(THE STAR MAKER) உலக சினிமா/ இத்தாலி...18++ சினிமா ஆசை யாரை விட்டது...???
சினிமா இந்த மூன்று எழுத்து மந்திர சொல்லுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை.. அது குப்பனாக இருந்தாலும் சுப்பனாக இருந்தாலும்...ஒன்றுதான்...சினிமாவில் சாதிப்பேன், கொடிநடுவேன், கோபுரம் கட்டுவேன் என்று சென்னை புறப்பட்டு வந்த பல பேர் வாழ்க்கையை தொலைத்து விட்டு கிடைத்த வேலையை செய்து கொண்டு காலம் கழிக்கின்றார்கள்...
சினிமா எனும் போதைக்கு ஆசைப்பட்டு வந்து கற்பிழந்து வாழ்க்கை இழந்து எதுவும் முடியாமல் உடலையே மூலதனமாக வைத்து தொழில் செய்பவர்கள் ஏராளம்...
இளமையை தொலைத்தவிட்டு 40 வயசுக்கு மேல் இது சரிபடாது என்று பின்வாங்குபவர்கள் பல பேர்...
இன்றளவும் நடிகனுக்கும் நடிகைக்கும் மவுசு குறையவில்லை.... எல்லாவற்றிக்கும் காரணம் அளப்பறியாத புகழ்... செல்வம் போன்றவைதான்...
வேறு எந்த தொழிலிலும் நீங்கள் எந்த சாதனை செய்தாலும் பத்தோடு பதினொன்றுதான்... அது இன்போசி்ஸ் நாராயண மூர்த்தியாக இருந்தாலும் அல்லது முகேஷ் அம்பானியாக இருந்தாலும்... புகழ் வெளிச்சம் போன்றவை மற்ற துறைகளில் குறைவுதான்...
அதனால்தான் அனுதினமும் சினிமா அசையில் சென்னை வந்து சாதிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் சென்னை வருபவர்களம் வாழ்க்கையை தொலைப்பவர்களும் ஏராளம்...
அது இந்த நாட்டில் மட்டும் அல்ல அது எல்லா நாட்டிலும் பொருந்தும்... இத்தாலியில் 1953ல் உங்களை ஸ்டார் ஆக்கி காட்டுகின்றேன் என்று சொல்லிய டைரக்டரின் கதை...
THE STAR MAKER இத்தாலி படத்தின் கதை இதுதான்....
Joe Morelli ஒரு வேன் போன்ற வாகனத்தில் கேமரா பிலிம் ரோல் எல்லாம் வைத்துக்கொண்டு இத்தாலியின் கிராம புறபகுதிகளில் டென்ட் போல போட்டு ஸ்கிரின் டெஸ்ட் எடுக்கின்றேன் என்று சொல்லி மக்களிடம் காசு வாங்கி டெஸ்ட் ஷுட் செய்கின்றான்... அதில் யாரை பார்த்தாலும் உங்களுக்கு நல்ல முக வெட்டு என்று சொல்லி ஆசை காட்டி கேமரா முன் நிற்க்க வைக்கின்றான்... அதற்கு ஒர தொகையையும் வசூலித்து விடுகின்றான்...
இதில் பலர் பணத்தையும்... பெண்களில் சிலர் உடலையும் அவன் வசம் இழக்கின்றனர்...Beata என்ற பெண்ணுக்கு தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை வர அவளோ அனாதை... அவளிடம் ஸ்கிரின் டெஸ்ட் எடுக்க பணம் இல்லை... இருப்பினும் ஒரு முதியவனிடம் தனது நிர்வாண முழு உடலையும் காட்டி பணம் பெற்று ஸ்கிரின் டெஸ்ட் எடு்க்கின்றாள்... அந்த பணத்தை அவனிடம் கொடுக்க அவன் அதை வாங்க மறுக்கின்றான்...
அவன் எங்கு போனாலும் அவனோடு செல்கின்றாள்.. ஒரு கட்டத்தில்
அவளை விரட்ட அவள் போக இடம் இல்லாமல் திரும்ப இவனிடமே வர... வேறு வழியில்லாமல் அவளை அவனோடு வைத்துக்கொள்கின்றான்...
ஆனால் விதி அந்த பெண் வாழ்க்கையில் விளையாடுகின்றது... அவன் ஒரு திருடன் பல இடத்தில் திருடியவன்... எல்லா மக்களையும் ஏமாற்றிய குற்றத்திற்க்காக அவனை கைது செய்து சிறையில் அடைக்கின்றது போலிஸ்... அந்த அனாதை பெண் என்னவானாள்? அவன் சிறையில் இருந்து வெளியே வந்தானா? என்பதை நெஞ்சில் கணத்துடன் வெண்திரையில் பாருங்கள்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
இந்த படம் முடியும் போது உங்கள் மனதை பாராமாக்கிவிடும் என்பது சத்தியமான உண்மை...
எல்லோரிடமும் பணம் வாங்கும் போதே அவன் டுபாக்கூர் என்பது தெரிந்தாலும் அவனது சாமர்த்தியம் எல்லாவற்றையும் மறைத்து விடுகின்றது..
சினிமாவில் நடிக்க வைக்க எல்லோரும் அதாவது அந்த நகரமே தன்னை தயார் படுத்திக்கொள்ளும் காட்சியை 3 நிமிஷம் ஒரே ஷாட்...
பொதுவாக ஒரு அறையில் கட் ஷாட் இல்லாமல் எளிதில் எடுத்து விட முடியும் ஆனால்.. இந்த 3 நிமிஷ காட்சியில் கேமரா போகாத இடங்களே இல்லை எனலாம் ... இதில் பையன்கள் வேறு நடித்து இருப்பார்கள்... ஒருவர் சொதப்பினாலும் திரும்பவும் எடுக்க வேண்டும்... மிக அற்புதமான ஷாட் அது... சினிமா விரும்பிகள் கவனத்துடன் பார்க்க வேண்டிய காட்சி அது..
எல்லோருக்கும் சினிமாவில் நடித்து பெயர் வாங்கி விட வேண்டும் என்ற ஆசையை வெவ்வேறு மற்றும் பலதரப்பட்ட மக்கள் மூலம் வெளிபடுத்தி இருப்பார் இயக்குனர்...
இந்த படத்தின் இயக்குனர் Giuseppe Tornatore
முக்கியமாக ஒரு 16 வயது பையனை அவன் அப்பா கேமரா முன் நடிக்க வைக்க டைரக்டர் முதலில் வசனம் பேச சொல்ல.. பையன் பிச்சி உதற.. அதன் பின் உணர்ச்சிகள் வெளிபடுத்த வேண்டும்... முக்கியமாக செக்ஸ் உணர்ச்சிகள் வெளிபடுத்த வேண்டும் என்று சொல்ல.... அவன் முழிக்க அவன் அப்பா கைமைதுனம் செய்வது போல் அவனக்கு, சொல்லி காண்பிக்க... அவன் அதே போல் கைமைதுனம் செய்வது போல் ஆக்ஷன் செய்த கொண்டே.. மொத்த வசனத்தையும் உணர்ச்சியில் பேச வைத்து இருப்பது டைரக்டரின் சினிமா பசியை உணர்த்துகின்றது...
ஒரு இளம் பெண்ணை ஒரு அம்மா அழைத்து வந்து.. அவள் அழகிய கால்களையும் தொடைகளையும் காட்டி விட்டு பெண்ணை வீட்டுக்கு அனுப்பி விட்டு அவனோடு சல்லாபிக்கும் போது... அவன் காரியத்தில் இருக்க இவள் மட்டும் என் பெண்ணை... ரோமுக்கு அழைத்து போ... பெரிய ஹரோயினாக மாற்று... என முனறிக்கொண்டே சொல்ல... அவன் எது பற்றியும் கவலை படாமல் காரியத்தில் கண்ணாக இருக்க ... என் உடம்பை என்ன வேண்டமானாலும் செய்து கொள் என்று திரும்பவும் மன்றாடுவதை பார்க்கும் போது அந்த தாயின் மேல் பரிதாபம் வருகின்றது...
ஒரு ஆடு் மெய்பவன் என்ன பேசவது என்று தெரியாமல் அதன் பிறகு நான் இரவில் நட்சத்திரத்தை பார்த்து இருக்கின்றேன் உலகம் மிக அழகாக இருக்கின்றது என்று பேசிக்கொண்டே போவது கவிதை...
அதே போல் அந்த பெண் அவனிடத்தில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க அவன் விரட்ட அவள் சற்றேன்று உடை களைந்து மார்பகம் காட்டும் இடத்தில் அந்த பெண்ணுக்கு வேறு வழியில்லை அதே போல்... அவனும் அதை அங்கீகரிக்காமல் அவளை திட்டுகின்றான்...எனெனில் அவனே திருடன் இந்த பெண்ணை எப்படி வாழ்நாள் முழுவதும் என்ற நினைப்பே காரணம்...
முத்தம் கூட கொடுக்க தெரியாத பெண்ணை அவள் விருப்பத்துடன் அவன் வீழ்த்தும் காட்சிகளில் ஒளிப்பதிவும் பிரேம் கம்போசிங்கும் அற்புதமாக இருக்கும்.... முக்கியமாக அந்த இன்டோர் லைட்டிங் அற்புதமான வாம் மூட் லைட்டிங்...சூப்பர்..
சில பெண்களுக்கு காதல் வந்து விட்டால் அவர்கள் எது பற்றியும் கவலை படமாட்டார்கள்... எனபது அந்த பெண் பாத்திரத்தின் மூலம் உணர்த்தி இருப்பார் இயக்குனர்..
முக்கியமாக அந்த திருட்டு இயக்குனர் உதை வாங்கும் போது அந்த பெண் மண்ணில் புரண்டு அழும் அந்த காட்சி பல தமிழ் படங்களில் வந்து இருக்கின்றது.. அந்த காட்சி இதயத்தை கணக்க செய்யும்...
இந்த படத்தின் இயக்குனர் Giuseppe Tornatore முதலில் போட்டோகிராபராக வாழ்க்கையை தொடங்கி பின்பு சினிமாவில் தன்னை இனைத்துக்கொண்டு சாதனை படைத்தவர்... இவர்தான் சினிமா பாரடைசோ மற்றும் மெலினா போன்ற படங்களை இயக்கியவர்...
Awards:
Nominated for Oscar. Another 9 wins & 5 nominations
படத்தின் டிரைலர் கண்டிப்பாக 18++ பார்க்கவும்...
படக்குழுவினர் விபரம்...
Director:
Giuseppe Tornatore
Writers:
Fabio Rinaudo (writer)
Giuseppe Tornatore (screenplay)
Runtime:
113 min
Country:
Italy
Language:
Italian
Color:
Color
Aspect Ratio:
2.35 : 1 more
Sound Mix:
Dolby
Certification:
Italy:T | Argentina:16 | Australia:MA | Finland:K-16 | Hong Kong:IIB | Iceland:12 (video rating) | Iceland:14 (original rating) | Portugal:M/16 | Spain:13 | Spain:T | Sweden:15 | UK:18 | USA:R
Filming Locations:
Matera, Basilicata, Italy more
Company:
Cecchi Gori Group Tiger Cinematografica
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
நான் ரொம்பவே ரசிச்சு பார்த்த படம் ஸார். அருமையா விமர்சனம் பண்ணியிருக்கீங்க...
ReplyDelete/
ReplyDeleteபல பேர் வாழ்க்கையை தொலைத்து விட்டு கிடைத்த வேலையை செய்து கொண்டு காலம் கழிக்கின்றார்கள்...
சினிமா எனும் போதைக்கு ஆசைப்பட்டு வந்து கற்பிழந்து வாழ்க்கை இழந்து எதுவும் முடியாமல் உடலையே மூலதனமாக வைத்து தொழில் செய்பவர்கள் ஏராளம்...
இளமையை தொலைத்தவிட்டு 40 வயசுக்கு மேல் இது சரிபடாது என்று பின்வாங்குபவர்கள் பல பேர்...
/
bold பண்ணிடுங்க.
பட அறிமுகம் சூப்பர்.