(BOW) (உலக சினிமா/கொரியா) 18++ கொரிய இயக்குனர் கிம் கி டுக்கின்... தி போவ்....

சுயநலத்துடன்தான் இங்கே மனிதன் வாழ்கின்றான்... அப்படி இல்லை என்று எவன் சத்தியம் அடித்தாலும் நம்பாதீர்கள்... நான் மற்றவரை விட சுயநலம் குறைவான வாழ்க்கை வாழ்கின்றேன் என்று சொன்னால் அதனை கொஞ்சம் நம்பலாம்....

அபூர்வ சகோதரர்கள் படத்துல தாடி வச்சவன் எல்லாம் தாகூர் இல்லை.. சுருட்டு புடிக்கறவன் எல்லாம் சர்ச்சில் இல்லை என்று அமரர் நாகேஷ் அவர்கள் ஒரு வசனம் பேசுவார்... அது போல் இந்த உலகில் வயதானவர்கள் எல்லாம் யோக்கியர்கள் இல்லை....

எல்லோரும் அவர்கள் செய்யும் வாழ்க்கைக்கு ஒரு நெறிமுறையை கற்பித்துக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர்... அது சமுகத்தால் ஏற்றுக்கொள்ளபடாத விஷயமாக இருந்தாலும் அதனை செயல் படுத்துவர்...

வயதானாலும் காமம் என்ற விஷயம் எப்படி ஆட்டி படைக்கின்றது என்பதற்க்கு இந்த படம் ஒரு உதாரணம்... அது தனது மகள் வயதாக இருந்தாலும்அல்லது பேத்தி வயதாக இருந்தாலும் மனம் காமம் எனும் விஷயத்தில் மையல் கொண்டு விட்டால் அது எது பற்றியும் கவலைபடாது...

காமம் நம்மை ஆட்சி செய்ய தொடங்கி விட்டால் அது சொல்வதே சட்டம், அது சொல்வதே வேத வாக்கு, அது ஆட்சயில் உறவுகள் என்பது கிடையாது, சமுகம் வகுத்த எல்லை கோடுகள் கிடையாது... காமத்தை பொறுத்தவரை யாராக இருந்தாலும் எவனாக இருந்தாலும் எவளாக இருந்தாலும் காமத்தை பொறுத்தவரை தீர்வு காணப்பட வேண்டும் அவ்வளவுதான்...
BOWபடத்தின் கதை இதுதான்....
கடலின் நடுவில் ஒரு மீன் பிடி படகு. அதற்கு பக்கத்தில் ஒரு சிறிய படகு... அந்த படகில் ஒரு பெரியவரும் ஒரு16 வயது சிறுமியும் வாழ்கின்றார்கள்... கிழவருக்கு வேலை என்ன வென்றால் சிறிய படகை எடுத்துக் கொண்டு கரைக்கு போய் மீன் பிடிப்பதில் ஆர்வம் உள்ளவர்களை தனது போட்டுக்கு அழைத்து வந்து கட்டணம் வாங்கி மீன் பிடிக்க அனுமதிப்பதும் அதன் ்முலம் வரும் வருமாணத்தில் கிழவரும் அந்த பெண்ணும் வயிற்றை கழுவிக்கொள்கின்றார்கள்....
மீன் பிடிக்க படகுக்கு வரும் இளைஞர்களுக்கு அந்த பெண்ணின் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருக்கின்றது... அவ்வப்போது அந்த கிழவரிடம் ஜோசியம் கேட்க அந்த பெண்ணை ஒரு ஊஞ்சலில் ஆட விட்டு அம்பு விட்டு அந்த பெண் அந்த கிழவர்க காதில் சொல்ல அதன சம்பந்தபட்டவர் காதில் சொல்வது கிழவரின் ஜோசியம் சொல்லும் ஸ்டைல்...

ஒரு கட்டத்தில் அந்த பெண் சிறுவயதில் தொலைந்து போன பெண் என்பது தெரியவருகின்றது... அந்த பெண்ணை தினமும் குளுப்பாட்டுவதில் இருந்து பல வேலைகள் அந்த கிழவர் அந்த பெண்ணுக்காக செய்வது எல்லாம் அந்த பெண்ணின் 17 வது வயதில் பூப்பெய்தியதும் அந்த பெண்ணை அதாவது சிறுமியாக சின்ன வயதில் இருந்தே வளர்த்த பெண்ணை அந்த கிழவர் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதுதான்...அந்த பெண்ணுக்கு திருமண உடைகள் ,புது செருப்பு போன்றவை வாங்கி வைத்துக்கொண்டு அந்த நாளுக்காக காத்து இருப்பார்... ஆனால் மீன் பிடிக்க வரும் ஒரு இளைஞனை அந்த பெண் விரும்ப ஆரம்பித்து விடுவாள்... அவன் அந்த பெண் சிறுவயதில் இருந்தே வெளி உலகம் பார்க்காமல் அந்த பெண்ணை அந்த கிழவர் வளர்த்து இருப்பார்... அந்த சிறுமியாக இருந்து 17 வயது பருவமங்கையாக மாறிய
அந்த பெண் யாருக்கு கிடைத்தால் அடங்கா காமம் கொண்ட அந்த கிழுவருக்கா? அல்லது அந்த இளைஞனுக்கா? என்பதை வெண்திரையில் பாருங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

கொரிய இயக்குனர் கிம்மின் இந்த படம் உறவுகளின் சிக்கல்களையும்... தனிமனித அபிலாஷைகளையும் அலசுவதாக உள்ளது இந்த படம்....

எல்லா படத்துக்கும் கிம் ஒரு பேக்ரவுண்ட் வைத்து இருப்பார் ... இந்த படத்தின் பிரதான பேக்ரவுண்ட் கடல்....

அதே போல் எல்லா படத்திலும் ஒளிப்பதிவுக்கு முக்கியத்துவம் இருக்கும் எனென்னறால் காட்சிகளை விஷுவலாக சொல்லும் போது ஒளிப்பதிவு அற்புதமாக இருக்க வேண்டும்... இது வே பக்கம் பக்கமா வசனம் பேசினால் கான்சன்ட்ரேஷன் அதில் போய் விடும்.. எதாவது தவறு என்றால் கூட தப்பித்துக்கொள்ளலாம்.. அனால் இதில் அப்படி இல்லை...

இந்த படத்தில் டித்த கிழவரும் அந்த பெண்ணுக்கும் எந்த டயவலாக்கும் இல்லை... படத்தின் மொத்த வசனத்தை ஒரு ஏ போர் ஷீட்டில் எழுதி விடலாம்...

மீன் பிடிக்க வந்தவர்கள்... கிழவர் உன்னை தினமும் பக்கத்தில் படுக்க வைத்து கொள்வார்களா? என்பதை சொல்லிக்கொண்டே அந்த சிறுமியின் மார்பு பிடித்து இழுத்துபவனை கிழவர் அம்பின் மூலம் பதில் சொல்வது அழகு

மீனை பிடித்த அந்த பெண்ணின் சட்டைக்குள் போட்டு விட்டு மீனை எடுப்பது போல் அந்த பெண்ணின் மார்பை துழாவும் அந்த காட்சியை தமிழ் படத்தில் யோசிக்க முடியாத விஷயம்.... எது எப்படி இருந்தாலும் பெண்ணை காமமாகத்தான் இந்த ஆண் சமுதாயம் பார்க்கும் என்பதை காட்சிகளில் அழகாக சொல்லி இருப்பார் கிம்...

அந்த சிறுமியின் சிரிப்பு மிகுந்த குழந்தை தனமாக இருக்கும்....

அதுவும் கிளைமாக்ஸ்காட்சிகளில் அந்த பெண்ணை டைரக்டர் இலைமறை காய் மறைவாக அந்த காட்சி எடுத்த விதம் அருமை...

தினமும் அந்த பெண்ணை அந்த கிழுவர்தான் குளுப்பாட்டி விடுவார்... ஆனால் அந்த இளைஞன் மேல் காதல் வந்த பிறகு... தன்னை கல்லயாணம் செய்ய இந்த கிழவர் நினைப்பது தெரிந்ததும்... அந்த பெண் காட்டும் கூச்சம் அற்புதம்...

இது போன்ற விஷீவல படங்களுக்கு ஆர்டி்ஸ்ட்டுகள் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டியது கட்டாயமாகின்றது... அதே போல் அந்த கிழவராக நடித்து இருப்பவர் பார்வையிலேயே எல்லா நடிப்பையும் காட்சிகளையும் தன் உடல் அசைவு மூலம் வெளிபடுத்தும் நல்ல கலைஞன்....

இந்த படத்தினை கி்ம் எழுதி இயக்கி தயாரித்து இருப்பார்...(இயக்குனர் கிம்)
இந்த படத்தை தமிழ்நாட்டில் எடுத்து இருந்தால்.. கிம்மை ஒரு காமக்கொடுரனாக சித்தரித்து வேறு கதையே கிடைக்கலியா? என்று எல்லா பத்திரிக்கைகளும் திட்டி எழுதி விட்டு.. நடுப்பக்கத்தில் நயன், ஷிரேயாவின் பாதி மார்பகம் தெரிவது போல் படம் போட்டு இருப்பார்கள்...

இந்த படம் கேன்ஸ் உலகபடவிழாவில் திரையிடப்பட்டது....

படத்தின் டிரைலர்...

படக்குழுவினர் விபரம்....

Directed by Kim Ki-duk
Produced by Kim Ki-duk, Yong-gyu Kang
Written by Kim Ki-duk
Starring Han Yeo-reum, Jeon Seong-hwang
Release date(s) 12 May 2005 (South Korea)
Running time 90 min.
Country Korea
Language Korean
Budget US$950,000

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

24 comments:

  1. //சுயநலத்துடன்தான் இங்கே மனிதன் வாழ்கின்றான்... அப்படி இல்லை என்று எவன் சத்தியம் அடித்தாலும் நம்பாதீர்கள்... //

    கரெக்ட் ஜி....
    நமக்கெல்லாம் இந்த டி.வி.டி கிடைக்க மாட்டிக்குது சொல்லலாம்
    இல்லனா தேடுறது இல்லன்னு கூட சொல்லலாம்.. பார்ப்போம்

    ReplyDelete
  2. இந்த படத்திற்கு விருதொன்னும் கிடைக்கலியா....

    ReplyDelete
  3. மதுரை மீனாட்சி பஜார்ல போய் உலக சினிமான்னு கேட்டா என்ன ஒரு மாதிரிப் பார்க்குராய்ங்க தல.. :-((((

    ReplyDelete
  4. சூப்பர்................ நான் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் குறுந்தகடு எங்கு கிடைக்குமோ ?

    ReplyDelete
  5. மிக நல்ல பகிர்வு நன்றி

    ReplyDelete
  6. நான் இந்த படம் பார்த்துட்டேன். அருமை அருமை அருமை.

    ReplyDelete
  7. //அபூர்வ சகோதரர்கள் படத்துல தாடி வச்சவன் எல்லாம் தாகூர் இல்லை.. சுருட்டு புடிக்கறவன் எல்லாம் சர்ச்சில் இல்லை என்று அமரர் நாகேஷ் அவர்கள் ஒரு வசனம் பேசுவார்... அது போல் இந்த உலகில் வயதானவர்கள் எல்லாம் யோக்கியர்கள் இல்லை....//

    இந்த பத்தி அந்த வயதானவரை வில்லன் போல் சித்தரிக்கும்!,

    இதற்கு நான் எழுதிய விளக்கம்!



    ***


    கிராமப்புரங்களில் அதிகமாக சொந்தங்களுக்குள் தான் திருமணம் செய்து வைப்பார்கள், அது ஐந்திலிருந்து எட்டு வயது வித்தியாசம் இருக்கும். சில இடங்களில் என் தம்பிக்காகவே வளர்த்து வர்றேன்னு தாய்மாமனுக்கு மணம் முடித்து வைப்பார்கள், அவர்களுக்கு 15 திலிருந்து 20 வருடங்கள் கூட வித்தியாசம் இருக்கும், அது மாதிரியான ஒரு கதை தான் the Bow.

    ஒரு குழந்தையை சிறுமியாய் இருக்கும் போதிலிருந்து வளர்க்கும் ஒரு பெரியவர், ஒரு நதியின் நடுவில் படகில் வாழ்கிறார்கள். அங்கே மீன் பிடிக்க வருபவர்கள் தருவது தான் வருமானம்!
    ஒரு குறிப்பிட்ட நாளில் அவளை மணந்து கொள்ள நினைக்கிறார் பெரியவர். அதற்குள் மீன் பிடிக்க வந்த ஒருவன் மேல் காதல் கொள்கிறாள் அந்தப்பெண்! அவள் எனது உடமை என பெரியவர் அவனை விரட்ட,. அந்த பெண் இன்னும் பெற்றோர்களால் தேடப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தொலைந்து போன குழந்தை என மீண்டும் படகிற்கு வந்து சொல்கிறான். அவனுடன் அனுப்பி வைக்கின்ற பெரியவர் அங்கேயே தற்கொலை முயற்சி செய்கிறார், அதை அறிந்த அவள் அந்த பெரியவரை மணக்க சம்மதிக்கிறாள். ஆனாலும் அந்த பெரியவர் தற்கொலை செய்து கொள்கிறார்!


    ***

    தனக்காகவே வளர்ந்தவள் என நினைப்பது மட்டுமெ அவரது தவறு! அந்த இளைஞன் மட்டும் குறிக்கிடாவிட்டால் நடந்திருப்பது வேறல்லவா!?

    ReplyDelete
  8. உண்மை.. வாழ்க்கையே இப்படித் தான்.. தனிப்பட்ட ஆசைகளை மறைத்து வைக்கிறோமே தவிர மறைவதில்லை..

    நல்ல படம் ஒன்று.. வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் பார்க்கிறேன்

    ReplyDelete
  9. நல்ல அறிமுகம்.

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நன்றி யோ உங்கள் தொடர் பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. //சுயநலத்துடன்தான் இங்கே மனிதன் வாழ்கின்றான்... அப்படி இல்லை என்று எவன் சத்தியம் அடித்தாலும் நம்பாதீர்கள்... //

    கரெக்ட் ஜி....
    நமக்கெல்லாம் இந்த டி.வி.டி கிடைக்க மாட்டிக்குது சொல்லலாம்
    இல்லனா தேடுறது இல்லன்னு கூட சொல்லலாம்.. பார்ப்போம்//

    உண்மைதான்.. என்ன செய்வது.... தேடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்..

    ReplyDelete
  12. இந்த படத்திற்கு விருதொன்னும் கிடைக்கலியா.... தெரியலை நைனா நெட்டில் தேடினேன்.... இல்லை

    ReplyDelete
  13. மதுரை மீனாட்சி பஜார்ல போய் உலக சினிமான்னு கேட்டா என்ன ஒரு மாதிரிப் பார்க்குராய்ங்க தல.. :-(/
    இந்த பதிவுகளை புத்தகமா போட்ட்டு இந்த படங்களை கூடவே நெருங்கிய நண்பர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கலாம் என்பது என் எண்ணம்...

    ReplyDelete
  14. சூப்பர்................ நான் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் குறுந்தகடு எங்கு கிடைக்குமோ ? தேடுங்கள் நண்பர்களே... நிச்சயம் கிடைக்கும்

    ReplyDelete
  15. சூப்பர்//
    நன்றி ராதாகிருஷ்ணன்

    ReplyDelete
  16. மிக நல்ல பகிர்வு நன்றி//
    நன்றி நேசமித்திரன்... மிக்க நன்றி... உங்கள் முதல் வருகைக்கும்...

    ReplyDelete
  17. நான் இந்த படம் பார்த்துட்டேன். அருமை அருமை அருமை.//
    நன்றி இன்டி பகிர்வுக்கு

    ReplyDelete
  18. தனக்காகவே வளர்ந்தவள் என நினைப்பது மட்டுமெ அவரது தவறு! அந்த இளைஞன் மட்டும் குறிக்கிடாவிட்டால் நடந்திருப்பது வேறல்லவா!?//

    நீங்கள் சொல்வதை அப்படியே கேட்டுக்கொள்கின்றேன்... ஆனால் அந்த பெண்ணை வெளி உலகம் காட்டாமல் வளர்ப்பது என்பது மிகப்பெரிய தவறு அல்லவா?

    ReplyDelete
  19. உண்மை.. வாழ்க்கையே இப்படித் தான்.. தனிப்பட்ட ஆசைகளை மறைத்து வைக்கிறோமே தவிர மறைவதில்லை..

    நல்ல படம் ஒன்று.. வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் பார்க்கிறேன்//
    கண்டிப்பாக பாருங்க லோஷன்... நன்றி

    ReplyDelete
  20. நல்ல அறிமுகம்.

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.//
    நன்றி மங்களுர் சிவா வாழ்த்துக்கு

    ReplyDelete
  21. HI "J"....HAPPY DEEPAVALI..//
    நன்றி ராஜ்குமார் .. எங்க இங்பபவெல்லாம் அளையே கானோம் ரொம்ப பிசியா?

    ReplyDelete
  22. ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ள் அறிமுக‌ம் செய்வ‌த‌ற்காக‌ மிக்க‌ ந‌ன்றி, ஜாக்கி சார்.

    -Toto
    http://www.pixmonk.com

    ReplyDelete
  23. மிக அற்புதமான படம். அறிமுக‌ம் செய்வ‌த‌ற்காக‌ மிக்க‌ ந‌ன்றி, ஜாக்கி அண்ணா

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner