அன்புள்ள அம்மாவுக்கு.....
அன்புள்ள அம்மாவுக்கு .... உன் மகன் தனசேகரன் என்கின்ற ஜாக்கிசேகர் எழுதிக்கொள்வது... நான் நலம்...நீயும் நலமாக இருப்பாய் என்று நம்புகின்றேன்...40வயதில் இறந்து... கடவுளோட நீ இருக்கும் போது... நிச்சயம் நீ நலமாகத்தான் இருக்கமுடியும்... அல்லது இருக்க வேண்டும்... நீ நல்லா இருக்கனும்... அதுக்கும் கடவுள்கிட்டதான் வேண்டமுடியும்... என்ன செய்ய???
நீயும் நானும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்கள் இந்த உலகத்தில் மிக குறைவு என்பேன்..எல்லா விஷயத்தையும் நான் உன்னோடு பகிர்ந்து கொள்வேன்...நீயும் அப்படியே... நான் ஒரு ஆண் பிள்ளை என்ற கூச்சம் எப்போதும் உன்னிடத்தில் நான் பார்த்தது இல்லை... நான் பிறக்கும் போது நீ பிரசவத்தின் போது பட்ட கஷ்டங்களை எல்லாம் என்னிடம் சொல்லி சொல்லி சிரித்து இருக்கின்றாய்...அப்போது எல்லாம் நீ என்னை பெற்று எடுக்க எவ்வளவு வலி தாங்கி இருப்பாய் என்று யோசித்து இருக்கின்றேன்...
உனக்கு நான் முதல் பிள்ளை....முதல் பிரசவம்... அதுவும் தலைபிரசவம்... அது உனக்கு முதல் அனுபவம்.. பண்ரூட்டி கடலூர்சாலையில் இருக்கும் இந்திரா நர்சி்ங் ஹோமில் நீ துடித்துக்கொண்டு இருக்கின்றாய்...சினிமா பட கணவன் போல மருத்துமனை காரிடரில் என் அப்பா கைபிசைந்து நடந்து கொண்டு இருக்கவேண்டும்... ஆனால் அப்பா அப்போது கடலூர் செல்லமயர் துணிக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு, புடவை ரகங்களை காட்டிக்கொண்டு இருக்கின்றார்...இப்படி ஒரு சின்சியர் சிகாமணியை பார்த்து இருக்கின்றாயா? என்று என்னிடம் அப்பாவை நக்கல் விட்டு இருக்கின்றாய்...
1975 பிப்பரவரிமாதத்தின் முதல் தேதியான சனிக்கிழமை அன்று ஒரு மதிய பொழுதில் வலியால் நீ தவித்துக்கொண்டு இருக்கின்றாய்...உனக்கு ஒரு பெரிய நண்பர்கள் வட்டம் எல்லாம் இல்லை... கைபிடித்து ஆறுதல் சொல்லி பிரசவ அறைக்கு அனுப்பி வைக்க...
நீ கத்தி ஆர்பாட்டம் பண்ணிய சத்தம் மருத்துவமனை காம்பவுண்ட் வரைக்கும் கேட்டு மனசு தாங்காம தாத்தா குலுங்கி குலுங்கி அழுதாராம்... நீ ரொம்பவும் என்னை பெக்க கஷ்டபட்டுட்டியோ????
சரி நீ அழுவறதை பாத்துட்டு அங்கு வேலை செய்றவங்க யாராவது பாரிதாபபடுவாங்கன்னு நீ நினைச்சு இருக்கும் போது.. அங்கு வேலை செய்யறவங்க எல்லாம் ஏதுவும் நடக்காதது போல நடந்து போனப்ப உனக்கு ஏற்ப்பட்ட கோவத்தை என்கிட்ட சொல்லி சொல்லி சிரிச்சியே...அது உனக்கு ஞாபகம் இருக்கா? உனக்கு முதல் குழந்தை ஆம்பளைபுள்ள என்பதால் நீ வசித்த இடம்.. சந்தோஷத்தில் துள்ளியதையும் என்னை கொண்டாடியதும் நீ என்னிடத்தில்சொல்லி சொல்லி மகிழ்வாய்..
நான் மற்ற பிள்ளைகள் போல அழுது அடம்பிடிக்கும் ரகம் இல்லையாம்...எல்லாம் நி சொல்லதான் எனக்கு தெரியும்...நான் ரொம்பவும் சமத்து என்றும், மற்ற பிள்ளைகள் வீர் வீர் என்று அழுது அடம் பிடிக்கும் போது... அவர்கள் அம்மாவை எந்த வேலையும் செய்ய அனுமதிக்காமல் அழும் போது உறவினர்கள் உட்கார்ந்து இருக்கும் சபையில் எருமை போல் வளர்ந்து இருக்கும் எனக்கு முத்தமிட்டு ,
என் புள்ள ரொம்ப சமத்து என்று பெருமை பட்டுக்கொள்வாய்....
எனக்கு
பால் கொடுத்துவிட்டு யானையில் போட்டு இரண்டு ஆட்டு ஆட்டினால் சாலிடாக 5 மணநேரம் கழித்துதான் உறக்கம் கலைவேன் என்று சொல்லி சந்தோஷம் கொள்வாய்... அதற்குள் துணி துவைத்து, மதிய சாப்பாடு வடித்து,வீடு பெருக்கி, அப்பாவுக்கு மதிய சாப்பாடு கேரியரில் கொடுத்து விட்டு, மதியம் ஒரு குட்டி தூக்கம் போட்டு நீ எழுந்து இருக்கும் போது... நானும் எழுந்து இருப்பேன் என்று சொல்லுவாய்... நீ எனக்கு 5வயது வரை தாய் பால் கொடுத்தவள்...
நான் நாலரை வயது வரையில் பேசவேயில்லயாம் சிவாஜி படத்தில் வரும் மலரே குறிஞ்சி மலரே என்ற பாட்டை... ஒரு கழியை பிடித்துக்கொண்டு... மலரே குலுஞ்சி என்று சொல்வேனாம்...ஆனால் பிறகு பேசுவதை பார்த்து விட்டு
“ மொண்டாண்டு ஒத்தது இப்படி எல்லாம் இது பேசம்னு தெரிஞ்சி இருந்தா? ஓத்தா எதுக்கு திருச்செந்தூர் முருகன் கிட்ட நாக்கு காணிக்கை சாத்தரன்னு நான் வேண்டிக்கிட்டேன்னு இப்ப வருத்தபடறேன்னு... அப்பா , எப்பவும் சொல்லி சொல்லி கோவத்துல நொந்து நுலானதை எப்படி மறக்க முடியும்...
நான் ரொம்ப மக்கு புள்ளவேற... எல்லா பசங்ககளும் ஸ்கூல் விட்டு ஒழுங்கா வரும் போது.. நான் மட்டும் எதையாவது தொலைத்து விட்டு வருவேன்.. எனக்கு தெரவுசு பத்தலைன்னு சொல்லி பக்கத்துல அடுப்பு எரிக்கற சவுக்கு மிளாரை எடுத்துகிட்டு பத்தரகாளி போல ஓட ஓட விரட்டி உதைப்பியே...
அதை விட கொடுமை ஆய் வந்துடும் போல இருக்குன்னு டீச்சர் கிட்ட சொல்ல பயந்துகிட்டு டிராயர்லேயே ஆய் போயிட்டு எல்லா பசங்களும் சிரிக்கும் போது... அவமானத்தால கூனிப்போய் இருக்கேன்... கடலூர் ராமகி்ருஷ்னா பள்ளியில் இருந்து கூத்தபாக்கம் வரை அழுதுகொண்டே டிராயரில் இருந்து கால் வரை வழிந்து போன மலத்துடன் நடந்து வர.. வழியில இருக்கற குட்டையில கூட கால் அலம்பி, டரவுசர் அலம்பி வரதெரியலைன்னா அப்படி என்ன வெட்கம் உனக்கு? அப்படி என்ன பயம்உனக்கு? என்று சொல்லி இழுத்து போட்டு உதைத்தது எல்லாம் உனக்கு நினைவுக்கு ஞாபகம் இருக்கின்றதா?...
உனக்கு எங்க ஞாபகம் இருக்க போகின்றது... உதைவாங்கின எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு....
அடுத்து ஒரு பெண் குழந்தை அது எனக்கு நினைவில் இல்லை ஆனால் நீ முன்றாவது பிரசவத்துக்கு மருத்துமனையில் சேர்த்த போது,
நீ பிரசவவேதனையி்ல் தவிக்கும் போது , கடலூர் அரச பொது மருத்துவமனை வெளியே நகம் கடித்து நின்றவன் நான்...
ஒரே நேரத்தில் இரட்டை குழந்தைகள் பெற்று நாய் போல் படுக்கையில் ரொம்பவும் கலைத்து கிடந்தாய்... ஒரு பழரசம் வாங்கி கொடுக்கு கூட எனக்கு அப்போது தோன்றவில்லை...நான் ரொம்ப சின்ன பையன்... பழரசம் என்பதே அப்போது நம் குடும்பத்தை பொறுத்தவரை பெரிய விஷயம்...பிறந்த இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு அந்த வேர்வையில் என்னை பார்த்தும் வாரி அணைத்துக்கொண்டாயே...அந்த பிரசவபகுதி பால் கவுலுடன் கூடிய வேர்வை வாசம் இன்னும் என் நாசியில்....உனக்கு நான் என்றால் ரொம்பவும் பிடிக்கும் என்பதையும் உன் ராஜ்யத்தின் ராஜா நான் என்பதையும் நான் நன்றாக அறிவேன்...
அதன் பிறகு நாலாவதும் பிரசவத்திலும் பெண் குழந்தை...அதன் பிறகு நீ ஜாக்கிரதையாக இருந்து இருக்க வேண்டும் ... எனக்கு தெரிந்து இரண்டு குழந்தை கரு நன்றாக வளர்ந்த பிறகு கலைத்து விட்டு அழுதது நன்றாக எனக்கு நினைவுக்கு இருக்கின்றது...அது ஒரு ஆண் குழந்தை என்று மருத்துவச்சி சொன்ன போது இயலதமையில் உன் கண்களில் பெருக்கெடுத்த அந்த கண்ணீ்ரை நான் பார்த்துவிட்டேன்... என்னை பார்த்ததும் அவசரமாக துடைத்துக்கொண்டாய்.... அப்போதே எனக்கு லேசாக புரிந்து விட்டது...கடைசி வரை அப்பா உன்னை பிள்ளை பெறும் எந்திரமாக மாற்றிவிட்டார்...
முதல் குழந்தை ஆண் குழந்தை... அப்புறம் பெண் குழந்தை அப்படியே நிறுத்தி இருக்கலாம்...என்னைக்கு உன் பேச்சை அப்பா கேட்டு இருக்கின்றார்??? என்று நீ வருத்தபடாத நாளே இல்லை..ஆனால் நீ உன் கணவனை ரொம்பவும் நேசித்தாய்...அவரும் அப்படியே... ஆனால் நிறைய ஆண் என்ற கர்வம் அவருக்கு.....
ஒரு குழந்தை பெற்றதும் அதை வளர்பதற்க்கு இப்போதேல்லாம் ரொம்பவும் சிரமபடுகின்றார்கள்.. மாமியார் மற்றும் யாருடைய உதவியும் இல்லாமல் எங்கள் 5வரையும் வளர்த்தாய் பார் நீ ரொம்பவும் கிரேட்...
அதனாலே என்னிடம் அதிகம் பேசினாய்... பகிர்ந்து கொண்டாய்....எனக்கு நல்ல ஆசானாய், வழிகாட்டியாய் இருந்தாய்...எல்லாமும் பேசி இருக்கின்றோம்
உனக்கு நினைவுக்கு இருக்கின்றதா? ஒரு பெண் கருப்புகலர் ஜாக்கெட் போட்டு உள்ளே சிவப்புகலர் பிரா போட்டு நடப்பதை பார்த்துவிட்டு உன்னோடு நான் பகிர... அதை எந்தவொரு அலட்டலும் இல்லாமல்நம்ம விட்டு பசங்க இது போல போவாம பார்த்துக்கோ என்று சொன்னவள் நீ.... இது போல மற்ற மகன்கள் தன் தாயிடம் இது போல பகிர முடியுமா என்று தெரியவில்லை...???..
அம்மா நீ எனக்கு நிறைய கடிதங்கள் சென்னையில் இருக்கும் போது எழுதி இருக்கின்றாய்... ஒரு காதலியின் கடிதம் போல அந்த கடிதங்களை அப்போது எல்லாம் விழியில் நீருடன் எப்படியும் ஒரு 200தடவைக்கு மேல் படித்து இருக்கின்றேன்.. உன் தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்து ரெண்டும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நீ நூலகத்தை எனக்கு அறிமுகபடுத்திய காரணத்தாலும் வாசிக்கும் பழக்கத்தை அதிகம் ஏற்படுத்திய காரணத்தாலும் ஏதோ நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கின்றேன்...இன்றைக்கு அன்னையர் தினமாம்... சற்றே அப்படியே உன்னை நினைத்து பார்த்தேன்.. நீ எழுதிய கடிதங்களை பல வருடங்களுக்கு பிறகு தூசி தட்டி வாசித்து பார்தேன்.... அப்படியே பழைய ஞாபகங்களில் முழ்கி உன்னோடு பயணம் செய்தேன்...உனக்கு நினைவுக்கு இருக்கின்றதா? நீ எனக்கு எழுதிய முதல் கடிதம் இந்த கடிதத்தில் இணைத்து இருக்கின்றேன்...
உனக்கு அவ்வப்பபோது நான் கடிதம் எழுதி இருக்க வேண்டும்...அதற்க்கு வாய்ப்பு இல்லை...இனிமேல் கடிதம் எழுதுகின்றேன்... அப்படி எழுதும் போதாவது உன்னை நினைத்து பார்க்கின்றேன்... உன் நினைவுகளோடு பயணிக்கின்றேன்...
அன்புடன்
ஜாக்கிசேகர்....
என்னடா ஜாக்கி அது இதுன்னுட்டு....இது என்ன கூத்து நீ எப்ப கிருஸ்டினா மாறிபோன...??
ஐயோ அம்மா வடமொழி எழுத்து வந்தாலே கிருஸ்டிணா?அது ஒரு பெரிய கதை.. பொறுமையா சொல்லறேன்...
==========================================================
இன்பத்தை கருவாக்கினாள் பெண்...
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள் பெண்..
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண்...
எல்லா நண்பர்களுக்கும்,வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் என் அன்னைக்கும் உங்கள் அன்னைக்கும்... அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
====================
ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க...
Subscribe to:
Post Comments (Atom)
கண்ணீர் தழும்ப வச்சிட்டீங்க... முதல் பத்தியில் குறிபிட்டுள்ள அந்த வார்த்தை மட்டும் ஏனோ உறுத்துகிறது... தயவு செய்து நீக்கிவிடுங்கள்...
ReplyDeleteசெம ட்ச்சிங் பதிவு.
ReplyDeleteஅன்னமூட்டிய தெய்வமணிக்கரங்கள் ஆணைக்காட்டில் அனலை விழுங்குவோம்.
ReplyDeleteJackie, This is a superb posting. Keep it up..!!!!
ReplyDeleteநீங்க நல்லா இருப்பீங்க சேகர்
ReplyDeleteஅன்புநிறை
நித்யன்.
என்ன சொல்லரதுன்னே தெரியல..
ReplyDeleteஎன்ன ஒரு படைப்பு நம் தாய்...
ரொம்ப நன்றி ஜாக்கி அண்ணே..
மனதை தொட்ட பதிவு...!
ReplyDeleteஅருமையான பதிவு தனசேகரன்.என் எண்ண ஓட்டம் பின்னோக்கிச் சென்றது!!
ReplyDeleteஎல்லோருக்கும் என் மனம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துகள்.
தாம்பத்யம் மட்டும் அந்தரங்கம் இல்லை. குடும்ப விஷயமும் கடிதங்களுமே ஜாக்கிசேகர் அவர்களே..
ReplyDelete[[ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க...]]
இப்படி சொல்வதால் நீங்கள் குறைந்துதான் போறீங்க .. உங்க பதிவுகள் அருமையா இருந்தாலும்..
மன்னிக்கவும்..
அடுத்தவர் நேரத்தை தர்மமாய் கேட்பது நன்றல்லதானே?..
நீங்கள் துவக்கத்தில் பகிர்ந்திருக்கும் நீங்கள் பிரசவித்த பொழுது ...
ReplyDeleteஇவ்வளவு அருமையா சொல்லியிருக்கீங்கன்னா, அந்த தாய் சிறப்பாய பகிர்ந்திருக்க வேண்டும் தங்களிடம்.
மிகவும் நெகிழ்வாய் ...
கடிதங்கள், பார்க்கையில் நிறைய உணர்வு தோன்றுது நண்பா
மிக மிக அருமையான பதிவு ஜாக்கி..!
ReplyDeleteஉலகின் மிக மிக உயர்ந்த , மற்றும் கடினமான விசயம்..தாய்மை...!
அனைத்து அம்மாக்களுக்கும் என் அன் வணக்கம்....
நல்ல பதிவு
ReplyDeleteசெம டச்சிங்..
ReplyDeleteரொம்ப உணர்ந்து எழுதிருக்கீங்க .இப்படிப்பட்ட பிள்ளை கூட அவங்க இருந்திருக்கலாம் !
ReplyDeleteகூடத்தான் இருப்பாங்க !எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு
உணர்வு பூர்வமான பதிவு.
ReplyDeleteதாயை தெய்வமாய் நினைத்தவன் கெட்டு சரித்திரம் இல்லை.
அண்ணே,
ReplyDeleteமிக மிக உணர்ச்சிகரமான இடுகை,அன்னையர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
நன்றி பிலாசபி பிரபாகரன்... நீக்கிவிட்டேன்...பிரபா
ReplyDeleteநன்றி வடுவூர்குமார்...
நன்றி விஜயன்...
நன்றி ரமனா...
நன்றி நித்யகுமாரன்..
நன்றி பிராகஷ்...
நன்றி தமிழ் அமுதன்
நன்றி ரமேஷ்..
தாம்பத்யம் மட்டும் அந்தரங்கம் இல்லை. குடும்ப விஷயமும் கடிதங்களுமே ஜாக்கிசேகர் அவர்களே..//
ReplyDeleteநன்றி புன்னகை தேசம்...
என் அம்மா என் மீது கொண்ட பாசத்தை சொன்ன வரிகள் அவை...குடும்ப விஷயத்தை எதை சொல்ல வேண்டும்.. எவ்வளவு சொல்ல வேண்டும் என்பது எனக்கு தெரியும்...
[[ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க...]]
இப்படி சொல்வதால் நீங்கள் குறைந்துதான் போறீங்க .. உங்க பதிவுகள் அருமையா இருந்தாலும்..
மன்னிக்கவும்..
அடுத்தவர் நேரத்தை தர்மமாய் கேட்பது நன்றல்லதானே?..//
உங்களுக்கு இது தர்மமாக படுகின்றது.. எனது இடுக்கை நன்றாக இருந்தால் ஓட்டு போடுங்கள் அதுவும் தினமும் வாசித்து ஓட்டு போடும் நண்பர்களைதான் நான் கேட்கின்றேன்...எனக்கு ஓட்டு போடும் நண்பர்கள் இதனை தர்மமாக நீங்கள் சொன்ன கண்ணோட்டத்தில் போடும் நபர்கள் அல்ல என்பது என் கருத்து...ஓட்டு போடுவதை என் படைப்புக்கான அங்கீகாரமாக கேட்கின்றேன்..உரிமையுடன் கேட்கின்றேன்...
நன்றி..
இன்னும் சொல்வதென்றால்...நான் சொல்வதைவிட தினமும் என் தளத்தை வாசித்து ஒட்டுபோடுபவர்கள் அவர்கள் கருத்தை சொல்லலாம்..
நீங்கள் துவக்கத்தில் பகிர்ந்திருக்கும் நீங்கள் பிரசவித்த பொழுது ...
ReplyDeleteஇவ்வளவு அருமையா சொல்லியிருக்கீங்கன்னா, அந்த தாய் சிறப்பாய பகிர்ந்திருக்க வேண்டும் தங்களிடம்.
மிகவும் நெகிழ்வாய் ...
கடிதங்கள், பார்க்கையில் நிறைய உணர்வு தோன்றுது நண்பா//
நன்றி ஜமால்....மிக்க நன்றி.. சந்திப்புக்கும்
நல்ல மதிய உணவுக்கும்..
மிக மிக அருமையான பதிவு ஜாக்கி..!
ReplyDeleteஉலகின் மிக மிக உயர்ந்த , மற்றும் கடினமான விசயம்..தாய்மை...!
அனைத்து அம்மாக்களுக்கும் என் அன் வணக்கம்..../
நன்றி பேரரசன்..
நன்றி ஜெய்
ReplyDeleteநன்றி காஞ்சி சுரேஷ்
நன்றி பத்மா...எங்களுடன்தான் அவர் வாழ்கின்றார்... அதே நம்பிக்கை எங்களுக்கும்..
நன்றி கார்த்தி
ReplyDeleteநன்றி மால்குடி
உணர்வுப்பூர்வமான பதிவு ஜாக்கி &
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துகள்.
அற்புதமான பதிவு, ஜாக்கி அண்ணே..கலங்கடித்து விட்டீர்கள்.
ReplyDeleteமிக நெகிழ்வான இடுகை சேகர்.
ReplyDeleteஅம்மா கடவுள்ட்ட இல்லை.அம்மாதான் கடவுள்.
நீங்க கேக்குறதெல்லாம் தரத்தான் அம்மா கடவுளா இருக்காங்க.அம்மாவாய் இருந்து செய்ய முடியாததை எல்லாம் கடவுளா இருந்து செய்வாங்க.
கேளுங்க...சரியா?
இந்த சிறப்பான பதிவுக்கு என்னுடைய கண்ணீர் காணிக்கை
ReplyDeleteஎல்லோரின் தாயையும் மீண்டும், நெஞ்சில் வலம் வர வைத்துவிட்டீர்...
ReplyDeleteநன்றி...
padichitu vaai vitu azhudhen.. :(
ReplyDeleteநன்றி புதுவை சிவா..
ReplyDeleteநன்றி சுப்புராமன்....
நன்றி பாரா நீங்கள் சொல்வது உண்மைதான் அன்னைதான் கண் கண்ட தெய்வம்..
நன்றி கருவாச்சி
ReplyDeleteநன்றி சுகுமார்ஜி
நன்றி சஞ்சனா...
எல்லோரும் அவர்கள் அம்மாவை நேசிக்க வேண்டும் என்பதும்.. என் அம்மா என்னை ரொம்பவும் பாசத்தோடு பார்த்துக்கொண்டவள்.. என்பதையும் அதை ஒரு வரலாற்று பதிவாக சொல்ல இந்த பதிவு...
உண்மையில் இந்த பதிவை எழுதி முடித்து விட்டு வாசிக்கும் போது நான் அழுது விட்டேன்..
//அதை எந்தவொரு அலட்டலும் இல்லாமல்நம்ம விட்டு பசங்க இது போல போவாம பார்த்துக்கோ என்று சொன்னவள் நீ.... இது போல மற்ற மகன்கள் தன் தாயிடம் இது போல பகிர முடியுமா என்று தெரியவில்லை...???..//
ReplyDeleteMy mother done same with me . I m last so she groomed me like what she want from respected Man .Mother is always special . Even after 20 years she left, i can feel her nearby always .... i miss her lot
Thanks for sharing wonderful MOM caring . (I wish i have good Tamil type writing skills ..)
அன்னையர் தினத்திற்கு ஒரு அருமையான நினைவுகூறல். அம்மாக்களிடம் பெரிய வித்தியாசங்கள் இல்லை போல. எல்லாரது அனுபவமும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறது. எழுதிய விதம் மனதை பிசைய வைத்தது.
ReplyDeleteநெகிழ வைத்துவிட்டீர்கள்.... சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள்.அன்னையை வாழ்நாள் முழுவதும் நினைத்து,கொண்டாட வேண்டும்.சின்ன சின்ன சந்தோசங்களை,முடிந்தால் இந்தமாதிரி தினங்களிலாவது ஒரு சிறு அன்பளிப்புகளை அவர்களுக்கு கொடுப்பதால் அவர்கள் அடையும் ஆனந்தம் அளவில்லாதது.அதை பார்க்க நமக்கு பாக்கியம் வேண்டும்.
ReplyDelete