(KM.0) 18+( உலக சினிமா/ஸ்பெயின்) தனது மகன்... ஹோமோ செக்ஸ்... தாசி...இது போல் 14பேர்....

உலகம் எங்கும் மனிதர்கள் ஒரே மாதிரிதான் இருக்கின்றார்கள்... அவர்களுடைய காதல், சோகம் , மகிழ்ச்சி எல்லாம் ஒரே விதமாய் இருக்கின்றது...மேற்கத்திய நாடுகளில் போதை மற்றும் செக்ஸ் அதிகம்... காரணம் எலும்பை ஊடுருவும் குளிர்தான் மிக முக்கிய காரணம் என்பேன்....ஆனாலும் உறவுகள் என்பது எல்லா நாட்டிலும் ஒன்றுதான்...
ஆனால் மனிதனின் அடிப்படை விஷயமான செக்சுக்கு மக்களின் தேடுதல் என்பது எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கின்றது....நல்ல கம்பெனியனுக்காக வாழ்க்கை முழுவதும் தேடிக்கொண்டு இருப்பவர்கள் அதிகம்.. சிலருக்கு உடன் கிடைத்து விடும் ... பலருக்கு வாழ்க்கையே தேடலாக இருக்கும்....

சிலர் செக்சையும் தவிர்த்து தனது துறையில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று தேடலுடன் உலகம் முழுவதும் சுற்றுபவர்களும் உண்டு... அப்படி எண்ணற்ற தேடல்களுடன் வரும் 14 பேரை பற்றிய கதைதான்...km/0 என்ற இந்த ஸ்பெயின் நாட்டு படம்....

KM.0 படத்தின் கதை இதுதான்...

ஸ்பெயினில் கே எம் 0 என்பது ஒரு சென்டர் பாயிண்ட்... அந்த இடத்தை 0 என்று குறிப்பார்கள்... அந்த இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு போகும் தூரத்தை கணக்கிடுவார்கள்... அந்த கே எம் 0 என்ற இடத்தில் மீட் பண்ண போன், இன்டர்நெட் போன்றவற்றின் மூலம் தொடர்பு கொண்ட 14 பேர், அந்த இடத்தில் சந்திப்பது என்று பிளான்...

தனது பணக்கார கணவனால் செக்ஸ் சுகம் கிடைக்காத 50 வயது பெண்மணி...

ஹோமோ செக்சில் நல்ல பார்ட்னர் தேடி வரும் ஆள்...

டைரக்டர் கனவோடு வரும் இளைஞன்.....

தனது படுக்கைக்கு ஆள் பிடிக்க வரும் தாசி....

தனது பாடலை உலகுக்கு நிருபிக்க வேண்டிய பாடகி...

பணத்துக்காக யாரிடமும் படுத்து கொள்ளும் ஆண் விபச்சாரி...

நல்ல பிசினஸ் செய்து முன்னேற வேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கும் சின்ன பாரை நடத்தும் இளைஞன்...

முதல் முறையாக ஒரு பெண்ணை அனுபவிக்க வேண்டும் என்று உயர்ந்த குறிக்கோளுடன் இருக்கும் ஒரு கட்டை பிரம்மசாரி

இப்படி தேடல்களுடன்,வயிற்று பிழைப்புக்கு, சுகத்துக்கு, என்று பல்வேறு பட்ட14 கேரக்டர்கள் அந்த 0 பாயிண்டில் சந்தித்து கொள்வதாக வர... ஒருவர் கொஞ்சம் லேட்டாக எல்லா ஜோடிகளும் சிட்டு கட்டு குழைப்பது போல் மாறி விடுகின்றது... அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளை காமெடி கலந்து தனது அழகான திரைக்கதையால் நம்மை ஈர்க்க செய்கின்றார் இந்த ஸ்பெயின் தேசத்து இயக்குனர்...Yolanda García Serranoபடத்தின் சுவாரஸ்யங்களில் சில...

14 கேரக்டர்களுடன்(Yolanda García Serrano) இயக்குனர் அமைத்து இருக்கும் திரைக்கதையில் காமெடி அற்புதம்....

ஹோமோ செக்ஸ்சுவல் காட்சிகளில் வயிறு சிரிக்கவைக்கும் காட்சிகள் அதிகம்.. அதே போல் அவர்கள் காதலை... ரொம்ப உணர்ச்சிகரமாக காட்டி இருப்பார்கள்...அவர்கள் ஒருவருக்கு ஒரவர் கெஞ்சுவத கொஞ்சுவது என்பது நம்ம நாட்டு ரசிகர்களுக்கு இந்த படம் புதிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்...

அதே போல் பிரபல இயக்குனராக வேண்டும் என்று மேற்படிப்பு படிக்க வரும் இளைஞன் தனது அக்காவின் நண்பி என்று நினைத்து ஒரு பிராஸ்டியூட் உடன் செல்ல.... கொஞ்சம் கொஞ்சமாக எதிர் துருவ கருத்துக்களுடன் இருக்கும் இருவரும் ஒரு புள்ளியில் இனைவது அழகு...

தனது கணவனிடம் கிடைக்காத அன்புக்காக50 வயமு பெண்மணி இளவயது பையனை பணத்துக்கா உடலுறவுக்கு அழைத்து ஈடுபடும் பெண் ... ஒரு கட்டத்தில் அவ்ன குளியல் அறைக்கு போய் விட்டு வரும் போது ஏதெச்சையாக அவனது பர்சை பார்க்க அதில் இருக்கும் போட்டோ... அவளுடையது... அந்த பையன் சின்ன வயதில் தொலைந்து போன... இந்த 50வயது பெண்மணியின் பையன்... அதாவது பெற்ற பையனிடமே கால ஓட்டத்தில் தவறுதலாக உறவு கொண்டு விட்டாள்....
சற்று பொறுங்கள்.. அப்படி இருந்தாலும் எல்லா ஊரிலும் அம்மா சென்டிமென்ட் உண்டு... மிக அற்புதமான திரைக்கதை மூலம் அந்த உறவை கொச்சை படுத்தாமல் படுத்தாமல் இருப்பார்...

முதன் முதலில் ஒரு பெண்ணோடு உறவு கொள்ள வேண்டும் என்று வந்தவன் ஹோமோவிடம் மாட்டிக்கொள்ள அது ஒரு காமெடி கலாட்டா...

இப்படி படம் முழுவதும் காமெடி தூவல்கள் மூலம் உறவு சிக்கல்களை அற்புதமாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர்Yolanda García Serrano

படத்தின் முடிவு என்பது நமது பிம்சிங்,கே எஸ்கோபாலகிருஷ்ணன் போன்றவர்களின் படத்தை நினைவு படுத்தும்...


இந்த படம் பல்வேறு உலக படவிழாக்களில் கலந்து கொண்டு 5 வெற்றிகளையும், ஒரு விழாவில் திரையிட தகுதியும் பெற்றது....
* Boulder Gay & Lesbian Film Festival Audience Award for Best Feature Film (2002)
* Goya Awards Best Original Song - nominated (2001)
* Hamburg Lesbian and Gay Film Festival Eurola Award (2001)
* Outfest Audience Award for Outstanding Narrative Feature (2002)
* Miami Gay and Lesbian Film Festival Audience Award (2001)
* Philadelphia International Gay & Lesbian Film Festival Audience Award Best Feature (2001)

படத்தின் டிரைலர்...


படக்குழுவினர் விபரம்...

Directed by Yolanda García Serrano
Juan Luis Iborra
Written by Yolanda García Serrano
Juan Luis Iborra
Starring Concha Velasco
Georges Corraface
Silke
Carlos Fuentes
Mercè Pons
Alberto San Juan
Elisa Matilla
Armando del Río
Miquel García Borda
Jesús Cabrero
Víctor Ullate Jr.
Cora Tiedra
Music by Joan Bibiloni
Cinematography Ángel Luis Fernández
Editing by José Salcedo
Release date(s) 2000
Running time 108 minutes (theatrical)
100 minutes (US DVD)
Country Spain
Language Spanish

அன்புடன்
ஜாக்கிசேகர்...
(குறிப்பு... பதிவுலகில் நிறைய பேர் திரைவிமர்சனம் எழுதுகின்றார்கள்... அனால் எனது தளத்தில்...உலகின் மிகச்சிறந்த படங்களை மட்டுமே பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் அறிமுகபடுத்துகின்றேன்... சிறந்த படத்துக்கு மொழி ,நாடு வித்யாசமில்லை... ஒரு நல்ல படத்தை நான் உங்களுக்கு அறிமுக படுத்த 15 குப்பை படங்களை பார்த்து தொலைக்க வேண்டி இருக்கின்றது... அதற்க்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டி உள்ளது... எந்த படம் நல்ல படம்? என்று நான் தேடிய போது இது போன்று அறிமுகபடுத்த தளங்கள் அப்போது இல்லை... அது போல் வரும் தலைமுறை தட்டுதடுமாறக்கூடாது என்று நான் அதிகம் நேசிக்கும் சினிமாவை எனது தளத்தில் உலக சினிமா,உள்ளுர்சினிமாவில் தி பெஸ்ட் என்று பெயர் எடுத்த படங்களை மட்டும் எழுதி வருகின்றேன்... பின்னுட்டம் இட்டும ஓட்டு போட்டும் உற்சகபடுத்துவீர் என்ற நம்பிக்கையுடன்)

8 comments:

 1. வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. பார்த்துடுவோம்!

  ஆனா பர்மா பசார்ல கிடைக்க மாட்டேங்குதே இந்த படங்கள் எல்லாம்

  ReplyDelete
 3. பாதி பார்த்தேன்!

  கதாபாத்திரங்கள் அதிகம் வந்து குழப்பியாதால் நிறுத்திவிட்டேன், மீண்டும் பார்க்க வேண்டும்!

  ReplyDelete
 4. ஒரு வேண்டுகோள்!

  ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்றால் இன்னும் திறம்பட எழுதலாம் என நினைக்கிறேன்! வெறும் விமர்சனம் இதை போன்ற அரிய வெற்று மொழி படங்களை பார்க்கத்தூண்டாது!

  உங்களுக்கு இருக்கும் அதிகப்படியான நேரமும், தட்டச்சு வேகமும், வாசகர்களீன் ஆர்வமும் பிரமிக்க வைக்கிறது!

  ஆனால் ரிசல்ட் ஒகேவான்னு பாருங்க!

  பட்ஸ் இருந்தாலும் காது குடையலாம், ஹிட்ஸை வச்சிகிட்டு ஒண்ணும் பண்ணமுடியாது!

  ReplyDelete
 5. very nice comment on this film, have u seen pan's labyrinth? it has got a 20 minutes ovation at cannes,

  btw, r u from cuddalore, where in koothapakkam? ur studies? i m from pondicheery but did studies in cudlore.

  Ilan

  ReplyDelete
 6. அருமை அருமை அருமை .................. இந்துபோன்ற படங்களை நான் உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன். நன்றி நன்றி நன்றி ..................... இந்த பதிவிற்கு ...

  ReplyDelete
 7. எங்க அண்ணாத்த மாட்டுது உங்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமான படங்கள்.???

  ReplyDelete
 8. மிக்க நன்றி. உங்கள் விமர்சனம் படித்து விட்டு படத்தை இறக்குமதி செய்து பார்த்தேன். மிக அருமை. கொஞ்சம் கூடக் குழப்பாமல்... அதிலும் அந்த முடிவு.... வாவ்.

  இதையே தட்டி நெளித்து தமிழிலும் எடுக்கலாம். ஆனால் அசிங்கப்படுத்தி விடுவார்கள். ஏனென்றால் இதில் முகம் சுழிக்க வைக்கும் ஒரு காட்சியும் கிடையாது. படத்தை மிகமிக ரசித்தேன். இது போன்ற சிறந்த படங்கள் குறித்து நிறைய சொல்லுங்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner