியாத காரணத்தால் நான் அவர்களோடு சேர்ந்து முகம் கழுவினேன்...///
    :):):):)

    ReplyDelete
  5. சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் ஒவ்வொன்றாய் கூடிக்கொண்டே போகிறது!

    ReplyDelete
  6. ணா..இந்த மாதிரி இடங்கள் பல விதத்திளையும் மிடில் கிளாஸ் மக்கள குறிப்பா சின்னப் பசங்கள உளவியல் ரீதியா இதுகள் தான் பெரிய கடைகள் இங்க எடுக்குற பொருட்கள் சமுதாயத்தில ஒரு மதிப்ப கொடுக்கும் என்ற தாக்கத்தை ரொம்ப ஏற்படுத்து .(இது எல்லார்க்கும் தெரிஞ்சாலும் எனக்கு செரிய சொல்லத் தெரியல, இந்த aspectல நீங்க விரிவா இதைப்பத்தி எழுதணும்). ஏன்னா இப்ப மதுர வரைக்கும் இந்த தாக்கம் வந்திருச்சு. இது பொருட்களுக்கு மட்டுமில்லாம அரிசி, காய்கறி வரை சூப்பர் மார்க்கெட் சென்று வாங்குறது-அது சிறு வியாபாரிகள எப்படி பாதிக்குது இதைப் பத்தியும் எழுதணும். ஏன்னா நீங்க வேற ஊர்ல (கடலுரா, பழைய பதிவுல படிச்ச ஞாபகம்) இங்க வந்ததனால கண்டிப்பா இந்த விசயங்கள நோட் பண்ணியிருப்பீங்க.

    ReplyDelete
  7. கலக்கல் ரிப்போர்ட்டிங் ஜாக்கி!

    ReplyDelete
  8. உள்ள சுத்தி பார்க்க டிக்கட் போடாம இருக்காய்ங்களே. புண்ணியவானுங்க.

    ReplyDelete
  9. தலைவரே,
    நான் எல்லாம் இந்த மாதிரி மாலுக்கு போகனுமுனா ஊர்ல இருக்குற முந்திரி தோப்ப வித்தா தான் முடியும் போல.

    ReplyDelete
  10. ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் இத பழைய படி side ல போடுங்க தலைவா.

    ReplyDelete
  11. கொள்ளையோ கொள்ளை!
    பகல் கொள்ளை

    ReplyDelete
  12. சென்னையை விட்டு வந்து ஐந்து வருடம் ஆகிறது.... ஒரிரு நாட்கள் வந்தாலும் குடும்பத்தினரோடு நேரம் சென்று விடுகிறது.... சிக்னல் பிச்சைக்காரர்கள் இன்னும் இருக்கிறார்களா???

    ReplyDelete
  13. //மெட்ராஸ்ல வந்து இறங்கினா, வேற எங்கயோ இறக்கி விட்டுடானுங்கன்னு ///



    மெட்ராஸ்ல வந்து இறங்க முடியாது பாலா... சென்னையில்தான் இறங்க வேண்டியிருக்கும்

    ReplyDelete
  14. நாமெல்லாம் ரொம்ப யோசிக்கனும் போலருக்கு உள்ள போறதுக்கு 

    ReplyDelete
  15. அன்பு ஜாக்கி,

    விரிவான கட்டுரை. நேரில் பார்த்த அனுபவத்தை தந்தது. உங்களின் எழுத்தில் முன்பிருந்த rawness குறைந்து வருவது தெரிகிறது. வெகுசிறப்பு.

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  16. நன்றி....சென்னையா? என்ன மாற்றம் வந்து என்ன பண்ண? மாறவேண்டியவர்கள் மாறவில்லையே?

    ReplyDelete
  17. ஏதோ நீங்க மெட்ராஸ்ல இருக்கரதால உங்களால் அட்லீஸ்ட் பாக்கவாவது முடிஞ்சுது, ஆனா எங்களுக்கெல்லாம் அதுக்கே துப்பு கிடையாது. :(

    ஆனாலும், கொடுத்துவச்சவங்கப்பா நீங்க (மெட்ராஸ்காரங்க), என்ஜாய் :)

    ReplyDelete
  18. //தலையில் எந்த மாற்றத்தையும் என்னால் செய்ய முடியாத காரணத்தால் நான் அவர்களோடு சேர்ந்து முகம் கழுவினேன்//
    முடி கொஞ்சம் இல்லேன்னா என்னா தல
    என்னிக்குமே நீங்க யூத்து தான் தல

    ReplyDelete
  19. பகிர்விற்கு நன்றி. படங்களுக்கும்..

    படங்களை எடுத்தது எந்த செல்போனில்? படங்கள் நன்றாக வருவதால் கேட்கிறேன்.

    ReplyDelete
  20. அன்பிற்கினிய ஜாக்கிசேகர்..,

    அருமையான பதிவு. செல்போனில் எடுத்த படங்கள் தெளிவாக இருக்கிறது. நீங்கள் எந்த பிராண்ட் வைத்திருக்கிறீர்கள் - அது எத்தனை MP ?

    நன்றி..,
    மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
    அன்புடன்..ச.ரமேஷ்.

    ReplyDelete
  21. //ஊருக்கு வந்து 6 வருசத்துக்கு மேல ஆய்டுச்சி ஜாக்கி. இன்னும் 1 வருசம் ஆகிடும் போல இருக்கு. மெட்ராஸ்ல வந்து இறங்கினா, வேற எங்கயோ இறக்கி விட்டுடானுங்கன்னு நினைச்சிக்குவேன் போலயிருக்கு.//

    இதேதான் எனக்கும். ஆனால் நான் ஊருக்கு வந்து 8 வருசம் ஆச்சு!

    ReplyDelete
  22. என்ன செல் போன் வச்சிருக்கீங்க ஜாக்கி.. போட்டோ எல்லாமும் ரொம்ப துல்லியம் :)

    ReplyDelete
  23. சார் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் அவென்யூ போயிருந்தேன். நண்பர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்றனர். இதற்கு முன்னர் சென்னையில் நான் போயிருக்கும் இரண்டு பெரிய கட்டடம் ஒன்னு கோயம்பேடு பேருந்து நிலையம், இன்னொன்னு சரவணா ஸ்டோர்ஸ். சிக்கனம் இல்லாமல் kfc சிக்கன்னு வாங்கி வந்தான், பக்குன்னு தூக்கி வாரிப் போட்டது. என் முதல்முறை மால் அனுபவங்களை எழுதலாம் என்றிருந்தேன். எதேச்சையாக தங்கள் பதிவைக் கண்டேன். ஆச்சர்ய/ திகில்/ புதிய/ கூச்ச அனுபவத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. எஸ்கலேட்டரில் மேலும் கீழுமாக ஏறி இறங்கி பழகியது என் குழந்தை பருவத்தை நினைவு படுத்தியது. இந்த ஊருக்கே இப்படி பயப்படுகிறேன், வெளிநாட்டுகெல்லாம் போவேனா? பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  24. அருமை கலக்கல் ரிப்போர்ட்டிங். என்ன செல் போன் வச்சிருக்கீங்க ஜாக்கி

    ReplyDelete
  25. அட! அந்த மால் திறந்துட்டாங்களா?????


    அந்தப் பக்கம் போகும்போதும் வரும்போதும் எந்தக் காலத்துக்கு வேலை முடியப்போகுதுன்னு நினைச்சுக்குவேன்.

    இப்ப ஊரைவிட்டே வந்தாச்சு.

    அடுத்த சென்னை விஸிட்டுக்குள்ளில் ரெஸ்ட் ரூம் அழுக்கா ஆகமா இருக்கணும்:(

    படங்கள் எல்லாம் துல்லியமா இருக்கு ஜாக்கி.

    மிகவும் நன்றி.

    ReplyDelete
  26. I have small tip for FOOD item in EA.
    Go Big Bazaar and pack your food items and have it food court, no one command you.

    We did many times in EA...because the foodcourt more costlier then out side.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner