உலகம் எங்கும் பல லட்சக்கனக்கான வீடியோக்கள் வலையில் உலா வந்தாலும் அன்ன பறவை போல் அவற்றில் நல்லதை அல்லது, எனக்கு பிடித்ததை உங்களோட பகிர்ந்த கொள்ள இதில் பெஸ்ட் ஆட், நகைச்சுவை, எது வேண்டுமானாலும் இந்த பகுதியில் உங்கள் பார்வைக்கு வைக்க ,இந்த தொடர் உதவிடும் என்று நம்புகின்றேன்...
இரண்டுமணி நேரபடங்களில் சொல்ல முடியாததை அல்து சொல்ல துடுமாறுவதை ஒரு நிமிடத்தில் விளம்பர படத்தில் சொல்லும் பிரம்மாக்கள்... இந்த கோடம்பாக்கத்தில் அதிகம்...
நாம் பொதுவாய் பல விஷயங்களை பார்த்து இருப்போம் கேட்டு இருப்போம் அனால் ஒரு சிலதை நாம் கவனித்து சொல்லும் போது அந்த விஷயத்தை இன்னும் அழகாக ரசிப்போம் அல்லவா-? அது போல்தான் இதுவும்...
உதாரணத்துக்கு நீங்கள் அவ்வை சண்முகி படம் பார்த்து இருப்பீர்கள்... அதில் ருக்கு ருக்கு பாட்டு சண்முகி மாமி பாடுவதை கேட்டு இருப்பீர்கள்.. ஆனால் அதில் உள்ள அர்த்தம் தெரியாமல் பல நாள் நான் கேட்டு கொண்டு இருந்தேன்... முதல் 5 வரிகளில்... பாண்டி பாண்டி என்று மீனாவிடம் கமல் பெயரை ஞாபகபடுத்துவது போல் எழுதி இருப்பார்கள்... அதை எனது மாமா எனக்கு சொன்ன போதுதான் இந்த மர மண்டைக்கு எட்டியது....
அது போல் நாம் வெகு வேகமாக செல்லும் வாழ்க்கையில்... சிலதை கவனித்தாலும் அர்த்ததுடன் கவனிக்க அல்லது ரசிக்க மறுக்கின்றோம்....
இப்போது நாம் பார்க்க போகும் வீடியோ பல வருடங்களாக தூர்தர்ஷனில் கோலாச்சியது என்றாலும்... மணிரத்னம் சாரை நமது ரகுமானின் இசைவெகு எளிதில் வீழ்த்தியது இந்த விளம்பர படத்தின் பின்னனி இசை என்ற சொல்லுகின்றார்கள்...... இந்த வீடியோவில் கானும் காட்சி
வெறும் 22 ஷாட்டுகளில் 32 செகன்டில் தினமும் ஒரு வீட்டில் நடக்கும் நிகழ்வை அற்புதமாக சொல்லி இருப்பார்கள்.... இது ஒரு காபி விளம்பரம்
லீயோ காபி விளம்பரம்.. கேப்ஷன்.... காலத்தை வென்றிடும் ரசனை இதுவே...
ஒரு அழகான பெண் குளித்து விட்டு படி இறங்கி வருகின்றாள், விளக்கு ஏற்றுகின்றாள்... கோலம் போடுகின்றாள்...பில்டர் திறந்து காபி பொடி போட்டு வைத்து விட்டு துளசிமாடம் சுற்றுகின்றாள்... துளசி மாடத்தில் விளக்கு வைக்கின்றாள்.. பூ பறித்து வருகின்றாள்.. பறித்த பூவை கட்டுகின்றாள்... அது வரை துவட்டாத தலையை தலையில் கட்டிய துண்டில் துவட்டுகின்றாள்..பின்பு பில்டரில் இருந்து எடுத்து காபி போடுகின்றாள் அதற்க்குள் கணவன் அலுவலகத்துக்கு செல்ல தயாராக காபி நன்றாக இருப்பதை சொல்ல கணவனுக்கு(அரவிந்சாமி) ஒரு குளோசப்
32 செகன்டில் காபி விளம்பரம் ஓவர்... இருப்பினும் இந்த விளம்பரத்தில் காலை என்று விஷயத்துக்கு நன்றாக லைட்டிங் செய்து எடு்த்து இருப்பார்கள்... முக்கியமாக ரகுமானின் இசை...சங்கீதம் எனக்கு அந்தளவுக்கு தெரியாது என்றாலும்... அந்த இசையில் நடுவில் வரும் புல்லாங்குழல் இசை உங்களை என்னவோ செய்யும்...
வீடியோ 32 வினாடிகள்தான்.. ஏற்க்கனவே பார்த்து என்றாலும் எனக்காக மீன்டும் ஒரு முறை.. பாருங்கள்...
அந்த மனதை கவர்ந்த விளம்பரம்.... மற்றும் இசை...
இந்த விளம்பரம் பற்றி பல்வேறு தகவல்களை வாசகர்கள் முன் வைக்கலாம்.. நானும் மற்றவர்களும் தெரிந்து கொள்ளதான்....நான் எதிர்பார்பது பதிவர்கள் தண்டோரா, லக்கி போன்றவர்களிடம் இருந்து செய்திகளை எதிர்பார்க்கின்றேன்... முக்கியமாக எனக்கு இந்த விளம்பர படத்தின் கேமராமேன் யார் என்ற தெரிய வேண்டும்....
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
மீண்டும் வந்தாச்சு.... மீண்டு வந்தாச்சு...
ReplyDeleteஇந்த விளம்பர படத்தின் கேமராமேன் : Rajeev menon (If i am not wrong..)
ReplyDeleteஅருமையான இசை. அந்த காலகட்டத்தில் இந்த இசை புதுசு.
ReplyDeleteநன்றி தல. எங்க ரகுமான இசையை காட்டியதற்கு...
ReplyDeleteரகுமான் ரசிகன் யோகா
Thanks but more than this Ujala advt is great, Pc sriram and arr combination, SOTTU NEELMDOI REGAL SOTTU NEELAMDOI, ENNA VENMAIYO AAGA ENNA VENMAIYO
ReplyDeleteEnnoda mobile ring tone indha tune thaan :)
ReplyDeleteசேகர்,
ReplyDeleteஎன்னை மிகவும் கவர்ந்த என்னொரு விளம்பரம்.மலேசியா வாசுதேவனின் ஹை பிட்சில்..ஏலேலோ அடி அம்மம்மா ஆனந்தம் இனி என்னமா..ஆண்டு தோறும் எங்களோடு கொண்டாடுங்கள் ஏசியன் பெயின்ட்ஸ் இன் பொங்கல் விளம்பரம்....
http://www.youtube.com/watch?v=Vz9wX4HXh6E
மேலும் நான் ரசித்த மற்ற விளம்பரங்கள்...
http://www.youtube.com/watch?v=FO6LZJn7PMg
http://www.youtube.com/watch?v=485lz0ZEwEw
http://www.youtube.com/watch?v=xn6jPLSDfIE
http://www.youtube.com/watch?v=C99aEm0cips
http://www.youtube.com/watch?v=NrLQ_dSPtoA
http://www.youtube.com/watch?v=XkiXBz3AicU
http://www.youtube.com/watch?v=UkvHr05x8QY
http://www.youtube.com/watch?v=2z2b8NDBzjc
http://www.youtube.com/watch?v=U_4vAKMrrWE
http://www.youtube.com/watch?v=VdcE0AKi_JU
நான் தேடிக்கொண்டு இருக்கும் இன்னொரு விளம்பரம்....பஜாஜ் கலிபரின் ரொம்ப பழைய விளம்பரம்...ஒரு ராணுவ வீரன் வீடு திரும்புவான், தூரத்தில் மலை பாதையில் இவன் பைக்கில் வருவதை பாத்து கொண்டிருக்கும் அவனது மகன் விளையாடுவதை விட்டு விட்டு ஆர்பரிப்பான்.மனைவி அவன் வருகைக்காக தன்னை கண்ணாடியில் அழகு பார்த்து கொள்வாள், ஊறுகாய் சுவைபாள்...இரவு உணவு உண்ணும்போது மனைவி ரேடியோவில் பாட்டு கேட்க டியூன் செய்யும் போது ஒரு அலைவரிசையில் ராணுவ வீரர்கள் மீண்டும் ரெஜிமென்ட்ற்கு திரும்ப வேண்டும் என்ற செய்தி வரும்...காலையில் தனது மகனை வண்டியில் ஒரு ரவுண்டு அடித்து விட்டு மீண்டும் பட்டாளம் திரும்புவான்.
இந்த விளம்பரம் வந்து கண்டிப்பாக பத்து முதல் பதினைந்து வருடங்கள் இருக்கலாம்...ஆனால் இன்னும் பசுமையாய் என் மனதில்...
நன்றாகவும் வித்தியாசமாகவும் தோன்றிய இந்த விளம்பரத்தின் இசை மற்றும் காட்சியமைப்பினால் இன்னும் பத்து வருடங்கள் கழித்து பார்த்தாலும் பழைய விளம்பரம் போல தோன்றுவதில்லை..
ReplyDeleteஆனால், இதற்கு முன்னரே ரஹ்மான் இசையமைக்க ஆரம்பித்துவிட்ட ஒரு தூர்தர்ஷன் நிகழ்ச்சி - ஞாயிறுகளில் வரும் ’யுகாதி புரஷ்கார்’ டைட்டில் ம்யூஸிக்... இங்கே பாருங்க..
http://www.youtube.com/watch?v=CVfO0KsPftY
ஆனால் ஏனோ இதேபோல மெய்மறக்கும் இசையை சமீபகாலங்களில் (’சில்லுனு...’ நீங்கலாக) அவர் தருவதில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது..
அந்த விளம்பரத்தை மறக்க முடியுமா?? இன்னும் இருபது ஆண்டுகள் கழித்தும் நிச்சயமாய் பேசப்படும்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபதிவு எண்ணிக்கை அதிகமாக உள்ளது நண்பா. கொஞ்சம் குறைத்துக்கோ. இன்னும் சிறப்பாக எழுதலாம் ஜாக்கி.
ReplyDeleteஅருமையான விளம்பரம் ஜாக்கி ஸார்...ரகுமானின் மற்ற விளம்பரங்களையும் யூ-ட்யூப் உதவியுடன் இறக்கி விட்டேன்...அறிமுகத்திற்கு நன்றி...
ReplyDeleteகுஷ்பு பீக்கில் இருந்தபோது நடித்த ‘சொட்டு நீலம் டோய்’ விளம்பரத்துக்கும் ரஹ்மான் தான் இசை என்று சொல்வார்கள் :-)
ReplyDeleteபிரிமீயர் குக்கர் விளம்பரம் ஞாபகமிருக்கா ?? அதிலும் ரஹ்மான் இசை தான்.யூடிபில் கிடைக்கும் பாருங்கள்.
ReplyDeleteஅட்டகாசமாக இருக்கும்.
பாசமான அன்னை வாங்கி தந்த பிரிமீயர்
ஆசை ஆசையாய் கணவர் வாங்கி தந்த பிரிமீயர்
தேசம் விட்டு போவேனாலும் தேவை எனக்கு பிரிமீயர்
பாசமான குடும்பத்திற்கு நல்ல நண்பன் பிரிமீயர்
நாளை என் மகளுக்கு நான் வாங்கி தருவேன் பிரிமீயர்...!!!
Another Masterpiece from AR Rahman for the Chinease film Warriors of Heaven and Earth.....http://www.youtube.com/watch?v=6_tn5Sbi1vQ&feature=related
ReplyDeleteEnnoda mobile ring tone indha tune thaan. I enjoying this music from my childhood to these days. And this will unforgetable still now.
ReplyDeleteI am 100% sure about the following things.
ReplyDelete1) The leo coffee advertisemenet was directed & cinematographed by Mr. Rajeev menon. He was the one who used A.R.Rehman in most of his ads like, Bru, Leo, Asian Paints. Rajeev Menon was the one who introduced ARR to Mani Ratnam when Mani was looking for some new music director after Thalapathi.
2) Kushboo' Sottu neelam doi was composed by Late Mr.Mahesh. The guy who was the composer of Nammavar.