படுத்தி எடுக்கும் சென்னையின் குறுகலான சாலைகள்.


 சென்னையின் உருவாக்கம் தொடங்கியது   வடசென்னையில்தான்.
வெள்ளைக்காரர்கள் தான் சென்னையை ஒரு ஷேப்பாக உருவாக்கினார்கள் என்றாலும், மெயின் ரோட்டை தவிர்த்து உள்கட்டமைப்பு காலைகள்  எல்லாமே 15 அடி சாலைகளாத்தான் இருக்கின்றன.. புதுச்சேரி  போல   நேர்த்தியான சாலை வடிவமைப்பில்  வெள்ளைக்காரர்கள் இந்த நகரத்தை வடிவமைக்கவில்லை... சரி அதெல்லாம் பழங்கதை…

பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு பெங்களூர் பெருநகர வளர்ச்சி குழுமம் முழித்துக்கொண்டு, சாலை  விரிவாக்கம் செய்ய வில்லை என்றால்  பெங்களுர்  ஸ்தம்பித்து விடும் என்பதால், 200 வருட மரங்களை கூட வெட்டி சாலையை விரிவாக்கினார்கள்… அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள், வழக்கு போட்டார்கள்..சுற்று சூழல் மாசு என்றார்கள்..ஆனாலும் எதிர்ப்பை மீறி அதனை  செயல்டுத்தினார்கள்.. ஆனால் இன்று மடிவாளாவில்  மட்டும் சாலையை அகலபடுத்தி ஒரு சப்வே கட்டவில்லை என்றால்?? மடிவாளவை கடந்து  மெஜஸ்ட்டிக் செல்ல எப்படியும் இரண்டு  மணி நேரத்துக்கு மேல் ஆகும்…

பெங்களூரில் 200 வருட மரங்கள்  கட்டிடங்கள் எல்லாம் இடித்து தள்ளிதான் ரோட்டை அகலப்படுத்தினார்கள்…  ஆனால் இங்கே இன்னும்  சென்னை சாலைகளை அகலபடுத்த எந்த ஆட்சியாளர்களும் களம் இறங்கவில்லை என்பதே உண்மை.  

ஆனால் திமுக ஆட்சியில் ஸ்டாலின் மேயராக  இருந்த போது பாலங்கள் கட்டி  தென் சென்னை போக்குவரத்துக்கு சீராக இயங்க புண்ணியம் கட்டிக்கொண்டார்... ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சி பெரம்பூர் பாலத்தை கட்டாமல்  வீம்புக்கு விட்டு வைத்து, திரும்ப திமுக ஆட்சியில் பெரம்பூர் பாலத்தை  கட்டி முடிந்து பொதுமக்களுக்கு அற்பணித்தார்கள்..   இதில் என்ன ஈகோ  இருக்கின்றது என்று தெரியவில்லை...

 அதே போல ஒரு பாலம் அதிமுக  ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும்  இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை... அது எந்த பாலம் என்றால் போரூர் பாலம்தான்... இன்றும் மூன்று வருடம் காத்திருந்து அடுத்த  ஆட்சி வந்த பிறகுதான் விமோச்சனம் பிறக்கும்  என்று நினைக்கின்றேன்.... இல்லை திரும்புவம் இவர்களே என்றால் பத்து வருடமானாலும் அதை கட்ட போவதில்லை.. அப்படி ஒரு வேளை இன்னும் ஒரு வருடத்தில்  கட்டி முடிக்கப்பட்டால், போய்ஸகார்டன்  பக்கமோ அல்லது கொட நாட்டு பக்கமோ , அல்லது ஸ்ரீரங்கன் இருக்கும் பக்கமோ, நெடுஞ்சான் கிடையாக  விழுந்து திசை பார்த்து வணங்கும் எண்ணம்  எனக்கு இருக்கின்றது.

 நகர போக்குவரத்து விழி பிதுங்குவதை பார்த்துதான்...திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்ப்பட்டது.. அதுக்கு எதிர்ப்பாக மோனோ ரயில் கொண்டு வருவேன் என்று சொல்லி இருக்கின்றார்கள்... கூவம் மேலே பறக்கும் சாலைகள் அமைத்து போக்குவரத்தை குறைக்க முயற்சி  செய்தார்கள்.... பாதி பாதி பில்லர் எழுப்பிய நிலையில் அதுவும் நிப்பாட்டி  விட்டார்கள்... துணை நகரம் திறக்க இருந்தார்கள் .. அதற்கும் எதிர்ப்பு.. விமானநிலைய ஸ்ரீபெரும்பத்தூரில் தொடங்க இருந்தார்கள்.. அதுக்கும் எதிர்ப்பு என்று  எல்லாத்துக்கும் எதிர்ப்பு...

சாலை விரிவாக்கத்தை கையில் எடுத்தால்  பொது மக்கள் போராடுகின்றார்கள்  அல்லது கேஸ் போட்டு  விடுகின்றார்கள்... நங்கநல்லூர் மக்கள் ஒரே ஒரு சப்வேயில்  சென்று வந்தார்கள்..அனைத்து வாகனங்களும் சென்று வந்த காரணத்தால்  விழி பிதுங்கி விடும்.. நல்லவேளையாக தில்லை கங்கா நகர்  பெரிய சப்வே கட்டிய ஒரே காரணத்தால் இப்போது நங்கநல்லூர் ஒரளவுக்கு போக்குவரத்து நெரிசல் இன்றி நிம்மதி பெருமுச்சி விடுகின்றது..

சென்னையில் 20 வருடத்தில்  வீடு, மரங்களை  எல்லாம்  உடைத்து, காலி செய்து உருவாக்கிய ரோடு எதுவென்றால் மத்திய கைலாஷில் இருது சிறு சேரி வரை அமைத்த ஐடி காரிடர் ரோட்டினை சொல்லலாம்...  அப்படி அந்த சாலை மட்டும் அமைக்கவில்லை என்றால் யாரும் அந்த பக்கம் குறித்த நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாது... இப்போதும் அப்படித்தான்.. ஆனால் சாலை விரிவாக்காமல் இருந்து இருந்தால் சற்றே யோசித்து பாருங்கள்..

கிண்டி மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், பாடி மேப்பாலம், இவைகைளை மட்டும் கட்டவில்லை என்றால் சிக்னலில் நின்று  சென்னை வாசிகளுக்கு பாதி வாழ்நாள் காணாமல் போய் இருக்கும்.

  பூந்தமல்லியில் இருந்து மூன்று வழிகளில் பாரிசை அடையாலாம்...

பூந்தமல்லி /கோயம்பேடு/அமைஞ்சக்கரை/ பாரிஸ்

பூந்தமல்லி/ போரூர் /வடபழனி/ கோடம்பாக்கம்/வள்ளுவர் கோட்டம்/மவுண்ட்ரோடு/பாரிஸ்

பூந்தமல்லி/ போரூர்/கிண்டி/சைதை/டிஎம்எஸ்/எல்ஐசி/ பாரிஸ்

 கோயம்பேட்டில் இருந்து அண்ணாநகர் ஆர்ச் தாண்டுவது ஒரு பெரியகலை... அப்படியே தாண்டினாலும் அமைஞ்சகரை பஜார், அதை தாண்டி லட்சிமி திரை அரங்கம் அருகே  தாண்டியதுமே ரோடு குறுகலாகி ஒரு பேருந்து மட்டுமே செல்லும் அளவுக்கு ரோடு இருக்கும்... மூன்று  பாதைகளில் வரும் வாகனங்கள்  ஒரே பாதையில்  குறுகும் போது எப்படி  செல்ல முடியும்..  சொல்லுங்கள்..?

போரூர் கோடம்பாக்க வழியை எடுத்துக்கொண்டால்.... போரூரில் இருந்து வளசரவாக்கம் வரை ஒரு பேருந்து செல்லும் அளவுக்குதான் பாதை இருக்கின்றது. நேஷனல் தியேட்டர் வேம்பூலி அம்மன் கோவிவல் அருகே போய் விட்டால் அவ்ளவுதான் காலை குறுகிவிடும் இன்னும்  (சந்திராமால்)நேஷனல் தியேட்டரை தாண்டினால் விருகம்பாக்கம் மார்க்கெட்  அருகே இன்னும் சாலை குறுகி ஒரு பேருந்து செல்ல மட்டுமே வழி இருக்கின்றது.... அதையும் தாண்டி போனால்,வடபழினியில் இருந்து பவர் ஹவுஸ் வரை குறுகலான சாலையில்தான் பயணம் செய்ய வேண்டும்... வள்ளுவர் கோட்டம் தாண்டி பாம்குரோவ் வரை குறுகிய  சாலைதான்.. அதுவும் அந்த குட்ஷெப்பர்ட் மண்டபம் அருகே ஒரு பேருந்துதான் செல்ல முடியும்...

 எல்லாத்தை விட கொடுமை  போரூர் ,ராமபுரம், நந்தம்பாக்கம், பட்ரோடு கிண்டி சாலைதான்... அடையாறு, திருவான்மியூர் பெசன்ட் நகர் வாசிகள்.. ஐடி காரிடரில் வேலை  செய்பவர்கள் எல்லோரும் போரூர் செல்ல  அல்லது பெங்களூர் செல்ல முக்கியமான சாலை இது.. முகலிவாக்கத்தில்  டிஎல்எப் ஐடி  நிறுவனம் வந்த உடன் , வாகன பெருக்கத்துக்கு அளவே இல்லாமல் போய் விட்டது... பட்ரோடு என்று ஒரு இடம் உண்டு.... நாலு வழிப்பாதையில் வரும் வாகனங்கள் பட்ரோடு வளைவில் அனுதினமும் சிக்கி சின்னபின்னமாக  விழி பிதுங்குகின்றார்கள் வாகன ஓட்டிகள்.  அந்த இடத்தை கடக்க ஏழ மலை ஏழுகடல் தாண்ட வேண்டி இருக்கின்றது,... கிண்டியில் இருந்து வரும் போது இந்த சாலையில்  ஹானஸ்ட் என்ற சவப்பெட்டிக்கடை ரோட்டில்  நீட்டிக்கொண்டு இருக்கும் .. அதே போல பட்ரோடு மசூதியும் சாலையில் நீட்டிக்கொண்டு இருக்கும். இந்த பக்கம்  வீடுகள்...ஒரே ஒரு பேருந்து போகும் குறுகலான இந்த வழியில் தினமும்  லட்சக்கனக்கான  வாகனங்கள் பிழைப்புக்காக சென்று கொண்டு இருக்கின்றன...

போக்குவரத்து போலிசாருக்கும் இந்த இடம் தலைவலிகொடுக்கும் இடம்தான்... இங்கே டிராபிக் அதிகமானால் அது ஜிஎஸ்ட்டி சாலையில் எதிரொலிக்கும்...போலிஸ்காரார் ஒருவரிடம் இது குறித்த  விசாரித்த போது, எல்லாத்துக்கும் காரணம்... சவப்பெட்டி கடைக்காரர் என்றார்.. அவர் வழக்கு போட்டு அது நிலவையில் இருப்பதாகவும் அதனால்  சாலை விரிவாக்கம் செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட்டார்...

சமீபத்தில் உயர் நீதிமன்றம் மெட்ரோ ரயில் பணிக்கு இடையூராக இருக்கும் கட்டிடங்களை கபளீகரம் செய்யலாம் என்று ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றது.. முக்கியமாக தொண்மையான கட்டிடங்கள் மேல் கை வைக்க கூடாது என்று சொல்லி இருக்கின்றது.. அப்படியும் மவுன்ட்ரோடு பீஆர் அண்டு சன்ஸ் கட்டிடம் பாதிக்கு மேல் சுவாகா...

இதே தீர்ப்பை முன்  மாதிரியாக வைத்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும்  கட்டிடங்களை அப்புறபடுத்தி சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். அது  கோவிலாக சர்ச் ஆக மசூதியாக எதுவாக இருந்தாலும் அப்புறபடுத்தி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

அப்படி நிறைய்ய எதிர்ப்புகள் எழுந்துதான் ஐடி காரிடர் உருவானது என்பதை நாம்  மறக்க கூடாது....

 அசோக்பில்லரில் இருந்த கோயம் பேடு செல்ல சிவன் கோவில் பஸ்ஸ்டாப் விழி பிதுங்கி வேடிக்கை பார்க்கும் ஆனால் இப்போது லக்ஷ்மன் சுருதியில் இருந்து சிவன் கோவில் வரை ரோட்டை அகலபடுத்தி இருக்கின்றார்கள்.. அது போல சென்னையின் முக்கியசாலைகளை அகலபடுத்த வேண்டும்.

மக்கள் தொகை பெருக்கமும் வாகன பெருக்கமும் பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தது போல இப்போது  இல்லை என்பதை  ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உணரவேண்டும்...

முதல்வர் ஜெ ஒரு முறை நான் குறிப்பிட்ட இந்த மூன்று சாலைகளில்  மாறுவேடத்தில்  காரில் பயணப்பட்டார் என்றால்  மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினறுவதை உணருவார். உடனே போர்க்கால நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன்..இந்த பதிவு எழுத முக்கியகாரணம் சமீபத்தில்  திரையரங்கில் மக்கள் நல அரசு என்று நலத்திட்டங்களை காண்பித்தார்கள்..   சென்னையில் சாலை விரிவாக்கமும் உள் கட்டமைப்பும், மக்கள் நலம் சார்ந்த விஷயம்தான்..என்பதால்தான் இதை எழுதுகின்றேன்.

இங்கே   இருக்கும் திருவள்ளுருக்கே ஹெலிகாப்படரில் சென்று இறங்குபவர்தான்   நம் முதல்வர்... அவருக்கு இந்த போக்குவரத்து நெரிசல் தெரிய வாய்ப்பில்லை... அதே போல கொட நாட்டிலும் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் இருக்காது...அதே போல சென்னை விமான நிலையம் செல்ல வேண்டும் என்றாலும் போக்குவரத்தை நிறுத்தி   நம் கண் முன்னால் அவர் மக்கள் நல பணி செய்ய விரைவதை நாம் அனேக முறை பார்த்து இருக்கின்றோம்...

சென்னை சாலை விரிவாக்கத்தை எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அதிமுக அரசும், அமைச்சர்களும் அதிகாரிகளும், முதல்வரின் உத்தரவு பேரில்,தடைகளை தகர்த்து எரிந்து அவர் போர்க்கால அடிப்படையில் விரைந்து  செயல்படுத்துவார் என்று நம்புவோமாக.


நம்பிக்கை அதானே எல்லாம்.
 ===========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.=/====


நினைப்பது அல்ல நீ

 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

11 comments:

 1. 2 வருடங்களுக்கு முன்பு நாங்கள் சென்னை வந்திருந்தபொழுது ரங்கநாதன் தெருவில் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கிக்கொண்டோம் ... அந்த நிகழ்வை நினைத்தாலே இப்போதும் நெஞ்சு படபடக்கிறது....

  ReplyDelete
 2. Valid & good Post But no use for these govts

  ReplyDelete
 3. good post....all are watching the government.....

  ReplyDelete
 4. நல்லது ஜாக்கி ! இது எல்லா ஊருக்குமே பொருந்தும்.ஆனால் நடவடிக்கை எடுக்க அரசியல்வாதிகளே தடையாக இருக்கிறார்கள் .நீதித்துறை தானே முன்வந்து ஒரு வழக்காக எடுத்து தீர்வு காண முயல வேண்டும் அது சட்டமாக்கப்படவேண்டும் .இடைக்கால தடை உத்தரவு யாருக்கும் வழங்கக்கூடாது நல்ல அதிகாரிகள் நினைக்கவேண்டும்

  ReplyDelete
 5. சென்னை வந்து எனக்கு ரூட் தெரியாம எங்காவது மாட்டிகிட்டா நான் உங்களுக்குதான் போன் பன்னுவேன்....

  ReplyDelete
 6. சாலை வசதியை பொறுத்தவரை அதிமுக காரர்கள் மந்தம்தான்! பார்ப்போம்!

  ReplyDelete
 7. நாங்கள் முகப்பேரில் இருந்தபோது சென்னையின் நெரிசலை அனுபவித்து இருக்கிறோம்...

  நல்ல பகிர்வு....

  ReplyDelete
 8. when you took this picture...no one is there during day time brother...strike,or govt holiday...amazing

  ReplyDelete
 9. maratha vetinadhu nala dhan banglore la veyil jasthi ayiduchu jackie....traffic la kastapattalum maram vetakoodadhu....veyil kalathula chennai ku nigra ipo banglore la veyil adikudhu

  ReplyDelete
 10. maratha vetinadhu nala dhan bamnglore la veyil jasthi ayiduchu ... veyil kalathula chennaiku nigra veyil adikudhu jackiee

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner