எனது மூன்றாவது குறும்படம் “பரசுராம் வயது 55... செலவு ரூபாய் 850 மட்டுமே...

அறிவிப்பு....
படத்தின் கால அளவு 20 நிமிடங்கள்...அதனால் 20 நிமிடம் செலவு செய்ய தயார் என்றால் பார்த்து கருத்து கூறுங்கள்...


பரசுராம் வயது 55... இது எனது மூன்றாவது குறும்படம்... பொதுவாக உங்களில் ஒரு கேள்வி கேட்கலாம்.. எப்படி ரூபாய் ஆயிரத்துக்குள் ஒரு குறும்படம் எடுப்பது சாத்தியம்...

முதலில் கேமரா எனது சொந்த கேமரா... இரண்டாவது எனது கம்யூட்டரில் அல்லது நண்பர்களை வைத்து எடிட் செய்வேன்...நடிக்கும் யாருக்கும் பணம் கிடையாது... செலவே இல்லாத வகையில் திரைக்கதை அமைப்பது போன்றவற்றால் இது சாத்தியம்...

அதுமட்டும் இல்லாமல் கதை ,திரைக்கதை, ஒளிப்பதிவு இயக்கம் என்று அனைத்து விஷயங்களையும் நானே பார்த்து கொள்கின்றேன்... ஆனால் , செலவு செய்து நான் எடுத்த படம் “துளிர்” அந்த படத்துக்கு செலவு ஐம்பதாயிரம் ரூபாய்...

அது எனது நண்பரின் முதலீடு...அந்த படத்தை அப்படி செலவு செய்து எடுக்க எனது நண்பர் ஆசை பட்டார்... இப்போது போல் அப்போது எடிட்டிங் கேமரா அந்த அளவுக்கு இலகுவாய் கிடைக்கவில்லை....


ஆனால் இந்த படத்தில் நடித்தவர் என் உறவுக்காரர்... இந்த படத்தில் நடித்த எவருக்கும் எந்த சினிமா அனுபவமும் இல்லை.. எவரும் இதற்கு முன் பாஸ்போட் மற்றும் போட்டோவுக்கு மட்டும்தான் கேமரா முன் நின்றவர்கள்... என்பதை உங்களுக்கு சொல்லி கொள்ள ஆசை படுகின்றேன்..
இதுவே பணம் மட்டும் இருந்தால் இதைவிட சிறப்பாக என்னால் காட்சிகளை அற்புதமாக எடுத்து கொடுக்க முடியும்... இந்த படத்தில் சிறப்பாக எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கும்.. எனது எல்லா முயற்ச்சியையும் ஊக்க படுத்தி.... பணம் கொடுத்து உதவிய தயாரிப்பாளர் , சப்டைட்டில், ஸ்டில்ஸ் போன்றவற்றில் உதவி புரிந்த எனது மனைவிக்கு என் நன்றிகள்...

பரசுராம் வயது 55குறும்படத்தின் கதை இததான்..
சென்னையில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த போது சென்னையில் ஒரு பெரிய பிரச்சனை வாடகை உயர்வு மற்றும் பல பொருட்களின் விலையேற்றம் நடுத்தர குடும்பத்து வாழ்க்கையை வெகுவாக பாதித்தது... அப்படி பாதித்த போது இளமையாக இரத்த ஓட்டம் அதிகம் இருந்தவர்கள் ஓரளவுக்கு சமாளித்தார்கள்...,தற்போது படித்து வெளிவந்தவர்கலால் சமாளிக்க முடிந்தது... ஆனால் 55வயதில் தனது மனைவியோடு குடும்பம் நடத்தும் ஒரு குடும்ப தலைவனால் எப்படி சமாளிக்க முடியும்....???

வடபழனியில் குடி இருந்த நான்... வாடகை விலை உயர்வால் நான் ராமபுரம் வந்த போது , ஒரு பெரியவர் பூந்தமல்லி தாண்டிதானே வடகைக்கு வீடு பார்த்து இருக்க முடியும்?... அப்படி நடுத்தரவயதை கடந்தவர்களால்... சென்னையில் வாழ்க்கை போராட்டம் நடத்த என்ன செய்வார்கள்...? உயிர் வாழ்வதும், உறங்க இடமும் முக்கியமல்லவா?.... எதுவும் நிச்சயம் இல்லாத வாழ்வில் எல்லாம் சாத்தியமே என்ற வரியை மையபடுத்தி எடுத்த படம்.. மனைவியை அதிகம் நேசிக்கும் பெரியவர்....வரதட்சனை அதிகம் கொடுத்து தனது மகள்களை கட்டி கொடுத்த கொஞ்சம் கடனில் இருக்கும் பெரியவரை பற்றிய கதை இது...

இந்த படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது....
இந்த படம் சென்னை உலக குறும்பட விழாவில் திரையிடபட்டது... இந்த படத்தில் நடித்த எனது உறவுக்கார பெரியவருக்கு 51ரூபாய் வெற்றிலை பாக்கு வைத்து மடித்து கொடுத்தேன்... இந்த படம் ஒன்றரை நாளில் எடுத்து முடிக்கபட்டது... இந்த படத்தின் ஆடியோக்கள் லைவ் ஆடியோ.... முதலில் மற்றும் கடைசியில் பரசுராம் கேரக்டர் பற்றி நான் கூறுவது மட்டும் டப் செய்யபட்டது....

பரசுராம் வயது 55 பகுதி...1




பரசுராம் வயது 55 பகுதி...2



உங்கள் கருத்துக்களுக்காக காத்து இருக்கும்...
குறிப்பு.. பெரியவராக நடித்த பரசுராம் அவர்கள் உண்மை பெயரையே இந்த படத்துக்கு வைத்து விட்டேன்.... நடிப்பு அனுபவம் இல்லாத இவர் நடிப்பு பிடித்து இருந்தால் அவரது எண்ணுக்கு போன் செய்து உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்...9345988759 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.. அவர் சந்தோஷம் கொள்வார்...

அன்புடன்
ஜாக்கிசேகர்(என்கின்ற)
தனசேகரன்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

41 comments:

  1. சொல்லவந்த கருத்து விவாதத்துக்கு உரியதாக இருந்தாலும்,குறைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படம் எடுத்த விதம் சிறப்பாகவே உள்ளது.மனமார்ந்த வாழ்த்துகள் சேகர்.

    ReplyDelete
  2. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  3. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  4. தாங்கள் குறும்படம் பார்த்தேன், யாதார்த்தின் வெளிப்பாடாய் இருந்தது. உங்கள் தகவல்கள் என்னைப் போன்ற குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு பிரயோசனமாய் இருந்தது. நீங்கள் புரபசனல் காமெரா உபயோகப் படுத்தீனர்களா அல்லது சாதரண காமெரா தெரியப்படுத்தவும் - நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. படம் நன்றாக வந்திருக்கிறது.

    எனக்கு கொஞ்சம் மியூசிக் கம்போசிங்கில் ஆர்வம் உண்டு. என் வலையை படிக்கிற சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தால் சில சாம்பிள்களைக் கேட்டிருப்பீர்கள்.

    உங்கள் குறும் படம் ஒன்றில் பணியாற்றுகிற வாய்ப்பு கிடைத்தால் (பணத்துக்கு அல்ல) சந்தோஷப் படுவேன்

    http://kgjawarlal.wordpress.com
    kgjawarlal@yahoo.com

    ReplyDelete
  6. தனசேகர், நன்றாக எடுத்திருக்கிறீர்கள்.

    இது போல நடுத்தர வர்க்கத்தினரும், எளியோரும் அவதிப்படுவது மிகவும் வருந்தத்தக்கது. மோசமாக விளைவுகளைத் தரக்கூடியது.

    இங்கே நாம் மறந்து விடும் ஒரு விசயம்.. வீட்டு விலையை ஏற்றிவிடுவதில் ஐடி காரர்களின் பங்கு மிகக்குறைவே. வீட்டு விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் நோகாமல் நொங்கு திண்ணும் தரகர்களும் அவர்களை ஆதரிக்கும் அரசியல்வியாதிகளும் தான்.

    இன்னொன்று ஐடி. துறையினர் கிராமங்களில் தங்கினாலும் அழைத்துச் செல்ல வாகனங்களை விடுவார்கள். ஆனால் புதிதாக சென்னைக்கு வரும் அனைவருக்கும் வீடுகள் கிடைக்க வேண்டுமே!!

    ஏன் சென்னையில் ஐடி துறையினர்க்கு அனுமதி கொடுக்க வேண்டும்? சென்னையில் இருந்து 100 கி.மி. அப்பால் ஒரு நகரத்தில் கொடுக்க வேண்டியது தானே. அங்கே தான் வேலை என்றால் போகமுடியாது என்று சொல்வார்களா ஐடியில் வேலை செய்வோர்? (ஒரு 10% சொல்லக்கூடும்) விசயம் என்னவென்று புரிகிறதா?

    ReplyDelete
  7. நன்றாக இருந்தது தோழரே... சில இடங்களில் லாஜிக் அடி வாங்குது...

    இருப்பினும்.. குறைவான செலவில் இப்படி ஒரு குறும்படம் என்றால் பாராட்டுதலுக்குரியதுதான்...

    வாய்ஸ் ஓவரில் இன்னும் கவனம் தேவை, வாக்கியங்கள் சரிவர அமையவில்லை. உச்சரிப்பில் ஏற்ற இறக்கம் தேவை..

    அப்படியே முடிஞ்சா என்னையும் நடிக்க வைங்க.. சின்ன நப்பாசை...

    அன்புடன்

    மோகனன்

    ReplyDelete
  8. நல்ல கதை!

    அடுத்து பெறும்படம் எடுக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. ஜாக்கி

    அடிச்சி ஆடுங்க

    வாழ்த்துக்கள்

    :))

    ReplyDelete
  10. சொல்லவந்த கருத்து விவாதத்துக்கு உரியதாக இருந்தாலும்,குறைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படம் எடுத்த விதம் சிறப்பாகவே உள்ளது.மனமார்ந்த வாழ்த்துகள் சேகர்.

    நன்றி பிரேம்..ஜி உண்மைதான் ஒரு 55 வயசு கடும்பத்தலைவனுக்கு எற்படும் பிரச்சனைகள்தான் இந்த படம்...

    நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  11. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜாக்கி//
    நன்றி காவேரி கனேஷ் மிக்க நன்றி

    ReplyDelete
  12. தாங்கள் குறும்படம் பார்த்தேன், யாதார்த்தின் வெளிப்பாடாய் இருந்தது. உங்கள் தகவல்கள் என்னைப் போன்ற குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு பிரயோசனமாய் இருந்தது. நீங்கள் புரபசனல் காமெரா உபயோகப் படுத்தீனர்களா அல்லது சாதரண காமெரா தெரியப்படுத்தவும் - நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.//

    நன்றி ராஜகமல் அது பனாசோகிக் 1800 திரி சிசிடி கேமரா படத்தின் மடிவில் டைட்டிலில் தொழில்நுட்ப விபரம் போட்டு உள்ளேன் மறு முறை பாருங்கள்...

    ReplyDelete
  13. படம் நன்றாக வந்திருக்கிறது.

    எனக்கு கொஞ்சம் மியூசிக் கம்போசிங்கில் ஆர்வம் உண்டு. என் வலையை படிக்கிற சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தால் சில சாம்பிள்களைக் கேட்டிருப்பீர்கள்.

    உங்கள் குறும் படம் ஒன்றில் பணியாற்றுகிற வாய்ப்பு கிடைத்தால் (பணத்துக்கு அல்ல) சந்தோஷப் படுவேன்

    http://kgjawarlal.wordpress.com
    kgjawarlal@yahoo.com//


    கண்டிப்பாக அடுத்த படத்தில் நிச்சயம் நாம் இனைந்து பண்ணுவோம்.. கரும்பு தின்ன கூலியா? மிக்க நன்றி நண்பா...

    ReplyDelete
  14. ஏன் சென்னையில் ஐடி துறையினர்க்கு அனுமதி கொடுக்க வேண்டும்? சென்னையில் இருந்து 100 கி.மி. அப்பால் ஒரு நகரத்தில் கொடுக்க வேண்டியது தானே. அங்கே தான் வேலை என்றால் போகமுடியாது என்று சொல்வார்களா ஐடியில் வேலை செய்வோர்? (ஒரு 10% சொல்லக்கூடும்) விசயம் என்னவென்று புரிகிறதா?//


    நன்றி செந்தில் நிங்க சொல்லும் எல்லா விஷயத்திலும் எனக்கும் உடன்பாடு உண்டு மிக்க நன்றி

    ReplyDelete
  15. நன்றாக இருந்தது தோழரே... சில இடங்களில் லாஜிக் அடி வாங்குது...

    இருப்பினும்.. குறைவான செலவில் இப்படி ஒரு குறும்படம் என்றால் பாராட்டுதலுக்குரியதுதான்...

    வாய்ஸ் ஓவரில் இன்னும் கவனம் தேவை, வாக்கியங்கள் சரிவர அமையவில்லை. உச்சரிப்பில் ஏற்ற இறக்கம் தேவை..

    அப்படியே முடிஞ்சா என்னையும் நடிக்க வைங்க.. சின்ன நப்பாசை...

    அன்புடன்

    மோகனன்/=/

    கண்டிப்பா சேர்ந்து செய்வோம்...தவறுகளை அடுத்த படத்தில் திருத்திக்கொள்வோம்..

    பகிர்தலுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  16. நல்ல கதை!

    அடுத்து பெறும்படம் எடுக்க வாழ்த்துக்கள்!//
    நன்றி வால்பையன் மிக்க நன்றி

    ReplyDelete
  17. ஜாக்கி

    அடிச்சி ஆடுங்க

    வாழ்த்துக்கள்

    :))//ஹ
    நன்றி யாசவி தொடர் பின்னுட்டத்துக்கு

    ReplyDelete
  18. நன்றாக இருந்தது... பின்னணி இசை / காமிரா கோணம் பார்க்கும் பொழுது, ஏதோ மர்மம் இருப்பது போல் தோணியது ( மூடு பனி படம் மாதிரி... ஒரு பொணத்துக்கு நகை போட்டு அழகு பார்க்க போகிறாரோ ...என்று !!!!!)... நல்ல முயர்ச்சி... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. நன்றாக இருந்தது... பின்னணி இசை / காமிரா கோணம் பார்க்கும் பொழுது, ஏதோ மர்மம் இருப்பது போல் தோணியது ( மூடு பனி படம் மாதிரி... ஒரு பொணத்துக்கு நகை போட்டு அழகு பார்க்க போகிறாரோ ...என்று !!!!!)... நல்ல முயர்ச்சி... வாழ்த்துக்கள்//

    நன்றி அது ஒரு கானாக்காலம்.. இந்த படத்தின் டைட்டில் இசை டற்றுட் பரியவர் சிகரேட் பிடித்த படி யோசிக்கும் போது ஒலிக்கும் இசை சித்திரம் பேசுதடி படத்தின் பின்னனி இசை....
    அதே போல் கிழவர் நகைகடைக்கும் புரோக்கரை பார்க்க போகும் போதுவருவது.. இந்தியன் திருடா திருடா படத்தின் பின்னனி இசை... கடைசிடைட்டில் ஆ்கில படம் டீபார்டட் படத்தின் இசை... நன்றி

    ReplyDelete
  20. படம் லோட் ஆகவில்லை தல..:-((( இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்..

    ReplyDelete
  21. அன்புள்ள சேகர்,

    பரசுராம் குறும்படம் பார்த்தேன். தவறு என்பது நம்முடைய கண்ணோட்டத்தில் தான், அந்த பெரியவருக்கு அது தவறாக தெரியவில்லை. திருட்டை போல எந்த குற்றமாக இருந்தாலும், விரும்பி செய்ய படுவதில்லை. இந்த பூமியில் வாழ சில முக்கியமான தகுதிகளாக பணம்தான் முன்னால் வைக்கப்படுகிறது. இருக்கிறவர்கள் தப்பிக்கிறார்கள், இல்லாதவர்கள் தேடுகிறார்கள். ஒரு சிலர் பரசுராம் போலவும் செய்கிறார்கள்.

    மிக குறைந்த செலவில் தரமான படத்தை அளித்துள்ளீர்கள். நான் முதலில் அவர் வீடு பார்க்கத்தான் முயற்சிக்கிறார் என்றுதான் நினைத்தேன், ஆனால் திடீர் என்று படத்தின் போக்கே மாறிவிட்டது. முதன் முதலாக நான் மற்றும் சில நண்பர்கள் சென்னைக்கு வந்த பொழுது வாடகைக்கு வீடு பார்க்க வீதி வீதியாக அலைந்தோம், எவ்வளவு வாடகை என்றாலும் சரி சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து விட்டோம். கோவையில் இருந்து வந்த எங்களுக்கு யாரையும் தெரியாது, ஒரு சில நண்பர்களை தவிர. எப்படியோ ஒரு வீடு கிடைத்து, திரும்பவும் சொந்த ஊருக்கு வந்தாச்சுங்க. இருந்தாலும், அந்த நேரத்தில் இருப்பதற்கு வீடுதான் தேவை பட்டதே தவிர, வாடகையை பற்றி கவலைப்படவில்லை. இப்பொழுதும் சென்னையில் இருக்கும் எனது நண்பர்களின் சம்பளத்தில் பெரும் தொகை வாடகைக்கே செல்கிறது,

    இச் சூழலில் குறைந்த ஊதியம் வாங்குபவர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் எவ்வளவு பிரச்சினைகள் என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம். நமது அரசியல் தலைகளுக்கு, ஒரு ரூபாயில் அரிசி கொடுக்க மட்டும்தான் தெரியும். இப்படியே போய், நூறு ரூபாய் வாடகையில் வீடு, ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம் என்றால் பரசுராமன்கள் ராமன்களாக இருப்பார்கள் !!

    வாழ்த்துக்கள்...

    இளங்கோ

    ReplyDelete
  22. வாழ்த்துகள் ஜாக்கி..படம் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
  23. படம் லோட் ஆகவில்லை தல..:-((( இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்..--

    நன்றி கார்த்திகை பாண்டியன்...
    படம் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள்

    ReplyDelete
  24. இச் சூழலில் குறைந்த ஊதியம் வாங்குபவர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் எவ்வளவு பிரச்சினைகள் என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம். நமது அரசியல் தலைகளுக்கு, ஒரு ரூபாயில் அரிசி கொடுக்க மட்டும்தான் தெரியும். இப்படியே போய், நூறு ரூபாய் வாடகையில் வீடு, ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம் என்றால் பரசுராமன்கள் ராமன்களாக இருப்பார்கள் !!


    நன்றி இளங்கோ உனது விரிவான மடல் எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. ஒன்றரை நாய் சாப்பிடவே இல்லை... இந்த படத்துக்கு எனக்கு அசிஸ்டென்ட் இல்லை... ஒரு காட்சியில்தான் உதவி செய்தார்கள்...
    நான் , அந்த பெரியவர், எனது பைக் முவரும்தான் இந்த படத்தின் முதுகு எலும்பு....


    நன்றி விரிவான உனது மடலுக்கு...

    ReplyDelete
  25. வாழ்த்துகள் ஜாக்கி..படம் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்//
    கண்டிப்பா வாங்க ராதாகிருஷ்ணன் உங்கள் பதிலுக்கு வெயிட்டிங்.....

    ReplyDelete
  26. wow..../really excellent man...

    u r rocking...

    give me a chance to act in your film(not for money)...

    ReplyDelete
  27. Hi Jackie,
    Haven't watch you movie yet, bec dont have the facility right now. But I would like to share this info with you. There is a fim festival going to happen in Toronto.
    You can submit your shortfilm(s) to them.

    http://www.geotamil.com/pathivukal/nikazvukaL_Singapore_Short_Film.htm#short_films

    ReplyDelete
  28. படம் நன்றாக வந்திருக்கிறது ஜாக்கி...ஆனால்..நீங்கள் வேறுவிதமாய் யோசித்திருக்கலாம்..திருட்டு என்பது அனுதாபத்தை ஏற்படுத்தாது என்று என் எண்ணம்..மேலும்..மீண்டும் அதே தப்பை செய்யத் தூண்டிடிருக்கிறது பாருங்கள்

    ReplyDelete
  29. wow..../really excellent man...

    u r rocking...

    give me a chance to act in your film(not for money)...--

    கண்டிப்பா வினோத் நிச்சயம் இனைந்து செய்யலாம்...

    ReplyDelete
  30. Hi Jackie,
    Haven't watch you movie yet, bec dont have the facility right now. But I would like to share this info with you. There is a fim festival going to happen in Toronto.
    You can submit your shortfilm(s) to them.

    http://www.geotamil.com/pathivukal/nikazvukaL_Singapore_Short_Film.htm#short_films//டொரன்டோ பெஸ்டிவலுக்கு அனுப்பும் அளவுக்கு.. இந்த படத்தின் குவாலிட்டி.. இல்லை நண்பா...

    ReplyDelete
  31. படம் நன்றாக வந்திருக்கிறது ஜாக்கி...ஆனால்..நீங்கள் வேறுவிதமாய் யோசித்திருக்கலாம்..திருட்டு என்பது அனுதாபத்தை ஏற்படுத்தாது என்று என் எண்ணம்..மேலும்..மீண்டும் அதே தப்பை செய்யத் தூண்டிடிருக்கிறது பாருங்கள்//
    நன்றி ராதாகிருஷ்ணன்... அது ஒர உண்மைகதை.. அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதை சொல்லவே.. இந்த படம்..

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் .... நிஜமாவே நல்லா இருக்குங்க ...

    ReplyDelete
  33. நண்பரே..அருமையான படம். நடுத்தர மக்கள் இயல்பாக வாழ முடியாத சூழலை நன்றாக எடுத்து கூறியுள்ளீர்கள்.

    பரசுராம் அவர்களின் மிடுக்கான நடை சூப்பர்

    ReplyDelete
  34. அன்பின் ஜாக்கி
    படம் நல்லா வந்திருக்கு ஜாக்கி, அனைவரும் இயல்பா இருந்தாங்க..
    வாழ்த்துக்கள்.
    செல்போன்லேருந்து பேசறதுக்கு பதிலா PCO லேருந்து பேசறா மாதிரி காட்டியிருக்கலாம்.
    அப்புறம், English on the subtitles ரொம்ப சுமார், Translate பண்ணும் போது அர்த்ததை Translate பண்ணனும்,
    வார்த்தைகளை பண்ணக்கூடாது. அடுத்த முறை உதவி வேணும்னா சொல்லு, நான் பண்ணித்தரேன்.

    எனக்கு ஒரு கேரக்டர் கொடுத்து ஒரு கதை தயார் பண்ணி வை, நான் அடுத்த முறை இந்தியா வரும் போது ஒரு குறும்படம் பண்ணலாம். செலவு என்னோடது (தயவு செய்து சின்ன பட்ஜெட் ஜாக்கி)
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் .... நிஜமாவே நல்லா இருக்குங்க ...---//

    அதை நிஜமா சொன்னதுக்கு என் நன்றிகள்.. சம்பத்

    ReplyDelete
  36. நண்பரே..அருமையான படம். நடுத்தர மக்கள் இயல்பாக வாழ முடியாத சூழலை நன்றாக எடுத்து கூறியுள்ளீர்கள்.

    பரசுராம் அவர்களின் மிடுக்கான நடை சூப்பர்//

    மிக்க நன்றி பரசுராம் கேட்டால் ரொம்பவும் சந்தோஷபடுவார்...நன்றி விஷ்ணு

    ReplyDelete
  37. செல்போன்லேருந்து பேசறதுக்கு பதிலா PCO லேருந்து பேசறா மாதிரி காட்டியிருக்கலாம்.
    அப்புறம், English on the subtitles ரொம்ப சுமார், Translate பண்ணும் போது அர்த்ததை Translate பண்ணனும்,
    வார்த்தைகளை பண்ணக்கூடாது. அடுத்த முறை உதவி வேணும்னா சொல்லு, நான் பண்ணித்தரேன்.

    எனக்கு ஒரு கேரக்டர் கொடுத்து ஒரு கதை தயார் பண்ணி வை, நான் அடுத்த முறை இந்தியா வரும் போது ஒரு குறும்படம் பண்ணலாம். செலவு என்னோடது (தயவு செய்து சின்ன பட்ஜெட் ஜாக்கி)
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்//

    / எளிதில் புரிவது போல் இருந்தால் போதும்னு நான்தான் சொன்னேன்... அப்படி எதாவது உதவின்னா கண்டிப்பா கேட்கறேன்..
    கண்டிப்பா பண்ணலாம் ஸ்ரீ ஒரு கதை ரெடி பண்ணறேன் நிச்சயம் பண்ணுவோம்.. சின்ன பட்ஜெட்ல..

    ReplyDelete
  38. வாழ்த்துகள் & பாராட்டுகள் ஜாக்கி.. இன்னம் படம் பார்க்கவில்லை. ரீடரில் படிக்க வேண்டியது அதிகமாக இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது படம் பார்த்துவிட்டு சொல்கிறேன்.

    ReplyDelete
  39. வணக்கம் நண்பரே , என் பெயர் சுரேஷ்.
    உங்கள் ப்ளாக் அருமை.உங்கள் படம் மிக அருமை.
    என் குறும்படம் அடுப்பது எப்படி என்பதை விளக்கும் வீடியோவை,உங்கள் ப்ளாக்கில் இடம் பெற செய்ய கோரி ஒரு அன்பு வேண்டூகொள் .
    நன்றி. உங்கள் ப்ளாக் பணி தொடர என் வாழ்த்துக்கள்

    http://www.youtube.com/watch?v=xWvV2Bn4S1Q

    ReplyDelete
  40. அன்பு நன்பா ,அருமை... நல்ல கதை கரு....

    ReplyDelete
  41. ஜாக்கி நான் தான் BALA SRIRAM...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner