(Sagar Alias jacky ) malaiyalam மோகன்லாலுக்கு ஒரு ஸ்டைலிஷ் மூவி...


பொதுவாக மலையாளபடங்கள் ஒரு விதமானமான மென் சோக படங்களாகவே இருக்கும். அனால் பிங் பி என்று மம்முட்டி நடித்த படைத்த பார்த்த போது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்...

அந்த படத்தை இன்னும் முழுதாய் பார்க்கவில்லை...கொஞ்சம்தான் பார்த்தேன் அந்த படம் வரும் பதிவுகளில் ... பல கேங்ஸ்டர் படங்கள் பார்த்தாலும்... இந்த படம் மலையாள பட உலகில் ஒரு ஸ்டைலான மேக்கிங் என்றால் அது மிகையில்லை என்பேன்...

Sagar Alias jacky (reloaded) மலையாள படத்தின் கதை இதுதான்....

இண்ட்ர்நேஷனல் கிரிமினல் நைனா(சுமன்) இந்தியாவில் எதாவது வேலை நடக்க வேண்டும் என்றால் ரோசாரியோ(சரோஜாபடத்து வில்லன்)
மற்றும் ஜாக்கி(மோகன்லால்) உதவியை நாடுவது வழக்கம்... இதில் ஜாக்கியின் நண்பனை ரொசாரியோ ஆட்கள் பிடித்து கடத்தி்வைக்க அதை ஜாக்கி போய் மீட்கின்றான் இதனால் ரோசாரியோ ஆட்களுக்கும் ஜாக்கிக்கும் முட்டி்கொள்கின்றது...ஏற்க்கனவேநைனாவுக்கும், ஜாக்கிக்கும் ஒரு கடத்தல் டைமன்ட் டீலில் முட்டிக்கொள்ள...

ரோசாரியோவும், நைனாவும் சேர்ந்து ஜாக்கியை கார்னர் செய்ய... ஜாக்கியின் பத்திரிக்கை நிருபர் காதலியை கொலை செய்ய எப்படி ரோசாரியோ கும்பலையும் நைனாவையும் ஜாக்கி பழி வாங்கினான் என்பதே மீதி கதை...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


படத்தை தொய்வில்லாமல் எடுத்து செல்வது இந்த படத்தின் ஸ்டைலான மேக்கிங்தான்...

மோகன்லால் என்ட்ரி எப்படி காட்ட போகின்றார்கள் என்று ஆர்வமாய் எதிர்பார்த்து காத்து இருக்கு வேவ்வேறு ஆட்களை ஹுரோ ஸ்டைலில் அறிமுகப்படுத்துவது இயக்குனரின் சாமார்த்தியம்...

ஒரு ஒவர் கோட் மாட்டிக்கொண்டு படம் முழுவதும் ஸ்லோமோஷனில் நடக்க வைத்து இருப்பது ஒரு மேன்லினஸ் வெளிபடுத்துகின்றன...

படத்தின் பல காட்சிகள் 24 பிரேம்சில் எடுக்காமல் படத்தின் பெரும் பகுதி காட்சிகள் 48 பிரேமில் ஷுட் பண்ணி இருப்பது கூட ஸ்டைல் மேக்கிங்கிள் பிளஸ்சாக இருக்கும் என்று நினைக்கின்றேன்...

அதே போல் படத்தின் இயக்குனர்தான் படத்தின் ஒளிப்பதிவாளர் அதனால் படத்தில் பல இடங்களில் ஒளிப்பதிவும் ஆங்கிள்ஸ்ம் அசத்துகின்றன...

படத்தில் பல இடங்களில் டயலாக் ரசிக்கதாக்கவையாகவே இருக்கின்றன...

பொதுவாக மலையாள படங்களில்.. எப்படியாவது ஒரு தமிழ் கேரக்டர் இருக்கும்... படத்தில் பல இடங்களில் தமிழ் பேசுவது போல் எடுத்து ,இருப்பார்கள்...

இது இயக்குனர் அமல் நீரட் ன் இரண்டாவது படம்... இவரின் முதல் தயாரிப்பு மம்முட்டி நடித்த பிக் பி.. அந்த படத்தின் பாதிப்பு பல காட்சிகளில் தெரிகின்றது...

நிச்சயம் இது மோகன்லால் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் படம்...

படத்தின் டிரைலர்...



படத்தின் குழு விபரம்...

Cast: Mohanlal, Bhavana, Suman, Jagathy, Shobhana
Direction: Amal Neerad
Production: Antony Perumbavoor
Music: Gopisundar

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

24 comments:

  1. Big B பார்க்கறதுக்குப் பதில் Four Brothers பார்த்துடுங்க. சீன் பை சீன் அதோட காப்பிதான் அது (மார்க் வாபெர்க்).

    ஆங்கிலத்தில்.. ரொம்ப நல்லா வந்திருக்கும்.

    மம்முட்டிக்காக வேணும்னா மலையாளத்தில் பார்க்கலாம்.

    ReplyDelete
  2. இந்த டைரக்டர் கிட்ட இந்த பிரச்சனை வேற. ஸ்லோமோஷன்ல எடுக்கறேன்னு சொல்லி... உயிரையும் சேர்த்து எடுக்கறாரு.

    படத்தைப் பார்த்தால்.. இதை எந்தப் படத்திலிருந்து இந்த முறை உருவியிருக்காருன்னு தெரிஞ்சிடும்.

    ஒரு படம் ஒரிஜினல் இல்லாத போது, அது எவ்வளவு நல்லாயிருந்தாலும் பாராட்ட பிடிக்கவே மாட்டேங்குது.

    அன்பே சிவத்தை தவிர!

    ReplyDelete
  3. வந்துட்டேன்... மலையாள படமா??? அதெல்லாம் நைட் Hostela பாக்குற படம்....
    மலையாள படம்னா நைட்தான் பார்ப்போம்.... சாரி இந்த படத்த பார்த்து டைம் வேஸ்ட் பண்ண விரும்பல....

    ReplyDelete
  4. ஓட்டு போட்டாச்சு..!

    படம் இன்னும் பார்க்கலை.. மோகன்லாலின் இது மாதிரியா ஸ்டைலிஷ் படங்களெல்லாம் எனக்குப் பிடிக்காது..

    மலையாள நேட்டிவிட்டியோடு இணைந்த கதையம்சம் உள்ள படங்கள்தான் அடியேனுக்கு பிரியம்..!

    ReplyDelete
  5. நல்ல அலசல், நான் இந்த படத்த சீக்கிரம் பார்க்க முயற்சி செய்கிறேன் ........

    ReplyDelete
  6. Dear "j"

    appppppppaaaaaaaaa appppppppppaaaaaa......even before I am posting a comment...you are posting a new quality article...enamooo pooonga...Actually unga pacchi "KA"...because you failed to repair your camera during your kerala visit....we missed lot of visual taste photo...you made me to forgot that by continuous post. Your latest "sandwich & non veg" I enjoyed lot.

    ReplyDelete
  7. நாம் ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண படமா..! ஆவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. Big B பார்க்கறதுக்குப் பதில் Four Brothers பார்த்துடுங்க. சீன் பை சீன் அதோட காப்பிதான் அது (மார்க் வாபெர்க்).

    ஆங்கிலத்தில்.. ரொம்ப நல்லா வந்திருக்கும்.

    மம்முட்டிக்காக வேணும்னா மலையாளத்தில் பார்க்கலாம்.//
    நன்றி பாலா நானும் பர்த்துட்டேன் அந்த படத்தை

    ReplyDelete
  9. ட்ரய்லர் அட்டகாசம்//
    நன்றி முரளி

    ReplyDelete
  10. இந்த டைரக்டர் கிட்ட இந்த பிரச்சனை வேற. ஸ்லோமோஷன்ல எடுக்கறேன்னு சொல்லி... உயிரையும் சேர்த்து எடுக்கறாரு.

    படத்தைப் பார்த்தால்.. இதை எந்தப் படத்திலிருந்து இந்த முறை உருவியிருக்காருன்னு தெரிஞ்சிடும்.

    ஒரு படம் ஒரிஜினல் இல்லாத போது, அது எவ்வளவு நல்லாயிருந்தாலும் பாராட்ட பிடிக்கவே மாட்டேங்குது.

    அன்பே சிவத்தை தவிர!//

    உண்மைதான் பாலா அனால் மார்ட்டின் ஸகார்சசி இப்ப அவார்டு வாங்கின டீபார்டெட் படம் ஒரு கொரிய படத்தின் ரீமேக் என்று கேள்வி பட்டென் நண்பா...

    ReplyDelete
  11. வந்துட்டேன்... மலையாள படமா??? அதெல்லாம் நைட் Hostela பாக்குற படம்....
    மலையாள படம்னா நைட்தான் பார்ப்போம்.... சாரி இந்த படத்த பார்த்து டைம் வேஸ்ட் பண்ண விரும்பல....//
    நன்றி இரா

    ReplyDelete
  12. ஓட்டு போட்டாச்சு..!

    படம் இன்னும் பார்க்கலை.. மோகன்லாலின் இது மாதிரியா ஸ்டைலிஷ் படங்களெல்லாம் எனக்குப் பிடிக்காது..

    மலையாள நேட்டிவிட்டியோடு இணைந்த கதையம்சம் உள்ள படங்கள்தான் அடியேனுக்கு பிரியம்..!//
    அப்படியா நன்றி உத

    ReplyDelete
  13. நல்ல அலசல், நான் இந்த படத்த சீக்கிரம் பார்க்க முயற்சி செய்கிறேன் ........//
    நன்றி இராஜ பரியன்

    ReplyDelete
  14. Dear "j"

    appppppppaaaaaaaaa appppppppppaaaaaa......even before I am posting a comment...you are posting a new quality article...enamooo pooonga...Actually unga pacchi "KA"...because you failed to repair your camera during your kerala visit....we missed lot of visual taste photo...you made me to forgot that by continuous post. Your latest "sandwich & non veg" I enjoyed lot.//
    நன்றி ராஜ பிரியன் எங்கே போய் இருந்தீர்கள் இவ்வளவு நாட்களும்

    ReplyDelete
  15. நன்றி யோ வாய்ஸ் மங்களுர் சிவா

    ReplyDelete
  16. நாம் ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண படமா..! ஆவ்வ்வ்வ்வ்வ்//

    ஆமாம் நைனா...

    ReplyDelete
  17. லாலேட்டனுக்காக பார்த்துடுவோம்.....ப்ரஹ்மம் பார்த்துட்டீங்களா

    ReplyDelete
  18. ////உண்மைதான் பாலா அனால் மார்ட்டின் ஸகார்சசி இப்ப அவார்டு வாங்கின டீபார்டெட் படம் ஒரு கொரிய படத்தின் ரீமேக் என்று கேள்வி பட்டென் நண்பா...//////

    உண்மை ஜாக்கி. அது Infernal Affairs என்ற ஹாங்க் காங் படம். ஆனா... ஸ்க்ரீன் ப்ளே ரெடி பண்ணும் போதே, ரீமேக்-ன்னு சொல்லிட்டு தானே எடுத்தாங்க?!

    உங்களுக்கு தெரியாம இருக்காது. ஹாலிவுட்டில் (மற்ற் நாடுகளில் கூட) இப்படி, நம்ம ஊரில் சுடுவது மாதிரியெல்லாம், காப்பியடிச்சா... நஷ்டஈடு போட்டு, கோவணம் வரைக்கும் உறுவிடுவாங்க. அந்த பயத்துக்கே.. சின்ன பிட் யூஸ் பண்ணினா கூட, பர்மிஷன் வாங்கி.., அதை டைட்டில்ல கூட காட்டிட்டுதான் அடுத்த வேலை பார்க்க முடியும்.

    இந்த ‘காப்பி’ விஷயத்தில் அதிகமா இங்க அடிபடுவது யார் தெரியுமா? :) நாமெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும், நம்ம க்வெண்டின் தான்.

    ReplyDelete
  19. பாவனா தானே கூட நடிச்சது ?.. அவங்கள பத்தி ஒண்ணும் சொல்லலையே ? ஏங்க இப்படி பண்றீங்க ?.

    ஜாக்கீன்ற பேருக்காகவே நிறைய எழுதியிருக்க மாதிரி இருக்கு :))

    ReplyDelete
  20. லாலேட்டனுக்காக பார்த்துடுவோம்.....ப்ரஹ்மம் பார்த்துட்டீங்களா--
    இல்லை ராஜ்

    ReplyDelete
  21. இந்த ‘காப்பி’ விஷயத்தில் அதிகமா இங்க அடிபடுவது யார் தெரியுமா? :) நாமெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும், நம்ம க்வெண்டின் தான்.//
    உண்மைதான் பாலா அனா ஹாலிவுட்டுக்கு உலகலாவிய மார்கெட் இருக்கறதால இது சாத்தியம் என்பது என் எண்ணம்...

    ReplyDelete
  22. பாவனா தானே கூட நடிச்சது ?.. அவங்கள பத்தி ஒண்ணும் சொல்லலையே ? ஏங்க இப்படி பண்றீங்க ?.

    ஜாக்கீன்ற பேருக்காகவே நிறைய எழுதியிருக்க மாதிரி இருக்கு :))//
    சொல்லி இருக்கலாம் மறந்துட்டேன் நண்பா...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner