The Illusionist -2006/உலகசினிமா/அமெரிக்கா/மோடி வித்தைக்காரன்.
கடலூர் , திருப்பாபுலியூர் ,செயின்ட் ஜோசப் பள்ளி .....1990 ஆம் ஆண்டு
பத்தாம் வகுப்பில் எனது கிளாஸ் டீச்சர்  முத்துக்குமாரசாமி ஆங்கில பாடம் நடத்திக்கொண்டு இருக்கின்றார்.

நான் முதல் நாள் பார்த்த திரைப்படத்தை  நண்பர்களிடம்..சீன் பை  சீன் கதையாக விவரித்துக்கொண்டு இருக்கின்றேன்.. திடிர் என்று இந்த ஆள் என்ன பாடம் நடத்துகின்றார் என்ற கேள்வி ஏழ... பாடத்தை கவனிக்க ஆரம்பிதேன்... அரைமணிநேரமாக அவர் உணர்ச்சி பூர்வமாய் பாடம் நடத்திக்கொண்டு இருக்கின்றார்...

ரொம்ப நேரமாக கன்ஜூரர் கன்ஜூரர் என்று சொல்லிக்கொண்டு இருக்க கன்ஜூரர் என்றால் என்ன? என்ற  கேள்வி எனக்கு எழ..எனக்கு பக்கத்தில் தத்தாத்திரேய பாலமுருகன் என்ற தடிமாடு  உட்கார்ந்து கொண்டு இருந்தது...  அதனிடம் கேட்டு வைத்தேன்.. கன்ஜூரர் என்றால் என்ன என்றுஅந்த சனியன் புடிச்சவன் எனக்கு தெரியாது... நீ வேனா  வாத்தியார் கிட்ட கேளு என்றான்.... அந்த நாயிக்கு தெரியும்... என்னை மாட்டி விடனும் இல்லை...

கொஞ்சம் கூட நான் யோசிக்கலை... சட்டுன்னு எழுந்து  அரைமணி  நேரம் தொண்டை தண்ணி வத்த பாடம் நடத்திய மனுஷன் கிட்ட... சார் கன்ஜூரர் என்றால் என்ன? என்றேன்..ஹங்.... உங்க அப்பன்... என்றார்... அதாவது கன்ஜூரர் என்பவன் ஒரு  மோடி வித்தைக்காரன் அவன் ஒரு கிராமத்துக்கு வருகின்றான் என்று அந்த கதை போகும் .. அரைமணி   நேரமாக பாடம் நடத்தியவரிடம் இப்படி ஒரு  கேள்வியை கேட்டு வைத்தால்...? அப்படி என் வாழ்க்கையில் மறக்க முடியாத வார்த்தை கன்ஜூரர் அப்படி பட்ட வார்த்தையை அதன் பிறகு எந்த படத்திலும் நான்  இதுவரை கேட்டதில்லை.. இந்த படத்தில் நாயகனை அப்படி அழைக்கின்றார்கள்...

காரணம் அவன் மோடி வித்தைக்காரன்..

====================


The Illusionist -2006/உலகசினிமா/அமெரிக்கா படத்தின்  ஒன்லைன்.
மோடி வித்தைக்காரன் ஒருவன் தன் காதலை அடைய செய்யும் மாய்மாலங்கள்தான் இந்த படத்தின் ஒன்லைன்.

===========


The Illusionist -2006/உலகசினிமா/அமெரிக்கா படத்தின் கதை என்ன?

மோடி வித்தைக்காரன் Edward Norton  அப்பா தச்சு வேலை செய்பவர்...சின்ன வயதில்  ஒரு மோடி வித்தைக்காரன் செய்யும்  வித்தைகளில் மயங்கி இவனும்  வித்தைகள் கற்றுக்கொண்டு வித்தைகள் செய்வதில் வல்லவன் ஆகின்றான்... இளம்பருவத்தில்   சோபியா  என்ற வியன்னா அரசகுடும்பத்து பெண் மீது காதல் கொள்கின்றான்.. சாதாரணமாக இருக்கும் இளவரசன் ,திவ்யா காதலையே அடிச்சி உதைச்சி ,பிரிய  வச்சி இந்த காலத்துல  அழகு பார்க்கின்றோம்...

1889 இல் அதாவது இரண்டு நூற்றாண்டுக்கு முன்  சும்மா விடுவாங்களா...? அடிச்சி  உதைச்சி பிரிச்சிடுறாங்க... ஆனா எட்வர்டு லவ்வர்  சோபியா தன்னை எதிரிங்க கிட்ட இருந்து மறைய வச்சி தன்னை  காப்பாற்றுவான்னு நினைக்கற.. ஆனா அவன் வித்தை புஸ்ஸூன்னு போயிடுது... நாடு விட்டு நாடு போறான்,.. இன்னும் பல வித்தைகள் கத்துக்கிட்டு திரும்ப வியன்னா வரான். அவன் காதலி சோபியா  அந்த நாட்டு அரசனுக்கு மனைவியாக போகின்றாள்.. ஒரு சாதரண மோடிவித்தைக்காரன் தன் காதலியை கை பிடித்தான இல்லையா என்பதை  வெண்திரையில் காணுங்கள்.

=====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

1889 ஆம் ஆண்டு வியன்னாவை செட்கள் மூலம்  நம் கண் முன் நிறுத்துகின்றார்கள்... அந்த உழைப்புக்கு ஆர்ட் டைரக்டருக்கு ஒரு பொக்கே பார்சல்.

இயக்குனர்  Neil Burger ஒரு வருஷத்துக்கு ஒரு படம் இரண்டு வருஷத்துக்கு ஒரு படம் செய்யற ஒர்த்தான்  டைரக்டர்... இவருடைய சமீபத்திய படைப்பான லிமிட்லெஸ் படத்தின்  விமர்சனத்தை வாசிக்க  இங்கே கிளிக்கவும்.http://www.jackiesekar.com/2011/06/limitless-2011.html


படத்தின் இயக்குனர்Neil Burger 


கேமராமேன் Dick Pope உழைப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்... லைட் இல்லாத அந்த காலத்தில் பந்தங்களின் மூலம் லைட்டிங்... அத்தனையும் வாம் லைட்டிங் என்பதும் இரண்டு தெரு தள்ளி ஒரு மேர்க்குரி  ஸ்டிரிட் லைட் எரிஞ்சுது... அந்த சோர்ஸ் லைட்தான் இதுன்னு டகுல்   பாட்சா வேலையெல்லாம் காண்பிக்க முடியாது. அந்த அளவுக்கு உழைப்பு...
படத்தின் ஒளிப்பதிவாளர்.. போப்.

குதிரை கால்களில் இருந்து குதிரைதனி ஆளாக வீடு வந்து இருக்கின்றது..  சோபியா எங்கே என்று நான் கேட்கும் அளவுக்கு அந்த டிராலி ஷாட் அருமை. அதே போல அரங்கத்தில் உள்ள பார்வையாளர்கள் மேல் பிளாட் லைட்டிங் செய்யாமல் மைல் லைட்டிங்கில் பார்வையாளர்கள் ரியாக்ஷன்களை டீடெயிலாக காட்டி இருப்பது கேமராமேனின் உழைப்புதான்.ஒரு பீரியட் பிலிம் என்பது ரொம்ப சவாலான காரியம்.. அதை சினிமாட்டோகிராபர் போப் திறம்பட செய்து இருக்கின்றார். 79   ஆஸ்கார் விருதுக்கு போப் பெயர் பரிந்துரைக்கப்பட்டு மயிரிழையில் பரிசை தவறவிட்டார்.


Edward Norton   அனேக படங்களில் மொக்கையாக நடிக்கும் நடிகர் இவர்.. இந்த படத்தில் ஒரு மோடி வித்தைக்காரனாக வாழ்ந்து இருப்பதும்.. அத்தனை பெரிய சபையில் ராஜ நடை நடந்து, சபையோர்களை தன் வசப்படுத்த பேசும் அந்த மேனாரிசங்கள்.. அட்டாகசம்.


அடுத்து எனக்கு பிடித்த இன்னோரு கேரக்டர் இன்ஸ்பெக்டர் கேரக்டரை நடிகர் Paul Giamatti செய்து இருக்கின்றார்.. படத்தினை நகர்த்திய படியே ரசிக்க வைக்கும் கேரக்டர்...

சிறுகதை தொகுப்பில் இருந்து எடுத்து கையாளப்பட்ட திரைப்படம் இது... சில பல உரக திரைப்படவிழாக்களில் கலந்து  கொண்டு ரசிகர்கள் பாராட்டை பெற்றது.நோலனின் பிரஸ்டிஜியஸ் இதே கதை கருவை சார்ந்தது என்றாலும் இரண்டு மோடி வித்தைக்காரர்களுக்கான போட்டி  அந்த கதை என்று எண்ணுகின்றேன்.

==================
படத்தின் டிரைலர்.


==============
படக்குழுவினர் விபரம்.

Directed by Neil Burger
Produced by Brian Koppelman
David Levien
Michael London
Cathy Schulman
Bob Yari
Screenplay by Neil Burger
Based on "Eisenheim the Illusionist" 
by Steven Millhauser
Starring Edward Norton
Paul Giamatti
Jessica Biel
Music by Philip Glass
Cinematography Dick Pope
Editing by Naomi Geraghty
Studio Bob Yari Productions
Contagious Entertainment
Distributed by Yari Film Group Releasing
Release date(s)
August 18, 2006
Running time 110 minutes
Country United States
Language English
Budget $17 million
Box office $87,892,388
================
பைனல்கிக்.
இந்த படம் பார்த்தேதீரவேண்டிய திரைப்படம்... கடைசியில் இன்ஸ்பெக்டர் நாம் எங்க எல்லாம் லூஸ் ஹோல் விட்டோம் என்று நினைத்து பார்க்கும் காட்சி சமீபத்தில் ஸ்பெஷல் 26 இந்தி திரைப்படத்தில் உபயோகபடுத்தி  இருப்பார்கள்... படம் பார்த்து முடிக்கும்  போது ஒரு நிறைவை கொடுக்கும் இந்த திரைப்படம் என்பது உத்திரவாதம்.
===============


படத்தின் ரேட்டிங்...

பத்துக்கு எழரை...

============
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

7 comments:

 1. The Illusionist படத்துக்கு கதை சுருக்கம் இப்படித்தான் எழுதினேன்..  The Illusionist -2006/உலகசினிமா/அமெரிக்கா படத்தின் கதை என்ன?

  மோடி வித்தைக்காரன் Edward Norton அப்பா தச்சு வேலை செய்பவர்...சின்ன வயதில் ஒரு மோடி வித்தைக்காரன் செய்யும் வித்தைகளில் மயங்கி இவனும் வித்தைகள் கற்றுக்கொண்டு வித்தைகள் செய்வதில் வல்லவன் ஆகின்றான்... இளம்பருவத்தில் சோபியா என்ற வியன்னா அரசகுடும்பத்து பெண் மீது காதல் கொள்கின்றான்.. சாதாரணமாக இருக்கும் இளவரசன் ,திவ்யா காதலையே அடிச்சி உதைச்சி ,பிரிய வச்சி இந்த காலத்துல அழகு பார்க்கின்றோம்...

  1889 இல் அதாவது இரண்டு நூற்றாண்டுக்கு முன் சும்மா விடுவாங்களா...? அடிச்சி உதைச்சி பிரிச்சிடுறாங்க... ஆனா எட்வர்டு லவ்வர் சோபியா தன்னை எதிரிங்க கிட்ட இருந்து மறைய வச்சி தன்னை காப்பாற்றுவான்னு நினைக்கற.. ஆனா அவன் வித்தை புஸ்ஸூன்னு போயிடுது... நாடு விட்டு நாடு போறான்,.. இன்னும் பல வித்தைகள் கத்துக்கிட்டு திரும்ப வியன்னா வரான். அவன் காதலி சோபியா அந்த நாட்டு அரசனுக்கு மனைவியாக போகின்றாள்.. ஒரு சாதரண மோடிவித்தைக்காரன் தன் காதலியை கை பிடித்தான இல்லையா என்பதை வெண்திரையில் காணுங்கள்.


  போஸ்ட் பண்ணிட்டு பேஸ்புக்கை பார்த்தா இளவரசன் இறந்துவிட்டாதாக நியூஸ்..ஆழ்ந்த அனுதாபங்கள்..... அடக்கொடுமையே...rip

  ReplyDelete
 2. Nice review. Illusionist is a fantastic movie. But I differ on your comment about,Edward Norton "அனேக படங்களில் மொக்கையாக நடிக்கும் நடிகர் இவர்". He is an amazing actor under used! If you get a chance watch 'American history X','Red Dragon (part II of Hannibal Lector/Silence of the lambs)' and of course 'Fight Club'.

  ReplyDelete
 3. Nice review. Illusionist is a fantastic movie. But I differ on your comment about,Edward Norton "அனேக படங்களில் மொக்கையாக நடிக்கும் நடிகர் இவர்". He is an amazing actor under used! If you get a chance watch 'American history X','Red Dragon (part II of Hannibal Lector/Silence of the lambs)' and of course 'Fight Club'.

  ReplyDelete
 4. Anna..
  Neenga movie review eluthurathavida introthanna ella movieskkum super...

  -Kavi Saran

  Anna.. Saran ungakitta konjamthan pesunangalam... ungalukku call pannanum entru sonnanga...

  Eppanna ivvalavu movies pakkureenga...
  annikoda pesunathu santhosam.. kettatha sollunganna..
  pappa eppadi irukkanna...

  Treatment karanama konjam busynna... athan call pannala..


  ReplyDelete
 5. It is my favorite movie. Edward Norton is very good actor

  ReplyDelete
 6. நன்றி அன்னவுன்

  நன்றி யாழ்.

  நன்றி கவிதா... கண்டிப்பா பேசறேன்.

  ReplyDelete
 7. என் ஹார்ட் டிஸ்கில் பலநாட்களாக இருந்து சென்ற வருடம் தான் பார்த்தேன் கிளைமாக்ஸ் சரியான வகையில் அளிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இவர்கள் காதலில் வெல்ல அப்பாவித்தனமாக இளவரசன் இறந்து போகிறான். நீங்கள் சொல்வது போல் பிரஸ்டீஜ் படம் போலவே சற்று தெரிகிறது (செட் மற்றும் கதை நடக்கும் காலம் என்பதால் கூட இருக்கலாம்) சரி ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் சீரியல்ஸ் பார்த்திருக்கிறீர்களா - தேடி ரொம்ப நாள் கழிச்சி இப்போ யுடுபில் இருக்கு

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner