MORPHINE-2008/உலகசினிமா/ரஷ்யா/போதையில் வாழ்விழந்த இளம் ரஷ்யடாக்டர்.


  அதீத போதை பழக்கத்துக்கு ஆட்பட்டவர்கள் எல்லோருமே அதை வேண்டும் என்றே தொட்டு இருக்க மாட்டார்கள்...
நண்பர்கள் விளையாட்டுக்கு  தம் அடிக்க சொல்லி  வற்புறுத்திக்கொடுப்பது...ஒரே ஒரு பெக்தான்...  எந்த போதையும் இருக்காது என்று தைரியமூட்டுவது..  அந்த காலத்துல வெத்தலை பாக்கு போடலை அது போலத்தான் பான்பாராக்கும் சும்மா போடு என்று  நம்பிக்கை கொடுப்பது என்றதான் போதை நமக்கு அறிமுகமாகின்றன...

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? எந்த  போதை பொருளையும் முதல் முறையாக வலுக்கட்டாயமாக திணிக்கும் போது உடல் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை.. வாந்தி , மயக்கம் என்று எதையாவது செய்து வைக்கும்... ஆனால் மீறி அதன் மீது வன்முறையாக திணிக்கும் போது வேறு வழியில்லாமல் என் சான் உடம்பு போதை மருந்துகளிடம் சரண்டர் ஆகி விடுகின்றது...

=================
MORPHINE-2008/உலகசினிமா/ரஷ்யா படத்தின் ஒன்லைன்.


அலர்ஜிக்கு  போதை  ஊசி போட்டுக்கொண்ட இளம் டாக்டர், போதைக்கு அடிமையாகி விடுவதுதான்  படத்தின் ஒன்லைன்.

===========

MORPHINE-2008/உலகசினிமா/ரஷ்யா படத்தின்  கதை என்ன?

1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள ஒதுக்குபுறமான கிராமத்துக்கு மருத்துவனாக பொறுப்பு ஏற்க்கவருகின்றான்... கத்துக்குட்டி டாக்டர்தான் என்றாலும் தன் திறமைகாரணமாக பல உயிர்களை  காப்பாற்றுகின்றான்...டாக்டருக்கு டீப்திரியா அலர்ஜி ஏற்ப்படுகின்றது... அந்த அலர்ஜியை தடுக்க மார்பின் போதை மருந்தினை போட்டுக்கொள்கின்றான்..ஆனால் அலர்ஜிக்கு  போதை  ஊசி போட்டுக்கொண்ட இளம் டாக்டர், போதைக்கு அடிமையாகி வாழ்விழந்த கதைதான் மார்பின் என்கின்ற இந்த ரஷ்ய திரைப்படம். மீதி என்ன என்பதை வெண்திரையில் காணுங்கள்.

=================
படத்தின் சுவாரஸ்யங்கயில் சில..

முதலில் இந்த ஊரில் காட்டப்படும் பனி சூழ்ந்த கிராமத்தை பார்க்கவே இந்த திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்று சொல்லுவேன்.
 என்ன ஊர்? எங்கே பார்த்தாலும் பனி பனி....ரயில் அந்த பனி துகளின் ஊடே பயணிப்பது அழகோ அழகு..

1917 களில் மருத்துவரை கடவுளுக்கு  இணையாக போற்ப்படுவதை முதல் இரண்டு  காட்சிகளில்  காட்டிவிடுகின்றார்கள்.

குழந்தை எசகு பிசகாக மாட்டிக்கொள்ள அதனை மிக திறமையாக  புத்தகம் படித்து விட்டு சக பிரசவம் செய்யும் காட்சிகள் அருமை.

 விபத்தில் காலில் அடிப்பட்டு வரும் பெண்ணை ஆப்பரேஷன் செய்யும் காட்சிகளை நீங்கள் யாராவது பார்த்தீர்கள் என்றால் இரண்டு நாளைக்கு சாப்பாடு  தூக்கம் மிஸ்சிங். காலை அப்படியே கட் பண்ணி... உள்ளே இருக்கும் எலும்பை தோண்டி புறையோடிபோகாமல் இருக்க மருந்து வைத்து கட்டுவது செம டீடெயில்.

ஒரு விபாச்சாரி தன் யோனியில் பால்வினை நோய் பீடித்து இருக்கின்றதா என்று கால்களை விரித்து ஸ்டைலாக புகை பிடிக்க அவன் நோயை ஆராயும் காட்சி  இங்கே நினைத்துக்கூட பார்க்க முடியாது..

பனியில் குதிரைகள் பனி பொழிவில் வைத்தியத்துக்கு அழைத்து  செல்லும் காட்சிகளை பார்க்கும் போது மார்கழி மாதக்குளிருக்கே காது அடைக்க மப்ளர் சுற்றுக்கொள்ளும் நம்மவர்களை நினைத்தால்   சிரிப்பாக இருக்கின்றது.

தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மார்பினை எடுத்து யூஸ் செய்த குற்றஉணர்வுகாட்சிகள் நினைவில் நிற்கும்.

போதையால் அவன் மெல்ல மெல்ல  வீழ்வது கிளைமாக்ஸ் அருமை..  நோ அதர் கோ எனும் போது அவன் செய்யவான்? அவனோடு இருந்த தாதியிம் போதை கேசாக மாறி உயரை விட மார்பின் தேவை என்பதை உணர்த்தும் காட்சிகள் செமை.

1975 அம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு கிராம மருத்துவரின் நாட்குறிப்பு என்று சிறுகதைதொகுப்பை மிக அழகாக திரைக்கதையாக்கி இருக்கின்றன்றார்.இயக்குனர். Aleksei Balabanov

==================

படத்தின் டிரைலர்.


================
படக்குழுவினர் விபரம்.



Directed by Aleksei Balabanov
Written by Mikhail Bulgakov, Sergei Bodrov, Jr.
Starring Leonid Bichevin, Ingeborga Dapkūnaitė, Andrei Panin
Cinematography Alexandr Simonov
Release date(s) November 27, 2008
Country Russia

Language Russian

==================
பைனல்கிக்.
 இந்த படம் போதையா எனக்கா எந்த பழக்கமும் என்னை ஆட்படுத்தாது.. எப்போது வேண்டுமானாலும் போதை பிடியில் இருந்து வெளிவந்து விடுவேன் என்ற தடிப்பான தன்னம்பிக்கை படிதான் போதை மருந்துகளை எடுத்துக்கொள்ளுகின்றார்கள்.. உண்மை என்வென்றால் எப்பேர்பட்ட படித்தவனையும் போதை  பழக்கம் சின்னா பின்ன படுத்திவிடும் என்பதை கவித்துவமாய்  சொல்கின்றது இந்த ரஷ்ய திரைப்படம். ஆகவே இந்த திரைப்படம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் என்பதை மறவாதீர். கண்டிப்பாக வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்.

=================
படத்தோட ரேட்டிங்

பத்துக்கு ஏழரை.

================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

====================


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. முதலில் இந்த ஊரில் காட்டப்படும் பனி சூழ்ந்த கிராமத்தை பார்க்கவே இந்த திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்று சொல்லுவேன்.
    என்ன ஊர்? எங்கே பார்த்தாலும் பனி பனி....ரயில் அந்த பனி துகளின் ஊடே பயணிப்பது அழகோ அழகு..// பாத்துர வேண்டியது தான்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner