(NAMMAVAR)நம்மவர் திரைப்படம் ,கமல்,காதல் காட்சி, கவுதமி....


( நேற்று கமல் என்ற கலைஞனை வாழும் போதே கவுரவபடுத்தியது விஜய் டிவி... கமல் மீது ஏகபட்ட குற்றசாட்டுகள் உண்டு.. எனக்கு கூட அவரிடம் பிடிக்காத விஷயங்கள் நிறைய உண்டு... ஆனால் ஒரு மனிதன் எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை....பல குற்றசாட்டுகள் அவர் முன் வைத்தாலும் அந்த மனிதன் கவலைபட்டதாக தெரியவில்லை... கமல் எது செய்தாலும் குற்றம் கண்டு பிடித்து அவரை கிழி கிழி என்று கிழிப்பதையே பலர் தொழிலாக கூட வைத்து இருக்கின்றார்கள்...
ஆனால் சினிமா இண்டஸ்ட்ரியில் கமலை பற்றி பேசும் போது...அவர் பன்முகத்திறமையை போற்றி புகழாதவர்கள் சொற்ப்பமே.....தனக்கு தோன்றிய கருத்தையும் எந்த இடர்வரினும் வெளிபடுத்த கமல் தயங்கியதே இல்லை.... நேற்று இரவு 12 மணிக்கு எழுத ஆரம்பித்து விடியலில் 4 மணிக்கு முடிந்தது இந்த பதிவு....கமல் என்ற பன்முகத்திறமை கொண்ட அந்த கலைஞனுக்கு இந்த பதிவு சமர்பணம்...)


நான் கல்லூரியில் வேலைக்கு போகும் போது கல்லூரி மாணவ மாணவிகளை பற்றி சற்றே பயம் இருந்தது உண்மை... எனென்றால் எனக்கு மூக்கு நுனியில் கோபம் வரும்... எப்படி இந்த பசங்களிடம் இருக்க போகின்றேன் என்று என்னுள் நிறைய யோசித்து இருக்கின்றேன்...

ஏனென்றால் அவர்கள் இளம் ரத்தம்... அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள்... என்னைவிட அதிக கோபம் உள்ளவர்கள்.. எதை பற்றியும் கவலை படமாட்டார்கள்... என் அம்மா நான் தவறு செய்யும் போது எல்லாம் ஒரு வாக்கியத்தை அடிக்கடி நினைவு படித்திக்கொண்டே இருப்பாள்...

“சிரிக்க சிரிக்க சொல்லறவங்க... சீரழியதான் சொல்லி கொடுப்பாங்க...
அழ அழ சொல்றவங்கதான் உன் நல்லதுக்கு சொல்வாங்க” என்று அடிக்கடி சொல்லி கண்ணில் நீர் வேறு வைத்தக்கொள்வாள்...

மாணவர்களுக்கு எப்படி சொன்னாலும் அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ... அதைதான் செய்வார்கள்.... அதே போல் கல்லூரியில் கூட பேராசிரியர்களோடு பேசும் போது அவர்கள் அற்புதமாக மாணவர்களை பற்றி சொல்லுவார்கள்..

மாணவன் நல்லவன்...
மாணவர்கள் கெட்டவர்கள்....

உண்மைதான் மாணவர்கள் மட்டும் கோஷ்ட்டி சேர ஆரம்பித்தால் அவ்வளவுதான்.. அது காட்டாற்று வெள்ளம் போல் பல திக்குகளில் பாய வல்லது... அவர்களை கட்டுபடுத்துவது என்பது காட்டுதீயை கட்டுபடுத்துவதற்க்கு சமம்...

இலங்கை பிரச்சனையில் பத்திரிக்கையாளன் முத்துகுமார் பற்ற வைத்த தீ மாணவர்கள் கைக்கு போனதும்... தமிழக அரசு ஒரு வாரம் கல்லூரிக்கு விடுமுறை விட்டது வரலாற்று பதிவு... அப்படி பட்ட மாணவர்களை எப்படி அடக்கி அன்பாக வைப்பது என்று நினைக்கும் போது நம்மவர் கமல்தான் என் நினைவுக்கு வந்தார்...

நான் என் கல்லூரியில் அவரை ரோல்மாடலாக வைத்தே பணி புரிந்தேன்...

கமலின் பல படங்களை சொல்லுபவர்கள் நம்மவர் படம் பற்றி ஏனோ நினைவு படுத்து மாட்டார்கள்... நான் மகாநதி, அன்பே சிவம், நாயகன், சத்யா, நம்மவர் , குணா, குருதிப்புனல் போன்ற படங்களை கமலின் மாஸ்டர் பிஸ் படங்கள் என்பது என் எண்ணம்... கமல் நடித்த படங்களி்லும் அமரர் நாகேஷ் நடித்த படங்களி்லும் .. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம் நம்மவர் என்றால் அது மிகையில்லை....


நம்மவர் படத்தின் கதை இதுதான்.....


சக்திவேல் கல்லூரியில் மாணவர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிர்மளா(நடன இயக்குனர் பிருந்தா) ரமேஷ்(கரண்)விட அதிக வாக்குகளில் ஜெயிக்க.... கரணின் அப்பா ஒரு சாராய வியாபாரி அவருடைய ஆட்களை கொண்டு கல்லூரியில் வன்முறை நிகழ்த்த, அந்த நேரத்தில் கல்லூரி வைஸ் பிரின்சிபல் போஸ்டுக்கு டாக்டர் செல்வம்(கமல்) வந்து ஜாயின்ட் பண்ண, அந்த கல்லூரியில் வன்முறை, போதை போன்ற பல விஷயங்கள் கொடிகட்டி பறப்பதை பார்க்கின்றார்....மாணவர்சங்க தேர்தலில் ஜெயித்த நிர்மளாவின் தந்தை பிரபாகர்ராவ் (நாகேஷ்) அதே கல்லூரியில் ஒரு பேராசிரியர்....டாக்டர் செல்வம் மாணவர்களுக்கு நல்ல ஆசிரியராக நடந்து கொண்டாலும், அந்த கல்லூரியில் தேர்தலில் தோத்த போன சாராய வியாபாரி மகன் ரமேஷ் மட்டும யாருக்கும் அடங்காமல் திரிய....டாக்டர் செல்வத்துக்கு அதே கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணி புரியும்(கவுதமி) மீது நட்பு உண்டாகின்றது... அதை கல்லூரியில் தப்பாக பேசுகின்றனர் ... கல்லூரியில் பல மாணவர்களுக்கு போதை மருந்து பழக்கம் இருக்கின்றது... அதனை டாக்டர் செல்வம் திருத்துகின்றார்... இதில் மாணவன் ரமேஷுக்கும் , டாக்டர் செல்வத்துக்கும் போட்டி நடக்கின்றது... மாணவர்களை திருத்த நினைக்கும் டாக்டர் செல்வம்... மாணவர்களை திருந்த விடாமல் தன் அப்பாவின் சாராய காசில் எவரையும் திருந்த விடாமல் தடுக்கும் ரமேஷ் என்று இருக்க... கடைசியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை எப்படியாவது திரையில் பார்த்து விடுங்கள்....

படத்தின் சுவாரஸ்யங்க்ளில் சில...

ஒரு பொறுப்புள்ள ஆசிரியர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு கமலின் டாக்டர் செல்வம் கதாபாத்திரம் மிக அழகாக பொருந்தி இருப்பார்... அதே போல் படத்தில் நடித்த எல்லா பாத்திரங்களும் அதன் இயல்பு மாறாமல் நடித்து இருப்பார்கள்....முதலில் கமல் நாகேஷை சந்திக்கு்ம் போது ஓனான் என்று கூப்பிட்டு அறிமுகம் ஆகும் காட்சியில்... நாகேஷ் மதுரை சண்டி செல்வமா நீ ? என்று கேள்வி கேட்டு விட்டு சட்டென பேச்சை நிறுத்தி இந்த தகராறுக்கெல்லாம் காரணம் நீதானா? என்று டயலாக் பேச நாகேஷை விட்டால் வேறுயார் இருக்கின்றார்....

நடிகர் கரண் இந்த படத்தில் கமலுக்கு இணையாக ரவுடி மாணவன் பாத்திரத்தை மிக சிறப்பாகவே செய்து இருப்பார்....

வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டு இருக்கும் போது சட்டென அனுமதி இல்லாமல் உள்ளே நுழையும் கரண்குரூப்பை... உள்ளே அனுமதிக்காமல் பாடம் நடத்த ஆரம்பித்து பத்து நிமிடம் ஆகிவிட்டது என்று கமல் சொல்ல... அப்படி பத்து நிமிடத்தில் அப்படி என்ன நடத்தி கிழித்து விட்டாய்? என கரண் கேட்க.. அதற்கு கமல் அட அரட்டையாகவே இருக்கட்டுமே நடுவுல வந்தா எப்படி புரியும் என்று சொல்லும் இடத்தில் வசனகர்த்தா கண்மணி சுப்பு படம் நெடுகிலும் இருப்பார்...

சொர்கம் என்பது நமக்கு என்ற பாடலில் கமல் மாணவர்களுடன் லோக்கல் டான்ஸ் ஆடும் போது இப்படி நமக்கு ஒரு ஆசிரியர் இல்லையே... என்று ஏங்க வைக்கும் அளவுக்கு மிக இயல்பாய் நடித்து இருப்பார்...திக்குவாய் மற்றும் போதை பழக்க மாணவர்களுடன் கமல் பேசும் டயலாக் ரொம்ப அற்புதம்...

கரனிடம் மன்னிப்பு கேட்க சொல்லி கமலை மிரட்ட வந்த ரவுடியிடம்... தோ பாரு மாரி.... என்று கமல் பேசும் வசனம் காமெடிரகம்... காராத்தே பெரிசா குத்து வரிசை பெரிசா? என்று கேட்டு போடும் சண்டை சூப்பர்...

அடிபட்ட பையனுக்கு ரத்தம் கொடுக்காமல் வீட்டிக்கு வரும் கமலை கவுதமி பின் தொடர்ந்து வர செந்தில் கதவை திறந்ததில் இருந்து ஒரே ஷாட்டில் எடுத்து இருப்பார்கள் நடுவில் இன்டர் கட் சீன் வந்தாலும்... கமலுக்கு புற்று நோய் என்று செந்தில் சொல்ல, அதில் இருந்து ஒன்றரை நிமிஷத்துக்கு கட் ஷாட் இல்லாமல் போய் இருப்பார்கள்.. ஹுட்சாக்கின் பேர்ட் படம் மூன்று கட் ஷாட்டில் முழு படமும் எடுத்து இருந்தாலும் இது போன்ற முயற்ச்சிகள் தமிழில் கமல் படத்தில் அதிகம் இருக்கும்.....அதில் அந்த காட்சியில் கவுதமி மற்றும் கமலின் பார்பர்மென்ஸ் சூப்பராக இருக்கும்...

உதாரணமாக அவ்வை சண்முகி படத்தில் மணிவண்ணனும் கமலும் மார்கெட்டில் பேசிவரும் காட்சி ஒரே ஷாட்....

கமலிடம் தன் காதலைவெளிபடுத்த கவுதமி தன் கேசம் கலைத்து நல்ல பெண், அழகான பெண், ஆம்பளைங்களுக்குபுரியறா மாதிரி சொல்னும்னா செம கட்டை என்று சொல்ல டோன்பி வல்கர் என்று கமல் சொல்ல அந்த காட்சி அற்புதமான காட்சி...

அதே போல் கமலுக்க மூக்கில் ரத்தம் வரும் காட்சியில் கவுதமி படும பதட்டமும் அந்த பர்பாமென்சும் அற்புமத் அதை விட மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்யறதுக்கு பேரு பரிதாபம் இல்லையா? ஒய் டோன்ட் யூ அண்டர்ஸ்டேன்ட் யூ ஸ்டுபிட் மேன் என்று சொல்லும் காட்சி உள்வாங்கி நடித்தால் மட்டமே அந்த ரிசல்ட் கிடைக்கும்....


இந்த படத்தின் குறிப்பிடபடவேண்டிய விஷயம் என்னவென்றால் கமலுக்கும் கவுதமிக்கும் ஏற்படும் ஊடல் கலந்த காதல் ரொம்பவும் அற்புதமாய் இருக்கும்...

கமலிடம் கவுதமி மரணத்தை பற்றி கேட்க முற்று பள்ளியே இல்லாத வாக்கியம் போரடிச்சிடும் இல்லையா என்று மரணத்தை பற்றி சொல்வது அற்புதம்..

ஸ்ரீவித்யாவும் செந்திலும் ஆட்டோவில் போக கமலுக்கும் கவுதமிக்குமான அந்த ரொமான்ஸ் காட்சி ஒருநிமிடம் 45 வினாடிகள் ஒரே ஷாட் அதில் எத்தனை ரிகர்சல் எடுத்து இருப்பார்கள் என்று தெரியாது.... முதல் முறையாக காதலோடு உடலுறவுக்கு தயாராகும் பெண் எப்படி தவிப்பாள் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருப்பார்கள் இந்த காட்சியில் கமலை விட கவுதமி நன்றாக ஸ்கோர் செய்து இருப்பார்.....
நான் சொன்ன அந்த மூன்றரை நிமிஷம் ரொமான்ஸ் மற்றும் கமல் கவுதமி... சான்சே இல்லாத ஆக்டிங்...
இது பாடல் அல்ல காட்சி...கீழே...


தனது மகள் தூக்கு போட்டு இறந்து விட்டாள் என்ற கேள்வி பட்டு நாகேஷ் ஒடுவதும் ,அதன் பின் இறந்து பெண்ணுக்கு தலையனை தேடி வைத்து புலம்பும் அந்த காட்சி 3நிமிடம்30 வினாடிகள் ஒரே ஷாட்....


அந்த காட்சியில் நாகேஷ் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார்.... நல்ல நடிகர் இப்போது நம்மிடத்தில் இல்லை பதிவர் சென்ஷிக்கு இந்த காட்சி பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...


ஒரு சில காட்சிகளில் வந்தாலும்.. ஸ்ரீவித்யா,செந்தில் ,டெல்லிகனேஷ் போன்றவர்கள் சிறப்பாக செய்து இருப்பார்கள்....

படத்தின் மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் மகேஷ் இவரும் இறந்து விட்டாலும் அவரின் இசை இன்னமும் இசைத்து்கொண்டுதான் இருக்கின்றன... கமல் கவுதமி காதல் காட்சிகளில் அந்த இசை மனதுக்கு இதமான ஒன்று...
படத்தில் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு...





படக்குழுவினர் விபரம்...
இந்த படத்தின் இயக்குனர் சேதுமாதவன்....

ஒளிப்பதிவு மது அம்பர்ட்
Release Date: 02 Nov 1994
Genre: Drama
Language: Tamil
Certification: U
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

30 comments:

  1. அருமையான விமர்சனம்.
    இந்த படத்தில் இசையமைப்பாளர் மகேஷின் இசை மிக நன்றாக இருக்கும்.
    பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் பாட்டின் வரிகளும், இசையும் ரசனை மிக்கவையாக இருக்கும்.

    சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம் என்ற பாடல் வரி தான் உங்கள் விமர்சனத்தை படித்தவுடன் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  2. நல்ல படம் சிறந்த விமர்சனம்

    ReplyDelete
  3. நன்றி ஜாக்கி.

    வேறெதுவும் என்னிடம் இல்லை.

    ReplyDelete
  4. எனக்கும் “பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்” பாட்டும், வாயால் இசைக்கும் பாடலும், கடைசியில் குரூப் போட்டோ எடுத்து கொள்ளும் காடசியும் நம்மவர் படமென்றால் நினைவுக்குவருகிறது.

    நம்மவர் கமலை பார்த்தால் ஒரு மென் சோகம் இழைந்தோடும். உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் மீண்டும் படத்தை பார்த்த ஞாபகம் வந்தது.

    நன்றி

    ReplyDelete
  5. திரு.ஜாக்கி,
    பொதுவாக ஒரு திரைப்படத்தின் மீதான விமர்சனங்கள் பல்வேறு வகைகளில் பார்வைபடுத்தப்படுகின்றன.உதாரணமாக யதார்த்த விமர்சனம்,நகைச்சுவையான விமர்சனம்,கோபமாக விமர்சனம்,இயல்பான நடைமொழி வார்த்தையிலான விமர்சனம் என்று.....
    ஆனால் உங்கள் திரைப்பட விமர்சனங்கள் மிக கூர்மையாக, தொழில்நுட்ப ரீதியாக,எளியவனுக்கும்(என்னை மாதிரி) புரியும்படியான விதத்தில் அமைத்துள்ளன ஜாக்கி.
    என்னோட வேண்டுகோள் : 100 விமர்சனங்கள் ஆனவுடன் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும்.
    நன்றியுடன்- பூங்குன்றன்
    poongundran2010.blogspot.com

    ReplyDelete
  6. நானும் ஒவ்வொரு காட்சியாக ரசித்துப் பார்த்த படம். மீண்டும் காணச் செய்ததற்கு நன்றிகள் நண்பரே....நீங்களும் இது போன்ற சிறந்த படங்களை எடுக்க எனது வாழ்த்துக்கள்.

    http://thisaikaati.blogspot.com

    ReplyDelete
  7. i havent seen this movie yet.. but after reading this, i wish to see n must see..

    nice explanation..

    ReplyDelete
  8. அருமையான படம்.

    அழகான விமர்சனம்.

    டெக்னிக்கல் விஷயங்களை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் ஜாக்கி. இந்த விவரங்களுக்காக இன்னொருமுறை படம் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  9. கமலின் ஒரு சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. நம்மவரும் அதில் ஒன்று. உங்கள் திரைப்பார்வை படித்த பிறகு மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றுகிறது. நன்றி ஜாக்கி.

    ReplyDelete
  10. இன்னான்னு சொல்லுறது தல.! பிரிச்சி மேஞ்சிருக்கீங்க!

    என்னோட ஆல் டைம் ஃபேவரை! அன்பே சிவத்துக்கு அடுத்து, இன்னொரு (சொல்லாத) ரீமேக்.

    ReplyDelete
  11. நன்றி ... I feel like seeing the movie now only ...thanks

    ReplyDelete
  12. அழகான விமர்சனம்.

    ReplyDelete
  13. அருமையான விமர்சனம்.
    இந்த படத்தில் இசையமைப்பாளர் மகேஷின் இசை மிக நன்றாக இருக்கும்.
    பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் பாட்டின் வரிகளும், இசையும் ரசனை மிக்கவையாக இருக்கும்.

    சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம் என்ற பாடல் வரி தான் உங்கள் விமர்சனத்தை படித்தவுடன் நினைவுக்கு வந்தது.-

    நன்றி பாண்டி..

    ReplyDelete
  14. நல்ல படம் சிறந்த விமர்சனம்//
    நன்றி நெடுன்

    ReplyDelete
  15. நன்றி ஜாக்கி.

    வேறெதுவும் என்னிடம் இல்லை.//
    நன்றி முரளிகண்ணன்

    ReplyDelete
  16. எனக்கும் “பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்” பாட்டும், வாயால் இசைக்கும் பாடலும், கடைசியில் குரூப் போட்டோ எடுத்து கொள்ளும் காடசியும் நம்மவர் படமென்றால் நினைவுக்குவருகிறது.

    நம்மவர் கமலை பார்த்தால் ஒரு மென் சோகம் இழைந்தோடும். உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் மீண்டும் படத்தை பார்த்த ஞாபகம் வந்தது.

    நன்றி//
    நன்றி யோவாய்ஸ்

    ReplyDelete
  17. எனக்கும் “பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்” பாட்டும், வாயால் இசைக்கும் பாடலும், கடைசியில் குரூப் போட்டோ எடுத்து கொள்ளும் காடசியும் நம்மவர் படமென்றால் நினைவுக்குவருகிறது.

    நம்மவர் கமலை பார்த்தால் ஒரு மென் சோகம் இழைந்தோடும். உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் மீண்டும் படத்தை பார்த்த ஞாபகம் வந்தது.

    நன்றி//
    நன்றி யோவாய்ஸ்

    ReplyDelete
  18. Wonderful film and Nice explanation.//
    உண்மைதான் நைனா..

    ReplyDelete
  19. திரு.ஜாக்கி,
    பொதுவாக ஒரு திரைப்படத்தின் மீதான விமர்சனங்கள் பல்வேறு வகைகளில் பார்வைபடுத்தப்படுகின்றன.உதாரணமாக யதார்த்த விமர்சனம்,நகைச்சுவையான விமர்சனம்,கோபமாக விமர்சனம்,இயல்பான நடைமொழி வார்த்தையிலான விமர்சனம் என்று.....
    ஆனால் உங்கள் திரைப்பட விமர்சனங்கள் மிக கூர்மையாக, தொழில்நுட்ப ரீதியாக,எளியவனுக்கும்(என்னை மாதிரி) புரியும்படியான விதத்தில் அமைத்துள்ளன ஜாக்கி.
    என்னோட வேண்டுகோள் : 100 விமர்சனங்கள் ஆனவுடன் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும்.
    நன்றியுடன்- பூங்குன்றன்
    poongundran2010.blogspot.com//

    உங்கள் பாராட்டுக்கு
    நன்றி பூங்குன்றன்...எனக்கு இது போல ஒர ஜடியா இருக்கின்றது... இதில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை யாராவது பதிப்பக நண்பர்கள் உங்கள் வட்டத்தில் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ள சொல்லுங்கள்..
    நன்றி உங்கள் பாராட்க்கு ஜாக்கி

    ReplyDelete
  20. நானும் ஒவ்வொரு காட்சியாக ரசித்துப் பார்த்த படம். மீண்டும் காணச் செய்ததற்கு நன்றிகள் நண்பரே....நீங்களும் இது போன்ற சிறந்த படங்களை எடுக்க எனது வாழ்த்துக்கள்.

    http://thisaikaati.blogspot.com//
    நன்றி ரோஸ்விக் மிக்க நன்றி

    ReplyDelete
  21. i havent seen this movie yet.. but after reading this, i wish to see n must see..

    nice explanation..//
    சஞ்சனா முதல்ல இந்த படத்தை பாருங்க... அவ்வளவு அற்புதமான படம்...

    ReplyDelete
  22. அழகான விமர்சனம்.

    டெக்னிக்கல் விஷயங்களை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் ஜாக்கி. இந்த விவரங்களுக்காக இன்னொருமுறை படம் பார்க்கவேண்டும்.//
    நன்றி தபாய் ராஜா மிக்க நன்றி

    ReplyDelete
  23. கமலின் ஒரு சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. நம்மவரும் அதில் ஒன்று. உங்கள் திரைப்பார்வை படித்த பிறகு மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றுகிறது. நன்றி ஜாக்கி.//
    நன்றி ராஜா...

    ReplyDelete
  24. இன்னான்னு சொல்லுறது தல.! பிரிச்சி மேஞ்சிருக்கீங்க!

    என்னோட ஆல் டைம் ஃபேவரை! அன்பே சிவத்துக்கு அடுத்து, இன்னொரு (சொல்லாத) ரீமேக்.//
    நன்றி பாலா...

    ReplyDelete
  25. நன்றி ... I feel like seeing the movie now only ...thanks//
    நன்றி அது ஒரு கனாக்காலம்

    ReplyDelete
  26. நன்றி பிருந்தாவன் நன்றி ஜோ..

    ReplyDelete
  27. நல்ல விமர்சனம் ஜாக்கி! நம்மவர் படத்துல குரு அதகளம் செஞ்சிருப்பாரு.. கமல்கிட்ட அந்த வருச பேட்சா நீன்னு கேக்கறதுல ஆரம்பிச்சு இப்ப எனக்கு தூக்கம் வருதேன்னு வருத்தமா சொல்லி கமலோட தொடையில் படுத்துக்கற வரைக்கும்... ஹய்யோ இன்னும் அந்த முகம் நம்மால மறந்து வெளியில வர முடியாது.. ப்ச்..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner