சினிமா சுவாரஸ்யங்கள் (பாகம்/1)
சினிமா இந்த மூன்று எழுத்து மந்திர சொல்லுக்கு மயங்காதவர்கள் தமிழ் நாட்டில் குறைவு என்றாலும்,எனக்கு அந்த மந்திர வார்த்தை ரொம்பவும் பிடிக்கும். பத்தாம் வகுப்பு பொது தேர்வின் போது ஜாக்கிசான் நடித்து வெளிவந்த ஸ் பேனிஷ் கனெக்ஷன் படத்தை தினமும் பார்த்து விட்டு பரிட்சை எழுதியவன் நான்... பத்தாம் வகுப்பு மொத்த டோட்டல் 500க்கு 277தான்.. நான் பாஸ் செய்தது என்பது பெரிய விஷய்ம்...
என் மீது பெரிய கனவுகள் வைத்து இருந்த என் அம்மா சட்டென எனது பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட், பெயில் என்று கேள்வி பட்டு, ஹார்ட் அட்டாக்கில் இறந்து விடக்கூடாது என்பதற்காக கடவுள் என்னை பாஸ் செய்துவிட்டார் என்று நான் மனதில் நினைத்து கொள்வேன்...
சினிமா என்பது ஒரு கூட்டு முயற்ச்சி மொத்தம் 24 டிப்பார்ட்மென்ட் ஆட்கள் நெற்றி வியற்வை நிலத்தில் சிந்தி காதலோடு உழைத்தால் தான் நல்ல சினிமா வந்து தொலைக்கும்..
பொதுவாய் நம்மவர்களுக்கு நல்லா சினிமா எது என்பதில் பயங்கர குழப்பம் இருக்கின்றது... அப்படியே ந்லல படங்கள் எடுத்தாலும் அந்த படத்திற்க்கு உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றோம்... அலையாயுதே படத்துக்கு கொடுத்த வெற்றியை கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு நாம் கொடுக்க தவறினோம் அதை கொண்டாட மறுத்து விட்டோம்....
அமெரிக்க அதிபர் ஒரு பெண்னை உடலுறவுக்காக அழைக்க அவள் மறுக்க, அதன் பின் கொலையாவது போல் காட்சிகளை வைத்த அப்சலுட் பவர் படத்தை இந்தியாவில் எடுத்தால்??? ஒரு நாட்டின் முதல் குடிமகனை எப்படி இவ்வளவு கேவலமாக காட்ட முடியும்? என்று ஒருவர் கேள்வி எழுப்ப அதன் பிறகு பிளாக்கில் சுடு பறக்கும்....
அதை விட ஒரு இயக்குனர்கள் படத்தை எப்படி எடுத்து இருக்கலாம் என்று அட்வைஸ் மற்றும் கருத்து வேறு சொல்வார்கள்.... சினிமா என்பது கதை,கட்டுரை எழுதவது போல் சாதாரன விஷயம் அல்ல, அது தனிமனித திறமையும் அல்ல அது ஒரு கூட்டு முயற்ச்சி... என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்வேதே இல்லை....
7வருட சின்ன திரை அனுபவம் 4வருட ஆசி்ரியர் அனுபவம்,6 மாத சினிமா அனுபவம் எனும் போது என்னால் சினிமா பற்றிய சுவாரஸ்யங்களை தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கின்றேன்.... சினிமாவில் ஒரு காட்சிக்கு எடுத்துக்கொண்ட உழைப்பு, அதன் வலி, டெக்னிக்ல் போன்ற விஷயங்களை நேரம் கிடைக்கும் போது உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்... நிறைய சினிமா நண்பர்களிடம் பேசம் போது நிறைய விஷயங்கள் காதில் விழுகின்றன.. அதுநம்பகமானதுதானா என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுவிட்டு எழுதுகின்றேன்.. டெக்னிக்கல் விஷயங்கள் பற்றி லைட்டாக சொல்ல இருக்கின்றேன்..... 34 வயதில் சினிமாவுக்குள் நான் நுழைந்தது எல்லாம் அதன் மேல் உள்ள காதலால்...இந்த 6மாதத்தில் சினிமாவில் நிறைய அனுபவங்கள்.... 700 எபிசோட் எழுதும் அளவுக்கு நிறை விஷயங்கள் இருக்கின்றன...
நானே சொல்லி இருக்கின்றேன்... சிரியலுக்கு சினிமாவுக்கும் பெரிய வித்யாசம் கேமரா என்ற ஒன்று மட்டும்தான் என்று விளையாட்டுக்கு சொல்லி இருக்கின்றேன்... சினிமாவுக்கான மெனெக்கெடல் என்ன என்பது எனக்கு தெரியும்....
அதேபோல் ஒரு வேண்டுகோள் நான் எந்த படத்தில் வேலை செய்கின்றேன்...யாருடன் வேலை செய்கின்றேன் போன்ற விஷயங்கள் தயவு செய்து கேட்காதீர்கள்... நேரம் வரும் போது சொல்கின்றேன்... அல்லது வெற்றி பெற்றவுடன் சொல்கின்றேன்... நடுவில் கூட குடும்ப சூழலுக்கு ஏற்ற வாறு திரும்பவும் எதாவது ஒரு கல்லூரிக்கே வேலைக்கு போனாலும் ஆச்சர்யபடுவதற்க்கு இல்லை...
வாழ்க்கை கனவுகளை செயல் படுத்த பொருளாதாரம் ரொம்ப முக்கியமான விஷயம்...
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
சினிமா சுவாரஸ்யங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
நீங்க, கேபிள், ஷண்முகப்ரியன் சார்... எல்லோரும் இந்தத் துறையில், அதன் உயரத்தை எட்ட... வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்தப் பகுதியை ரொம்ப எதிர்பார்க்கிறேன்.! :)
உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துகள்
ReplyDeleteகன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு நாம் கொடுக்க தவறினோம்
ReplyDeleteயெஸ் பாஸ்
தொடர்ந்து எழுதுங்கள் தல.
ReplyDeleteவாழ்க்கை இலட்சியத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஜாக்கி.....
ReplyDelete/அதேபோல் ஒரு வேண்டுகோள் நான் எந்த படத்தில் வேலை செய்கின்றேன்...யாருடன் வேலை செய்கின்றேன் போன்ற விஷயங்கள் தயவு செய்து கேட்காதீர்கள்... நேரம் வரும் போது சொல்கின்றேன்... அல்லது வெற்றி பெற்றவுடன் சொல்கின்றேன்... நடுவில் கூட குடும்ப சூழலுக்கு ஏற்ற வாறு திரும்பவும் எதாவது ஒரு கல்லூரிக்கே வேலைக்கு போனாலும் ஆச்சர்யபடுவதற்க்கு இல்லை...//
ReplyDeleteஜாக்கி நான் கண்டிப்பாக கேட்க மாட்டேன்..(உனக்கு வெற்றி நிச்சயம்..இது தேவ சத்தியம்)
I think you are working for vijay's ongoing movie SURA. Is it true or not ?
ReplyDeleteஅண்ணே நீங்க எந்த படத்தில் வேலை
ReplyDeleteசெயிரிங்கனு எனக்கு தெரியும்....ஒரு
அனுமானம் தான்.
கண்டிப்பா அந்த படத்தை முதல் நாள் பார்ப்பேன்....
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணே..
வாழ்த்துக்கள் ஜாக்கி...
ReplyDeleteBest Wishes for all.
ReplyDelete//நடுவில் கூட குடும்ப சூழலுக்கு ஏற்ற வாறு திரும்பவும் எதாவது ஒரு கல்லூரிக்கே வேலைக்கு போனாலும் ஆச்சர்யபடுவதற்க்கு இல்லை...
ReplyDeleteவாழ்க்கை கனவுகளை செயல் படுத்த பொருளாதாரம் ரொம்ப முக்கியமான விஷயம்...//
No comments
சமுதாயம் மாற்றம் பெற்றால் மட்டுமே... நீங்கள் சொன்ன படங்கள் ஓடும் நண்பரே... மாற்றம் நாமும் நிறைய படிக்க வேண்டும், உலகத்தின் நடப்பை அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய கலாச்சாரம் கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு இப்படியே இருக்கலாமா? காலத்திற்க்கு ஏற்ப அனைத்திலும் மாற்றம் வேண்டும். இல்லையேல் ரித்திஷ் குமார் தான் ஷீரோ நாமெல்லாம் பாத்துதான் ஆகணும்.
ReplyDeleteஎன்ன நான் சொல்லறது சரியா ஜாக்கி... உங்கள் தொடருக்கு வாழ்த்துக்கள்.
நீங்க, கேபிள், ஷண்முகப்ரியன் சார்... எல்லோரும் இந்தத் துறையில், அதன் உயரத்தை எட்ட... வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்தப் பகுதியை ரொம்ப எதிர்பார்க்கிறேன்.! :)0//
நன்றி பாலா மிக்க நன்றி நிச்சயம் எழுதுகின்றேன்...
உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துகள்//
ReplyDeleteநன்றி உங்களோடு நான் தங்கள் வாழ்த்துக்கு
கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு நாம் கொடுக்க தவறினோம்
ReplyDeleteயெஸ் பாஸ்//
நன்றி சூரியன்
தொடர்ந்து எழுதுங்கள் தல.
ReplyDeleteவாழ்க்கை இலட்சியத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்//
நன்றி யோ வாய்ஸ்
வாழ்த்துக்கள் ஜாக்கி...../
ReplyDeleteநன்றி விசு
ஜாக்கி நான் கண்டிப்பாக கேட்க மாட்டேன்..(உனக்கு வெற்றி நிச்சயம்..இது தேவ சத்தியம்)//
ReplyDeleteநன்றி தண்டோரா...மிக்க நன்றி
I think you are working for vijay's ongoing movie SURA. Is it true or not ?//
ReplyDeleteநன்றி தலைவர் உங்கள் கெஸ் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்
அண்ணே நீங்க எந்த படத்தில் வேலை
ReplyDeleteசெயிரிங்கனு எனக்கு தெரியும்....ஒரு
அனுமானம் தான்.
கண்டிப்பா அந்த படத்தை முதல் நாள் பார்ப்பேன்....
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணே..//
நன்றி ஜெட்லி மிக்க நன்றி
வாழ்த்துக்கள் ஜாக்கி.../
ReplyDeleteநன்றி ராஜன்
Best Wishes for all./
ReplyDeleteநன்றி நைனா
//நடுவில் கூட குடும்ப சூழலுக்கு ஏற்ற வாறு திரும்பவும் எதாவது ஒரு கல்லூரிக்கே வேலைக்கு போனாலும் ஆச்சர்யபடுவதற்க்கு இல்லை...
ReplyDeleteவாழ்க்கை கனவுகளை செயல் படுத்த பொருளாதாரம் ரொம்ப முக்கியமான விஷயம்...//
No comments//
நன்றி ராஜன்.. நான் வாழ்வின் நிஜத்தை சொன்னேன்
சமுதாயம் மாற்றம் பெற்றால் மட்டுமே... நீங்கள் சொன்ன படங்கள் ஓடும் நண்பரே... மாற்றம் நாமும் நிறைய படிக்க வேண்டும், உலகத்தின் நடப்பை அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய கலாச்சாரம் கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு இப்படியே இருக்கலாமா? காலத்திற்க்கு ஏற்ப அனைத்திலும் மாற்றம் வேண்டும். இல்லையேல் ரித்திஷ் குமார் தான் ஷீரோ நாமெல்லாம் பாத்துதான் ஆகணும்.
ReplyDeleteஎன்ன நான் சொல்லறது சரியா ஜாக்கி... உங்கள் தொடருக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி மு இரா நீங்கள் சொல்வது உண்மைதான்
வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDelete/
வாழ்க்கை கனவுகளை செயல் படுத்த பொருளாதாரம் ரொம்ப முக்கியமான விஷயம்...
/
ஆமாம்ணே!
//வாழ்க்கை கனவுகளை செயல் படுத்த பொருளாதாரம் ரொம்ப முக்கியமான விஷயம்...//
ReplyDeleteரொம்ப கரெக்ட் சார்..
வா தல, சீக்கிரம் எழுது, படிக்கக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஎப்பப்பாரு இங்கிலீஸ் பட விமர்சனம் போடாம சாண்ட்விச், சினிமா, இன்னும் சிலன்னு எழுது. வெரைட்டி கேக்குற மூஞ்சப் பாருன்னு சொல்றியா? என்னா பண்றது, எனக்கு தெரிஞ்சத எழுதறேன், எனக்கு ஒன்ன மாதிரி சுவாரசியமா எழுத வராது, நீயாவது எழுது.
அப்புறம், வர வர உன் பிளாக் விசுவின் பேச்சரங்கம் மாதிரி ஒரே செண்டிமெண்டலா போகுது, ஓவர் செண்டி ஒடம்புக்கு ஆகாது, பாத்துக்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
தலைவா, நல்ல டாபிக். உங்கள் அனுபவத்தை உங்களோடு பயனிக்க நாங்கள் ரெடி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் ஜாக்கி. தொடருக்கும்
ReplyDeleteசுவாரஸ்யங்கள் தொடரட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி.
நிச்சயம் ஒரு நல்ல நிலைக்கு வருவீர்கள்.
அருமை ஜாக்கி அண்ணா... உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... :))
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteCinema Paatri Therinthu Konden.Nalla Karuthukal Camera work Pattri Solli Erunthinka Romba Nantri
ReplyDelete