(THE THIEF) 18+ உலக சினிமா/ரஷ்யா... சில பெண் ஜென்மங்கள்....

சில பெண்கள் வாழக்கையில் மட்டும் விதி ஓவர் டைம் போட்டு விளையாடும்... சிலருக்கு ஏழரை நாட்டு சனி பிடிக்கிக்னறது என்றால்... சிலருக்கு 15 வருஷ சனியன் பிடிக்கும்..சிலருக்கு வார்க்கையில் சந்தோஷபக்கம் என்று ஒன்று இருக்கவே இருக்காது
மகாநதி கமலாவது இருக்கறதை விட்டுட்டு பறக்கறதை பிடிக்க ஆசைப்படடு தனது வாழ்க்கையை தொலைச்சிட்டு அவரை ஏழரை சனியை இன்வைட் பண்ணி இருப்பார்...

ஆனால் சிலர் வாழ்க்கை என்பது சந்தோஷ காற்றை சுவாசிக்க மாட்டார்கள்... அவர்களுக்கு மட்டும் எதாவது நடந்து கொண்டே இருக்கும்...
பொதுவா இவர்களுக்கு கொடுமை இருக்கின்றது என்று கோவிலுக்கு போனால் அங்கு ரெண்டு கொடுமை அவுத்து போட்டு ஆடும்... அப்படி பட்டவர்கள் அவர்கள்...

பெண்கள் எல்லா நாட்டிலும் அவர்கள் ஒரே பிரச்சனையை சந்தித்து வருகின்றார்கள்.. அதாவது வாழ்வாதாரம்... அது பொதுவாக ஆணை சார்ந்தே இருக்க வேண்டி இருக்கின்றது...என்ன... நமது நாட்டில் உடன்கட்டை போன்றவை இருந்தது.. அங்கு இல்லை ஆனால் வாழ்வாதாரம் என்பது பெண்ணை பொறுத்தவரை ஆணை சார்ந்தே இருக்கின்றது..

அப்படி விதியின் விளையாட்டால் கடைசி வரை நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து இறந்தவளின் கதைதான்... இந்த ரஷ்ய நாட்டு மொழிப்படம் THE THIEF....

THE THIEF படத்தின் கதை இதுதான்...
Katya (Yekaterina Rednikova) ஒரு விதவை.. தனது கணவனை போரில் பரிகொடுத்தவள்... தனது 6வயது பையன்Sanya (Misha Philipchuk) உடன் சோவியத் யூனியனில் எதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்ற ரயிலில் போய் கொண்டு இருக்கின்றாள்... அவனிள் 6வயது பையனுக்கு படைவிரனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு... ரயி்லில்Tolyan (Vladimir Mashkov) வரும் படை வீரன் மீது காதல் கொள்கின்றாள்... இரயிலிலேயே இருவரும் உறவு கொள்கின்றார்கள்...

Katya மிகவும் மகிழ்ச்சி அடைகின்றாள்,, தனக்கு ஒரு ஆண் துனையும்.. தனது பிள்ளைக்கு ஒரு கார்டியனும் கிடைத்து விட்டதாக மகிழும் போது.... அவன் ஒரு திருடன் என்பது தெரிகின்றது... போர் வீரன் என்று சொல்வது எல்லாம் பொய் என்று புரிகின்றது... சேற்றில் கால் வைத்தாகி்விட்டது இனி அவனுடனே வாழலாம் என்று நினைக்கின்றாள்... அதாவது அவன் திருடுவது ஆலாதியானது...

முதலில் ஒரு அப்பார்மென்ட்டில் போய் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி அங்கு இருப்பவர்களிடம் எல்லாம் நன்றாக பழகி... நகரத்தில் நடக்கும் எதாவது கச்சேரி, அல்லது சர்க்சுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து.. எல்லோரையும் அழைத்து்கொண்டு போய் இவன் மட்டும் இடைவேளையின் போது வீட்டுக்கு வந்து கொள்ளைஅடிப்பான்...

போலிஸ் கைது செய்கின்றது... பாழாப்போன அந்த விதவை பெண் அவனை சிறையில் அடைத்த போதும் அவனை கணவனாக நினைத்து தன் பையனின் அப்பா என்று மரியாதையில் அவன் சிறையில் அடைக்கும் போது தவிக்கின்றாள்...

காலம் ஓடுகின்றது,.. அவன் சிறையில் இருந்து வந்தானா?.. வந்து இந்த விதவை பெண் குடும்பத்துடன் இனைந்தானா? அந்த பையனின் அதாவது வளர்ந்த அந்த பையனின் மனநிலை என்ன என்பது பற்றி... வெண்திரையில் காண்பீர்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


படத்தின் அற்புதமான முடிச்சு இந்த பையனை போஸ்டர் முழுவதும் தீப் என்ற விளம்பர படுத்த நாமும படம் பார்க்கும் போது அந்த பையனை மனதில் வைத்தே.. பமம் பார்க்க உட்கார ... ங்கொய்யால அப்படி இல்லை அந்த பையன் திருடன் இல்லை இவன்தான் பக்கா திருடன் எனறு பொட்டில் அடித்த சொல்லும் அந்த சின்ன டுவிஸ்ட்டில் எதிர்பார்ப்பை எகிர வைத்த இயக்குனருக்கு நன்றி..

ஒரு விதவை பெண்ணின் உளவியல் சிக்கலையும் ரஷ்ய நாட்டின் வறுமை தாயையும் கண் முன் இந்த படத்தில் காட்டி இருப்பார்கள்....

அதே போல் பைனாக நடித்த அந்த பையனின் கோலி உருண்டை கண்கள் அற்புதம்... அந்த பையனை பார்த்து விட்டு படம் விட்டு வெளியே வரும் போது சோ ஸ்வீட் என்று சொல்லிவீர்கள்....

அவன் அந்த கூட்டு குடும்ப வீட்டில் ஒரே அறையில் பையன் இருக்கும் போதே அந்த விதவை தாயுடன் உடலுறவு கொள்ள... அதை அந்த பையன் பார்க்க அவனை வெளியே தெரித்தி கதவை சாத்தி விட்டு உடலுறவு கொள்ள அந்த பையன் வீ்டின் வாசலில் வெயிட் செய்து கொண்டு இருப்பது கொடுமை...

அவனது ஒரே குறிக்கோள்... அந்த விதவையுடனான உடலுறவு அதே போல் திருடும் போதுசந்தேகம் வராமல் இருக்கு குடும்பஸ்தன் போர்வை.. அவ்வளவுதான்...

இந்த படத்தின் ஒளிப்பதிவும்... ரயில் காட்சிகளில் இன்டோர் அவுட்டோர் மேட்சிங் காட்சிகள் அருமை..
படத்தின் விருதுகள்
nominated for the Academy Award for Best Foreign Language Film and won the Nika Award for Best Picture and Best Directing. Also winner of the International Youth Jury's prize, the President of the Italian Senate's Gold Medal, and the UNICEF Award at the 1997 Venice Film Festival.
படத்தின் டிரைலர்

படக்குழுவினர் விபரம்...

Directed by Pavel Chukhrai
Produced by Igor Bortnikov
Sergei Kozlov
Igor Tolstunov
Written by Pavel Chukhrai
Starring Vladimir Mashkov
Yekaterina Rednikova
Misha Philipchuk
Music by Vladimir Dashkevich
Cinematography Vladimir Klimov
Editing by Marina Dobryanskaya
Natalya Kucherenko
Release date(s) 1997
Running time 96 min.
Country Russia
Language Russian
Budget $2,000,000
Gross revenue $1,126,506 (US)

முழுபடத்துக்கான யூ டியூப் லிங்க்....
Part 1 http://www.youtube.com/v/kJboCGxMxEk&hl=en&fs=1&color1=0x2b405b&color2=0x6b8ab6
Part 2 http://www.youtube.com/v/iI66rumNP8I&hl=en&fs=1&color1=0x2b405b&color2=0x6b8ab6
Part 3 http://www.youtube.com/v/BP66sIBbIFA&hl=en&fs=1&color1=0x2b405b&color2=0x6b8ab6
Part 4 http://www.youtube.com/v/LyuAND-zhuc&hl=en&fs=1&color1=0x2b405b&color2=0x6b8ab6
Part 5 http://www.youtube.com/v/juWIGSjZ-0M&hl=en&fs=1&color1=0x2b405b&color2=0x6b8ab6
Part 6 http://www.youtube.com/v/p95B2bHH_SY&hl=en&fs=1&color1=0x2b405b&color2=0x6b8ab6
Part 7 http://www.youtube.com/v/0WFxbVBizcU&hl=en&fs=1&color1=0x2b405b&color2=0x6b8ab6
Part 8 http://www.youtube.com/v/73Ms4HuG6jI&hl=en&fs=1&color1=0x2b405b&color2=0x6b8ab6
Part 9 http://www.youtube.com/v/7y3kFU-bD-Y&hl=en&fs=1&color1=0x2b405b&color2=0x6b8ab6


அன்புடன்
ஜாக்கிசேகர்...
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(குறிப்பு... பதிவுலகில் நிறைய பேர் திரைவிமர்சனம் எழுதுகின்றார்கள்... அனால் எனது தளத்தில்...உலகின் மிகச்சிறந்த படங்களை மட்டுமே பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் அறிமுகபடுத்துகின்றேன்... சிறந்த படத்துக்கு மொழி ,நாடு வித்யாசமில்லை... ஒரு நல்ல படத்தை நான் உங்களுக்கு அறிமுக படுத்த 15 குப்பை படங்களை பார்த்து தொலைக்க வேண்டி இருக்கின்றது... அதற்க்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டி உள்ளது... எந்த படம் நல்ல படம்? என்று நான் தேடிய போது இது போன்று அறிமுகபடுத்த தளங்கள் அப்போது இல்லை... அது போல் வரும் தலைமுறை தட்டுதடுமாறக்கூடாது என்று நான் அதிகம் நேசிக்கும் சினிமாவை எனது தளத்தில் உலக சினிமா,உள்ளுர்சினிமாவில் தி பெஸ்ட் என்று பெயர் எடுத்த படங்களை மட்டும் எழுதி வருகின்றேன்... பின்னுட்டம் இட்டும ஓட்டு போட்டும் உற்சகபடுத்துவீர் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஜாக்கி)

10 comments:

 1. 88 மினிட்ஸ் படத்தை டோரண்ட் வழியா டவுன்லோட் செஞ்சுட்டேன். பார்த்துட வேண்டியதுதான். இனிமேல் உங்கள் கதையைப் படிச்சுட்டு இறக்கி இறக்கிப் பார்த்துடணும்.

  முழுப்படத்திற்கான யூட்யூப் லிங்க்கைக் கொடுத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. ///பின்னுட்டம் இட்டும ஓட்டு போட்டும் உற்சகபடுத்துவீர் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஜாக்கி)///

  கண்டிப்பாக ஜாக்கி.
  நீங்கள் அறிமுகப்படுத்தும் திரைப்படங்கள் அனைத்தும் அருமையாய் இருக்கின்றன.

  ReplyDelete
 3. நீங்க‌ சொல்லும் ப‌ட‌ங்க‌ள் பெரும்பாலும் ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ள்தான் ஸார்.. உங்க‌ லிஸ்டே த‌னியா வ‌ச்சிருக்கேன். ந‌ன்றி.

  ReplyDelete
 4. /
  உலக சினிமா,உள்ளுர்சினிமாவில் தி பெஸ்ட் என்று பெயர் எடுத்த படங்களை மட்டும் எழுதி வருகின்றேன்... பின்னுட்டம் இட்டும ஓட்டு போட்டும் உற்சகபடுத்துவீர் என்ற நம்பிக்கையுடன்
  /

  கண்டிப்பாக!

  பட அறிமுகம் அருமை.

  ReplyDelete
 5. முதல்ல இந்த படத்தோட DVD கொடுங்க ....நீங்க மட்டும் நல்ல நல்ல படமா பர்த்துட்டு எங்களை உசுப்பேத்திவிட்டுர்ரீங்க...பாரிஸ் பர்மா பசார்ல கூட english படங்க மட்டும் தான் கிடைக்குது. இந்த மாதிரி மத்த மொழி படங்கள் எங்கே கிடைக்கும்..அந்த கடையை எனக்கு அறிமுகப்படுத்துங்க.

  ReplyDelete
 6. அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் உள்ளன ....
  நல்ல படம்

  ReplyDelete
 7. உங்கள் இடுகைகளை google Reader ஊடாக வாசித்து வருகின்றேன். நீங்கள் குறிப்பிடும் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது ஆனால் அனைத்து படங்களையும் பெற்றுக்கொள்வது கடினமாக உள்ளது சற்று நல்ல புதிய படங்கள் பற்றி இடுகை இடின் மகிழ்வேன்.

  ReplyDelete
 8. 1994 - The Shawshank Redemption

  I dont know if u have written abt this movie... if not, please watch n try it out

  ReplyDelete
 9. great service u r doing!
  keep it off!

  senthil

  ReplyDelete
 10. உலக அளவில் சிறந்த திரைப்பட விமர்சனங்கள் தொடரட்டும்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜாக்கி.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner