(NIGHT TRAIN) படத்தில் எல்லோரும் சாகின்றார்கள்


டைம்பாஸ் படங்கள் என்பது வெட்டியாக சன் மியுசிக்கில் எதாவது ஒரு நடிகையின் தொப்புளின் குலுக்களை பார்ப்பதற்க்கு பதில் இந்த படத்தை பார்க்கலாம் என்று அறிமுகபடுத்தவே டைம்பாஸ் படங்கள் கேட்டகிரி....
இந்த படங்களோடு எந்த படத்தையும் கம்பேர் செய்யாதீர்கள்... இது போல் அல்லது இதே போல் கதையம்சம் சதை அம்சம் கொண்ட படங்கள்79800 சொச்ச படங்கள் இதுவரை வந்துள்ளன ....

நைட் டிரைன் படத்தின் கதை இதுதான்...
ஒரு ரயில் அது கிருஸ்மஸ் விடுமுறைக்காக போய் கொண்டு இருக்கின்றது... நமது ஊர் டரயில் போல பாத்ரூம் பக்கத்தில் எல்லாம் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்ய வில்லை... ஒரு கம்பார்ட்மென்டில் இரண்டு பேர் அல்லது 3 பேர் அவ்வளவுதான்....வெளியே உறைபனி கொட்டிக்கொண்டு இருக்கின்றது... ஒரு வயதானவர்... ஒரு ஆண், பெண் பயணம் செய்யும் கம்பார்ட்மென்டில் ஏறி மாத்திரை போட்டதும் உட்கார்ந்த நிலையில் பரலோகம் சென்று விட... அதாவது ரயி்லில் டிக்கெட் வாங்குவதற்க்கு முன் அவர் மேலோகத்துக்கு டிக்கெட் வாங்கி விட...அவர் எடுத்து வந்து விலை மதிக்க முடியாத ஜுவல் பாக்சை பார்த்து...ரயிலின் டிக்கெட் பரிசோதகர் அந்த பெண் , அந்த ஆண் மூவரும் ஆசை படுகின்றார்கள்... அந்த பெரியவர் ரயி்லில் ஏறி டிக்கெட் எடுக்காமல் இறந்து போனதால்... பெசஞ்ஜர் லிஸ்ட்டில் பெயரும் இல்லை ... ரயில் நிலையத்தில் அந்த பெரியவ்ர் ஏறியதற்க்கு எந்த சாட்சியும் இல்லை அதனால் ரயில் போகும் வரியில் உள்ள ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றில் அந்த பெரியவ்ர் உடலை தள்ளி விட்டு அந்த பெட்டியில் உள்ள நகையை பங்கு போட்டுக் கொள்ளலாம் மூவரின் பிளான்...

ஒரு பெட்டியில் உடலை வைத்து தள்ளி விடலாம் என்று மூவரும் யோசிக்க... அந்த பெட்டியில் அந்த பெரியவரின் உடல் உள்ளே வைக்க முடியவில்லை... அந்த பெண் மட்டன் வெட்டும் கத்தியால் கிழவர் பிணத்தை கூறு போட்டு பெட்டியில் தினித்து ரயில் போகும் வழியில் உள்ள ஆற்றில் வீசி எறிகின்றனர்... அடுத்த ஸ்டேசனில் ரயில் நிற்க்கும் போது அந்த கிழவரை தேடி ஒருவன் வருகின்றன்... அடுத்து வழக்கம் போல் வெண்திரையில் காண்க...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

ரயில் வேகமாக பனி பிரதேசத்தில் போகும் காட்சிகளை மினியேச்சர் ரயில் செட் போட்டு எடுத்து இருக்கின்றார்கள்... இது போன்ற படங்கள் பலது வந்தாலும் ஹாலிவுட்காரர்கள் இந்த மாதிரி படங்கள் எடுக்க சலிக்கவே மாட்டேன்கின்றார்கள்...

வேறு என்ன அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கும் இல்லை...
கதாநாயகியாக நடித்து இருக்கும் பெண்ணின், சின்ன உடைகளையும் காட்சியை தவிர்த்து பெரிய சுவாரஸ்யம் இந்த படத்தில் எனக்கு எற்படவில்லை ...

என்னதான் டொக்கு படமாக இருந்தாலும் ஒளிப்பதிவு அருமை....ஒரு சிலருக்கு இந்த படம் பிடித்தமானதாக இருக்கும்


படத்தின் டிரைலர்...




படத்தின் குழுவிவரம்....

Directed by Brian King
Produced by Christopher Eberts
Brian R. Etting
Steve Markoff
Bruce McNall
Wendy Park
Michael Philip
Arnold Rifkin
Written by Brian King
Starring Danny Glover
Leelee Sobieski
Steve Zahn
Geoff Bell
Release date(s) 2009
Country USA
Language English
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

5 comments:

  1. நன்றி.. ஒருமுறை பார்த்துவிடுகிறேன்.. :)

    ReplyDelete
  2. படம் நல்லாயிருக்கும் போல இருக்கே அல்லது..நீங்கள் எழுதியது சுவாரசியமாக இருக்கிறது. உடனடியாக பார்க்கிறேன்..நன்றி

    ReplyDelete
  3. //என்னதான் டொக்கு படமாக இருந்தாலும் ஒளிப்பதிவு அருமை....ஒரு சிலருக்கு இந்த படம் பிடித்தமானதாக இருக்கும்//

    உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... :))

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner