(kick- telugu)கிக் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
கிக் என்பது வாழ்வில் இருக்க வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்....அதற்காக பலர் பல விதமான முடிவுகளை தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்...
சிலர் பீர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஹாட் அடிக்கின்றார்கள் ஏன் என்று கேட்டால் கிக் கம்மியாக இருக்கின்றது.. என்று சொல்கின்றார்கள்..
தனது மனைவி இருக்கும் போது இரண்டாவது தொடுப்பு வைத்து கொள்கின்றார்கள்... ஏன் என்று கேட்டால் கிக் இல்லை என்று சொல்லுகின்றார்கள்...
டக்குனு ஐலவ்யூ சொல்லாம ஏண்டி அந்த பையனை இழுத்து அடிக்கிற் என்றால் உடனே சொன்னால் எப்படி கிக் இருக்கும் என்று சொல்லிகன்றாள் அந்த பெண்...
இப்படி நம்மில் நம் வாழ்க்கை முறையில் கிக்கை அனுபவித்து இருப்போம்... ஆனால் கிக்கையே வாழ்க்கையாக ஒரு கதாநாயகன் கொண்டு இருந்தால்....
கிக் படத்தின் கதை இதுதான்....
மலேஷியாவில் இருக்கும்Naina (Ileana) வுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கின்றார்கள்... மாப்பிள்ளை Krishna (Shyam) நம்ம 12bஷாமேதான்...
ஷாம் Naina(இலியான) இருவருக்குமே திருமணத்தில் இஷ்டம் இல்லை... இருவரும் குடும்ப உறுப்பினர்கள் விருப்பத்துக்கு இணங்க இருவரும் சந்திக்கின்றனர்... ஷாமிடம் உங்கள் பேர் என்ன என்று கேட்க கல்யான் கிருஷ்னா என்று முழு பேர் சொல்ல ... அந்த பேரை மட்டும் மாற்றிக்கொள்ளுங்கள் உலகத்தில் நான் வெறுக்கும் முதல் பேர் அந்த பேராகத்தான் இருக்கும் என்றுNaina( இலியானா )சொல்ல... காரணம் என்ன என்று கேட்க?காரணம் சொல்ல காட்சி விரிகின்றது....
இந்தியாவில்Kalyan (Ravi Teja) ஒரு நண்பியின் திருமணத்தின் போதுதான் ரவிதேஜாவை இலியான முதலில் பார்க்கின்றாள்... அவன் கேரக்டர் மற்றவர்களை போல் இல்லை...
அதாவது 50000ரூபாய் மாத சம்பளத்தில் ஒரு கம்பெயினில் சேர்ந்து ஒரு மாதத்தில் அவன் திறமையை நிருபித்து அடுத்து உனக்கு என்ன வேனும் அதிக சம்பளமா? என்று கேள்வி கேட்கும் போது எனக்கு ரஜினாமா வேனும் என்று வெளியில் வரும் கேரக்டர்....
எனென்னறால் அந்த கம்பெனியில் கி்க் இல்லை என்று சொல்லும் கேரக்டர்... ஒரு கட்டத்தில் அவன் மீது காதல் வயப்படுகின்றாள்...இது போல் பல விஷயங்களை ஷாமிட்ம் பகிர்ந்து கொள்கின்றாள்...ஆனால் கிக் என்ற விஷயத்துக்காக அவன் எந்த வேலையிலும் நிலையாக இல்லை அதனால் பிரிந்து வந்து விட்டேன் என்று சொல்கின்றாள்... ஒருவருடம் ஆகிவிட்டது...அதனால்நான் அவனை மறந்து விட்டேன், நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தன் எண்ணத்தை வெளிபடுத்துகின்றாள்... Krishna(ஷாமும்) அப்படியே...
ஆனால் ஷாம் 150 கோடியை இந்தியாவில் தடயம் இல்லாமல் கொள்ளை அடித்தவனை தேடி மலேஷியா வந்து இருக்கும் கதையை சொல்கின்றான்...Kalyan(ரவிதேஜா)வும் மலேஷியாவில் இருக்கு மீதி என்ன... இலியான ஷாம் கல்யாணம்...நட்ந்ததா?
ரவிதேஜா இலியபன காதல் என்னவாயிற்று? வழக்கம் போல் வெண்திரையில்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
மொத காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகின்றார்கள் இலியான யோகா செய்வதை சொன்னேன்...
லாஜிக் என்ற விஷயத்தை தூக்கி தூர போட்டு விட்டு படம் பார்த்தால் இந்த படம் ஒரு சுவாரஸ்யமான படம் என்பதில் சந்தேகம் இல்லை...
படம் நெடுகிலும் காமெடியை துவி வைத்து இருக்கின்றார்கள்...
இலியான இந்த படத்தில் நடிக்கவும் செய்து இருக்கின்றார்....
படம் முழுவதையும் தூக்கி சுமப்பவர் ரவிதேஜாதான்... இந்த படத்தில் அவரின் பாடிலாங்வேஜ் அற்புதம்...
மொழிபடத்தில் காமெடியில் பின்னிய பிரமானந்தம் இந்த படத்தில் அல்வா ராஜ் என்ற கேரக்ட்ரில் நடித்து கமெடியில் பின்னி பெடல் எடு்கின்றார்
ஷாம் நல்ல ஸ்மார்ட்டாக துடிப்பான் போலிஸ் ஆபிசராக வந்து கலக்குகின்றார்..
இலியான இந்த படத்தில் கூடுதல் அழகுடன் மிளிர்கின்றார்...
நல்ல மசாலா படம் தான் அதை சொன்ன விதத்தில் ரசிக்க வைத்து இருக்கின்றார்கள்... இந்த படத்தை பாருங்கள் நான் சொல்வதின் அர்த்தம் விளங்கும்
Cinematography by Rasool இலியான யோக காட்சியின் போது லைட்டிங் சூப்பருருருருரு
இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஓக்கே ரகம்... இசைதமன் பாய்ஸ் படத்தில் ரொம்பவும் தடியாக வருவாரே அவதோன்..
படம் ஜென்டில்மேன் படத்தை நினைவு படடுத்தினாலும் பிரசன்ட் செய்த விதத்தில் ஜெயித்து விட்டார்கள்...
இந்த படத்தை ஜெயம் ரவி அண்ணன் இயக்க அவர் அண்ணன் ராஜா இந்த படத்தை எடுப்பார் என்று தெரிகின்றது...
படத்தின் டிரைலர்...
படத்தின் குழுவினர் விபரம்
Banner: RR Movie Makers
Cast: Raviteja, Shaam, Ileana and others
Direction: Surender Reddy
Production: Venkat
Music: Thaman S
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
பார்க்க வேண்டியபடங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
ஜாக்கி... நான் தான் First....
ReplyDeleteபுரியலையே தலைவா...
ReplyDeleteநாங்க எல்லாம் தெலுங்கு படம் பாக்க மாட்டோம்...
அப்ப நான் வரட்டா?
தலைவரே, இந்தப் படத்தைத்தான் அடுத்து தனுஷ் ரீமேக் செய்யப் போகிறதாக கேள்விப்பட்டேன்?
ReplyDelete/
ReplyDeleteஇந்த படத்தை ஜெயம் ரவி அண்ணன் இயக்க அவர் அண்ணன் ராஜா இந்த படத்தை எடுப்பார் என்று தெரிகின்றது...
/
தமிழ்ல பாத்துடுவோம்
தெலுகு தெல்லிது
:))))
இலியானா யோகா ஸ்டில்ஸ் எல்லாம் ஏற்கனவே பாத்தாச்சு பாத்தாச்சு
ReplyDelete:)))))
ரவி தேஜா இடத்தை நம்ம 'ஜெயம்' ரவி நிரப்புவராங்கறது சந்தேகம் தான் ....
ReplyDeleteஜாக்கி.. தில்லாலங்கடி ந்னு ஷூட்டிங் ஆரம்பிச்சிருச்சு.. இலியானா இடத்தில தமன்னா..
ReplyDeleteஜாக்கி... நான் தான் First....//
ReplyDeleteநன்றி மு இரா
புரியலையே தலைவா...
ReplyDeleteநாங்க எல்லாம் தெலுங்கு படம் பாக்க மாட்டோம்...
அப்ப நான் வரட்டா?//
நன்றி வணக்கம்
தலைவரே, இந்தப் படத்தைத்தான் அடுத்து தனுஷ் ரீமேக் செய்யப் போகிறதாக கேள்விப்பட்டேன்?//
ReplyDeleteதகவல் தப்பு நண்பா நன்றி கார்த்தி
இந்த படத்தை ஜெயம் ரவி அண்ணன் இயக்க அவர் அண்ணன் ராஜா இந்த படத்தை எடுப்பார் என்று தெரிகின்றது...
ReplyDelete/
தமிழ்ல பாத்துடுவோம்
தெலுகு தெல்லிது//
நன்றி சிவா
இலியானா யோகா ஸ்டில்ஸ் எல்லாம் ஏற்கனவே பாத்தாச்சு பாத்தாச்சு
ReplyDelete:)))))//
அது உன் மனைவிக்கு தெரியுமா?
ரவி தேஜா இடத்தை நம்ம 'ஜெயம்' ரவி நிரப்புவராங்கறது சந்தேகம் தான் ....//
ReplyDeleteஉண்மைதான் கிருபா...
ஜாக்கி.. தில்லாலங்கடி ந்னு ஷூட்டிங் ஆரம்பிச்சிருச்சு.. இலியானா இடத்தில தமன்னா..//
ReplyDeleteஆமாம் நண்பா.. நாம் கேள்விப்டேன்
//மொத காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகின்றார்கள் இலியான யோகா செய்வதை சொன்னேன்...
ReplyDelete//
இதுல ஏதாவது உள்குத்து இருக்கா!