Dead Man Down-2013 பழி வாங்குதல் ஒரு போதும் சாகாது.




கரும்பு ஜூஸ் கடையில் கரும்பை முதல் முறை மெஷினில்  விட்டு,  சாரு எடுத்து,
இரண்டாம் முறை மடித்து விட்டு , கொஞ்சம் ஸ்குருவை  டைட் செய்து சாரு எடுத்து,  இரணடாக மடித்த  கரும்பு  சக்கையில், பாதி எலுமிச்சையும், இஞ்சியையும் வைத்து தினற தினற உள்ளே விட்டு சாரு எடுத்து,  நான்காவது முறை நாலாக மடித்து மெஷினில் உள்ளே விட்டு சாரு எடுக்க..... 

மெஷின் கரும்புகையை கக்கி விட்டபடி ஓத்தா கஞ்ச பயலுகளா என்டா என்னை இப்படி போட்டு படுத்தறிங்க? என்று கரும்பு மெஷின் நான்காவதாக மடிக்கப்பட்ட  கரும்பு சக்கையை உள்ளே நுழைக்கும் போது முனருமே... அப்படி ஒரு   முனறல்  இந்த திரைக்கதையை பார்க்கும் போது நிச்சயம் சினிமா ஆர்வலர்களுக்கு ஏற்ப்படும்.... 


காரணம் அப்படி சக்கையாக்கப்பட்டு ,சாரு எடுக்கப்பட்ட  கதை, திரைக்கதை, .... 

அதே ரத்தத்துக்கு ரத்தம்... பழிக்கு பழிகதைதான்.....ஆனாலும் Dead Man Down-2013  படத்தை உற்சாகமாக  பார்க்க வைத்து இருக்கின்றார்கள்..


=========
Dead Man Down-2013 படத்தின் ஒன்லைன்.


பழி வாங்கும் வன்மம் ஒரு போதும் குறையாது... நாட்கள் ஆகுமே தவிர பழிக்கு பழி என்பதே வேதபாடம் ....என்பதை  சொல்லும்  ஒன்லைன்..


===========
Dead Man Down-2013 படத்தின் கதை என்ன?

 ரொம்ப சிம்பிள்... அப்பாவி கணவன் விக்டர் அவன் மனைவி மற்றும் குழந்தையோடு வேலை தேடி அமெரிக்காவில் ஒரு அப்பாட்மென்ட்டில் தங்குகின்றான்...  இரண்டு மாபியாக்கள்   சண்டையில் மனைவி குழந்தையை பறிகொடுக்கின்றான்... அவன்   பழிக்கு பழி  வாங்கினானா? என்பதை துப்பாக்கி சத்தங்களுடன்  வெண்திரையில் பார்த்து  மகிழுங்கள்..

==================
 படத்தின் சுவாரஸ்யங்கள்..


டோட்டல் ரீகல் படத்துக்கு பிறகு   கோலின் பேரல் ரொம்ப பிரஷ்ஷாக இந்த படத்தில் வளம் வருகின்றார்... அந்த வன்ம்ம் துடிப்பு, பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளில் பின்னுகின்றார்.,

த கேர்ள் வித் டிராகன் டாட்டு படத்தில் நடித்த கையோடு இயக்குனர் Niels Arden Oplev இந்த படத்திலும் Noomi Rapace எதிர்  அப்பாட்மென்ட் பெண்ணாக நடிக்க வைத்து இருக்கின்றார்... தன் அழகு விபத்தால் சிதைந்து விட்டதை உணர்வு பூர்வமாக நடித்து பார்வையாளனுக்கு உணர்த்து கின்றார்..

எனக்கு அவனை கொல்லனும் இல்லைன்னா வீடியோ போலிசுக்கு போய் விடும் என்று சொல்லும் காட்சி திடுக் திருப்பம்..


 அதே போல கூரியர் சேர்ந்து விடும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது  அந்த சிப்பை அனுப்பவில்லை என்று  சொல்லி படம் பார்ப்பவர்கள் டென்ஷனை அதிகபடுத்துகின்றார் Noomi...

ஒரு குழந்தையின் அப்பா என்ற ஒரே காரணத்தால் நண்பனை கடைசி வரை காப்பாற்றுகின்றா ர் கோலின் பேரல்...

என் அப்பா என்னை பார்த்துக்கொள்ளுவார் என்று சொன்ன  தன் குழந்தையின்  நம்பிக்கையை காப்பாற்றாமல் போய் விட்டோமே  என்று துடிப்பதும் அதுதான் பழிவாங்குதலுக்கு முக்கியகாரணம் என்று   காட்சி படுத்திய இடங்கள் அருமை.


 நான் லீனியர் பிளாக் பேக்ரவுண்ட் மாபியா பிலிம் வரை இந்த திரைப்படம்..


 ==================
படத்தின் டிரைலர்.




=======================
படக்குழுவினர் விபரம்.


Directed by Niels Arden Oplev
Produced by
Neal H. Moritz
J.H. Wyman
Written by J.H. Wyman
Starring
Colin Farrell
Noomi Rapace
Dominic Cooper
Terrence Howard
Isabelle Huppert
Music by Jacob Groth
Cinematography Paul Cameron
Editing by
Timothy A. Good
Frédéric Thoraval
Studio
Original Film
Frequency Films
IM Global
WWE Studios
Distributed by FilmDistrict
Release date(s)
March 8, 2013
Running time 117 minutes[1]
Country United States
Language Albanian
English
French
Spanish
Budget $30 million
Box office $18,074,539

================
பைனல்கிக்.

கருப்பு மெஷினில் கதற கதற சாரு பிழிந்த கதைதான் என்றாலும் வடிகட்டியில் வண்டல்களை வடிகட்டி விட்டு பிரஷ்ஷாக கொடுத்து இருக்கின்றார்.... நிறைய டுவிஸ்ட்டுகள் மெஷின் கரும்புகையையும் கதறலையும் மறக்க  செய்கின்றன... பார்க்கவேண்டிய திரைப்படம்.

========================
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஐந்தரை.


===================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. அடப்பாவிங்களா நல்லா இருந்திச்சி நல்லா இல்லை.. படம் என்னவா இருந்திச்சின்னு பார்த்தவங்ளாவது சொல்லி இருக்கலாம்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner