எங்கே போனார்கள்???? (கவிதை)


ரயில்
இன்னும் அதே தாள லயத்துடன்தான்
ஓடிக்கொண்டு இருக்கின்றது...

ரயில் பெட்டியின்
ஜன்னல் ஓர முனைகளில்
பாண்பராக்,சளி,எச்சில் துப்பல்களின்
மிச்சம்....

நடந்த போகும் பாதையை மட்டும்
ஒப்புக்கு பெருக்கி விட்டு,
கை கால் நன்றாக இருக்கும்
பிச்சைக்காரார்கள்...

கொலைபசியில்
இருக்கும் போது
சப்பாத்தியும், குருமாவை
வைத்து தின்று கொண்டு
சினேகபார்வை பார்க்காமல்
நக்கல் பார்வை பார்க்கும்
சேட் குடும்பம்....

சிட்டு விளையாட்டு
விளையாடாத பெட்டிகளை...
விரல்விட்டு எண்ணிவிடலாம்...

பெப்சியில் சரக்கும்
ஓட்காவும் கலந்த அடிக்கும்
ரகசியம் பிரசித்தி பெற்றுவிட்டது...

டாய்லெட்டில் ஆண் பெண்
குறி வரைந்து,
இந்தியாவின் எல்லா மொழிகளிலும்,
காம அரிப்பின் வெளிப்பாடு....

ஜன்னல் ஓர சீட்டுக்கு
இன்னமும் அடித்துக்கொள்ளும்
பெரியவர்கள் சிறியவர்கள்....


நெடுக்காலமாக
ரசித்து குடித்த காபி டீயை
வெறுத்து போக செய்யும் அளவுக்கு ,
ரயில் கேன்டீன்
வென்னீர் காபி, டீக்கள்...


இது போன்ற பலவிஷயங்கள்
ரயில் பயணங்களில்
இன்னமும் மாறவில்லை...
மாற போவதும் இல்லை...

மன பாராத்தோடு
ரயில் பெட்டியின் ஜன்னல் ஓரம்,
வெறித்த பார்வையுடன்
பயணிக்கையில்....

மனதில் உற்சாகம்
ஏற்படுத்தும் விதமாக,
வெள்ளை சிரிப்புடன்,
அரைநிர்வாண கோலத்தில்
கை காட்டிய அந்த குழந்தைகள்
எங்ககே போனார்கள்?????


(ஷுட்டிங் முடித்து சென்னைக்கு ஆலப்புழாவில் இருந்து, ரயிலில் சென்னை திரும்பிய போது ரயிலிலேயே எழுதியது....)

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

19 comments:

 1. நான் இப்ப தான் ரயில் பயணங்கள் என்கிற தலைப்பில் ஒரு பயண கட்டுரையை எழுதி இருக்கேன். நீங்க அத கவிதையாக எழுதுடிங்க . நன்றாக இருந்தது .

  ReplyDelete
 2. // நடந்த போகும் பாதையை மட்டும்
  ஒப்புக்கு பெருக்கி விட்டு,
  கை கால் நன்றாக இருக்கும்
  பிச்சைக்காரார்கள்...

  டாய்லெட்டில் ஆண் பெண்
  குறி வரைந்து,
  இந்தியாவின் எல்லா மொழிகளிலும்,
  காம அரிப்பின் வெளிப்பாடு....

  //

  ம்ம்ம்....அய்யா கவிதையிலும் கலக்குறாரு.....கலக்குங்க..கலக்குங்க....வாழ்த்துக்கள்.

  இவை அருமை....கொஞ்சம் நாகரீகமாக...."காமத்தின் வெளிப்பாடு" என சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன் நண்பா.

  ReplyDelete
 3. //கொலைபசியில்
  இருக்கும் போது
  சப்பாத்தியும், குருமாவை
  வைத்து தின்று கொண்டு
  சினேகபார்வை பார்க்காமல்
  நக்கல் பார்வை பார்க்கும்
  சேட் குடும்பம்....
  //

  :))

  ReplyDelete
 4. அப்படியே ஒரு ரயில் பயணத்தை கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்.

  //மனதில் உற்சாகம்
  ஏற்படுத்தும் விதமாக,
  வெள்ளை சிரிப்புடன்,
  அரைநிர்வாண கோலத்தில்
  கை காட்டிய அந்த குழந்தைகள்
  எங்ககே போனார்கள்?????//

  முடிவு அருமை.

  இந்த காலத்து பிள்ளைங்கதான் வீட்டை விட்டு வெளியே வராம ஜெட்டிக்ஸ் சேனல்ல பார்க்கிறாங்க.... :((

  ReplyDelete
 5. ரயிலுல குடுக்குறத வாங்கி சாப்பிடாதீங்க..பிஸகெட் கொள்ளையர்கள்.

  ஸ்கூல் வேனை பின் தொடர்ந்து பாருங்கள். கை காட்டும் குழந்தைகள், வேனில் அடைபட்டு பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
 6. Hello Jackie,

  Work load prevented me from viewing blogs for 2 weeks. Just today I opened up yours and Cable Sankar's blogs.

  I feel the 'hang over' from last night's drink. It was little too much, with friends from differnt nationalities (English, Scotish, Dutch, Nigerian, Thai) visiting my apartment last night for drinks and dinner.

  6 of us started with Red wine (3 bottles) and finally found 3 were not enough, opened up a new single malt Glenfeddich Scotch Whisky. Finsihed all one litre. No wonder I am unable to concentrate on anything today, because of head ache.

  With such a heavy head, I opened the blogs, your 'train' was very good. You made me remember my long trains travels. I used train from Chennai to Guwahati (Assam)and betweem Chennai to Dadar (Mumbai) in 1993-95. Long travels. sometimes even 3 days. Lots of experiences all the way. All those came to my memory after so many years.

  Thanks for making me remember those experiences.

  Regards,

  Bala.

  ReplyDelete
 7. கவிதையின் ஒவ்வொரு வரியும் இயல்பாய் ஒரு குறும்படம் காட்டியது! அருமை!

  ReplyDelete
 8. "மனதில் உற்சாகம்
  ஏற்படுத்தும் விதமாக,
  வெள்ளை சிரிப்புடன்,
  அரைநிர்வாண கோலத்தில்
  கை காட்டிய அந்த குழந்தைகள்
  எங்ககே போனார்கள்?????"

  மிகவும் அருமையான முடிவு, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கையை நினைவுபடுத்துகின்றது.

  ReplyDelete
 9. //கொலைபசியில்
  இருக்கும் போது
  சப்பாத்தியும், குருமாவை
  வைத்து தின்று கொண்டு
  சினேகபார்வை பார்க்காமல்
  நக்கல் பார்வை பார்க்கும்
  சேட் குடும்பம்....
  //
  இவர்கள் இல்லாத பெட்டிகளைக் கூட விரல் விட்டு எண்ணி விடலாம் தல..

  ReplyDelete
 10. ஆமா இதுக்கு ஏன் கவிதன்னு தலைப்பு வெச்ச?
  உரைநடை நல்லா இருந்தது...
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 11. முதல் கவிதை முயற்சி.வாழ்த்துக்கள்.
  நல்லா இருக்கு.

  யோசனை:

  கவிதையை உரத்தக் குரலில் சொல்வதை தவிருங்கள்.வைரமுத்து மாதிரி கண்களை உருட்டி விரல்களை
  சுழற்றுவது.

  //ரயில்
  இன்னும் அதே தாள லயத்துடன்தான்
  ஓடிக்கொண்டு இருக்கின்றது//

  //வெள்ளை சிரிப்புடன்,
  அரைநிர்வாண கோலத்தில்
  கை காட்டிய அந்த குழந்தைகள்//

  இரண்டுமே நன்றாக இருக்கிறது.

  முடிக்கும்போது இப்படி முடித்திருக்கலாம்.

  வெள்ளை சிரிப்புடன்,
  கை காட்டியது
  அந்த குழந்தைகள்
  அரைநிர்வாண கோலத்தில்

  ReplyDelete
 12. //கவிதையின் ஒவ்வொரு வரியும் இயல்பாய் ஒரு குறும்படம் காட்டியது! அருமை!//

  எனக்கு கவிதை பத்தியெல்லாம் தெரியாது.

  நெல்லை கவி எஸ்.ஏ.சரவணக்குமாரே பாராட்டிட்டாரே... அப்போ இது கவிதை தான்...

  ReplyDelete
 13. //கவிதையின் ஒவ்வொரு வரியும் இயல்பாய் ஒரு குறும்படம் காட்டியது! அருமை!//

  எனக்கு கவிதை பத்தியெல்லாம் தெரியாது.

  நெல்லை கவி எஸ்.ஏ.சரவணக்குமாரே பாராட்டிட்டாரே... அப்போ இது கவிதை தான்...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner