ஒரு உதவி இயக்குனரின் மனக்குமுறல்....

சினிமா சுவாரஸ்யம் பற்றி எழுதலாம் என்று எண்ணி அதனை அறிவிப்பு செய்த போது எனக்கு வந்து இந்த கடிதம் என்னை சற்றே நடுக்கம் கொள்ள செய்தது... அதனை சம்பந்த பட்டவரிடம் அனுமதி பெற்று சின்ன மாற்றங்களுக்க பிறகு உங்கள் பார்வைக்கு... பெயர் அவர் எதிர்காலம் கருதி.. மாற்றி இருக்கின்றேன்

நாள்தோரும் லிட்டில் பூச்சிகளாய் சினிமா காற்றை சுவாசிக்க கோடம்பாக்கம் வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அப்படி வருபவர்கள் எதாவது உப்புமா கம்பெனியில் மாட்டிக்கொண்டு வாழ்க்கை தொலைத்து விடுபவர்கள் ஏராளம்... இதை படித்த பின்பு சினிமா கனவுகளோடு வருபவர்கள் சற்றே சுய பரிசோதனை செய்து கொள்ள இந்த வெளிப்படையான கடித்ம் உதவும் என்று எண்ணுகின்றேன்...




கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு....


வணக்கம்

ஐயா

கனவுகளை மூலதனமாய்
கற்பனைகளை உள்ளீடாய்
உழைப்பை என் துணையாய்
தோல்விகளை என் நண்பனாய்
வெற்றிகளை எனக்கு வேண்டிய விரோதியாய்
இலட்சியங்களை இதயத்திலும்
இலக்குகளை தொட முடியாத தொலைவிலும்
வைத்துக்கொண்டு ..............................
...

நாள்தோறும் நடமாடிக்கொண்டிருக்கும் நாகரீக நாடோடி நான் ...........

என பல மொக்கைகள் போட்டு உங்களை அறுத்ததற்கு முதலில் என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

வாழ்த்த வயதில்லை என சொல்லமாட்டேன் அந்த விளம்பர விரும்பிகள் போல. ஆகையால் முதலில் என் வாழ்த்துகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன் நீங்கள் "திரைத்துறையில் வருங்காலத்தில் சாதிக்க இருக்கும் பல அறிய சாதனைகளுக்கு "

நம்மை பற்றி தெரியாமல் இப்படி ரொம்ப புகழ்கிறானே இவன் யார் ? இவனுக்கு நம்மிடமிருந்து என்ன வேண்டும் ? என நீங்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.

ஏன்னா நானும் திரைத்துறையில் சாதிக்க துடிக்க எண்ணி கொண்டிருப்பதாக நினைத்து கொண்டிருக்கும் ......................... பேர்களில் நானும் ஒருவன் அந்த உரிமையில் நான் தங்களுக்கு வாழ்த்து சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

இதுவரையில் வெளிவராத இனியும் வெளி வர முடியாத 2 திரைப்படத்திற்கு உதவி இயக்குனர் என்ற பெயரில் வேடிக்கை பார்த்துக்கொண்டும், TIME BOARD குறித்துகொண்டும், துணை நடிகர்களை தயார்செய்ய, ப்ரோடிவ்ஸெர்/ ஹீரோ/இயக்குனர் என்ற காமுகனிடம் பலர் வேடிக்கை பார்க்க கொச்சையான வார்த்தையால் வசை மொழி வாங்கிக்கொண்டு வேகமாக ஓடிப்போய் அவர்களை அழைத்தால் அவர்கள் கூறும் பேச்சுகளையும் உள்வாங்கிக்கொண்டு வந்து சொன்னால் அதற்கும் தகுந்த சன்மானம் கிடைக்கும் அதையும் பெற்றுக்கொள்வேன் பெரியமனதுடன்.

உதவி இயக்குனருக்கு வேறு என்ன வேலை என நீங்கள் கேட்கலாம் அதுவும் என் காதில் விழுகிறது. MBA FINAL SEMESTER -ல் PROJECT என வீட்டில் பொய்யை சொல்லி பணத்தை வாங்கி கொண்டு BAG -ல் துணிகளை துருத்துகொண்டு இதர பொருட்களை நிரப்பிக்கொண்டு PROJECT WORK -க்கு ஒரு வணக்கம் போட்டு விட்டு போனவன் நான்.
(எனக்கு வீட்டில் கொடுத்த பணத்தை என் அம்மா யாரிடமோ வாங்கி கொடுத்தார்கள் )

போன இடத்தில் அவருடைய காம லீலைகளுக்கு உதவி செய்ய வேண்டும், தவறி கூட எந்த பெண்களிடமும் பேசக்கூடாது அப்படி அவர் எதிரில் பேசிவிட்டால் அது வேறு உருவில் பிரதிபலிக்கும். எதற்கு அவர் திட்டுகிறார் என்பதே யாருக்கும் தெரியாது ஆனால் என்னை அவர் திட்டுவார். நான் அப்படி என்ன அந்த பெண்களிடம் பேசி இருப்பேன் தெரியுமா? அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பேன் அதுதான் நான் செய்த குற்றம். சரி எதையும் வீணாக அவசியமில்லாமல் பேசக்கூடாது என பேசாமல் இருந்தாலும் வம்பு. நடிகர்கள் என்று காசு கொடுத்துவிட்டு வந்து இருக்கும் அந்த நபர்களிடமும் கேட்ட பெயர்தான் மிச்சம்.

அடிக்கடி அந்த UNIT - ல் இருப்பவர்கள் எனக்கு எந்த ROLE எனக்கு எப்போ SHOUTING , இன்னைக்கு எந்த சீன எடுக்கபோரிங்க நான் இத்தன ஆயிரம் கொடுத்திருக்கன், "நான் இவ்வளவு ரூபா கொடுத்திருக்கன்" என வினவுவார்கள்.

எதற்கும் என்னிடமிருந்து பதில் வராது என்பதை விட பதில் தெரியாது என்பதுதான் உண்மை. ஏனெனில் என்ன கதை எந்த காட்சி இன்று எடுக்க போகிறோம் என்பது அவர்களுக்கு( HERO/ PRODUCER/ DIRECTOR & CO-DIRECTOR ) தெரியாது. கதை என்று ஒன்று கிடையாது நேற்று இரவுவரை ஒரு நபரை ஒரு காதபாத்திரத்திற்க்காக முடிவு செய்து இருப்பார்கள் இன்று வேறு ஒரு நபர் காசு அந்த நபரை விட அதிகமாக கொடுத்தால் உடனே அவர் அந்த பாத்திரத்தில் இடம்பெற்றுவிடுவார். இந்த நபர் காசு கொடுத்து இருப்பார்/ அவருடைய காம லீலைக்கு உதவி இருப்பார்/ அவருடைய இச்சைக்கு இணங்கி இருப்பார்.

அவருக்கு வாழ்க்கையில் உண்மையான வில்லன் நான்தான் நானாக விரும்பி ஏற்று கொண்ட பாத்திரம் அல்ல இது தானாக வந்து அமைந்த பாத்திரம். ஒரு துணை நடிகைக்கு ரொம்ப நாள் வலை வீசி வீசி அளுத்து போய் வலை கிழிந்த பிறகு அந்த வலை கிழிசலுக்கு நான்தான் காரணம் என எண்ணிக்கொண்டார். அந்த பெண் என்னிடம் பேசியதுதான் அந்த கிழிசல் ஏற்பட கரணம் என அவராகவே ஊகித்துகொண்டார்.

உண்மையிலே இவர்களுக்கு சினிமா பற்றி அறிவே கிடையாது நான் பார்த்தவரையில், சினிமா அறிவு மட்டுமல்ல .............

அந்த பாலியல் சம்பந்தமான சமாச்சாரங்கள் கூட அந்த துறையில் சாதரண விஷயம் என வைத்துக்கொள்ளலாம் ஆனால் சினிமா பற்றி யோசிக்ககூட அருகதை அற்றவர்கள் அவர்கள் .........

இதுபோன்ற நபர்கள் எல்லாம் திரைப்படம் எடுக்க நினைக்கும் போது,


நீங்கள்

( //7வருட சின்ன திரை அனுபவம் 4வருட ஆசி்ரியர் அனுபவம்,6 மாத சினிமா அனுபவம்//
//34 வயதில் சினிமாவுக்குள் நான் நுழைந்தது எல்லாம் அதன் மேல் உள்ள காதலால்...இந்த 6மாதத்தில் சினிமாவில் நிறைய அனுபவங்கள்.... 700 எபிசோட் எழுதும் அளவுக்கு நிறை விஷயங்கள் இருக்கின்றன...//)

இவ்வளவு அனுபவமும் உலக சினிமா பற்றிய புரிதலும் வைத்துக்கொண்டு சும்மா

( // நடுவில் கூட குடும்ப சூழலுக்கு ஏற்ற வாறு திரும்பவும் எதாவது ஒரு கல்லூரிக்கே வேலைக்கு போனாலும் ஆச்சர்யபடுவதற்க்கு இல்லை...// )

இப்படி எல்லாம் சொல்லி எங்களை போன்றவர்களுக்கு அதிர்ச்சியையும் தந்து,
கொஞ்சம் அல்ல நிறைய மனச்சோர்வை கொடுத்து உள்ளிர்கள்.

//வாழ்க்கை கனவுகளை செயல் படுத்த பொருளாதாரம் ரொம்ப முக்கியமான விஷயம்...//

நண்பரின் அலுவலகத்தில் தொழில் முறையையும் தாண்டி அவருடைய கணினியையும், இணையத்தையும் யாசகமாக பயன் படுத்திகொண்டு இதை சொல்கிறேன்

என்னிடம் மட்டும் பணம் இருந்தால் நான் உங்களுக்கு என்னால் முடிந்தவரை உங்கள் தொழில் சம்பந்தமாக உதவி செய்வேன். சிரிக்காதிர்கள் (என்னிடம் பணம் இல்லாததால்தான் இப்படி சொல்கிறேன் என்று)

முயற்சி செய்கிறேன் முடிந்தவரை

ஒருவேளை நான் எதிர்பாராமல் இயக்குனராக ஆகா முடிந்தால் நீங்கள் அந்த படைப்பில் (காவியம்) பணிபுரிந்தருள வேண்டும் என இப்பொழுதே கேட்டுக்கொள்கிறேன்.


நான் இன்னும் சில அவல அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. அதற்கும் காரணம் நான் உங்களை இன்னும் மொக்கை போட விருப்பமில்லாமல் விட்டு விட்டேன்.


நான் என்னுடைய வாழ்க்கையில் மதிப்புக்குரிய சில நபர்களை சந்திக்க வேண்டும் என ஒரு பட்டியல் போட்டு பல வருடங்களாக வைத்திருக்கிறேன்

திரு .பிடல் காஸ்ட்ரோ
திரு. மு.க
திரு. கமலஹாசன்
திரு . மணிரத்னம்
திரு . ஜெயகாந்தன்
திரு. தமிழ்கடல் நெல்லை கண்ணன்
திரு. ஜாக்கிசான்
திரு. சுகிசிவம்
திரு . கவுண்டமணி & செந்தில்
திரு. யூகி சேது
திரு . கோபிநாத் ( நீயா நானா )
திரு . என்னை விட்டு பிரிந்து போன என்னுடைய பள்ளி கல்லூரி சகாக்கள் .............................

மேலே உள்ளவர்கள் இல்லாமல் மறைந்தும் மறையாமல் இருப்பவர்கள்
திரு. கார்ல் மார்க்ஸ்
திரு . லெனின்
திரு. மாகாகவி. பாரதி
திரு. ஷேக்ஸ் பியர்
திரு. எர்னெஸ்டோ குவேரா (சேகுவேரா) (அடிமை பட்ட தேசமெல்லாம் என் தாய்நாடு
என சொன்ன அந்த மாவீரன் )
திரு . எம்.ஜி. ஆர்
திரு . புதுமைபித்தன்
திரு . தென்கச்சி கோ . சுவாமிநாதன் .................

இவர்கள் அனைவரும் ஒரு ஒரு விதத்தில் என்னை கவர்ந்தவர்கள் நான் இவர்களை எல்லாம் காதலித்து வருகிறேன் நான் மட்டுதான் காதலிக்கிறேன் ......... இவர்களில் யார் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என என்னால் தர வரிசை செய்யமுடியாது.

ஆனால் இவர்களை போல் உங்களை என்னால் பட்டியல் இட முடியவில்லை
நான் உங்களை பார்த்தே தீர வேண்டும் என முனைப்புடன்(நீங்கள் அவர்களை விட
நிறைவாகவோ குறைவாகவோ சாதித்து இருக்கலாம்) இருந்து வருகிறேன் ......
விரைவில் நடக்கும் என நினைக்கிறேன். ஒரே ஒரு முறை தங்களின் அருகில்
நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் ...

உணர்வுகளை கொட்ட தெரியாமலும் பகிர்ந்துகொள்ள சரியான நண்பர்கள் இல்லாமலும் இந்த விசைப்பலகை மூலம் தங்களுக்கு இதை எழுதுகிறேன்.


சாதாரண உலகவாசி
சேகுவாரோ

இந்த கடிதத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை எழுதினால் கடிதம் அனுப்பிய நண்பர் எதாவது தளம் மூலம் அதனை வாசிப்பார் என்று எண்ணுகின்றேன்...

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....


23 comments:

  1. நண்பர் வெகு விரைவில் சினிமா உலகில் சாதிக்க என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சினிமா துறை பற்றியும் அந்த துறை நபர்கள் பற்றியும் எனக்கு தெரியாது.. ஆனால் சாதிக்க நினைக்கும் ஒரு மனிதரின் உண்மையான உள்ளக்குமுறல் இது என்பதை மட்டும் உணர முடிகிறது.. ஒரு முறை அவரை சந்திப்பதில் தவறில்லை ஜாக்கி சார்..

    ReplyDelete
  3. வலியும் வேதனையும் கடிதத்தில் தெரிகிறது..

    ReplyDelete
  4. சாதிக்கத் துடிக்கும் ஒரு திறமையான இளைஞருக்கு இவ்வளவு சோதனைகளா. ஆண்டவா அவருக்கு ஒரு நல்ல வழி காட்டுங்க என்று வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. சினிமாவில் சாதித்தவர்கள் நூறு பேர் இருக்கலாம்.. ஆனால் தங்கள் வாழ்க்கையை தொலைத்து கடைசி வரை வெளியே தெரியாமலே செத்துப் போனவர்கள் எத்தனை லட்சம் பேர் இருப்பார்கள்? கொடுமை நண்பா:-((((

    ReplyDelete
  6. போராடி வெல்ல வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஒரு முறை அவரை சந்திப்பதில் தவறில்லை ஜாக்கி அண்ணே
    நான் கூட பார்க்கும் வேலையை விட்டுவிட்டு சினிமால எடுபிடியா சேர இருந்தேன்.
    எங்கம்மா கெஞ்சி அந்த நினைப்பை விட்டேன்.
    கடவுளீடம் ஒரு நல்ல வழி காட்டுங்க என்று வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  8. இந்தக் கடிதம் எழுதிய நண்பரைச் சந்திக்க விரும்புகின்றேன்.

    mmabdu@yahoo.com

    ReplyDelete
  9. இந்தக் கடிதம் எழுதிய நண்பரைச் சந்திக்க விரும்புகின்றேன்.

    mmabdu@yahoo.com

    ReplyDelete
  10. மிக பெரிய குமுறலை அவர் ஒரு மடலில் எழுதி உள்ளார். உதவி இயக்குனர்கள் வாழ்கை கேள்விபட்டத்தில் 50 சதவிதம் இங்கு உள்ளது.

    ReplyDelete
  11. கடிதம் மிக மிக வருத்தமளிக்கிறது ஆனால் இதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    கவுண்டமணி சொல்றமாதிரி இதெல்லாம் சாதா'ரணமப்பா'ன்னு எடுத்துக்க முடியலை :(((((((((((((

    ReplyDelete
  12. நண்பர் வெகு விரைவில் சினிமா உலகில் சாதிக்க என் வாழ்த்துக்கள்//
    நன்றி ராஜ்

    ReplyDelete
  13. சினிமா துறை பற்றியும் அந்த துறை நபர்கள் பற்றியும் எனக்கு தெரியாது.. ஆனால் சாதிக்க நினைக்கும் ஒரு மனிதரின் உண்மையான உள்ளக்குமுறல் இது என்பதை மட்டும் உணர முடிகிறது.. ஒரு முறை அவரை சந்திப்பதில் தவறில்லை ஜாக்கி சார்..//
    கண்டிப்பாக சந்திப்பேன் ராஜ்

    ReplyDelete
  14. சினிமா துறை பற்றியும் அந்த துறை நபர்கள் பற்றியும் எனக்கு தெரியாது.. ஆனால் சாதிக்க நினைக்கும் ஒரு மனிதரின் உண்மையான உள்ளக்குமுறல் இது என்பதை மட்டும் உணர முடிகிறது.. ஒரு முறை அவரை சந்திப்பதில் தவறில்லை ஜாக்கி சார்..//
    கண்டிப்பாக சந்திப்பேன் கிஷோர்

    ReplyDelete
  15. வலியும் வேதனையும் கடிதத்தில் தெரிகிறது..//
    நன்றி யோ..

    ReplyDelete
  16. சினிமாவில் சாதித்தவர்கள் நூறு பேர் இருக்கலாம்.. ஆனால் தங்கள் வாழ்க்கையை தொலைத்து கடைசி வரை வெளியே தெரியாமலே செத்துப் போனவர்கள் எத்தனை லட்சம் பேர் இருப்பார்கள்? கொடுமை நண்பா:-((((//
    இன்னும் நிறைய பேர் திரிசங்கு நிலையில் இருக்கின்றார்கள்...

    ReplyDelete
  17. போராடி வெல்ல வாழ்த்துக்கள்//
    நன்றி நைனா

    ReplyDelete
  18. வெல்ல வாழ்த்துக்கள்//
    நன்றி டிவி ராதாகிருஷ்ணன்

    ReplyDelete
  19. ஒரு முறை அவரை சந்திப்பதில் தவறில்லை ஜாக்கி அண்ணே
    நான் கூட பார்க்கும் வேலையை விட்டுவிட்டு சினிமால எடுபிடியா சேர இருந்தேன்.
    எங்கம்மா கெஞ்சி அந்த நினைப்பை விட்டேன்.
    கடவுளீடம் ஒரு நல்ல வழி காட்டுங்க என்று வேண்டிக் கொள்கிறேன்.//
    நல்ல வேளை நல்ல வேலைக்கு போனே....

    ReplyDelete
  20. இந்தக் கடிதம் எழுதிய நண்பரைச் சந்திக்க விரும்புகின்றேன்.

    mmabdu@yahoo.com//

    அவரை சந்திக்க சொல்ிக்னறேன் தொடர்பு கொள்ள சொல்கின்றேன் நண்பா...

    ReplyDelete
  21. மிக பெரிய குமுறலை அவர் ஒரு மடலில் எழுதி உள்ளார். உதவி இயக்குனர்கள் வாழ்கை கேள்விபட்டத்தில் 50 சதவிதம் இங்கு உள்ளது.//

    இன்னும் நிறைய இருக்கு ரோமியோ பாய்...

    ReplyDelete
  22. கடிதம் மிக மிக வருத்தமளிக்கிறது ஆனால் இதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    கவுண்டமணி சொல்றமாதிரி இதெல்லாம் சாதா'ரணமப்பா'ன்னு எடுத்துக்க முடியலை :(((((((((((((//
    உண்மைதான் சிவா...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner