(prayanam\ telugu) இரண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணை காதலிப்பது எப்படி???

ஒரு பெண்ணை விரைவில் காதலிக்க வைக்க எளிய வழிகள்...

1. முதலில் எந்த பெண்ணை பார்க்கின்றீர்களோ அந்த பெண்ணை பார்த்து கண்களால் முதலில் பேச வேண்டும்.. பார்வைகள் பறிமாறிக்கொள்ள வேண்டும்...

2. அந்த பெண்ணிடம் சற்றே பேசி பழகி நட்பை உருவாக்கி கொள்ள வேண்டும்...

3. அந்த பெண்ணிடம் இந்த உலகில் நல்லவனாக என்ன தகுதிகள் இந்த உலகம் வரையறை செய்த வைத்து இருக்கின்றதோ, அதில் ஏதாவது செய்து அவள் மனதில் நல்லவன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தச் செய்ய வேண்டும்... அதாவது என்னை பார்த்து மிரளாதே என்ற விதத்திற்க்காக...

4. அடுத்து அவளை சினிமாவுக்கோ அல்லது காபி சாப்பிடவோ அழைக்க வேண்டும்...
5. அவளை சிரிக்க வைக்க வேண்டும் கொஞ்சமாவது நகைச்சுவை உணர்வு இருக்கவேண்டும் ... அவளை சிரிக்க வைத்து சந்தோஷமாக வைத்து இருக்க வேண்டும்...
6.அதன் பின் அவளுடன் சகஜமாக பேச வேண்டும்...

7. இந்த உலகம் ரசிக்க தக்கவகையானது என்பதை அவளுக்கு புரிய வைப்பது போல் எல்லா இடத்திலும் ஒரு சந்தோஷத்தை பரவ செய்ய வேணடும்....

8. கடைசி ரொம்ப முக்கியமானது... நல்லநேரம் காலம் பார்த்து அவள் மணம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் அவளிடம் காதலை வெளிபடுத்த வேண்டும்... இதுதான் சக்சஸ் பார்முலா?...

காதலை பற்றி வைரமுத்து சொன்னது காதலித்துபார்... உன்னை சுற்றி ஒளி வட்டம் தோன்றும்.... படித்த போது.. நான் காதல் வயப்படவில்லை... சொர்கம் நரகம் இரண்டில் ஒன்று நிச்சயம் என்று சொன்ன போது அது எப்படி? என்ற கேள்வி என்னுள் எழுந்தது...

அதே போல் என் மனைவிதான் என்னிடம் காதலை வெளிபடுத்தினால் அதனால் காதலிக்கின்றேன் என்று எந்த பெண்ணிடமும் நான் சொல்லி பதட்டத்துடன் பதில் எதிர்பார்த்து இருந்தது இல்லை....

ஆனால் காதலை சொல்லி ஒரு பெண் அதை ஓக்கே செய்ய வேண்டும் என்ற படபடப்பு கொடுமையானதுதான்... எனது காதலில் ஓகே செய்ய வேண்டிய ஆளாக நான் இருந்தேன்... அதனால் அந்த படபடபடப்பு என்னுள் இல்லை ..ஆனால் வாழ்க்கை பற்றிய பயம் என்னுள் இருந்தது...

காதலை சொல்லிவிட்டாள் என்று நான் தலைகணம் பிடித்து ஆடவில்லை... அவளுக்கு இரண்டு வருடம் டைம் கொடுத்தேன்... அப்போதும் என் மீதான காதல் குறையவில்லை எனில் காதலை பற்றி ரீ கண்சிடர் செய்யலாம் என்று சொல்லி இருந்தேன்... இரண்டு வருடம் எங்கள் காதல் இன்னும் ஆழமாய் வளர்ந்தது...

ஆனால் இரண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணை கவுக்க முடியுமா? மனம் இருந்தால் மார்க பந்து என்று சொல்லுகின்றது இந்த 2 அரை மணி நேர தெலுங்கு படம்... பிரயாணம்... ரொம்ப நாட்கள் ஆகின்றது... இது போல் சந்தோஷமாக ஒரு காதல் படத்தை பார்த்து...

prayanam படத்தின் கதை இதுததான்....

மலேஷியாவில் அழகு கலை பற்றி மாஸ்டர் டிகிரி படிக்கும் ஹரிகாவுக்கு எதையும் பிராக்டிக்கலாக இருக்க பிடிக்கும் ... நோ செண்டிமென்ட்.... சில பேர் வெண்டக்காயை முனை ஒடித்து ஒடித்து ஒரு கூடையையே காலி செய்வார்களே அது போல... ஆனால் தவாரக் அப்படி அல்ல ஒரு பிளே பாய் பையன்... எதையும் ஜஸ்ட் லைக்தட்டாக எடுத்து கொள்பவன்.... துவாரக் தனது இருண்டு நண்பர்களுடன் சிங்கபூர் போக மலேசியா ஏர் போர்ட்வருகின்றான்...ஹரிகா தனது நண்பியுடன் இந்தியாவில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்த பையனை பார்க்க ஹைதிராபாத் வருவதற்க்காக மலேசியா ஏர் போர்ட் வருகின்றாள்...துவாரக்குக்கு பார்த்தவுடன் அவளை பிடித்து விடுகிக்னறது... அவளை சற்றே பாலோ செய்யும் போது அவளுக்கு திருமணம் நிச்சய்க்கபட்டு விட்டது... அவளுக்கு இந்தியாவில் ஒரு பாய்பிரண்டு இருக்கின்றான்.... என்பது தெரிந்து அவளை விடாமல் துரத்துகின்றான்... அதுவும் அந்த முதல் சந்திப்பு வாலிபன் அவள் மனதில் இடம் பிடித்து அவள் வாயால் எப்படி காதலை சொல்லுகின்றாள் என்பதே பிரயாணம் படத்தின் கதை ஆகும்... வெள்ளித்திரையில் பார்க்கவும்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

சிலருக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம்.... ரொம்ப நாட்கள் ஆகின்றது இது போல் ஒரு பில் குட் மூவி பார்த்து...

முதலில் இந்த படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்... ஸ்டிவன் ஸ்பீல்பெர்க்கு எடுத்த டெர்மினல் படத்துக்கு அப்புறம் முழுக்க முழுக்க ஏர்போர்ட்டில் எடு்த்த படம் இது என்று தாராளமாக சொல்லிக்கொள்ளலாம்...

இதில் என்ன விசேஷம் என்றால் முதலில் அந்த பையனும் அந்த பெண்ணையும் பிடிக்கவில்லை... படம் ஆரம்பித்து பத்து நிமிடம்... கொஞ்சம் அயற்ச்சியை தருகின்றது... ஆனால் அதன் பிறகு இந்த படம் எடுக்கும் வேகம் அற்புதம்....

ஏர் போர்ட்டில் முழுபடபிடிப்பும் நடத்துவது என்பது சாதாரான விஷயம் அல்ல... நிறைய காட்சிகள் ரொம்ப ரிச்சாக இருக்க அதுவும் ஒரு காரணம்... சில காட்சிகளில் லாஜிக்கை விடுத்து பார்க்கலாம்....

இந்த படம் பக்கா ஸ்கிரிப்ட் ஒர்க்.... இது... இல்லையென்றால் மிகுந்த சொதப்பலை கொடுத்து இருக்கும்....

இந்த படம் ஒரு காமெடி படம் என்பதை டைட்டில் போடும் போதே புரிந்து விடுகின்றது...
இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் அனிமேஷன் உரு வங்களோடு பாடல் எடுத்து இருப்பது கொஞ்சம் வித்யாசமாக இருக்கின்றது....

ஹீரோ மஞ்சுமனோஜ் குமாரை ஆரம்பத்தில் பிடிக்காமல் படத்தின் இரண்டாவது ரீலில் இருந்து அவர் சேட்டைகளை ரசிக்க முடிகின்றது...

ஹீரோயின் ஹரிகா... கண்களி்ல்தான் சரக்கு இருக்கின்றது... மற்றபடி சட்டென ஈர்ப்பு ஏற்படவில்லை... இந்த படத்துக்கு எல்லாம் பாவனா, மீரா ஜாஸ்மீன் போல ஆர்ட்டிஸ்ட் போட்டு அந்த பெண்ணை பார்க்கும் போதே பார்ப்பவன் வாய் பிளந்து பார்க்க வேண்டும்... அப்படி பட்ட பெண்ணுக்காக ஹீரோ அலைவது நியாயம் என்று பார்வையாளன் உணர வேண்டும்....

இரண்டு மணிநேரத்தில் ஒரு பெண்ணை எப்படி வளைக்கின்றான் என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமே...

படத்தின் மிகப்பெரிய பலமே காமெடி நடிகர் பிரமானந்த்தின் நகைச்சுவை காட்சிகள்தான்....
படத்தின் இன்னோரு பலம் மியுசிக் டைரக்டர் Mahesh Shankar தான்
பெரிய கதாபாத்திரங்கள் சேர்ககை இல்லாமல் மொத்தம் 8 கதா பாத்திரங்களை வைத்துக்கொண்டு இது போன்றபடம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.....

பீல்குட் மூவி என்பதால் எந்த இடத்திலும் ஹாஷான லைட்டிங் செய்யாமல் காதலை போல் ரொம்ப மென்மையாக ஒளிப்பதிவு செய்து இருக்கும் Sarvesh Murariக்கு எனது பாராட்டுக்கள்...

டைரக்டர்Chandrasekhar Yeleti இந்த படத்தின் ஸ்கிரிப்டுடன் வாழ்ந்து இருக்க வேண்டும்... அதனால்தான் படம் பார்க்கும் பார்வையாளன் பரவசமாகின்றான்...

பபடத்தின் டிரைலர்....




படக்குழுவினர் விபரம்...
Cast: Manchu Manoj Kumar, Harika, Bramhanandam

Director: Chandrasekhar Yeleti
Music Director: Mahesh Shankar
Producer: Naresh


ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

18 comments:

  1. இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்வார்களா?

    ReplyDelete
  2. பீல் குட் பிலிம்னா என்னா தல..

    ReplyDelete
  3. இந்த படத்தை பற்றி ஏற்கனவே கேபிள் எழுதிட்டாரு தலைவா!
    உங்க விமர்சனமும் சூப்பர்!!

    ReplyDelete
  4. தெலுங்கு தெரிஞ்சா தானே நான் பார்க்கறதுக்கு...
    நல்ல விமர்சனம்....

    ReplyDelete
  5. தெலுங்கு பட உலகிற்கு இந்த பதிவு நல்ல அறிமுகம்

    ReplyDelete
  6. உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  7. இதை பார்த்தீர்களா நண்பரே..
    http://www.youtube.com/watch?v=MOEUgbiBXMc

    ReplyDelete
  8. இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்வார்களா?--// தெரியவில்லை வந்தியதேவன்...

    ReplyDelete
  9. I don't know Telugu...aaaavvvvvvvvvvvvvvvvvvvvvvvv.//எனக்குமட்டும என்ன தெரியும்.. எல்லாம் சப்டைட்டில் உதவிதான்...

    ReplyDelete
  10. பீல் குட் பிலிம்னா என்னா தல..//
    பீல் குட் மூவின்னா நெஞ்சிலேயே சில மணி நேரங்கள் இருக்கும் அதான்...

    ReplyDelete
  11. இந்த படத்தை பற்றி ஏற்கனவே கேபிள் எழுதிட்டாரு தலைவா!
    உங்க விமர்சனமும் சூப்பர்!!//

    கலை எல்லாரும் எழுதுனாலும் நான் இந்த படத்தை ்எபடி பீல் பண்ணேன் இந்த படம் பார்க்கவேண்டிய படமான்னு சொல்லறதுலதான் டேஸ்ட்...

    ReplyDelete
  12. தெலுங்கு தெரிஞ்சா தானே நான் பார்க்கறதுக்கு...
    நல்ல விமர்சனம்..../ஜெட்லி சப்டைட்டிலோட டிவிடி கிடைக்குது பார்மா பஜார்ல...

    ReplyDelete
  13. தெலுங்கு பட உலகிற்கு இந்த பதிவு நல்ல அறிமுகம்// நன்றி வெண்ணிற இரவுகள் உங்கள் முதல் வருகைக்கு

    ReplyDelete
  14. உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது.//
    நன்றி கோபி...

    ReplyDelete
  15. இதை பார்த்தீர்களா நண்பரே..
    http://www.youtube.com/watch?v=MOEUgbiBXMc//
    நன்றி ஷா மிக்க நன்றி ரொம்ப ரசிச்சி பார்த்தேன்...

    ReplyDelete
  16. ஆனாலும் இந்தபடம் கொஞ்சம் போர்தான்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner