
பொதுவாக வட சென்னையையும் தென்சென்னையையும் பற்றி சென்னைவாசிகள் கருத்து என்னவெனில் பாரிஸ்கார்னருக்கு இந்த பக்கம் அதாவது தென் சென்னை பக்கம் யாராவது தெரியாமல் இடித்து விட்டால்.. அவர் உடனே உங்களிடம் மன்னிப்பு கேட்பாரென்றும்.. அதுவே பாரிஸ்கார்னருக்கு அந்த பக்கம் அதாவது வடசென்னை ... யாராவது உங்களை இடித்து விட்டால் அவர் மீது தப்பு இருந்தாலும்...“ங்கோத்தா பாத்து போகமாட்டே” என்ற விதத்தில் கேள்விகள் இருக்கும்.... என்றும் பொதுவாய் சொல்லுவார்கள்... எதாவது ஒரு இடத்தில் யாராவது ஒரு வனுக்கு ஒரு ரவுடியின் அறிமுகம் இருக்கும்..

பல லட்சக்கனக்கான பொருட்கள் விற்பனையாகும் இடம் கட்டபஞ்சாயத்தில் இருந்து, கைகால் எடுப்பதுவரை அனுதினமும் அவர்களுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்... அதே போல் துறைமுக சரக்கு என்று பல கோடி ரூபாய் கை மாறும் இடம்... இன்னும் மகாகாவி பராதியார் நகரெல்லாம் சென்றால் மெயின் ரோட்டில் குடுத்தனம் நடத்துவர்ர்கள்...யாரையும் கேள்வி கேட்க முடியாது... தென் சென்னையிலும் சில பகுதிகள் இருக்கின்றன....

பட்டம் விடுவது என்பது தென் சென்னையை காட்டிலும் வட சென்னைவாசிகள்தான் அதிகம்.... முன்பு மெரினாவில் அதிகம் பட்டம் விட்டு கொண்டு இருந்தார்கள்... அது பல பேருடைய கழுத்தை பதம் பார்த்து பலர் மரணம் அடைந்தார்கள்....
போலிஸ் கயிறு அறுத்து செத்து போனா யாரை போய் அரேஸ்ட் செய்வது என்று போலிஸ் மெரினாவில் பட்டம் விட தடை செய்தது...
வட சென்னையில் பட்டம் விடுவது என்பது பந்தயம் வைத்து நடத்தபடுவதால் யார் மாஞ்சா பெஸ்ட்ன்னு சொல்ல பக்கவா தயாரிக்கறாங்க... போட்டி அதுலயும் பணம்னு வந்துட்ட பிறகு... பொது மக்களோட உயிராவது மயிறாவது என்று அலட்சியமாக இருக்கின்றனர்....
ஆனால் வட சென்னையில் குடியிருப்பு பகுதியில் மாஞ்சா தடிவிய நூலில் பட்டம் விட்டு அது அறுத்து்கொண்டதும் அந்த நுாலை இவர்களால் எடுக்க முடியாது அது பைக்கில் வருபவர் கழுத்தை சடுதியில் அறுத்து விடுகின்றது...
பொதுவாய் அது போன்ற மாஞ்சா நூல்கள் கண்ணுக்கு எளிதில் தெரிவதில்லை.. அதனால் சட்டென அறுத்து விடும்... நன்றாக யோசி்த்து பாருங்கள் வீட்டில் காய்கறி வாங்கி வரேன்னு போனவன் கழுத்து அறுந்து திரும்பி வந்தா எப்படி இருக்கும்...? அப்படித்தான் சென்னையில் நடந்து கொண்டு இருக்கின்றது
நேற்று கூட வெட சென்னையில் பட்டம் விட்ட பதினைஞ்சு பேரை பிடித்து எச்சரித்து அனுப்பி இருக்கின்றது... காவல் துறை...

மெரினாவில் குடும்பத்துடன் பைக்கில் வந்த ஒரு வரின் கழுத்தை மாஞ்சா நூல் பதம் பார்த்து அப்புறம் அவரின் காதை லேசாக கிள்ளி எடுக்க அவரின் மகள் நன்றாக பேசிக்கொண்டு வந்த அப்பா திடிர் என்று ரத்தம் வந்து தனது அப்பா துடிப்பதை பார்த்து பெருங்குரெலெடுத்து அழுத போது நான் அவளை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தேன்....
பொதவாக சென்னையில் எந்த இடத்திலேயும் பட்டம் விட தடை வி்திக்க வேண்டும் பைக்கில் போகும் போது மாஞ்சா நூல்தான் கழுத்தை அறுக்கும் என்பது அல்ல உங்கள் கழுத்தை அறுக்க சாதாரண நூலே போதும்...
அதே மெரினா.. என் மனைவியோடு ஏதோ ஒரு சண்டை பைக்கில் வந்து கொண்டு இருந்தோம்... நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவள் பதில் சொல்லமல் அமைதியாக வர கோபத்தில் பின்புறம் திரும்பி வண்டி ஓட்டிக்கொண்டே ஒரு அடி அவளை அடிக்க...
அவள் கத்துவதுக்கு பதில் நான் கத்திக்கொண்டு இருக்கின்றேன்...
என் மனைவி இந்த ஆள் அடித்ததுக்கு நாம அழாம இந்த ஆள் எதுக்கு இப்படி கத்தறான்னு தெகச்சு போய் பார்த்தா.... என் கழுத்துல மாஞ்சா கயிறு லேசா ரத்தம் பார்த்து இருக்க... அவ பதற நான் பதற... துரத்தில் கயிறு எடுக்க ஓடி வந்த சில தடிமாடுகளை...கோபத்தில் ங்.......தே...... பசங்களா என்று நான் கத்தி கொண்டு நான் ஓட ....அவர்கள் பின்னங்கால் பிடறியில் அடிக்க எங்கு ஓடினார்கள் எப்படி ஓடினார்கள் என்று தெரியவில்லை...

இப்போது எல்லாம் என் மனைவியை கோபத்தில் அடிப்பதே இல்லை... அப்படியே அவளை கோபத்தில் அடிக்க நினைத்தாலும், மேலே கிழே சைடு எல்லா பக்கமும் பார்த்துக்கொண்டு கொஞ்சம் முன்னெச்சிரிக்கையாகவே இருக்கின்றேன்....
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நீங்க அடிக்கறது இல்லையா...
ReplyDeleteஇல்லை அடி வாங்கறது இல்லையா என்பதை
மீண்டும் ஒரு முறை தெளிவுப்படுதவும்.
பட்டம் விடுவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்...
யார் யாரை அடிச்சாலும் தப்பு,தப்புதான்(-:
ReplyDeleteஅதென்ன...பேசிக்கிட்டு இருக்கும்போதே கையை ஓங்குவது?
பட்டம் கண்டிப்பாகக் கூடாது.
சர்வம் பட சீன் உங்களுககும் நடந்திருக்கு தல
ReplyDeletejackie,
ReplyDeletefor the past 7 years using two wheeler no experience wht u hv. But this must be prohibited
Take care & buy car soon :)
எனக்கென்னமோ.. பட்டத்தை விட, இந்த பதிவு உங்க கழுத்தை அறுக்கப் போகுது-ன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஅல்ரெடி துளசி டீச்சர் பிரம்பை எடுத்துட்டாங்க.
என்ஜாய்!!!! :) :)
[ஆனாலும் நீங்க ரொம்ப தைரியசாலிங்க!]
நீங்க அடிக்கறது இல்லையா...
ReplyDeleteஇல்லை அடி வாங்கறது இல்லையா என்பதை
மீண்டும் ஒரு முறை தெளிவுப்படுதவும்.
பட்டம் விடுவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்...--//
நான் இப்போது அடிப்பதும் இல்லை அடி வாங்குவதும் இல்லை.. போதுமா ஜெட்லி..
யார் யாரை அடிச்சாலும் தப்பு,தப்புதான்(-:
ReplyDeleteஅதென்ன...பேசிக்கிட்டு இருக்கும்போதே கையை ஓங்குவது?
பட்டம் கண்டிப்பாகக் கூடாது.// டீச்சர் உங்க கோபத்தை ரசிச்சேன்... என் தங்கைகளையும் , என் மனைவியை காதலித்த போதும், ஒரு சில நேரங்களில் கை நீட்டி இருக்கின்றேன்... இப்போது எல்லாம் அப்படி செய்வதில்லை... கோபம் வந்தால் திட்டுவதோடு சரி...
அதுமட்டும் இல்லாமல் அதுக்கு சமாதானம் செய்யவே இரண்டு நாள் இழுத்துகிட்டு போவுது...
நன்றி டீச்சர் ... உங்க கோபத்துக்கு..
சர்வம் பட சீன் உங்களுககும் நடந்திருக்கு தல// யோ அந்த படம் பார்க்கவில்லை...
ReplyDeletejackie,
ReplyDeletefor the past 7 years using two wheeler no experience wht u hv. But this must be prohibited
Take care & buy car soon :)// எனக்கு அது போல் நடந்து இருக்கு. நேத்து பேப்பர்ல வட சென்னையில மட்டும் இது போல மூனு பேரு கழுத்து அறுத்து இருக்கு.. இதுல ஒரு போலிஸ்காரரும் அடங்கும்...
எனக்கென்னமோ.. பட்டத்தை விட, இந்த பதிவு உங்க கழுத்தை அறுக்கப் போகுது-ன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஅல்ரெடி துளசி டீச்சர் பிரம்பை எடுத்துட்டாங்க.
என்ஜாய்!!!! :) :)
[ஆனாலும் நீங்க ரொம்ப தைரியசாலிங்க!]//
உண்மைதான் பாலா.. சில விஷயங்களை நான் வெளிப்படையா சொல்லிடுவேன்.. என்ன செய்ய அது என் சுபாவம்..
நன்றி பாலா...
//கோபம் வந்தால் திட்டுவதோடு சரி.//
ReplyDeleteஎன்ன????? இதுவேறயா?
இதுக்குப் பெயர் வெர்பல் அப்யூஸ்.
எங்க ஊரில் 4 விதமான அப்யூஸ்களைச் செய்யவே கூடாது. மீறினால் 'உள்ளே போகணும்'
ஃபிஸிகல், வெர்பல், மெண்டல், எமோஷனல்ன்னு அப்யூஸ்கள் பலரகம்
//கோபம் வந்தால் திட்டுவதோடு சரி.//
ReplyDeleteஎன்ன????? இதுவேறயா?
இதுக்குப் பெயர் வெர்பல் அப்யூஸ்.
எங்க ஊரில் 4 விதமான அப்யூஸ்களைச் செய்யவே கூடாது. மீறினால் 'உள்ளே போகணும்'
ஃபிஸிகல், வெர்பல், மெண்டல், எமோஷனல்ன்னு அப்யூஸ்கள் பலரகம்-//
டீச்சர் நீங்க சொல்லறதுசரிதான்...பார்க்க போன எல்லாமே அபுயூஸ்தான்... இதுக்கு என்னால பதில் சொல்ல முடியும்... ஆனா எழுதுன விஷயம் வேற... இருந்தாலும் நன்றி டீச்சர்..
இந்தவார ஆனந்தவிகடன் இணைப்பில் இந்த விசயம் வந்திருந்தது!
ReplyDeleteசென்னையில் தடை என்று போட்டிருந்ததே!
thவால் தடை போட்டும் நேற்று பட்டம் விட்டு 3 பேர் கழுத்தை அறுத்து இருக்கின்றார்கள்... போலிஸ் 15 பேரை படித்து எச்சரித்து அனுப்பியுள்ளது...
ReplyDeleteஉண்மைதான் சேகர் என் அத்தை பையன் மாஞ்சா அறுத்து கீழ விழுந்து கை உடைந்து படாத பாடு பட்டான் .நான் எங்கள் ஊரில் பட்டம் விட்ற்றுகிறேன் இங்கே வெறி தனமாக விடுவோம். அடி தடி கொலை கூட நடந்திருக்கிறது மாஞ்சா விற்காக இப்போது வானத்தில் ஒன்று ரெண்டு பட்டம் தான் கண்ணனுக்கு தெரிகிறது .அது ஒரு பொற்காலம்
ReplyDeleteஎன்னங்க இப்பிடி சொல்லிட்டீங்க..
ReplyDeleteநாங்களும்தான் வருசா வருசம் பட்டம் விட்டோம் தைப்பொங்கலுக்கு (ஊரில இருந்தப்போ).. ஆனா இப்பிடி எல்லாம் நடக்கலையே.. பட்டம் விடறது ஒரு சுகமான அனுபவம். அதிலை இப்பிடி டேஞ்சர் எல்லாம் இருக்கா????? அவ்வளவு நெருக்கமான நகரமா சென்னை???
//ஜெட்லி said...
ReplyDeleteநீங்க அடிக்கறது இல்லையா...
இல்லை அடி வாங்கறது இல்லையா என்பதை
மீண்டும் ஒரு முறை தெளிவுப்படுதவும்.//
அவ என்னைய அடிக்க, என்னைய அவ அடிக்க அந்த மாதிரி இருக்குமோ
ஜாக்கி, இந்த பதிவை சென்னை மா நகர் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தால் என்ன?
ReplyDeleteசெய்யுங்களேன். சென்னை மட்டுமின்றி வேறு எங்கிலுமே அந்த கண்றாவி 'மஞ்சா' காத்தாடி பறக்க தடை வேண்டும். இந்த கயவாளிப்பசங்களுக்கு அடுத்தவர் உயிர் என்றால் அத்தனை இளக்காரமா?
நல்லதொரு சமூக அக்கறையுள்ள பதிவு.
ReplyDeleteகணவன், மனைவிக்குள் அன்னியோன்யம் கூடினா அடிதடி சகஜம்தான்.அடிக்கிற கைதான் அணைக்கும்.ஆனா காரணமில்லாம கை நீட்டினா தப்புதான்.அடியேன்னு கூப்பிடுறதை கூட ஒத்துக்காத சமூகம் அடிக்கிறதை ஒத்துக்குமா ஜாக்கி....