அழுதா மனசு தாங்காதே.....
கடற்கரை எங்கும்
நம் இருவரின் கால்பதித்த
தடயங்கள்
தேடிக்கொண்டு இருக்கின்றேன்...
சிக்னலில்
சட்டென சீறிப்பாயாமல்
நீ இருப்பதாய் நினைத்து
நிதானமாய் கிளப்புகின்றேன்...
நீ
இல்லாமல் சத்தியமாக,
சத்தியம் தியேட்டர்
செல்லவில்லைநான்...
மாதத்துக்கு இரண்டு
கோட்டா உண்டு என்றாலும்...
எதையும் தொடவில்லை
உன்னிடம் கெஞ்சி
திட்டு வாங்கி குடிப்பதில்
ஒரு கிக் இருக்கத்தான் செய்கின்றது...
உனை மறக்க
மெரினாவில் தனியாய்
காற்றுவாங்குகையில்...
சுக்கு காபி விற்பவன்
அக்கா எங்கே? என்று கேட்கின்றான்....
போங்கடா நீங்களும் உங்க பாசமும்...
அடித்தொண்டையில்
கசக்கும் அளவுக்கு
காபி சாப்பிட்டு வெகுநாள் ஆயிற்று....
வண்டியில் போகும் போது
காற்றில் துணி விலகி
இடுப்பு தெரியும் பெண்ணை,
நீ கடிப்பாய், கிள்ளுவாய் என்ற
பயம் இல்லாமல்
தைரியமாக பார்க்கின்றேன்....
மழையில் இரண்டுநாளாய்
நனையும் உள்ளாடையும்,
போட்டது போட்டபடி
வீடு முழுவதும் கிடக்கும்
ஒழுங்கற்ற பொருட்கள்
உன் பிரிவை தெரிவிக்கின்றன...
விரைந்து வந்து விடு...
என் உடம்பில் பசலை
படர்வதை நானே உணர்கின்றேன்....
ஸ்வீட் ஹார்ட்,
பட்டு,
செல்லம்,
ஐலல்யூ,
நான் உன்னை மிஸ் பண்றேன்,என்று ...
ஆயிரம் முறை சொல்லியாகிவிட்டது
வெப்கேம் எதிரே....
எப்படி சொன்னாலும்
தோள் உரச,
கடற்கரை மணலில்
நடப்பதற்க்கு ஈடாகுமா? அது...
“நுயூயார்க் நகரம் உறங்கும்” பாடலை நான்
தமிழ்நாட்டில் கேட்டால்
நீ அயர்லாந்தில் அழுகின்றாய்..
சட்டென கண்ணில் ஜலம்
வைத்துக்கொள்கின்றாய்...
வெப்கேமில் வெடிக்கை
பார்பதைவிட
என்ன செய்து விட
முடியும் என்னால்.....
எனக்குசென்னை சற்றே
அழகு குறைவாய்
காணப்படுகின்றது...
அயர்லாந்தும்
அப்படியே இருக்கின்றதாய்
நீ தினமும் சொல்வதில்
இருந்து அறிகின்றேன்...
நேரில் வா...
கடந்து போன காலங்களை
தேடிப்பிடித்து
வட்டியும் முதலுமாய் கொண்டாடுவோம்...
(முதல்வருட திருமணநாளின் போது வெப் கேம் எதிரே காதலுடன் அழுத மனைவியின் கண்ணீரை துடைக்க முடியாமல் தவித்த கணவனின் விசும்பலின் வெளிப்பாடுகள்... மேலுள்ளவை...)
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
me the firsttu
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகவிதை சூப்பர்!
ReplyDeleteஉங்களுக்குள்ள தூங்கிகிட்டிருந்த கவிதை புலியை தட்டி எழுப்பிவிட்ட அண்ணிக்கு நன்றிகள்
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துக்களை அண்ணிக்கும் தெரிவிச்சிடுங்க.
ReplyDeleteஅன்புடன்
மங்களூர் சிவா &
பூங்கொடி
/
ReplyDeleteசிக்னலில்
சட்டென சீறிப்பாயாமல்
நீ இருப்பதாய் நினைத்து
நிதானமாய் கிளப்புகின்றேன்...
/
வேகம் விவேகம்
அதிவேகம் அபாயம்
:))
/
ReplyDeleteவண்டியில் போகும் போது
காற்றில் துணி விலகி
இடுப்பு தெரியும் பெண்ணை,
நீ கடிப்பாய், கிள்ளுவாய் என்ற
பயம் இல்லாமல்
தைரியமாக பார்க்கின்றேன்....
/
சரி அடி கேரண்ட்டி!
:)))
/
ReplyDeleteவிரைந்து வந்து விடு...
என் உடம்பில் பசலை
படர்வதை நானே உணர்கின்றேன்....
/
சீக்கிரம் வந்துடுங்க பாய், தலைகாணி எல்லாம் பிராண்டி பிச்சி வெச்சிருக்கார்!
:))
மீண்டும் வாழ்த்துக்கள்
ReplyDelete10
ReplyDeleteஅன்பு சகோதரா...
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள்.
உங்களுக்கும் அண்ணிக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் தல..
ReplyDeleteHappy Wedding Anniversary !!
ReplyDeleteஉங்களுக்கும் உங்க(ள/ல)வர்க்கும் திருமணநாள் வாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeleteஉங்க கவிதைக்கு முன்னால் பிரிவுத்துயரை எடுத்துவைக்கும் குறுந்தொகை பாடல்கள் கூட ஒண்ணுமில்லைன்னு தோணுது. டச்சிங்.
Happy Wedding Anniversary தல..
ReplyDeleteNice poem ...gud
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteWedding Day Wishes to you and to Sudha.
ReplyDeleteமறுபடியும் சொல்றேன் ஜாக்கி, இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு “என்னம்மா உங்க ஆபிஸில் ஒனக்கு ஆன்சைட் ஆப்பர்சுனிடி எதுவும் இல்லயா?”ன்னு கேப்ப பாரு..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்...
//விரைந்து வந்து விடு...
ReplyDeleteஎன் உடம்பில் பசலை
படர்வதை நானே உணர்கின்றேன்....//
இந்த வரிகள் தான் இது ஒரு கவிதை என்பதை பறைசாற்றுகிறது!
திருமண நாள் வாழ்த்துக்கள் தலைவா..
ReplyDeleteஇந்த சைடு கொஞ்சம் வந்துட்டு போங்க.
http://ennaduidu.blogspot.com/2009/10/191009.html
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஹரி ராஜகோபாலன்
me the firsttu//நன்றி சிவா
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!//
ReplyDeleteதிருமண வாழ்த்துக்கு நன்றி சிவா...
உங்களுக்குள்ள தூங்கிகிட்டிருந்த கவிதை புலியை தட்டி எழுப்பிவிட்ட அண்ணிக்கு நன்றிகள்//
ReplyDeleteநன்றியை அவகிட்ட சொல்லிடறேன் சிவா.
திருமணநாள் வாழ்த்துக்களை அண்ணிக்கும் தெரிவிச்சிடுங்க.
ReplyDeleteஅன்புடன்
மங்களூர் சிவா &
பூங்கொடி//
சொல்லிடுறேன் அதே போல பூங்கொடிக்கும் எனது அன்பை சொல்லவும்...
சிக்னலில்
ReplyDeleteசட்டென சீறிப்பாயாமல்
நீ இருப்பதாய் நினைத்து
நிதானமாய் கிளப்புகின்றேன்...
/
வேகம் விவேகம்
அதிவேகம் அபாயம்
:))//
சரி ஒத்துக்குறேன்..
வண்டியில் போகும் போது
ReplyDeleteகாற்றில் துணி விலகி
இடுப்பு தெரியும் பெண்ணை,
நீ கடிப்பாய், கிள்ளுவாய் என்ற
பயம் இல்லாமல்
தைரியமாக பார்க்கின்றேன்....
/
சரி அடி கேரண்ட்டி!//
நிச்சயமா இருக்கும்தான்...
விரைந்து வந்து விடு...
ReplyDeleteஎன் உடம்பில் பசலை
படர்வதை நானே உணர்கின்றேன்....
/
சீக்கிரம் வந்துடுங்க பாய், தலைகாணி எல்லாம் பிராண்டி பிச்சி வெச்சிருக்கார்!//
இன்னும் அந்தளவுக்கு போகவில்...
மீண்டும் வாழ்த்துக்கள்//
ReplyDeleteநன்றி
10க்கு நன்றி சிவா..மிக்க நன்றி
ReplyDeleteஅன்பு சகோதரா...
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள்.//
மிக்க நன்றி ராகவன்...
உங்களுக்கும் அண்ணிக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் தல..//
ReplyDeleteநன்றி கார்திகை பாண்டியன்.. மிக்க நன்றி
Happy Wedding Anniversary !!//
ReplyDeleteநன்றி பின்னோக்கி மிக்க நன்றி
உங்களுக்கும் உங்க(ள/ல)வர்க்கும் திருமணநாள் வாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeleteஉங்க கவிதைக்கு முன்னால் பிரிவுத்துயரை எடுத்துவைக்கும் குறுந்தொகை பாடல்கள் கூட ஒண்ணுமில்லைன்னு தோணுது. டச்சிங்.//
ஏன்ராஜா இப்படி எல்லாம் உசுப்பு உடறிங்க...
Happy Wedding Anniversary தல..//
ReplyDeleteமிக்க நன்றி யோ வாய்ஸ்
Nice poem ...gud//
ReplyDeleteநன்றி வினோத்...
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.//நன்றி ஒன் பென்னி மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கு
ReplyDeleteWedding Day Wishes to you and to Sudha.
ReplyDeleteமறுபடியும் சொல்றேன் ஜாக்கி, இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு “என்னம்மா உங்க ஆபிஸில் ஒனக்கு ஆன்சைட் ஆப்பர்சுனிடி எதுவும் இல்லயா?”ன்னு கேப்ப பாரு..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்...
ஸ்ரீராம் அதை அப்ப பாத்துக்கலாம் போகாட்டாலும் போவ வச்சிடுவோம்...
விரைந்து வந்து விடு...
ReplyDeleteஎன் உடம்பில் பசலை
படர்வதை நானே உணர்கின்றேன்....//
இந்த வரிகள் தான் இது ஒரு கவிதை என்பதை பறைசாற்றுகிறது!//
நன்றி வால்பையன்
திருமண நாள் வாழ்த்துக்கள் தலைவா..
ReplyDeleteஇந்த சைடு கொஞ்சம் வந்துட்டு போங்க.
http://ennaduidu.blogspot.com/2009/10/191009.html//
நன்றி ரோமியோ பாய் சைட் போய் பார்த்தேன்...
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!//
ReplyDeleteநன்றி ராதாகிருஷ்னன்
இனிய திருமண நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஹரி ராஜகோபாலன்//
நன்றி ஹரி ராஜ கோபாலன் தங்கள் தொடர் வாழ்த்துக்கு மிக்க நன்றி
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். அண்ணிக்கும் வாழ்த்துக்கள். திருமணம் முடித்து பிரிந்திருக்கும் தம்பதிகளின் சோகத்தை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
ReplyDelete//ஸ்ரீராம் அதை அப்ப பாத்துக்கலாம் போகாட்டாலும் போவ வச்சிடுவோம்..//
ReplyDeleteநன்றி ஜாக்கி, என்னுடைய Practical ஆன பின்னூட்டத்தை தவறாக எடுத்துக் கொள்ளாததுக்கு...
திருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDelete//வண்டியில் போகும் போது
ReplyDeleteகாற்றில் துணி விலகி
இடுப்பு தெரியும் பெண்ணை,
நீ கடிப்பாய், கிள்ளுவாய் என்ற
பயம் இல்லாமல்
தைரியமாக பார்க்கின்றேன்....
//
எங்க சேகர் அண்ணனுக்கு, அடியை
தாங்கி கொள்ளும் சக்தி கொடு தெய்வமே...
திருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். கவிதை வரிகள் கனக்கின்றன்.. அதிகம் கனக்க விடாதேங்கோ...
ஜாக்கி அண்ணனுக்கும் அண்ணிக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஅன்புடன் மணிகண்டன்
உணர்வுபூர்வமான கவிதை.
ReplyDeleteகாதல் மனைவியைப் பிரிந்திருப்பது கொடுமையிலும் கொடுமை.
ஒவ்வொரு வரியும் உணர்த்துகிறது பிரிவின் வலியை...
அழுதா மனசு தாங்காது...
ஆனா மனசு தாங்காம அழுகை வருகிறதே....
இயல்பான நிகழ்ச்சிகளை
எளிமையான வரிகளில்
வலிக்க வலிக்க வடித்துவிட்டீர்கள்...
சகோதரிக்கும், தங்களுக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள்...
மங்களூர் சிவா said..
ReplyDelete//விரைந்து வந்து விடு...
என் உடம்பில் பசலை
படர்வதை நானே உணர்கின்றேன்....//
//சீக்கிரம் வந்துடுங்க பாய், தலைகாணி எல்லாம் பிராண்டி பிச்சி வெச்சிருக்கார்!//
:))
ஐயோ ஜாக்கி தாங்கல....இது தேவையா ???
காதல் மனைவியை பிரிந்து வாடி வதங்கும் உங்களை நினைத்து பாவமாக இருக்க மங்களூர் சிவாக்கள் எங்கள் வயிற்றை புன்னாகக்க வந்தது.
நேரில் வா...
ReplyDeleteகடந்து போன காலங்களை
தேடிப்பிடித்து
வட்டியும் முதலுமாய் கொண்டாடுவோம்...
varum naal miga tholaivu alla.
thangal kaathalai kanden, magzhchi konden... intha kaathal endrum valara aasai padukiren...
ungal iruvaraiyum intha kaathal vazha vaikum.
yen akka sendrathil enakum privu yerpattathu.. aanal ithuvum nanmaike.. privu naamudaya anbai unarthum... ungaluku ungal manavi thriumba vanthuviduval.. aanal yen akka??? :) so, ungalai vida engaluku than vali athigam... but vali pazhagivitathu. anyway keep ur love the same. even more.
unmayana padippu.... nice words... great love
ReplyDelete