தீபாவளி பண்டிகை ஒரு பின்னோக்கிய பார்வை...

தீபாவளி பண்டிகை சந்தோஷம் மிகச்சரியாக ஒன்றரை மாதத்துக்கு முன்பே அந்த உற்சாகம் வந்து விடும்... தினமும் நாள்காட்டியில் காகிதம் கிழிக்கும் போது நாட்கள் குறைய குறைய மனம் எங்கும் சந்தோஷம் கொப்பளிக்கும்....

மனம் கொப்பளிக்க ஒரே காரணம் பட்டாசுதான்... ஏனென்றால் அப்போதைய காலகட்டத்தில் மனம் சந்தோஷமடைய அது மட்டுமே பிரதான காரணமா இருந்து இருக்கின்றது...

இப்போது போல் மாணவர்கள் பல் வேறு விஷயங்களில் காண்சன்டிரேட் செய்வது போல் அப்போது எல்லாம் இல்லை... இப்போது எல்லாம் ஒவ்வோறு சப்ஜெக்டுக்கும் டியுஷன் வைத்துக்கொள்கின்றார்கள்.... இப்போது போல் அப்போது எல்லாம் சுட்டி டிவியும் இல்லை ஒரு புன்னாக்கும் இல்லை...


அதனால் பொங்கலும் தீபாவளியும்தான் சந்தோஷம் கொடுக்கும் தினங்கள்...தீபாவளி அன்று காலையில் விடியலில் மூன்று மணிக்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட வெடிச்சத்தம் விடியலில் 5 மணிக்கு சத்தம் காதை கிழிக்கும்... அந்த சத்தம் காலை ஒன்பது வரை விடாது கேட்டுக்கொண்டே இருக்கும்....

அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட் விட்டு யாராவது ஒரு புண்ணியவான் அமைதியா இருக்குற நேரமா பார்த்து ஒரு பத்தாயிரம் வாலா பட்டாசு வெடிக்க... நாங்க வாயில ஈ போறது தெரியாம பார்ப்போம்....அப்புறம் மதியத்துக்கு மேல ரெஸ்ட்.. எல்லாம் தீபாவளி பலகாரத்தை சாப்பிட்டு விட்டு நல்ல தூக்கம் போட்டுகிட்டு இருக்கும் போது ....ஆட்டோ பாம் எல்லாம் இந்ம மதிய நேரத்துலதான் வெடிப்பாங்க... அதன் பிறகு 5 மணிக்கு பிஜிலி வெடிகளுடன் ஆரம்பிக்கும் வெடித்திருவிழா....இரவு ஆறு மணிக்கு மேல் வாண வேடிக்கைகளும் கை கோர்க்க விழா களைகட்டி இருக்கும்... அப்புறம் அது இரவு பத்துமணி வரை நிறுத்தாமல் தொடர்ந்து... பத்தில் இருந்து பதினோருமணிவரை வேகம் குறையும் நேரம்...

அப்புறம் டிவியின் பரவல்... அப்புறம் தனியார் தொலைகாட்சி வருகைக்கு பிறகு இந்த கொண்டாட்டம் நிறைய தடை பட்டு விட்டது... சன் டிவி வந்த போது பட்டாசு அதிகம் வெடிக்காமல் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன... ஏதாவது அறுவை புரோகிராமுக்குதான் மக்கள் வெளியே வந்து வெடி வெடிக்க ஆரம்பித்தார்கள்...... அந்தளவுக்கு மீடியா வளர்ச்சி... தீபாவளி திருவிழாவை மாற்றியது எனலாம்...

அதே போல் பட்டாசு... அப்பா கொஞ்சமாக வாங்கி வரும் போது எல்லாம் மனதில் அவரை திட்டி இருக்கின்றேன்.... 5 பிள்ளைகளுக்கு தகப்பனால் எல்லோருக்கும் புது துணி வாங்கி எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும் .. அதனை எங்க அப்பா சிறப்பாகவே செய்தார்...

இப்போத நான் கஷ்டபட்டு பணம் சம்பாதிக்கும் போது பண்டிகைக்கு ரூபாய் 100க்கு மேல் வெடி வாங்குவதில்லை.. ஒரு லட்சுமி கட்டு பிரிச்சி வெடிச்சா 20 ரூபாய் பணம் கண் எதிரே சுக்கு நூறாய் போகுவதாக எண்ணம் வருகின்றது... அதற்க்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம்... யாராவது ஏழைக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுக்கலாமே... என்று புத்தி போகின்றது....



பார்ப்போம் குழந்தை குட்டி என்று ஆன பிறகு அவர்கள் மகிழ்ச்சிக்காக பட்டாசு வாங்கிதான் ஆக வேண்டும்... என் வீட்டு எதிரில் உள்ள டாக்டர் வீட்டில் ரூபாய் பத்தாயிரத்துக்கு பட்டாசு வாங்கி நேற்று முழுவதும் வெடித்துக்கொண்டு இருந்தார்கள்...29 இன்சு சான்சுயி டிவிக்கான தொகையை வெறும் காகிதமாக மாற்றினார்கள்....சிவகாசி சிறார்களின் உழைப்பு இங்கே மிகிழ்வாய் மாறியது...ஒரே மகிழ்ச்சி ஆட்டோ பாம் சத்தம் குறைக்கபட்டுவிட்டது....

வெடிக்காத வெடியை எல்லாம் பொறுக்கி அதன் மருந்தை ஒரு பேப்பரில் கொட்டி அதனை எறிய வைத்து வேடிக்கை பார்ப்போம்... வீட்டில் கொசு அதிகம் இருக்கும்.. அப்போது ஒரு பாம்பு மாத்திரை போட்டு எரித்தால் கொசு துண்டைகானோம் துணியை கானோம் என ஓட்டம் பிடிக்கும்....

தீபாவளி முன்னை போல் மக்கள் பெரிய உற்சாகமாய் கொண்டாடுவதில்லை.. மக்கள் தங்கள் கவனத்தை பல விஷயங்களில் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள்... மக்கள் தங்களை மாற்றிக்கொண்டு வெகுகாலம் ஆகிவிட்டது...


அந்த சிறுவயது தீபாவளி பண்டிகைக்கான உற்சாகம் இப்போது ஏன் என்னிடம்இல்லை என்று எனக்கு நானே கேள்வி கேட்ட போது.... பதில் கிடைத்தது

என் அம்மாவிடம் கேட்பேன் விதம் விதமாக ருசியாய் உணவு சமைத்து விட்டு அம்மா இலையில் வெறும் ரசத்தை மட்டும் போட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு கை கழுவிக்கொள்வாள்.... ஏன் என்று கேட்டால்?... நானே சமைத்து நானே சாப்பிட பிடிக்கலை என்பாள்...

அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அதிகம் ஆசைவரவில்லை என்று எண்ணுகின்றேன்... எனென்றால் அப்போது அப்பா சம்பாதித்தார்... நான் தீபாவளி கொண்டாடினேன்.... இப்போது?????

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

10 comments:

  1. 1990க்கு முந்திய தீபாவளி காலங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள் நண்பரே....

    அப்போது வெடியெல்லாம் போட்டி போட்டு வெடிப்போம். இப்போது சிறுவர்கள் போட்டி போட்டுகொண்டு சேனல் மாற்றுகிறார்கள்.

    அம்மாவை வைத்து உதாரணம் கூறியிருப்பது உண்மையான உண்மை. நாம் நமக்கு ஏதாவது வாங்க மிகவும் யோசிப்போம். மற்றவர்கள் பரிசாக வழங்கும்போது மகிழ்வோம்.

    அருமையான பதிவு.

    வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  2. /

    அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அதிகம் ஆசைவரவில்லை என்று எண்ணுகின்றேன்... எனென்றால் அப்போது அப்பா சம்பாதித்தார்... நான் தீபாவளி கொண்டாடினேன்.... இப்போது?????
    /

    வூட்டுக்காரம்மா ஊர்ல இல்லாததாலதான் இப்பிடி எனக்கும் ஒரு அஞ்சு வருசம் இப்பிடித்தான் என்னடா தீவாளின்னு இருந்தது, டிவி பாத்தே பொழுத கழிப்பேன்.

    இரண்டு வருடமாக தீபாவளி திரும்ப களை கட்டிருக்கு. அடுத்த வருடம் நீங்கள் இருவரும் ஒன்றாக தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்.

    அப்பிறம் பதிவு எழுதுங்க அதோட கலரே வேறவா இருக்கும்

    அன்புடன்

    மங்களுர் சிவா

    ReplyDelete
  3. நானும் ஒரு தீபாவளி பதிவு போடணும்னு நினைத்தேன்,. நீங்கள் 90 ஆம் வருடங்களுக்கான நினைவை அசை போட்டது போல 1963க்கான நினைவுகளை ஒற்றுமை வேற்றுமை பார்க்கலாம்னு யோசனை.
    அம்மாவைப் பற்றி நீங்கள் சொன்னதுதான் என்னை யோசிக்க வைக்கிறது. அம்மாக்கள் எந்தக் காலத்திலும் அப்படியே தான் இருக்கிறார்கள்.

    காசை அப்பவும்(எங்கள் பெரியவர்கள்) கரி செய்ததாகச் சொன்னார்கள்
    இப்ப நிஜமாவே கரியாக்குகிறார்கள்.

    அருமையன வர்த்தி.

    ReplyDelete
  4. அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அதிகம் ஆசைவரவில்லை என்று எண்ணுகின்றேன்... எனென்றால் அப்போது அப்பா சம்பாதித்தார்... நான் தீபாவளி கொண்டாடினேன்.... இப்போது?????

    ithu ennavo romba unmai than jackie anne. ippo poruppu vandhathukkappuram thambi thankaikalai magilichipaduthuvathil than manam layikkirathu.. nam santosam enbathu appa thuni eduhtu,pattasu vangi koduthu avar perumitham adaiyum magilchiyaana tharunagal endrum marakka mudiyathavai..

    meendum antha ninavalaikalil althiyatharkku nandri..

    ReplyDelete
  5. // அம்மாவிடம் கேட்பேன் விதம் விதமாக ருசியாய் உணவு சமைத்து விட்டு அம்மா இலையில் வெறும் ரசத்தை மட்டும் போட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு கை கழுவிக்கொள்வாள்.... ஏன் என்று கேட்டால்?... நானே சமைத்து நானே சாப்பிட பிடிக்கலை என்பாள்...

    அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அதிகம் ஆசைவரவில்லை என்று எண்ணுகின்றேன்... எனென்றால் அப்போது அப்பா சம்பாதித்தார்... நான் தீபாவளி கொண்டாடினேன்.... இப்போது?????
    //

    :)

    ReplyDelete
  6. 1990க்கு முந்திய தீபாவளி காலங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள் நண்பரே....

    அப்போது வெடியெல்லாம் போட்டி போட்டு வெடிப்போம். இப்போது சிறுவர்கள் போட்டி போட்டுகொண்டு சேனல் மாற்றுகிறார்கள்.

    அம்மாவை வைத்து உதாரணம் கூறியிருப்பது உண்மையான உண்மை. நாம் நமக்கு ஏதாவது வாங்க மிகவும் யோசிப்போம். மற்றவர்கள் பரிசாக வழங்கும்போது மகிழ்வோம்.

    அருமையான பதிவு.

    வாழ்த்துக்கள் நண்பரே..//
    நன்றி துபாய் ராஜா மிக்க ந்னறி

    ReplyDelete
  7. உண்மைதான் சிவா நீ சொல்லறது உண்மைதான்...பார்ப்போம்..

    ReplyDelete
  8. காசை அப்பவும்(எங்கள் பெரியவர்கள்) கரி செய்ததாகச் சொன்னார்கள்
    இப்ப நிஜமாவே கரியாக்குகிறார்கள்.

    அருமையன வர்த்தி.//நன்றி வல்லிசிம்ஹன் மிக்க நஙன்றி உங்கள் பின்னுட்ட பகிர்தலுக்கும்..

    ReplyDelete
  9. thu ennavo romba unmai than jackie anne. ippo poruppu vandhathukkappuram thambi thankaikalai magilichipaduthuvathil than manam layikkirathu.. nam santosam enbathu appa thuni eduhtu,pattasu vangi koduthu avar perumitham adaiyum magilchiyaana tharunagal endrum marakka mudiyathavai..

    meendum antha ninavalaikalil althiyatharkku nandri..//
    நன்றி குரு பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  10. / அம்மாவிடம் கேட்பேன் விதம் விதமாக ருசியாய் உணவு சமைத்து விட்டு அம்மா இலையில் வெறும் ரசத்தை மட்டும் போட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு கை கழுவிக்கொள்வாள்.... ஏன் என்று கேட்டால்?... நானே சமைத்து நானே சாப்பிட பிடிக்கலை என்பாள்...

    அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அதிகம் ஆசைவரவில்லை என்று எண்ணுகின்றேன்... எனென்றால் அப்போது அப்பா சம்பாதித்தார்... நான் தீபாவளி கொண்டாடினேன்.... இப்போது?????
    //

    :)// நன்றி யாசவி மிக்க நன்றி....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner