ஆலப்புழா பெயர்காரணம்... சின்னதும் பெரிதுமாய் நகரினுள்ளே கால்வாய்களில் ரிப்பன் போல்6 ஓடி கடலில் கலக்கின்றன... அதில் படகு பயனிக்கின்றது....நகரம் மிக சோம்பலாய், இரவு வேகுநேரம் பிட்டு படம் பார்த்து விட்டு துக்கம் கலையாமல் எழுவது போல் எழுகின்றது...காலையில் ஏழே முக்காவுக்கே இங்கு டீக்கடை திறக்கின்றார்கள்... காலை ஆறு மணிக்கு ஆள் நடமாட்டம் அறவே இல்லை..
நமது ஊர் அது கிராம புறமாக இருந்தாலும் சிறு நகரமாக இருந்தாலும் 5 மணிக்கு டீக்கடை திறந்து விடுவார்கள்...பாமை வாய்ந்து நகரம் மிக குறுகலாய் சாலைகள்.. சொற்ப மக்கள்...
நாடு எவ்வளவு முன்னேறினாலும் இன்னும் மலையாளிகள் மணி ஆட்டிக்கொண்டுதான் பஸ் ஓட்டுகின்றார்கள்.. நமது கரூரில் பாடி கட்டிய தமிழக பஸ்களை பார்த்து விட்டு இந்த பஸ்களை பார்த்தால் வாந்தி வந்து விடுகின்றது....
நமத ஊரில் வழக்கு ஒழிந்து போன லாட்டரி டிக்கெட் வியாபாரம் மிக சிறப்பாக நடைபெறுகின்றது... பழைய ஞாபகத்தை கிளறி வேறு விட்டு விட்டு விட்டது..நானும் ஒரு லட்டசத் ரூபாய் பரிசி சீட்டு வாங்கி விழுந்தால் எப்படி இருக்கும் என்று இரவு ஜாலியாக நினைத்து பார்த்தேன்...
காலையிலேயே பரோட்டாவும் பீப்பும் சாப்பிட்டு மலையாளிகள் மயக்கம் வரமால் நடந்து போகின்றார்கள்... ஆப்பம் முட்டைகறி ரொம்ப பேமஸ்இங்கே...
பிரியானியில் சிக்கன் இரண்டு பீஸ் வைத்து85 ரூபாய் என்று பாக்கெட்டை வலுவிழுக்க வைக்கின்றார்கள்...4 வண்டி நிற்க்கும் சிக்னலுக்கு ஒரு போக்குவரத்து போலிஸ்காரர் ரொம்ப சலித்து வேலை செய்வதை பார்த்த போது இவரை சென்னை பிராட்வே சிக்கனலில் மாற்றல் போட்டால் மயக்கம் போட்டு விடுவார்...
எல்லா இடத்திலும் விளம்பர ஹோர்டிங்குகள் மிக முக்கியமாக நகை கடை விளம்பரங்கள்... துபாயிலிருந்து சம்பாதித்து அனுப்பும் சேட்டனின் பேக்ங் பேலன்ஸ் கரையவைக்க விளம்பரங்களில் கட முதளாளிகள் அதகம் செலவழிக்கின்றார்கள்... எல்லா இடத்தி்லும் பேக் ரவுண்ட பச்சை நிறம் என்பதால் விளம்ப்ர ஹோர்டிங்குகள் மிக அற்புதமாக இருக்கின்றன...
எல்லா விளம்பரத்திலும் அண்மை சாயல் சற்றே இருக்கும் பெண்கள் தங்கள் சிறு மார்பை பாதிவரை வரை திறந்து லட்சோப லட்ச மங்ககள் ஜொள்ளுவிட ஏதுவாக நகை அணிந்து நிற்க்கின்றார்கள்...
பசிக்கின்றது பானி பூரி சாப்பிடலாம் என்றால் வாய்ப்பே இல்லை... சுண்டல் சமோசா அதற்க்கும் வாய்பு இல்லை...இரவு 8 மணிக்கே கடை அடைக்க தொடங்கி விடுகின்றார்கள்...
கேரளாவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துகின்றது..நம் ஊரில் எல்லோரும் பணத்தை நீட்டி சரக்கு வாங்க முயற்ச்சி செய்வார்கள் இங்கே கம்பி கட்டி ரேஷனில் அரிசி வாங்குவது போல், தியேட்டரில் டிக்கெட் வாங்குவது போல் குடிமகன்கள் சரக்கு வாங்குகின்றார்கள்....
ஆலப்புழா மெடிக்கல் காலேஜ் ஜங்ஷன் பக்கத்தில் ஒரு தியேட்டர் இருக்கி்ன்றது.. அது நமது சென்னை கெயிட்டி தியேட்டரை நியாபகபடுத்துகின்றது...
இங்கு எல்லார் வீடும் முன்புறம் தோட்டம் வைத்தே வீடு கட்டி இருக்கின்றார்கள்.. எலக்காய் பயிரிட வந்த வெளிநாட்டினர் அனைவரையும் கிருத்து மதத்தை அறிமுகப்படுத்தி எகப்பட்ட சர்ச்சுகள் இருக்கின்றன.. அதே போல் இங்கு தெருவுக்கு தெருவுக்கு மசூதிகளும்....
பெண்கள் எல்லோரும் அவ்வளவு அழகாக இருக்கின்றார்கள்...தேங்காய் எண்ணெயின் செழுமை எல்லா பெண்களின் கழுத்துக்கு கிழேயும் பிரம்மன் ஓவர் டைம் எடுத்து இருப்பது கண்கூடாக தெரிகின்றது...
முன்பு ஜோதி தியேட்டரில் மலையாள பிட்டு படங்களில், அடுத்த மாத கரண்ட் பில்லுக்கும் கேஸ் வாடகைக்கும், தன் வீட்டு வறுமைக்கும், தொப்பையில் அரைஞான் கயிறு கட்டி நிர்வாண குளியல் குளித்த ஆண்டிகள் போல் இல்லமல் எல்லா ஆண்டிகளும் பளிச்சென அழகாய் இருந்தார்கள்...
இங்கு ஆட்டோ டிரைவர்கள் எல்லாம் பதினைந்து 20 ரூபாயிலேயே நகரத்தின் பல பகுதிகளக்கு சென்று விடுகின்றார்கள்... விருகம் பாக்கத்தில் இருந்து வளசரவாக்கம் செல்ல நமது ஆட்டோகாரர்கள்40 ரூபாய் என்று சொன்னால் இங்கு பதினைந்து ரூபாய்தான்....
தலை குளித்து துவட்டாமல் கூந்தலில்ன நுனியில் மெல்ல நீர் சொட்ட சொட்ட ஒரு ஆண்டி அவசரமாக ஆட்டோ பிடித்த போது, நானும் ஆட்டோ பிடிக்கலாமா என்று இருந்தேன்... என் மனைவியின் கோப முகம் ஞாபகம் வந்ததும்.... ஆட்டோ பிடிக்கும் திட்டத்தை கைவிட்டேன்...
இருப்பினும் தமிழர்கள் என்றால் ஒரு நக்கல் பார்வை எல்லா மலையாளிகளிடமும் இருக்கின்றது... சிலர் வெளிகாட்டவில்லை அவ்வளவுதான்... என்ன தமிர் படத்தை டப் செய்யாமல் தமிழிலேயே பார்க்கின்றார்கள்... எல்லோருக்கும் தமிழ் நன்றாக தெரிகின்றது புரிகின்றது... மலையாள பாடல் எதோ ஒரு சில இடத்தில் மட்டுமே கேட்டேன்... தமிழ்பாடல்கள்தான் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கின்றது...
மிக சோம்பலாய் கண் விழித்து சீக்கரம் தூங்கும் நகரம் ஆலப்புழா...
குறிப்பு எனது கேமரா ரிப்பேர் என்பதால் அதை சரிபடுத்த இப்போது நிலமை சரியில்லாத காரணத்தால்.. எனது விஷூவல் டெஸ்ட் மிஸ்சிங்... அடுத்தமுறை நிச்சயம் படங்கள் எடுப்போம்... எங்கே போய் விட போகின்றது ஆலப்புழா????
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
வணக்கம் ஜாக்கி, நான் நேசிக்கும் இடங்க்களில் இதுவும் ஓன்று. போட்டோ கட்டாயம் அடுத்து போடவும்.
ReplyDeleteபஸ்ஸுன்னா அது இந்தியாவிலே தமிழ் நாடு தான் நம்பர் ஒன் சார்...
ReplyDeletemee secondu...
ReplyDeleteaiyo... mee thirdu and fourth.
ReplyDeleteஅருமையான பயண குறிப்பு அண்ணே....
ReplyDelete//இருப்பினும் தமிழர்கள் என்றால் ஒரு நக்கல் பார்வை எல்லா மலையாளிகளிடமும் இருக்கின்றது/
ReplyDelete//
நம்ம ஊர்லய அப்படிதான் பாக்குறாங்க....
என்னத்த சொல்ல
ஆலப்புழா ஒரு , மனதை கவர்ந்து இழுக்ககூடிய இடம் . ரொம்ப சூப்பரா இருக்கும் . உங்க அனுபவம் மிக அருமை . என் வாழ்த்துக்கள் .
ReplyDeleteவணக்கம் ஜாக்கி
ReplyDeleteநம்ப வேலை பரபரப்புக்கு நேர் எதிர் ஊர்.
லைவ்வா டாக்குமென்டிரி எப்ஃக்ட் கிடைக்கும் ஊர்.
"பெண்கள் எல்லோரும் அவ்வளவு அழகாக இருக்கின்றார்கள்...தேங்காய் எண்ணெயின் செழுமை எல்லா பெண்களின் கழுத்துக்கு கிழேயும் பிரம்மன் ஓவர் டைம் எடுத்து இருப்பது கண்கூடாக தெரிகின்றது"
:-)))
welcome back brother..
ReplyDelete//பெண்கள் எல்லோரும் அவ்வளவு அழகாக இருக்கின்றார்கள்...தேங்காய் எண்ணெயின் செழுமை எல்லா பெண்களின் கழுத்துக்கு கிழேயும் பிரம்மன் ஓவர் டைம் எடுத்து இருப்பது கண்கூடாக தெரிகின்றது.//
ReplyDeleteஅனுபவிச்சிங்க போல..
கொஞ்சம் எழுத்து பிழை தெரியுது ஜாக்கி சார். வழமையாக உங்க பதிவுல எழுத்து பிழை இருக்காது..
நையாண்டியா, உண்மையை கூட காமெடியா, மணக்க மணக்க எழுதும் உங்களின் எழுத்துக்களை கடந்த மாதம் மிஸ் செய்தோம் என்பது உண்மை.
ReplyDeleteவருக வருக...
அன்பு நித்யன்
welcome back
ReplyDeleteபல இடங்களில் குறும்பும் உள்குத்தல்களும் நகைசுவையாக வருகிறது. good one
ReplyDeleteஏமாத்திட்டீங்களே ஜாக்கி... ஆலப்புழாவில் கட்டாயம் நிறைய படங்கள் சுட்டிருப்பீர்கள் அதெல்லாம் இருக்கும் என்று ஓடோடி வந்த என்னை ஏமாத்திட்டீங்களே
ReplyDeletewelcome back Jackie...
ReplyDelete//நமத ஊரில் வழக்கு ஒழிந்து போன லாட்டரி டிக்கெட் வியாபாரம் மிக சிறப்பாக நடைபெறுகின்றது... பழைய ஞாபகத்தை கிளறி வேறு விட்டு விட்டு விட்டது..நானும் ஒரு லட்டசத் ரூபாய் பரிசி சீட்டு வாங்கி விழுந்தால் எப்படி இருக்கும் என்று இரவு ஜாலியாக நினைத்து பார்த்தேன்..//
ReplyDeleteஜாக்கி!இந்த கேரள லாட்டரி வியாபாரத்தில் ஒரு பெரும் சோகமே ஒளிந்து கிடக்கிறது.இதனை விற்பவர்கள் பெரும்பாலும் கடைநிலை வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள்.அதிலும் தமிழகத்திலிருந்து போனவர்கள்.ஒரு மலையாள தொலைக்காட்சி காண நேர்ந்தது.மனதை உறுத்தியது.
அண்ணே போட்டோக்கள ஆவலோடு எதிர்பார்த்தேன் ஏமாத்திபுட்டியலே..
ReplyDeleteஇருக்கட்டும்...
நீங்க சொல்ற மாதிரி எங்கே போகப்போகுது...
ஆலப்புழாவிலிருந்து நல்ல form இல் திரும்பி இருக்கிறர்போல் தெரியுது,welcome back
ReplyDeleteநல்லதொரு பயணக் கட்டுரை பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteகேரளா-ல பாதி ஊருகள்ள STD-யைவே காலையில 10 மணிக்கு திறந்து இரவு 8 மணிக்கே மூடிருவாங்க பா....அவ்வளவு சோம்பேறிங்க....அப்படி வீட்டுல என்னதான் பண்ணுவாங்களோ....
ReplyDeleteஆனா....இயற்க்கை அந்த ஊருக்கும், அப்பெண்களின் மாருக்கும் மட்டும் அவ்வளவு அழகை கொடுத்துருக்கு பா...பச்சத்தண்ணி பச்சையாவே இருக்கும். கள்ளுத்தண்ணி மட்டும் நல்லா வெள்ளையா இருக்கும்.....அருமையான ஊரு.
ஆழப்புழாவா வாழப்புழா மாதிரி வழுக்கி வழுக்கி எழுதுன உங்களுக்கு ஒரு சபாஷ், அடுத்த முறை தனியா கேரளா போகனும்.
ReplyDeleteWelcome back Sekar!!!
ReplyDeleteHari Rajagopalan
பகிர்வுக்கு நன்றிகள்
ReplyDeleteநானும் போயிருக்கிறேன். அழகான இடம். இந்திய பயணத்திலேயே அதிகம் புகைப்படம் எடுத்த இடம் இங்குதான்.
ReplyDelete//இருப்பினும் தமிழர்கள் என்றால் ஒரு நக்கல் பார்வை எல்லா மலையாளிகளிடமும் இருக்கின்றது... சிலர் வெளிகாட்டவில்லை அவ்வளவுதான்//
அது ஏன்? என்னாலும் உணரமுடிந்தது. ஒரு இடத்தில் சிறு சண்டையும் நடந்தது. :-)
குஷியா என்ஜாய் பண்ணுங்க ஜாக்கி ஸார்...
ReplyDeleteஅருமையான பயண குறிப்பு..:-)))
ReplyDeleteகண்ணுக்கு குளிர்ச்சியா நிறைய பார்த்துடீங்க போல தெரியுது?!!!.... இம் என்ஜாய் பண்ணுங்கோ அண்ணா.
ReplyDeleteமறக்காம போடோவை பதிவுல போடுங்க...நாங்களும் கொஞ்சம்...
போலாம் ரைட்.
- கோழிபையன்
அருமை ஜாக்கி.வர்ணனையில் ஆலப்புழாவை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.
ReplyDeleteஉங்கள் பதிவு மிக அருமை.
ReplyDelete/
ReplyDeleteபெண்கள் எல்லோரும் அவ்வளவு அழகாக இருக்கின்றார்கள்...தேங்காய் எண்ணெயின் செழுமை எல்லா பெண்களின் கழுத்துக்கு கிழேயும் பிரம்மன் ஓவர் டைம் எடுத்து இருப்பது கண்கூடாக தெரிகின்றது...
/
வூட்டுக்காரம்மாட்ட அடிவாங்கணும்னு முடிவு பண்ணீட்டீங்க சொன்னா கேக்கவா போறீங்க
:)))))))))))
//நாடு எவ்வளவு முன்னேறினாலும் இன்னும் மலையாளிகள் மணி ஆட்டிக்கொண்டுதான் பஸ் ஓட்டுகின்றார்கள்..//
ReplyDeleteநீங்க ரொம்ப மோசம் தல!
இப்படியா ஓப்பனா சொல்றது!
பல'ரச' பயண குறிப்பு அருமை
ReplyDeleteநானும் வந்துட்டேன்
ReplyDelete