(THE WALL) (உலக சினிமா/ தைவான்) 18+தலைவனுக்காக மனைவியை தாரை வார்ப்பவன்...


சிலருக்கு சில விஷயங்கள் மேல் பிடிப்பு எற்ப்ட்டு விட்டால் அதற்க்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்காதவர்களாக இருப்பர்கள்.. சிலருக்கு சினிமா, சிலருக்கு சமுக அக்கரை, சிலருக்கு அரசியல் என்று சொல்லிகொண்டு போகலாம்....

தன் மகன் செய்தது தவறு என்று நினைத்த காரணத்தினால் தேர் சக்கரத்தில் வைத்து தன் மகனை கொன்றான் மனு நீதி சோழன்... அது போல் தன் எடுத்துக்கொண்ட கொள்கைமேல் பற்றோடு இருப்பவர்கள் உயிரையே மயிராக மதிப்பவர்கள் மற்ற விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கு சும்மா...

ஒரு மனித வெடிகுண்டாக செல்லும் ஆணோ பெண்ணோ அவர்கள் மனநிலையை சற்றே யோசித்து பாரு்ங்கள்... எவ்வளவு அடக்கு முறையை தன் மக்கள் மேல் செலுத்தி இருந்தால் அல்லது எந்தளவுக்கு அவள் இழப்புகளை சந்தித்து இருந்தால் உயிரை துச்சமாக நினைத்து அவள் அந்த செயலை செய்ய துணிவாள் என்பதை நாம் நினைத்து பார்க்கவேண்டும்.... அப்படி ஒரு தலைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் ஒரு தொண்டனின் கதைதான் THE WALL படத்தின் கதை...

THE WALL படத்தின் கதை இதுதான்....

A-chen (Huang Tsai Yi)மற்றும் A-yi (Sunny Yu) இருவரும் புதிதாய் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள் ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு வீட்டில் வசிக்கின்றார்கள்.... மனைவிக்கு அந்த வீட்டில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பது மட்டும் புரிகின்றது... அந்த வீட்டில் அவர்கள்ள இருவரை தவிர வேறு யாரும் இல்லை... அவள் வீட்டை சுற்றி வந்து பார்க்கின்றாள் ... வீட்டை இன்ச் பை இன்ச் ஆக அலசுகின்றாள்... ஆனால் எந்த தடயமும் இல்லை... ஆனால் யாரோ நகரும் சத்தம் இரும்பும் சத்தம் எல்லாம் அவளுக்கு கேட்கின்றது... அது கிச்சனில் இருந்து வருகின்றது என்பது மட்டும் அவளாள் உனர முடிகின்றது... நடு இரவில் சத்தம் வந்த திசை நோக்கி நடந்து போய் பார்க்க எத்தனிக்க கணவன் தடுக்கின்றான்....

ஒரு கட்டத்தில் அந்த கிச்சன் சுவற்றுக்கு பின்னால் ஒரு ரகசிய அறையில் ஒரு மணிதன் உட்கார்ந்து இருப்பது தெரிகின்றது... உள்ளே இருப்பவன் ஒரு சமுக போராளி அரசை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியவன் அதனால் அரசால் தேடப்படும் குற்றவாளி... கண்டதும் சுடப்பட வேண்டியவன்... அவன் தலைவனாக இருந்தவன்... தலைவனுக்கு தொண்டனாக இருந்தA-chen யாருக்கும் தெரியாமல் அவனது வீட்டில் கிச்சன் பக்கத்தில் ஒரு ரகசிய அறையை ஏற்படுத்தி வெளியில் இருந்து பார்க்கும் போது அது சுவர் போல் தெரியும் வகையில் செட் செய்து சிறு ஒட்டை வழியாக உணவுபொருள் கொடுத்து கழிவுகளை அகற்றி அரசிடம் இருந்தது தன தலைவனை பாதுகாக்கின்றான் ஒரு வருடம் அல்ல இரு வருடம் அல்ல 10 வருடங்கள் யோசித்து பாருங்கள்....

ஒருநாள் சென்னின் மனைவி கிச்சன் பக்கத்து ரூமில் குளிக்க அதனை பத்து வருடங்களாக தனிமை சிறையில் இருப்பபவனுக்கு அந்த பெண்ணின் நிர்வாணம் அவனை சுண்டி இழுக்க அவன் அந்த அறையில் இருப்பதை அவளுக்கு புரிய வைக்கின்றான்... அவ்ள அவனை வெளியே வர வைத்து அவனை சுத்தபடுத்தி அவனோடு உறவு கொள்கின்றாள்....

கணவனுக்கு விஷயம் தெரிகின்றது... கணவன் கொஞ்சமம் அலட்டிக்கொள்ளவில்லை என் தலைவன் எது ஆசைபட்டாலும் அதை நீ செய்வதே நி என் மீது கொண்டு உள்ள உண்மையான அன்புக்கு நீ செய்யும் கைமாறு என்று மனையிடம் சொல்லுகிள்னறான்....

போலிஸ் அந்த தலைவன் மறைந்து இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கின்றார்கள்.. முடிவு என்ன என்பதை திருட்டடு டிவிடி கிடைத்தால் அல்லது நெட்டில் டவுண்லோட் செய்மு நெகிழ்ச்சி அடையுங்கள்...

படத்தின் சுவாஸ்யங்களில் சில....

முதல் பத்து நிமிடத்துக்கு தொய்வாக செல்லும் திரைக்கதை அந்த கிச்சன் சத்தம் வந்ததும் படம் வேகம் எடுக்கின்றது...


முதலில் பேய் என்று எல்லோரும் எண்ணி இருக்கு அதன் பின்னனியில் இப்படி ஒரு உயிருள்ள மனிதன் இருப்பது திரைக்கதையில் நல்ல திருப்பம்..

அந்த சுவற்றை பார்த்து அந்த பெண்ணின் தினமும் வணங்கி அங்கு எதோ பேசுவது போல இருக்கும் போதே அங்கு இருந்து குரல் கேட்க இவன் சட்டென தரையில் படுத்து வணங்கும் போது அந்த தலைவன் மீதான மதிப்பு ஆச்சர்ய படுத்துகின்றது...

தன் மனைவியை தலைவன் படுக்கையில் சாய்த்து விட்டான் என்பது தெரிந்ததும் சற்றே யாசித்தாலும் என் தலைவன் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்று சட்டென சூழ்நிலை புரிந்து கொண்டு சகஜமாவது நல்ல நடிப்பு..

இந்த படத்தில் கொஞ்சமும் லாஜீக் மீறாமல் எடுத்து இருப்பது இந்த படத்தின் சிறப்பு...

இந்த படத்தை 5ம் சென்னை உலக படவிழாவில் பைலட் தியேட்டரில் திரையிட்ட போது நானும் என் மனைவியும் இந்த படத்தை பார்த்து விட்டு வேகு நேரம் இந்த படத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்....


இந்த படத்தின் கிளைமாக்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கும் பேராட்டங்களும் போராளிகளும் ஒரு போதும் அழிவதில்லை என்று உணர்த்தும் விதமாக இந்த படம் முடியும்....

படத்தின் விபரம்....
Title : The Wall (Taiwan Version)
Artist Name(s) : You An Shun | Kageyama Yukihiko | Huang Cai Yi
Release Date : May 8, 2008
Language : TAIWANESE, Mandarin, Japanese
Subtitle : English
Duration : 100 Minutes
Genre : Drama

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

11 comments:

 1. சின்னொரு சந்தேகம் ஜாக்கி,

  நான் ஆரம்பத்தில தலையங்கத்தைப் பாக்காது இடுகையை முழுக்க வாசிச்சிட்டு கடைசியாத்தான் படத்தின்ர பேரை ஆங்கிலத்தில பாப்பம் எண்டு தலையங்கத்தைப் பாத்தனான்...

  இடுகையில் "தி வால்" என்று குறிப்பிட்டிருந்தாலும் தலையங்கத்தில் "த வோல்" என்று உளதே.. இங்க மட்டுமில்ல கன இடத்தில இந்த சந்தேகம் வந்தது..

  ஏன் இவ்வளவு உச்சரிப்பு வேறுபாடு.. தப்பா எடுத்துக்கொள்ளாதேங்கோ.. யாரிட்ட கேக்குறதெண்டு தெரியவில்லை.. உங்களிட்டத்தான் கடைசியா கேக்கவேண்டி வந்துட்டுது..

  பிரியமுடன்,
  மதுவதனன் மௌ.

  ReplyDelete
 2. 5 நிமிஷம் கேப் கெடச்சாலும் ஒரு பதிவு போடறீங்க...

  வாழ்க நீங்கள்... வளர்க உங்கள் தொண்டு...

  அசத்தலான படமாக இருக்கும் போல...

  அன்பு நித்யன்

  ReplyDelete
 3. பார்க்க வேண்டிய படம் போலத் தெரிகிறதே

  ReplyDelete
 4. அய்யா, இந்த படத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு வயசு வரவில்லை. ஆள வுடுங்க சாமி....

  ReplyDelete
 5. மதுவதனன் தவறு சரி ச்யயபட்டுவிட்டது சுட்டிகாட்டியதற்க்கு மிக்க நன்றி

  ReplyDelete
 6. 5 நிமிஷம் கேப் கெடச்சாலும் ஒரு பதிவு போடறீங்க...

  வாழ்க நீங்கள்... வளர்க உங்கள் தொண்டு...

  அசத்தலான படமாக இருக்கும் போல...

  அன்பு நித்யன்/


  என்ன செய்யறது நண்பா நிறைய நண்பர்கள் எதிர்பார்க்கின்றார்கள்...
  நன்றி

  ReplyDelete
 7. பார்க்க வேண்டிய படம் போலத் தெரிகிறதே//

  நிச்சயமாக கார்த்தி

  ReplyDelete
 8. அய்யா, இந்த படத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு வயசு வரவில்லை. ஆள வுடுங்க சாமி....//

  அதுக்குதான் தளத்திற்க்கு மேலே கொட்ட எழுத்துல 18 வயசுக்கு மேல வந்து பாருங்கன்னு சொல்லி இருக்ன்

  ReplyDelete
 9. நல்ல அறிமுகம் பாத்திடறேன்.

  ReplyDelete
 10. //பேராட்டங்களும் போராளிகளும் ஒரு போதும் அழிவதில்லை...//

  உண்மையான உண்மை ஜாக்கி.

  ReplyDelete
 11. intha padathin torrent link kidaikkuma. internetil thedi parthen. veru padangalthan varuhirathu. mikka nandri

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner