(THE CYCLIST) உலக சினிமா/ ஈரான்... மனதில் பாறாங்கல்லை ஏற்றி வைக்கும் இந்த படம்
மருத்துவ வசதி என்பது நாம் வாழும் நாட்டில் எல்லோருக்கும் சரிக்கு சமமாக கிடைக்க வேண்டும்.. ஆனால் அது எல்லா நாட்டிலும் கிடைக்கின்றதா என்றால் இல்லை எனலாம்... ஒரு சாமானிய குடிமகனுக்கு அவன் குடும்பத்துக்கும் நல்ல மருத்துவசதி கிடைப்பதில்லை என்பது நெஞ்சில் கை வைத்து பார்த்தால் அனைவருக்கும் தெரியும்...
நமது மத்தியமைச்சருக்கு ஒருவருக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லாமல் போக அவருக்கு தனி விமானம் வைத்து அமெரிக்கா போய் வைத்தியம் பார்த்தார்கள்.. அப்புறம் அந்த செலவை அரசு கொடுப்பதாக சொல்ல, அந்த தொகை வேண்டாம் என்று அவர் குடும்பம் மறுத்து விட்டது... சரி பல் இருக்கறவன் பட்டானி சாப்பிட்டு விட்டான் இல்லாதவன் என்ன செய்வான்...????
எங்கள் வீட்டில் யாருக்கு ஜுரம் வந்தாலும் சரியாக இரண்டு நாள் என் அம்மா கை வைத்தியம் பார்ப்பாள்அதன் பிறகும் ஜுரம் விட வில்லை என்றால்... நேராக நடத்தியே அழைத்து போய் பஸ் ஸ்டாண்டில் நிக்க வைத்து,..... ஜுரத்தில் துடித்து்கொண்டே பஸ்சுக்கு காத்து இருந்து... அதன் பிறகு பஸ் வந்ததும் கூட்டத்தில் ஏறி நின்று கொண்டே.. கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து ஏறி.. கடலுர் போஸ்ட் ஆபிஸ் ஸ்டாப்பில் இறங்கி.. அப்படியே நடந்தே பெரிய ஆஸ்பத்திரிக்கு போய்... ஒபி சீட்டுக்கு வரியையில் காத்து இருந்து... அதன் பிறகு சம்பந்த பட்ட டாக்டர் எந்த வார்டில் இருக்கின்றான்றாரோ... அவரை பார்க்க... அங்கும் ஒரு பெரிய கியுவில் நின்று...கால் கை உடைந்து ரன வேதனைகளுடன் வீல் சேர்களில் கடக்கும் அதிகபடியான நோயாளிகளை பார்த்து...ஒரு வழியாக டாக்டரை பார்த்து அவர் ஒரு ஊசி போட்டு மாத்திரை எழுதி வைக்க அந்த மாத்திரை வாங்க அடுத்த பிளாக்கு நடந்தே போய் அங்கு ஒரு பெரிய கூட்டம் காத்து இருக்கும்...
ஏனென்னறால் பல்வேறு நோய்களுக்கு மாத்திரை பெற பெரும் கூட்டம் அங்கு இருக்கும்.....அந்த பெரிய கியுவில் போய் மாத்திரை வாங்கி திறந்து பார்த்தால் த/அ என்ற போட்டு இருக்கும்... எல்லா வெள்ளை மாத்திரையும் ஒரே மாதிரி வேற இருக்கும்.... அதன் பிறகு எனது அம்மா என்னை ரோட்டில் உள்ள டீக்கடைக்கு அழைத்து வந்து ஒரு டீ வாங்கி கொடுப்பார்கள் அது கூட மாத்திரை போடுவதற்காக... அந்த மாத்திரை போடும் முன்னே இந்த அலச்சலில் அந்த விஷஜுரம் காணாமல் போய் இருக்கும்...
நான் என் சிறு வயதில் எந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றதில்லை... எல்லாவற்றிர்க்கும் எங்கள் கடலூர் பெரிய ஆஸ்பத்திரிதான்....
இவ்வளவு ஏன்.. நான் மட்டும்தான்.. பண்ரூ்ட்டி கடலூர் சாலையில் உள்ள இந்திரா நர்சிம் ஹோமில் பிறந்தேன்..
அதன் பிறகு எனக்கு நாலு தங்கைகள்.. எல்லோரும் அரசு அஸ்பத்திரியில் பிறந்தார்கள்... ஆனால் இப்போது ஜுரம் என்றால் உடனே ஆட்டோ பிடித்து விடுகின்றோம்... அடுத்த நொடி டாக்டர் வீட்டு வாசலில் இருக்கின்றோம்....என் அம்மா அப்படி இல்லை... வறுமை ஒரு காரணமாக இருந்தாலும்.. வந்த ஜுரத்துக்கு போக தெரியும் என்ற நம்பிக்கை ஒரு காரணம்....
அப்படி வறுமையில் இருக்கும் ஒருவன் தன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் ஒரு பிரவேட் ஆஸ்பத்திரியில் சேர்க்க அவன் படும் பாடுதான்...
தி சைக்கிளிஸ்ட் படத்தின் கதை ....
தி சைக்கிளிஸ்ட் படத்தின் கதை இதுதான்....
நசிம் ஒரு ஆப்கான் அகதி... ஈரானில் இருக்கும் அவன் குடும்பம் வறுமை அரக்கன் அந்த குடும்பத்தை சுற்றி வளைத்து வெகு நாள் ஆயிற்று... அவ்ன் ஒரு சைக்கிளிஸ்ட்.. அதாவது சைக்கிளை நிறுத்தாமல் ஒரு சின்ன வட்டத்தில் விடாமல் ஓட்டிக்கொன்டே இருக்க வேண்டும்... ஏற்க்கனவே மூன்று நாட்கள் விடாமல் சைக்கிள் ஓட்டியவன்....
அவள் மனைவிக்கு உடம்பு முடியாமல் போக அவளை ஒரு தனியார் மருத்துவமைனையில் சேர்க்கின்றான் ... அங்கு அவளுக்கு மருத்துவம் பார்க்க, தங்க, பணம் கட்டினால்தான் எல்லாம் நடக்கும் என்று சொல்ல பணத்துக்கு தன் மகனுடன் அலைய.... ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்ச்சிக்க, பின்பு கடத்தல் வேலை செய்து கொஞ்சம் காசு பார்க்கலாம் என்றால் அதுவும் முடியாமல் போக...
இந்த முறை ஒரு வாரத்துக்கு விடாமல் சைக்கிள் ஓட்ட சம்மதிக்க.. அதன் மூலம் அவனுக்கு பணம் வந்ததா? அவன் மனைவிக்கு மருத்துவ உதவிகள் கிடைத்தா? எல்லவற்றையும் விட முக்கியமான விஷயம் நசிம் ஒரு வாரம் ரெஸ்ட் இல்லாமல் சைக்கிள் எப்படி ஓட்டினான்.. எப்படி ஓட்ட முடியும்??? மீதி வெண் திரையில் பார்க்கவும்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
எந்த கலர் உடுப்பும் போட்டு ஜிங்கு ஜிங்கு என்ற குதி்க்காமலேயே... இந்த படம் மனதில் பதிவது இந்த படத்தின் சிறப்பு..
ஒரு நல்ல படத்துக்கு எந்த பெரிய தொழில்நுட்பம், இசை போன்ற எதுவும் தேவையில்லை என்று நிரூபித்த படம் இது...
கதை நன்றாக இருக்க வேண்டும் அந்த கதையை திரைக்கதையால் மனதை புழிய வேண்டும் அதை இயக்குனர் மெக்மெல்பப் நன்றாகவே செய்து இருக்கின்றார்...
மருத்துவமனையில் படுத்து இருக்கும் மனைவி ஆக்சிஜன் இல்லாமல் தவிக்க உயிர் போய் விடும் பயத்தில் அந்த ஆக்சிஜன் மாஸ்க்கை எடுக்க போராடும் போது... இங்கே கவுண்டரில் அவன் பையன் பணம் கவுன்டரில் கட்ட பணம் கிடைத்ததும் அந்த கிழவன் ஒரு போன் போட அதன் பிறகு ஒரு கை அந்த ஆக்சிஜன் மாஸ்க்கை பொறுத்துவதும்.. அதன் பிறகு சலைன் ஏற்றுவதும் .. உலகில் எல்லா தனியார் மருத்துவமனைகளும் அப்படித்தான் இருக்கின்றது போலும்...
பணம் சம்பாதிக்க நசிம் எடுக்கும் முயற்ச்சிகளும் அதன் தோல்வியும் மனதை கனக்கச்செய்யும்.. நசிமாக நடித்து இருக்கும் அந்த பாத்திரத்தின் பரிதாப முகம்தான் இந்த படத்தின் வெற்றி...
இந்த படத்திக் இயக்குனம் மெக்மெல்பப் இயக்குனர் ,தயாரிப்பாளர் எழுத்தாளர் என் பன்முக திறமை கொண்டவர்...இவர் ஆசியன் பிலிம் அக்காடமியில் பிரசிடென்டாக இருந்து இருக்கின்றார்...
இந்த படம் ஹவாய் பிலிம் பெஸ்ட்டிவலில் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது...
படம் பார்க்கும் போது உங்கள் கண்களில் இருந்து கண்ணிர் பெருக்கெடுக்க வைக்கும் ..
படக்குழுவினர் விபரம்...
Starring: Moharram Zaynalzadeh, Esmail Soltanian, Samira Makhmalbaf
Director: Mohsen Makhmalbaf
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு இந்த பட விமர்சனத்தை விட.உங்கள் அரசு மருத்துவமனை அனுபவம் மனதை உலுக்குவதாக இருந்தது. நம் நாட்டில் பணத்தின் பின்னால் மக்கள் ஓடுவதற்கு இன்னொரு முக்கிய காரணம், வாழ்நாள் இறுதியில் நல்ல மருத்துவ வசதி, அரசாங்கம் செய்யாது, நாம் தான் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயம் தான் என நினைக்கிறேன்.
ReplyDeleteஉண்மைதான் பின்னோக்கி என் இம்மா உயிரோடு இருந்தவரை அதிகம் தனியார் மருத்துவமைனை சென்றதில்லை...அரசு பொது மருத்துவமனைதான்... நீங்கள் சொல்லும் கடைசி காரணம் உண்மைதான்...
ReplyDeleteஎன்னண்ணே இப்பல்லாம் படத்தோட விமர்சனத்த விலாவரியா எழுத மாட்டேங்கறீங்க???
ReplyDelete//எனக்கு இந்த பட விமர்சனத்தை விட.உங்கள் அரசு மருத்துவமனை அனுபவம் மனதை உலுக்குவதாக இருந்தது.//
உண்மை தான்!!!
உங்கள் விமர்சனத்தை படித்தப் பிறகு படத்தை பார்க்கத் தூண்டுகிறது. நீங்கள் இந்த படங்களை எதில் பார்க்கிறீர்கள். டிவீடியிலா, ஆன்லைனிலா?. Thanks.
ReplyDeleteமனதில் பாறாங்கல்
ReplyDelete