மும்பையில் கலக்கும் டப்பாவாலாக்கள்...
எனது உறவுக்கார பையன் பரத் கல்பாக்கம் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிஏ படித்து வருகின்றான்... அவன் தினமும் எடுத்த பாடங்களையும் எடுத்த நிகழ்வுகளையும் எனக்கு குறுஞ்செய்தியில் அனுப்புவான்...
அப்படி அனு்புகையில் மும்பை டப்பாவாலக்கள் பற்றி இன்று வகுப்பு எடுத்தார்கள்... காரணம் அவர்க்ளுக்கு சத்தமாக படிப்புறவு கிடையாது...
அவர்கள் எப்படி சாதிக்கின்றார்கள்...? ஒரு கார்பரேட் கம்பெனியிடம் இருக்கும் ஒரு நேர்த்தி இருக்கின்றதே அது எப்படி? என்று அவர்களை பற்றிய டாக்குமெஙன்றி காட்டி வகுப்பு எடுத்து இருக்கின்றார்கள்... எவ்வவளவு பெரிய விஷயம் இது...அவர்களில் யாரும் படித்தவர்கள் இல்லை... அவர்கள் எல்லோருக்கும் காங்கிரஸ்காரர்கள் போல் தலையில் தொப்பி போட்டு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் இருப்பவர்கள்.. காலையில் பத்து மணிக்கு பெற்றுக்கொள்ளும் உங்கள் வீட்டு மதிய உணவு சரியாக ஒரு மணிக்கு நேரம் தவறாமல் உங்கள் கணவர் முன்ந போய் சேர்ந்து விடும்...
இதில் ஆச்சர்யம் கலந்த விஷயம்.. ராமசாமி டப்பா, குமாரசாமி்க்கும் குமாரசாமி டப்பா ராமசாமிக்கு மாற்றிக் கொடுத்து விட்டு தலை சொறியும் வேலை இங்கு கிடையாது... செய்யும் வேலையை திருப்தியாக செய்வதால்... இந்த மாதிரி பிரச்சனைகள் வருவதில்லை... அதே போல் சாப்பிட்ட கேரியரும் அவர்களே எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிடுவதுததான்...
உலகத்தின் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகராக மும்பை விளங்குகின்றது... 20மில்லியன் மக்கள் வாழும் பூமி... இதில் காலையில் ஒரு கணவன் வேலைக்கு போக வேண்டும் என்றால் ஒரு மனைவி 5 மணிக்கே எழுந்து வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும்...
ஆனால் டப்பாவாலாக்கள் இருப்பதால்...
காலையில் எழு மணிக்கு இட்லி ஒரு ஈடு வைத்தாலும், ஒரு சட்னி அரைத்தாலும் சரியாக போய் விடும் ...ஆனால் மதிய உணவு எனும் போது அதற்க்கு குழம்பு தொட்டு்கொள்ள கறிகாய் போன்றவை செய்ய வேண்டும்.. அதற்கு நேரம் நிறைய செலவாகும்... டப்பாவாலாக்கள் இருப்பதால் கொஞ்சம் ரிலாக்சாக வேலை பார்த்து மதிய உணவு ரெடி செய்கின்றனர்...
5000டப்பாவாலாக்கள் இருப்பதாக சொல்லுகின்றார்கள்.... அதே போல் உதாரணத்துக்கு ,ஆவடியில் இருந்து எடுத்து வரும் கேரியர்கள்.... வடபழனியில் வேறு ஒரு குழுவிடம் கொடுக்க பட்டு அது தாம்பரம், பெருங்களத்துர்ர் தாண்டி மறைமலைநகர் வரை கூட சாப்பாடு போகுமாம்...
பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு தலையில் சுமக்கும் இவர்கள் சில இடங்களுக்கு சைக்கிள் சில இடங்களுக்கு தள்ளுவண்டி, லோக்கல் டிரெயின் போன்றவற்றின் மூலம் தங்கள் இலக்கை அடைகின்றனர்.... இவர்கள் அலுவலகத்தக்கு மட்டும் சாப்பாடு கொண்டு செல்வதில்லை, பள்ளி ,கல்லூரி போன்றவற்றிக்கும் கொண்டு செல்கின்றார்கள்..
மும்பை கான்கிரிட் காட்டில் 30 மாடியில் இருந்தாலும் உங்கள் அறைக்கே சாப்பாடு மதியம் ஒரு மணிக்கு நிச்சயம்...இதனால் கணவனுக்கு மனைவிக்குமான அன்பு பலமடங்கு பலப்படுகின்றது...
சென்னை அது போன்ற பேரு நகரம்தான் ஆனால் ஏன் இங்கு டப்பாவாலாக்கள் வளரவில்லை என்று தெரியவில்லை.. அதே போல் இங்கும் மதிய சப்பாடு போகின்றது... 100 கேரியர் 150 கேரியர் அவ்வளவுதான்... ஆனால் அங்கே ஒரு குழுவுக்கு 2000ஆயிரம் கேரியர் வரை கிடைக்கின்றன...
மாதம்300 இதற்கு கட்டணமாக வாங்குகின்றனர்...
இதில் பாராட்டபடவேண்டிய மற்றும் கவணிக்க படவேண்டிய விஷயம்.. மும்பையில் குண்டு வெடித்து, அப்புறம் ரயி்லில், அதன் பிறகு பெரும் வெள்ளம் மும்பையை புரட்டி போட்டது.... ஆனாலும் மதியம் பசியோடு காத்துகொண்டு இருந்த கணவன்மார்களுக்கு மதியம் ஒரு மணிக்கு வழக்கம் போல் சாப்பாடு கொண்டு போய் சேர்க்கபட்டதாம்.... மழை வெள்ளம் , குண்டு வெடிப்பு... எது நடந்தாலும் தனது வேலையை குறித்த நேரத்தில் செய்யும் டப்பாவாலாக்கள் பாராட்டபட வேண்டியவர்கள்....
எனக்கு ஒரு கேள்வி எல்லோருக்கு்ம் சரியான நேரத்தில் சாப்பாடு கொடுக்கும் இவர்கள் எப்போது மதிய சாப்பாடு சாப்பிடுவார்கள்... சரி சாப்பாடு இவர்கள் கையால் வாங்கி சாப்பிடுபவர்கள்... நீ சாப்பிட்டாய என்று ஒரு வார்த்தையாவது கேட்டு இருப்பார்களா?????
அவர்களை பற்றிய ஒரு டாக்குமென்ட்ரி
http://www.youtube.com/watch?v=IfzdqwOnW_8 இந்த இனைப்பில் பார்த்து மகிழவும்
இந்த கட்டுரை கேள்வியின் அடிப்படையில், கேட்ட அடிப்படையில் எழுத பட்டது.. இன்னும் இவர்கள் பற்றிய செய்திகள் உங்களுக்கு தெரிந்தால் பின்னுட்டம் இடுங்கள்.. அது எனக்கும் பின்னால் இதை வாசிப்பவர்களுக்கும் மிகவும் பயணுள்ளதாக இருக்கும்...
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
//நீ சாப்பிட்டாய என்று ஒரு வார்த்தையாவது கேட்டு இருப்பார்களா?????
ReplyDelete//
டச் பண்ணிடிங்க....
நானும் டப்பாவாலாக்களை பார்த்து வியந்து இருக்கின்றேன்....
நம்ம ஊர்ல ரெண்டு பேருமே வேலைக்கு போறாங்க ,யாரு அண்ணே சாப்பாடு செய்றது??
ஆமாம் மிக ஆச்சரியம் தான்..90-களில் தாம்பரத்திலிருந்து சாப்பாடுக்கார அம்மா என்று ஒரு அம்மா தினம் 11 மணியளவில் சென்ட்ரல் ஸ்டேஷனலில் வேலை பார்ப்பவர்களுக்கு 15 பேருக்கு எங்கள் ரயில்வே காலனியிலிருந்து சாப்பாடு எடுத்து போவார்கள்.என் கணவருக்கும் சேர்த்து ஒரு 5 வருடம் நான் கொடுத்து விட்டேன்..
ReplyDeleteஜாக்கி அண்ணே,
ReplyDelete1. இவர்களது வேலையில் டப்பா மாறுவது என்பது ஒரு மில்லியனில் ஒரு பங்கு தானாம்.
2. இவர்கள் இடும் டப்பாவின் மேல் இடும் அடையாளக் குறிகள் மிகவும் நேர்த்தியானவை.
3. இவர்களின் Logistical Theory குறித்து ஆராய்ச்சி செய்ய மாணவர்கள் மண்டையை ப்ய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
4. இளவரசர் சார்லஸுடன் இவர்கள் நெருங்கிய நட்பு கொண்டவர்கள். அவரது முதல் மனைவி டயானாவுக்கும், இரண்டாவது மனைவி கமீலா வுக்கும் இவர்கள் கல்யாண சேலை அனுப்பியதோடு, திருமண விருந்தில் விருந்தினர்களாகவும் விசேஷ அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்கள்.
இதப் பத்தி ஒரு டாக்குமெண்டரி பார்த்திருக்கேன். அவர்களின் தப்பு 1 இன் மில்லியனாம். அவங்க நெட்வொர்க் பயங்கர கஷ்டமானது. நல்ல பதிவு.
ReplyDelete//நீ சாப்பிட்டாய என்று ஒரு வார்த்தையாவது கேட்டு இருப்பார்களா?????
ReplyDelete//
டச் பண்ணிடிங்க....
நானும் டப்பாவாலாக்களை பார்த்து வியந்து இருக்கின்றேன்....
நம்ம ஊர்ல ரெண்டு பேருமே வேலைக்கு போறாங்க ,யாரு அண்ணே சாப்பாடு செய்றது??--
இல்லை ஜெட்லி அங்கயுஙம வேலைக்கு போறாங்க.. இருந்தாலும் ஹவுஸ்ஒய்ப்புக்கு இது வரப்பிரசாதம்..
ஆமாம் மிக ஆச்சரியம் தான்..90-களில் தாம்பரத்திலிருந்து சாப்பாடுக்கார அம்மா என்று ஒரு அம்மா தினம் 11 மணியளவில் சென்ட்ரல் ஸ்டேஷனலில் வேலை பார்ப்பவர்களுக்கு 15 பேருக்கு எங்கள் ரயில்வே காலனியிலிருந்து சாப்பாடு எடுத்து போவார்கள்.என் கணவருக்கும் சேர்த்து ஒரு 5 வருடம் நான் கொடுத்து விட்டேன்..//
ReplyDeleteஉண்மைதான் அமுதாகிருஷ்னன்.. ஒரு குடையில் எடுத்து போவார்கள்.. பார்த்து இருக்கின்றேன்...
தொடர்ந்து பதிவை வாசித்து பின்னுட்டம் போடுவதற்க்கு என் நன்றிகள்...
1. இவர்களது வேலையில் டப்பா மாறுவது என்பது ஒரு மில்லியனில் ஒரு பங்கு தானாம்.
ReplyDelete2. இவர்கள் இடும் டப்பாவின் மேல் இடும் அடையாளக் குறிகள் மிகவும் நேர்த்தியானவை.
3. இவர்களின் Logistical Theory குறித்து ஆராய்ச்சி செய்ய மாணவர்கள் மண்டையை ப்ய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
4. இளவரசர் சார்லஸுடன் இவர்கள் நெருங்கிய நட்பு கொண்டவர்கள். அவரது முதல் மனைவி டயானாவுக்கும், இரண்டாவது மனைவி கமீலா வுக்கும் இவர்கள் கல்யாண சேலை அனுப்பியதோடு, திருமண விருந்தில் விருந்தினர்களாகவும் விசேஷ அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்கள்.//
நன்றி தராசு ரொம்ப நல்ல விஷயங்களை சொல்லி இருக்கின்றிர்கள்... டபபாவாலாக்கள் சாலஸ் திருமணத்துக்கு போய் வந்தது செய்தியாக டித்தத உங்கள் பின்னுட்டம் மூலம் நினை்வுக்கு வந்து விட்டது நன்றி மிக்க நன்றி பல திய தககவல்களுக்கு
இதப் பத்தி ஒரு டாக்குமெண்டரி பார்த்திருக்கேன். அவர்களின் தப்பு 1 இன் மில்லியனாம். அவங்க நெட்வொர்க் பயங்கர கஷ்டமானது. நல்ல பதிவு.//
ReplyDeleteஅப்பா எவ்வளவு பெரிய விஷயம் நன்றி பின்னோக்கி தொடர்ந்து பதிவு படித்து பின்னுட்டம இடுவதற்க்கு...
டப்பா வாலாக்கல் ஒரு ஆச்சரியம்தான்
ReplyDeleteநல்ல இடுகை
நன்றி
ஆச்சரியம்தான்
ReplyDeleteநல்ல தொகுப்பு. சென்னையிலும் ஆரம்பிக்கலாம். ஏதேனும் ஒரு கொரியர் கம்பெனி இதை ஆரம்பிக்குமென நினைக்கிறேன்.
ReplyDeleteஉண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர்கள்!!!
ReplyDeleteஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். சாதனைதான்.
ReplyDeleteஎனக்கு ஒரு கேள்வி எல்லோருக்கு்ம் சரியான நேரத்தில் சாப்பாடு கொடுக்கும் இவர்கள் எப்போது மதிய சாப்பாடு சாப்பிடுவார்கள்... சரி சாப்பாடு இவர்கள் கையால் வாங்கி சாப்பிடுபவர்கள்... நீ சாப்பிட்டாய என்று ஒரு வார்த்தையாவது கேட்டு இருப்பார்களா?????//
ReplyDeleteஅண்ணே,
அவர்களின் கடமைக்கும்
அதை எழுதிய உங்க உழைப்புக்கும் ஒரு சல்யூட்
குறுகிய காலத்தில் முன்னேற துடிக்கும் வீடு புரோக்கர்கள் போன்ற மனிதர்கள் கொண்ட இன்றைய சென்னையில் இது போல உடல் வருத்தி செய்யும் வேலை வேலைக்கு ஆகுமா?
மும்பையில் கணவன் மனைவி உறவு இப்படி பலமாக உள்ளது .
குறித்து மகிழ்ச்சி.
பாதி பேர் சென்னையில் 2 வேளை ஓட்டலில் சாப்பிடுகின்றனர், வீக்கெண்டில் குடும்பத்தோடு வெளியே சாப்பிடுகின்றனர்.
டிபன் கேரியரை எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பார்க்கமுடியும்
ஓட்டுக்கள் போட்டாச்சு
ஆசரியம் ஆனால் அதுதான் உண்மை. உழைப்பை மட்டுமே நம்பும் ஒரு கூட்டம்.
ReplyDeleteநன்றி
மகாராஜா