(Men of Honor) பொறுமையின் வெற்றி...




தங்கம் இருப்பதாக சொல்லப்பட்ட இடத்தில் 8 அடி ஆழம் வரை தோண்டி இது வேலைக்காகாது என்று சொல்லிவிட்டு அடுத்த வேலை பார்க்கப் புறப்படுகிறவர்களே நம்மில் அதிகம். 2 அடி, 5 அடி அதிக முயற்சி செய்து 9 அடி வரை சென்று “சீச்சீ இந்த பழம் புளிக்கும்” என்று வியர்வையை துடைத்து விட்டு போகிறவர்கள் மத்தியில் பொறுமையோடு தொடர்ந்து முயல்பவனுக்கு 10வது அடியில் தங்கம் கிடைக்கிறது.

எழுத்தாளர் பாலகுமாரன் “வெற்றி பெறுபவன், வெற்றி பெற நினைப்பவன், வெற்றியில் குளித்து மகிழ்பவன் - ஒரு கர்ப்பிணி பெண்ணைப் போல் வாழ வேண்டும்” எனச் சொல்வார். ஒரு கர்ப்பிணிப் பெண் சதாசர்வ காலமும் தன் வயிற்றில் உள்ள குழந்தையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள். அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குழந்தையே நினைவிலிருக்கும். புலியே துரத்தினாலும் அதிர்ந்து ஓடக்கூட மாட்டாள். தனது முழுக்கவனத்தையும் தன் வயிற்றின் மீதே குவித்திருப்பாள்.


அது போல் வெற்றி பெற நினைப்பவனும் சதாசர்வ காலமும் வெற்றி குறித்தே நினைத்திருக்க வேண்டும். எத்தனை அவமானம் வரினும், எத்தனை இடர்ப்பாடு வரினும், எத்தனை வேதனை வரினும் அவனது எண்ணமும் செயலும் வெற்றியை நோக்கியே இருக்க வேண்டும்.





அப்படி வெற்றிக்காக தனது காலையே இழந்த ஒரு அமெரிக்கக் கடற்படை வீரனின் உண்மைக்கதைதான் Men of Honor.

Men of honor படத்தின் கதை இதுதான்...
Carl Brashear (Gooding, Jr.) ஒரு ஏழை விவசாயியின் மகன். தன் அப்பா வானம் பார்த்த நிலத்தில் படும் கஷ்டங்களை நேரில் கண்டு மனம் வருந்துபவன். தனது வாலிப வயதில் அமெரிக்க கடற்படையில் பணியில் சேர செல்கிறான். அவனுக்கு விடைதரும் அப்பா தயவுசெய்து இந்த ஊருக்கு திரும்பி வராதே என்றும் தன்னைப்போல் இங்கே இருந்து கஷ்டப்பட வேண்டாம் என்றும் போகும் இடத்தில் சிறப்புற பணியாற்ற வாழ்த்தி அனுப்புகிறார்.


வந்த இடத்தில் Master Chief Petty Officer Leslie William "Billy" Sunday (De Niro) போல தானும் மிகச்சிறந்த Diver ஆக வேண்டும் என்ற ஆசையோடு கடற்படையில் சேருகிறான். அமெரிக்கக் கடற்படையில் நிற வேறுபாட்டின் காரணமாக அவன் படும் அல்லல்களையும் மீறி அவன் dive அடிக்கும் கலையை மிகவும் பொறுமையோடு கற்றுக் கொள்வதும் அதற்காக அவன் படும் அவமானங்களும் அதையும் மீறி அவன் எப்படி ஜெயித்தான் என்பதே மீதிக்கதை.








படத்தின் சுவாரஸ்யங்கள் சில...

இந்தப்படம் ஸ்டேன்லி க்யூப்ரிக் இயக்கிய full metal jacket படத்தின் பல காட்சிகளை நினைவு படுத்துகிறது. அமெரிக்க ராணுவம் அதன் உள் கட்டமைப்பு எந்த அளவு ஈகோவோடு இருக்கின்றது என்பதற்கு இந்தப்படம் ஒரு மிகச்சரியான உதாரணம் என்றால் அது மிகையல்ல.

எந்த இடத்திலும் திறமையானவர்கள் மிகவும் கஷ்டப்பட்டே உயரத்திற்கு வரவேண்டியது மனித அவலம்.




டைவிங்கிற்கு மிக முக்கியமான அவனது கால்கள் விபத்தில் செயலிழந்தாலும் அந்த காலையே எடுத்துவிட்டு, தன் பணி மீது உள்ள அடங்காக் காதலால் அவன் தன் பணியில் முழு வெற்றியடையும் உச்சகட்ட காட்சி கண்ணில் நீரை வரவழைக்கும்.



இந்தப் படம் நிறைவடையும் போது உங்களுக்கு உங்கள் கண்ணீர் இலவசம்.

ஒரு காட்சியில் கணவன் தன் மனைவியிடம் கேட்பான். “ஒரு வேளை நான் தோற்றுவிடுவேன் என்று நினைத்தாயோ...” என்று அதற்கு அவள் அழகாய்ச் சொல்லுவாள் “நான் காதலித்து கரம் பிடித்தவன் தோல்வியடைபவன் அல்ல”. Robert de Nero நடிப்பை இன்று முழுதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நடிக்க விருப்பமுள்ளவர்கள் இவரது அனைத்துப் படங்களையும் பார்க்கும் படி என் தனிப்பட்ட வேண்டுகோளையும் வைக்கிறேன்.

Gooding Jr. நடிப்பை அதுவும் குறிப்பாக கோபத்தில் அவர் காட்டும் முக வெளிப்பாடுகளை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. It is inspired by the true story of Master Chief Petty Officer Carl Brashear, the first African-American Master Diver in the United States Navy.
George Tillman, Jr. இயக்கிய இந்தப் படம் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் கட்டாயம் பார்த்து தங்களின் தன்னம்பி்க்கையை வளர்த்துக் கொள்ள சரியான படம். தவறவிடாமல் பார்க்கவும்.

படத்தின் ட்ரைலர்...



படக் குழுவினர் விபரம்...

Directed by George Tillman, Jr. Produced by Bill BadalatoRobert Teitel Written by Scott Marshall Smith Starring Robert De NiroCuba Gooding, Jr.Charlize Theron Music by Mark Isham Cinematography Anthony B. Richmond Editing by John CarterDirk Westervelt Distributed by 20th Century Fox Release date(s) November 10, 2000 Running time 129 min. Language English Budget $32,000,000[1] Gross revenue $15,250,312[1]

அன்புடன்/ஜாக்கிசேகர்தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்நன்றி.....


20 comments:

  1. நாந்தான் பர்ஸ்ட்

    நித்யன்

    ReplyDelete
  2. நானும் இப் படத்தை பார்த்துள்ளேன். என்னை கவர்ந்த படம். நம்மால் எதுவும் செய்ய முடியும் என்பதை விளக்கும் படம். அதிலும் காப்டனாக வருபவரின் நடிப்பும் கடைசியில் அவர் இவனுக்காக வாதாடுவதும் சிறப்பு.

    ReplyDelete
  3. ரொம்ப காலத்துக்கு அப்புறம் உங்க விமர்சனம் வாசிச்சாச்சி தல..

    ReplyDelete
  4. உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுது. அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  5. நானும் பாத்துட்டேன். ரொம்ப நல்ல படம். //உங்கள் கண்ணீர் இலவசம்//
    உண்மை. தெம்பாகவும் இருக்கும். நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  6. நானும் பார்த்திட்டேன்
    அருமையான படம் தல

    ReplyDelete
  7. “நான் காதலித்து கரம் பிடித்தவன் தோல்வியடைபவன் அல்ல”.

    Great!!!

    ReplyDelete
  8. //நடிக்க விருப்பமுள்ளவர்கள் இவரது அனைத்துப் படங்களையும் பார்க்கும் படி என் தனிப்பட்ட வேண்டுகோளையும் வைக்கிறேன்.//


    நடிக்க விருப்பம் இல்லாதவர்களும் டி நீரோவின் நடிப்பை பார்க்கலாம். மற்றவர்கள் நடிப்பென்ற பேரில் எப்படி அலுப்படிக்க வைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள...

    டி நீரோவின் ’டாக்சி டிரைவர்’ பார்த்தாச்சா ஜாக்கி!

    ReplyDelete
  9. /// எழுத்தாளர் பாலகுமாரன் “வெற்றி பெறுபவன், வெற்றி பெற நினைப்பவன், வெற்றியில் குளித்து மகிழ்பவன் - ஒரு கர்ப்பிணி பெண்ணைப் போல் வாழ வேண்டும்” எனச் சொல்வார். ஒரு கர்ப்பிணிப் பெண் சதாசர்வ காலமும் தன் வயிற்றில் உள்ள குழந்தையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள். அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குழந்தையே நினைவிலிருக்கும். புலியே துரத்தினாலும் அதிர்ந்து ஓடக்கூட மாட்டாள். தனது முழுக்கவனத்தையும் தன் வயிற்றின் மீதே குவித்திருப்பாள்.

    அது போல் வெற்றி பெற நினைப்பவனும் சதாசர்வ காலமும் வெற்றி குறித்தே நினைத்திருக்க வேண்டும். எத்தனை அவமானம் வரினும், எத்தனை இடர்ப்பாடு வரினும், எத்தனை வேதனை வரினும் அவனது எண்ணமும் செயலும் வெற்றியை நோக்கியே இருக்க வேண்டும். ///

    மிக அருமையான வைர வரிகள்

    அருமை அருமை ..

    ReplyDelete
  10. விமர்சனத்தை வாசித்ததும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. பார்த்துவிடுவேன்.

    ReplyDelete
  11. ஆரம்பிச்சாச்சா... ரைட்டு

    சும்மா ஜாலி போரடிச்சிருச்சு மாத்தவும்..

    piano teacher பார்த்தேன் சே என்னமா எடுத்திருக்காங்கண்ணே .. ஒரு பெண் எப்படி அடக்கி ஆசைகளை வெளியே தெறியாமால் இருந்தால் எப்படி வெடிக்கும் என்பதை...

    நான் சொன்ன மாதிரி நீங்க ஊருக்கு சென்ற கேப்புல the international,running scared,rest stop(not that much interesting),rainman,history of violence,executive decision,boondock saints,powder blue,silver,femme fatle பார்த்தேன்..
    உங்களுக்கு நன்றி இத்தனை படங்களை அறிமுகப்படுத்தியதுக்கு..

    என்ஜாய் பண்ணி பார்த்தது juat my luck romba ரொமப நல்லதொரு comedy romance.
    கடைசில முத்தம் கிடைக்காம பயபுள்ளக்கு ஊத்திருமோனு நினைச்சேன் ஆனா நல்லவேளை முத்தம் பத்திகிச்சு....


    இருந்தாலும் sawக்கு முன்னாடி rest stop ஜுஜுபி என்றி நினைக்கிறேன்.. saw 5 பாகமும் பார்த்திருக்கிறேன்..கொடுமை..

    ReplyDelete
  12. நன்றி ஜாக்கி.
    Robert de Nero படங்களை இப்பதான் பாக்க தொடங்கி இருக்கேன். ஆனா திருப்பி திருப்பி என்ன அழ வைக்கவே படம் காட்டுறீங்க....

    Robert de Nero வின் Analyze This, Analyze That ரெண்டு படமும் பார்த்து விட்டீர்களா?

    ReplyDelete
  13. நாந்தான் பர்ஸ்ட்

    நித்யன்///

    நன்றி நித்யா டைப் அடித்த போஸ்ட் போட்டதற்க்கு

    ReplyDelete
  14. நானும் இப் படத்தை பார்த்துள்ளேன். என்னை கவர்ந்த படம். நம்மால் எதுவும் செய்ய முடியும் என்பதை விளக்கும் படம். அதிலும் காப்டனாக வருபவரின் நடிப்பும் கடைசியில் அவர் இவனுக்காக வாதாடுவதும் சிறப்பு.//
    உண்மை இளங்கோ...இது ஒரு தன்னம்பிக்கை படம் என்றால் அது மிகையில்லை

    ReplyDelete
  15. ரொம்ப காலத்துக்கு அப்புறம் உங்க விமர்சனம் வாசிச்சாச்சி தல..//
    நன்றி யோ

    ReplyDelete
  16. உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுது. அருமையான விமர்சனம்.//
    நன்றி தமிழ் நாடான் உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்

    ReplyDelete
  17. நானும் பாத்துட்டேன். ரொம்ப நல்ல படம். //உங்கள் கண்ணீர் இலவசம்//
    உண்மை. தெம்பாகவும் இருக்கும். நல்ல விமர்சனம்.//ஹ
    நன்றி அசோக் தங்கள் பாராட்டுக்கு

    ReplyDelete
  18. Sekar,

    Welcome back to movie reviews//
    நன்றி பிரேம் தங்கள் வாழ்த்துக்கு

    ReplyDelete
  19. Thank you for a nice commentary on the movie MEN of honour.

    I enjoyed it.

    Cheers!
    damnMovieManiac

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner