ஆல்பம்.
தனி தெலுங்கான உருவாகினால் என் பதவியை
ராஜினாமா செய்ய போகின்றேன் என்று ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி அறிவித்து இருக்கின்றார்....
எனக்கென்னவோ
இது காங்கிரசின் சித்து விளையாட்டு என்று
எண்ணுகின்றேன்.. மத்தியில் அளும் காங்கிரஸ்....நாங்கள் தனி தெலுங்கானா
உருவாக்கத்தான் முனைந்தோம்... பட் அங்கே இருக்கும் மாநில முதல்வரே எதிர்ப்பு தெரிவித்தால் நாங்கள் என்ன செய்வது?
என்பதாக பொது மக்களிடம் கேள்வி கேட்டு
விட்டு.. கிரண் முதுகில் மத்திய அரசு நல்லா நடிச்சேப்பா என்று
தட்டிக்கொடுக்கின்றது என்று எண்ணுகின்றேன்.
==================
டெல்லி நாடளுமன்ற சாலையில் அதிகாலை இரண்டு மணிக்கு 30க்கு மேற்ப்பட்டவர்கள்
பைக் ரேசில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்... போலிசார் கண்டித்தும், திரும்பவும்
சேசிங், வீலிங் என்று ஈடுபட்டு
இருக்கின்றார்க்ள்... பைக்கில் காற்றை
இறக்க போலிசாரை தாக்கி இருக்கின்றார்கள்.. இதனால் போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தி
இருக்கின்றது... பைக்கில் பின்னால் உட்கார்ந்து சென்ற கரண் பான்டே முதுகில்
துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து போய் இருக்கின்றார்... அவர் வீட்டுக்கு ஓரே
பிள்ளையாம்.. அப்பா அம்மா இரண்டு பேரும் பிரிந்து வாழ்கின்றார்கள்.. கரண்
அவர் அம்மாவோடு வசித்து வருகின்றார்...
பாஸ்ட் பியுரியஸ் படம் பார்த்துட்டு பைக் ரேஸ் போனா, அதுவும் 30 பேர் இருக்கோம்
... போதையில இருக்கோம்,... எவன் என்ன செஞ்சிடுவான்னு பார்த்துடலாம்ன்னு நினைச்சா
இப்படித்தான் ஆவும்..
=========================
ஒரு ராஜ்ய சபா சீட்டின் விலை 100 கோடி ரூபாய்
என்று, ஹரியானா காங்கிரஸ் எம்பி பைரேந்தர் சிங் திருவாய் மலர்ந்து
இருக்கின்றார்...அப்படியே எல்லாத்துக்கும் எவ்வளவு ரேட் பிக்ஸ் பண்ணி
இருக்காங்கன்னு கெஜட்டுல வெளியிட்டு விடுங்க ..புண்ணியமா போவும்..
==================================
மிக்சர்.
காவிரியில் 100 ஆடி தண்ணி வந்ததும் மலர் தூவி
மகிழ்ச்சி தெரிவித்தாலும் கர்நாடகம் உபரி நீரை திறந்து விட்டு இருக்கின்றது.. எது
எப்படியோ அணை ரொம்பியது மகிழ்ச்சியே.
===========
நடிகை
மஞ்சுளா விஜயகுமார் இறந்த போது துக்கம் விசாரிக்க சென்ற விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசி முடிக்கும் போது,
விஜயகுமார் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று சொல்வதற்கு பதில் வாய் தவறி நன்றி
என்று சொல்லி விட்டார்...அதை போட்டு நம்மவர்கள் ரகளை விட்டு விட்டார்கள்.. வாய்
தவிறி பதட்டத்தில் யார் வேண்டுமானாலும் அப்படி சொல்லலாம்... டான்சி வழக்கில் நீதிபதி... முதல்வர் ஜெயை பார்த்து
கேட்கின்றார்...பொறுப்புள்ள பதவியில் இருக்கும் நீங்கள் இப்படி அரசு சொத்தினை வாங்கலாமா?
என்று.. உடனே முதல்வர் ஜெ சொன்னார்...
அந்த கையெழுத்து என்னுடையது இல்லை என்று... இதெல்லாம் தமிழக வரலாறு அதனால்
கேப்டனின் வாய் குழறலை விட்டு விடலாம்.
================
புரட்சி திலகம்... அது யாருப்பான்னு கேட்கறது புரியுது...? நம்ம சரத்குமார்
சார்தான்... அவர் கட்சி சார்பா நடந்த முப்பெரும்
விழாவில் கீழ்கண்டவாறு பேசினார்.
“தமிழகத்தில் நல்லாட்சி நடந்து
கொண்டிருக்கிறது. அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற
தேர்தலில் திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கக் கூடாது.“ என்று சொல்லி
இருக்கின்றார்...
தமிழ் நெஞ்சங்களே, ரத்ததின் ரத்தங்களே, உடன்
பிறப்புகளே, என் நெஞ்சில் குடி இருக்கும் மக்களே
புரட்சி திலகம் அவர்களின் வழி நடப்போம்..
=============
தற்கொலை நகரமாக சென்னை மாறி வருகின்றது...
முன்ன எல்லாம் அதிகமா பொம்பளை புள்ளைங்க
தற்கொலை பண்ணிக்கும்.... இப்ப என்னடான்னா
பசங்க தற்கொலை பண்ணிக்கிறாங்க.
இப்பதான் ரீசன்டா எக்ஸ்பிரஸ் மாலில் மாடியில் இருந்து குதித்து
ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டான்....28 ஆம் தேதி தாம்பரம்
ரயில்வே நடை மேம்பாலத்தில் இருந்து இன்போசிஸ்
இன்ஜினியர் பையன் குதிச்சி செத்தான் இந்த பையனுக்கு சொந்த ஊர் வெஸ்ட் பெங்கால்....... இரண்டு
நாளைக்கு முன்ன ஸ்பென்சர் , மூன்றாவது மாடியில் இருந்து ஒரு பையன் மேல இருந்து குதிச்சி செத்து போயிட்டான்....
என்னங்கடா நடக்குது...??
====================
பேஸ்புக் குற்றங்கள்...
ஸ்பெயினில் 80 கிலோ மீட்டர் வேகத்துல வளையற
வளைவுல ஒம்மால 190 கீலோ மீட்டர் ஸ்பீட்ல வளைஞ்சா அந்த ரயில் என்னத்துக்கு ஆகறது.. 70 பேர் ஸ்பார்ட்
அவுட்... அந்த டிரைவர் எருமைக்கு 13 வருஷ சர்விஸ் வேற.... அது மட்டும் இல்லை..
ரயில் ஸ்பீடா மீட்டரை போட்டோ எடுத்து பேஸ்புக்குல அப்லோட் பண்ணி இருக்கு... கோத்தா
எதுல திரில் இருக்கனும்ன்னு விவஸ்தை வேண்டாம்....???
=====================
கல்யாணத்துக்கு முன்ன ஆபிஸ்ல பிரண்ட்ஸ் உடன்
எடுத்த போட்டோவை பேஸ்புக்ல அப்லோட் பண்ணி
இருக்கும் திருமணம் முடிஞ்சி எதெச்சையாக அந்த பொண்ணோட பேஸ்புக்கை பார்த்த கணவன் , உன் பக்கத்துல நெருக்கமா நிற்கற ஆள் யாருன்னு
டார்ச்சர் பண்ணி அந்த பொண்ணு சூசைட் பண்ணிக்கிட்டு செத்தே போயிட்டா... அதனால்
பேஸ்புக்ல டூர் போன போட்டோ, கெட்டுகெதர்ல
எடுத்த போட்டோ எல்லாம் பேஸ்புக்ல அப்லோட் பண்ணாதிங்க...என்ன வரும் புருசன்
எப்படி பட்டவன் சொல்ல முடியாது... எனக்கு ஒரு பெண் தொழி
இருந்தா... பேஸ்புக்கே கதின்னு கெடப்பா.. ஒரு போட்டோ போட்டு 150 லைக் வாங்கலைன்னா?
அவளுக்கு தூங்கமே வராது... ஒரு நாள்
சும்மா ஒரு கேள்வி குறி போட்டா...
அவ்வளவுதான்...அதுக்கு ஒரு 100 லைக் வந்துச்சின்னா பார்த்துக்கோங்... அப்படி பட்டவளுக்கு கல்யாணம் நிச்சயம்
ஆச்சி...மாப்பிளை வீட்டுகாரவங்க பொண்ணு பார்க்க வீட்டுக்கு வரும் அன்னைக்கு
பேஸ்புக் அக்கவுண்ட் குளோஸ்.......................
ஹலோ ஜாக்கி... என்ன இப்படி சொல்லிட்டிங்...
யாரோ ஒரு பேடிப்பையனுக்கு என் சுயத்தை இழப்பதா... இப்படியே போனா பெண்கள் தலையில மொளகாய் அறைச்சிடுவாங்க.... நான் அப்படியேதான்
இருப்பேன்.... என்கின்றீர்களா? உங்கள் வீரத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் எனது வாழ்த்துகள்...
====================
ஆதார் அட்டையை இதுவரை நீங்கள் பதியவில்லையா? பதியவேண்டும்
என்று நினைத்தாவ் கீழ் கண்ட லிங்கில் உள்ள விபரங்களை படித்து விட்டு பயணடையுங்கள்.
================
கடந்த சில தினங்களில் பேஸ்புக்கில் நான்
பகிர்ந்தவை.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பெண் கூட
பாதிக்கப்பட்டக்கூடாது என்று போராடும் ஒரே பெண்ணிய போராளி,
எனக்கு தெரிந்து,
சேலம் சிவராஜ் வைத்தியர்தான். டிவியில் அவரது
அறச்சீற்றத்தையும், போராட்ட குணத்தையும் பார்த்து மிரண்டு போய்
இருக்கின்றேன்.தாத்தாவாகியும் என்னமா போராடுகின்றார்????
=================
இரண்டு வருடத்தில் தமிழகத்தில் நாலாயிரம்
கொலைகள்...டோன்ட் ஒர்ரி, நீங்க ரெஸ்ட் எடுங்க மேடம்.
=============
தேவி தியேட்டர் பின்னே இருக்கற சின்ன
டீக்கடையோடு இருக்கற டிபன் கடையில, ஒரு பரோட்டா ஒன்றரை ரூபாய்க்கு,
மூன்று பரோட்டா சாப்பிட்டு தண்ணி குடிச்சி
பசிய துரத்தனவனுக்கு, பிரியாணி என்பது எப்போதுமே பெரிய
விஷயம்தான்...
எனக்கு தெரிஞ்சி முஸ்லிம் நண்பர்கள் எனக்கு
அதிகம் கிடையாது... கடலூர் ஓடியில் இருக்கும் காதர் சுல்தான் இப்ப சிங்கபூர்ல
இருக்கார்... எனக்கு தெரிஞ்சி அவர்தான் எனக்கு கடலூரில் அதிகம் நெருங்கி பழகிய
முஸ்லீம் நண்பர்...
முஸ்லீம் திருமண வீடுகளில் போட்டோ ,
வீடியோ எடுக்க போகும் போது.. பிரியாணியை ஒரு
கட்டு கட்டுவது வழக்கம்...
சென்னையில் பிரியாணி கடைகள் புற்றீசல் போல
தெருவுக்கு பத்துக்கடைகள் முளைத்து இருக்கின்றன. ஆப் பிளேட் பிரியாணி எழுபது
ரூபாய் என்பது ரூபாய் என்று ஆள் ஆளுக்கு ஒரு ரேட் வைத்து,
ரைஸ் அதிகம் வைக்காம தூவி தூவி
வைப்பார்கள்... அதுக்கு முனியாண்டி விலாசில் 55 ரூபாய்க்கு அளவு சாப்பாடு
சாப்பிட்டு இருக்கலாமேன்னு பீல் பண்ண வச்சிடுவானுங்க....
சரி தலப்பாகட்டி கடை லெவல்ல போவோம்ன்னு
பார்த்தா பிரியாணி ஆப் பிளேட் 160 ரூபாய்...அப்ப குறைந்த செலவில் நிறைந்த பயண்
உள்ள கடை எங்க இருக்குன்னு தேடினபோது...மாடி விட்டு தம்பி விவேக்.....அண்ணே
போரூர்ல ஆற்காடு பிரியாணின்னு போடுறாங்க...ஆப் பிளேட் 100 ரூபாய்தான் ....நல்லா
இருக்கும் . வாங்கியாரட்டான்னு கேட்டான்.... நானும் ஒரு பெக்கை போட்டு விட்டு
சரிடா வாங்கியான்னேன்... அந்த பிரயாணிக்கு இப்ப நான் அடிமை.
கோபாலகிருஷ்ணா தியேட்டர்ல இருந்து போருர்
சிக்னல் ஜங்ஷனுக்கு முன்னாடி லெப்ட்டுலையும்... அதே போருர் சிக்னல் ஜக்ஷன்ல
இருந்து கிண்டி போற ரூட்டுல பத்துக்கடை தாண்டி லெப்ட் சைடுலயும்,
ரொட்டோட ரெண்டு பக்கமும் எதிர் எதிர்ல கடை
போட்டு இருக்காங்க... எப்பவுமே அந்த கடையில கூட்டம் அம்மிக்கிட்டு இருக்கும்.
நல்ல ருசி... சரியான அளவு... லெக் பிஸ் வச்சி
கொடுக்கறாங்க.. ரைஸ் சேமியா போல பெரிசு பெரிசா மெலிசா இருக்கு...அளவான காரணம் ஒரு
பெரிய பிளஸ்...
கடைக்காரர் பாய்க்கிட்ட பேசினேன்..
பாய் உங்க கடை பிரியாணி ரொம்ப நல்ல
ருசி...100 ரூபாய்க்கு அளவும் நிறைவா இருக்கு..
நிறைய பேருங்க போன் பண்ணி பாராட்டறாங்க சார்
எனக்கு அது போதும்...
பாய் நானும் பார்த்துக்கிட்டுதான்
இருக்கேன்... கூட்டம் உங்க கடையில அம்முது...ஆனா காசுக்கு ஆசைப்பட்டு பிரியாணி ஆப்
பிளேட் 125 ரூபான்னு மாத்தாம...
எவ்வளவு கூட்டம் வந்தாலும் இன்னும் அதே
ரேட்டுல விக்கறிங்களே அதுக்கு தெரிய மனசு வேணும் பாய்... 100 ரூபாய்க்கு மதிய
சாப்பாடான்னு ? அலன்டு போறவன் நானு... நானே மாசத்துல ஆறு
வாட்டிக்கு மேல உங்க கடையில சாப்பிடறேன்... கூட்டம் அதிகம் வந்தும் ரேட் ஏத்தாம
அதே குவாண்டிட்டியோட விக்கறிங்ளே...
நீங்க நல்லா இருக்கனும் பாய்...
சார் அப்படி வித்தா... அந்த காசு நமக்கு
உடம்புல ஒட்டாது...
பாய் இதை புரிஞ்சிக்கிட்டிங்க
இல்லை...இன்னும் நீங்க நல்லா இருப்பிங்க என்றேன்...
============
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது
எல்லாம் லேசுபட்ட காரியம் இல்லை... இன்று எனக்கு கிடைத்தது...
வரும் 12 ஆம் தேதி ஷூட்டிங் சென்னனையில
நடக்கும் வந்துடுங்க ...என்றார் என் நலம் விரும்பி இயக்குனர் நண்பர். ரொம்ப
சந்தோஷம் நன்றி என்று சொல்ல போனை வைத்து விட்டேன்..
என் மனைவி... ஏங்க உங்க தங்கச்சி கொழந்தைக்கு
12 ஆம் தேதி மொட்டை அடிச்சி பாண்டியில காது குத்தறாங்க...மறந்துட்டிங்களா? என்றாள்... தலையில் அடித்துக்கொண்டு
திரும்ப நண்பருக்கு போன் செய்தேன்... அன்னைக்கு தங்கச்சி கொழந்தைக்கு காது
குத்தறாங்க...
காது குத்தற டேட்டை மாத்தி வைக்க முடியுமா ?என்றார் இயக்குனர் நண்பர்...இல்லைங்க
எல்லாருக்கும் சொல்லிட்டாங்க... நான் போய் ஆகனும்... தாய் மாமன் இல்லையா ?
சில நேரத்துல இப்படித்தான் நடக்கும் ... ஒட்ற
மண்ணுதான் ஒட்டும்.
========================
நம்ம சென்னை ராஜீவ் காந்தி பொது
மருத்துவமணையில்தான் இந்த போர்டு வச்சி இருக்காங்க... கண்ணை திறந்துக்கிட்டு
இருக்கும் போது கண்ணுல இருக்கற பாப்பாவை ஆப்பிட் விடறது என்பது இதுதான்...
=====================
மகள்களை பெற்ற எல்லா அப்பாக்களுக்கும் தங்க
மீன்கள் படத்தில் வரும், ஆனந்த யாழினை மீட்டுகின்றாய்,பாடல்தான் அவர்களுக்கு தற்போதைய தேசிய கீதம்
போல... சொல்லி வைத்தாற்போல அத்தனை பேரும் அந்த பாடலையே செல்போனில் ரிங்டோனாக
வைத்து இருக்கின்றார்கள்...
============
தன் குடும்பம் எழுபது ரூபாய் அரிசி
சாப்பிட்டால், இந்தியாவில் உள்ள எல்லா குடும்பமும் 70ரூபாய்
அரிசி சாப்பிடும் என்று அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கேனத்தனமான நினைப்பது போல
நான் இன்று கேனத்தனமான ஒரு கேள்வியை கே கே நகரில் இருக்கும் என் பொட்டிக்கடை நண்பரிடம்
கேட்டு வைத்தேன்...
ஏன் மச்சான் இன்னும் பிசிஓல போன் பேச ஆட்கள்
வருகின்றார்களா?
மச்சான் காதல் இருக்கும் வரை பிசிஓ போன்கள்
தன் சேவையை செய்துக்கொண்டே இருக்கும் என்றான் நக்கல் வழிய விட்டபடி...
நான் சிரித்து வாய் மூடவில்லை. செவிட்டில்
அறைந்தது போல ஒரு முதிய பெண்மணி இந்த நம்பரை போட்டுக்கொடுங்க தம்பி.... என்று
நான்காய் மடிக்கப்பட்ட சிதிலமான புதையல் ரகசிய காகிதம் போன்ற வஸ்துவை என்னிடத்தில்
கொடுத்தார்...
டி .ராதா என்று இரண்டு எண்கள் எழுதி
இருந்தது..
பிசிஓ போனில் என் அழுத்தி பெண் குரல்
கேட்டதும் ஒரு நிமிடம் என்று அந்த முதிய பெண்மணியிடம் போன் ரிசீவரை கொடுத்தேன்...
மகள் போலும்...போனில் பாசத்தை வழியவிட்டார்.
எங்க அம்மா அப்பா என்னை படிக்க
வச்சாரு...மொபைல் போன் நொண்டறேன்...இந்த மாதிரி எத்தனை பேர் படிக்காதவங்க நம்ம
நாட்டுல இருக்காங்க.. காதலுக்கு மட்டும் அல்ல.. இது போல நம்பர்
போட்டுக்கொடுங்க்ன்னு சொல்லும் மக்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க.. அவுங்க இருக்கும்
வரை பிசிஓ போன் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்...
அந்த பெண்மணி பேசிக்கொண்டு இருக்கும் போதே..
சட்டென நண்பரிடத்தில் ஒரு சிகரேட் அட்டை
வாங்கி சதுரமாய் கிழித்து... என் பேனா எடுத்து அந்த பெயரையும் எண்ணையும் தெளிவாக
கொட்டை எழுத்தில் எழுதி... பேசி முடித்ததும் இது உங்க நியாபகர்த்தமா இதை
வச்சிக்கோங்க அந்த கசங்கிய பழைய பேப்பரை கொடுத்தேன்.. இதை என் நியாபக அர்த்தமா இதை
வச்சிக்கோங்ன்னு தெளிவாக எழுதிய சிகரேட் அட்டையை கொடுத்தேன்..
அந்த பெண்மணிக்கு ரொம்ப சந்தோஷம்.. கண்களில்
மலர்ச்சியோடு நன்றி சொன்னார்...
அந்த முதிய பெண்மணி நெகிழ்ச்சியோடு சொன்ன
நன்றியை சிந்தாமல் சிதறாமல் வறுமையிலும் என்னை படிக்க வைத்த என் அம்மா அப்பாவுக்கு
பார்வேடு செய்தேன்.
===================
இந்த வார வாசிப்பில் மனதில் நின்றவை.
தமிழ் நாட்டு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள்...3000
என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் அதில் பணிபுரியும் ஓட்டுனர்கள் நடத்துனர்களின்
வாழ்க்கை போராட்டத்தை நாம் என்றும் புரிந்துக்கொண்டதே இல்லை. நண்பர் கண்மணி
குணசேகரன் தனது நெடுஞ்சாலை புதினத்தில் தென்னார்க்காடு மாவட்டத்து பக்க
ஓட்டுனர்களிள் பிரச்சனைகளை அதில் விளாவாரியாக பகிர்ந்து இருப்பார்... இதோ இன்னோரு தென் மாவட்ட
ஓட்டுனரின் ஒப்பற்ற பதிவு... ஓட்டுனரின் மகனின் பார்வையில்.... வாசிக்க வாசிக்க
அந்த ஓட்டுர் உயர்ந்து விட்டார்.. அந்த உழைப்பும் தொழிலை நேசித்த காதலும்....
வாவ்...குட் ரைட்டிங்.
இதோ
சரண் ராம் தன் தந்தையை பற்றி...
என் அப்பா ஒரு நேர்மையான...அரசுப் பேருந்து
ஓட்டுநர். அவருடைய அந்தக் காலத்து டைரிகளைப் புரட்டினால் மனிதர் அவர் ஓட்டிச்
சென்ற வண்டி பற்றியும் கூடவந்த நடத்துனர் பற்றியும் மட்டுமே எழுதி இருப்பார்.
அல்லது பெரும்பாலான தினங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அழகான குண்டு கையெழுத்தில்
'இன்று டிஎன் 9867 வண்டியை ராம்நாடு
டெப்போவில் எடுத்து குற்றாலம் ஹால்ட் அடித்தேன். நடந்துனராக தம்பி முருகேசன் உடன்
வந்தார்'... பெயர்களும்
ஊர்களும் வண்டி நம்பர்களும் மாறி இருக்குமே தவிர இவ்வளவேதான் அந்த
நாட்குறிப்புகளின் சாராம்சம். அப்பாவுக்கு மோட்டாரைத் தவிர வேறு எதுவும் தெரியாது.
குடும்பமே உட்கார்ந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்போம். அவருக்கு கிரிக்கெட்
புரியாவிட்டாலும் எங்களுக்கு இணையாக உட்கார்ந்து பார்ப்பார். தரையில் ஒன் பிட்ச்
ஆன பந்தை ஃபீல்டர் பிடித்து விட்டாலே, 'அதான் கேட்ச் பிடிச்சுட்டான்ல அவுட்டே
கொடுக்கல?' என
அப்பாவியாய் கேட்பார். 'அடி தூக்கி அடி'
என்றெல்லாம் கோஷம் போடுவார். ஆனால் கடைசியில்,
'இந்தியா எத்தனை பாயிண்டு!'
எனக் கேட்டு எங்களைக் கடுப்பேற்றிவிட்டு
தூங்கிப்போவார். தூக்க விஷயத்தில் கொடுத்து வைத்த ஜீவன். வெறும் தரையில் கையை
மடக்கி தலைக்கு வைத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் தூங்க ஆரம்பித்து விடுவார். ஆனால்
அதிகாலை 3 மணியோ 4 மணியோ அலாரம் வைக்காமலே டான் என எழுந்து டூட்டிக்கு கிளம்பி
விடுவார். தொலைதூரப் பேருந்துகளை ஓட்டுவதே அவர் பெருவிருப்பம். ராமேஸ்வரம் டூ
குற்றாலம், ராமேஸ்வரம் டூ குமுளி,
ராமேஸ்வரம் டூ கம்பம்,
ராமேஸ்வரம் டூ சென்னை போன்றவைதான் அதிகம்
அவர் ஓட்டியது. பாம்பன் ரோடு பாலம் திறக்கப்பட்டபோது ராஜீவ் காந்தி சென்ற
ஜீப்புக்கு முன் அரசு பஸ் சென்றதை யாரேனும் டிவி கிளிப்பிங்ஸில் அப்போது
பார்த்திருக்கக்கூடும். வலியச் சென்று அந்த முதல் பாம்பன் பால பஸ் வாய்ப்பைப்
பெற்று தைரியமாக ஓட்டிச் சென்ற பெருமை அப்பாவுக்கு உண்டு. அதேபோல அப்போதெல்லாம்
ராமநாதபுரம் டூ சென்னை பஸ்ஸை ரெண்டு ஓட்டுநர்கள் ஓட்டிச் சென்ற காலம்.
முதல்முறையாக ஒரேஒரு டிரைவரை வைத்து பரிசோதித்துப் பார்க்கலாமே என மருதுபாண்டியர்
போக்குவரத்துக்கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி
முடிவெடுத்தபோது அப்பா முன்வந்து தூங்காமல் ஓட்டிச் சென்றார். அதன்பிறகு
இப்போதுவரை ஒரே டிரைவர்தான் தெக்கத்திப்பக்கமிருந்து ஓட்டி வந்து திரும்பச்
செல்கிறார்கள். எல்லா இரவுகளும் ஒரே மாதிரி விடியாது இல்லையா?
பல நாட்கள் டூட்டி முடிந்தும் வீட்டுக்கு
அப்பா வராமல் போனதுண்டு. செல்போன் இந்தியாவுக்குள் நுழையாத காலகட்டம் அது. அம்மா
என்னைத்தான் எம்.பி.டிசி பணிமனைக்கு அனுப்பி வைப்பாள். அங்கிருப்பவர்களிடம் பதட்டத்தோடு
'அப்பா இன்னும் வீட்டுக்கு வரலை சார்' என்று நிற்பேன். 'விஷயமே தெரியாதா?
அப்பா போன வண்டி ஆக்சிடெண்ட்டு தம்பி.
அழுவாதே. அப்பாவுக்கு ஒண்ணும் ஆகலை. லாரிக்காரன் ராங்கா சைடு வாங்கி ஏறி
இருக்கான். சின்னதா அடி. இப்போ தூத்துக்குடில இருக்கார். இன்னிக்கு சாயங்காலம்
வந்துடுவார்!' என்பார்கள். இதுபோல 'மலைப்பாதையில் உருண்டுருச்சு',
'பிரேக் ஃபெயிலியராகி புளியமரத்தில்
மோதிடுச்சு', லிவர் கட்
ஆகி வயலுக்குள்ள பாய்ஞ்சிடுச்சு' என திகில் லிஸ்ட் உண்டு. தலையிலும் கையிலும் கட்டுப்போட்டு
வீட்டுக்கு சிரித்தபடி வருவார். தான் சமயோசிதமாக
ஸ்டியரிங்கை...க்ளட்ச்சை...பிரேக்கை லாவகமாக கையாண்டு பெரும் விபத்தைத் தவிர்த்த
விதத்தை சொல்லிக் காட்டுவார். அந்த லாவகத்துக்காகவே அவர் ஓட்டும் பஸ்ஸில் பிரயாணம்
செய்யும் ஆவல் பிறக்கும். ஆனாலும் இதுவரை அவர் ஓட்டிய பஸ்ஸில் நான் பயணித்ததில்லை.
நண்பர்களும், 'உன் அப்பா
செமையா உருட்டிட்டாரு...' 'செம வேகமா
ஓட்டுனாருடா!' என கலவையாக தங்கள் பயண அனுபவங்களைச் சொல்லி
இருக்கிறார்கள். இப்போதும் அப்பாவுக்கு ஒரு ஜோடி காது கிடைத்தால்போதும்.
பி.ஆர்.சியில் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் ஆரம்பித்து எம்.பி.டி.சி உருவான
வரலாற்றைத் தொட்டு மோட்டார் வாகனச் சட்டம், போக்குவரத்து சாலை விதிமுறைகள்,
தான் சந்தித்த விபத்துகள்,
நெகிழ்ச்சியான தருணங்கள் என மடைதிறந்த
வெள்ளமாய் கொட்டித் தீர்த்து விடுவார். ரிட்டையர்டு ஆன பிறகு குளத்தாங்கரை
வேப்பமரத்தடி என எங்காவது நான்கைந்து பெருசுகளிடம் உட்கார்ந்து தன் சாகச
அனுபவங்களைப் பந்தி வைக்க ஆரம்பித்து விடுவார். காலையில் 8 மணிக்கு ஆரம்பித்தால்
சோறுதண்ணி மறந்து சாயங்காலம் 3 மணி வரையிலும்கூட நீளும். 'இப்படி வெட்டிக்கதை பேசிக்கிட்டுத்
திரியிறாரே இந்த மனுஷன்!' என அம்மாவின் கரிச்சுக் கொட்டல்களுக்கும்
மசியாதவர் திடீரென ஒருநாள் மீண்டும் வண்டி ஓட்ட ஆரம்பித்து விட்டார். எவ்வளவோ
தடுத்தும் கேட்கவில்லை. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறாரே என வருத்தம் எனக்கு.
இம்முறை கீழக்கரை முகமது சதக் இன்ஜினீயரிங் காலேஜ் பஸ் ஓட்டுநர். 'இந்த வயசான காலத்துல ஏன் வேண்டாத வேலை?'
எனக் கேட்டால், 'சும்மா வீட்டுலே இருக்குறது ஒருமாதிரி
இருக்குப்பா. வண்டி ஓட்டுறதுல பொழுது நல்லாப் போகுது. குடும்பத்துக்கு வருமானமும்
கிடைக்குது. மோட்டாரும் அப்படியே என் கைக்குள்ள இருக்குப்பா!'
என்கிறார்.
================
சில நாட்களுக்கு முன் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பகிர்தலை வசித்தேன்...அனேகமாக இது விகடனில் வாசித்தது
போல நியாபகம்.. நண்பர் ஜெகன் அவர் முகப்பு
பக்கத்தில் இதனை பகிர்ந்து இருந்தார்.... மீண்டும் வாசிக்கும் போது திரும்ப 100
டன் ஆக்சிஜனை சுவாசித்த உணர்வு. , சினிமா கணா காணும் நெஞ்சங்களுக்காக தனது
அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் பகிர்ந்து
இருக்கின்றார்.... நிச்சயம் இதை சினிமாவில் ஆர்வமுடன் பணியாற்ற சொந்த ஊரில் இருந்து பேருந்து ஏறும் அனைவரும்
வாசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்....
சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு....
7 June 2011 at 15:37
எனக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை.,
சிநேகிதமாக எனது எண்ணங்களைப்
பகிர்ந்துகொள்வதுதான் எனக்கு பிடிக்கிறது.
நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில்
நுழைந்து., நான் பெற்ற அனுபவங்களும்
சிந்தனைகளும்தான் இந்த பகிர்தலுக்கான எனது
தகுதி.
நான் உன்மீது கொண்ட அன்பும்.,அக்கறையும்தான்
இந்த பகிர்தலுக்கான காரணம்.
நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்
கூட,
எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த
கனவு.
ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற
கனவு.
இந்த சினிமா எனக்கானது இல்லை.,என் சமூகத்துக்கானது இல்லை என்று.,
அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில்
இருந்து
உருவான கனவு. எனது திரைப்படங்கள் அப்படிதான்
உருவாகின.
இன்றைக்கு சினிமாவைத் தேடி
வருகிற இளைஞர்களின் கனவு,
அப்படிப்பட்ட கனவா....?
சினிமா ஒன்றும் தேவலோகமும் அல்ல.,
சினிமா சார்ந்த நபர்கள் ஒன்றும் தேவ
தூதர்களும் அல்ல
இதை புரிந்து கொண்டால்,
எளிய விஷயங்களை பார்த்து ஆச்சர்யப்பட தேவை
இருக்காது.
நமது நாட்டில் எவ்வளவோ பேர் பட்டினி
கிடக்கிறார்கள்.
விவசாயம் பண்றவன் பட்டினி கிடக்கிறான்.
அன்றாடங்காட்சி பட்டினி கிடக்கிறான்.
ஆனால்.,
சினிமாவில் ஜெயித்த ஒரு ஒரு நடிகரோ.,டைரக்டரோ
தான் பீல்டுக்கு வந்து பட்டினி கிடந்ததையும்
முன்னேறியதையும் சொல்லும்போது
அதற்க்கு ஒரு அதிகப்படியான முக்கியத்துவம்...
அந்த பட்டினியின் மீது ஒரு அதிகபடியான
கவர்ச்சியும் ஏற்பட்டுவிடுகிறது
என்றோ அடைந்துவிடுவோம் என்கிற வெற்றிபற்றிய
கனவு.
அடுத்த வேலை பட்டினியைப் பரவாயில்லை என்று
ஏற்றுக்கொள்ளும்படி
உன்னைத் தயார்படுத்திவிடுகிறது.
இதுதான் சினிமாவின் அபாயகரமான கவர்ச்சி.
இளமையும் ஆரோகியத்தையும் பணையம் வைக்கும்
அளவுக்கு இந்த கவர்ச்சி உன்னிடத்தில்
ஏற்படுத்துகிற பாதிப்பு
என்னை வருத்தமடையச் செய்கிறது.
ஆயிரக்கணக்கில் வந்து
இங்கே நுழைந்தவர்களில் சிலர்
ஜெயித்திருகின்றனர். அந்தச்
சிலரில் ஓரிருவர் தவிர்க்க முடியாமல்
பட்டினிகிடந்து
இருக்கிறார்கள். அவர்கள் விதிவிலக்குகள்.
அவர்களது எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
அவர்கள்
அடைந்த வெற்றியின் காரணமும் அடிப்படையும்தான்
முக்கியமே தவிர,
அவர்கள் பட்ட கஷ்டங்கள்
உனக்கான முன்மாதிரியாக இருக்ககூடாது...
என்னை அணுகி வாய்ப்புக் கேட்ட பல
இளைஞர்களிடத்தில்
நான் பார்த்து கவலைப்படும் மற்றோர் அம்சம் -
அவர்களது தீர்மானம் இன்மை.
தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதுபற்றி
அவர்களுக்கே இருக்கிற குழப்பம்.
அசிஸ்டன்ட் என்று துவங்கி,
' கதை சொல்றேன்.,பாடு எழுதுறேன்.,
டயலாக் எழுதுறேன் " என்று சொல்லிகொண்டே
போய்
கடைசியில் " ஆபிஸ் பாய்னாக்கூட சரி
சார்...
எப்புடியாச்சும் உள்ளே நுழஞ்சுட்டாப் போதும்
" என்பார்கள்.
எனக்கு மனசு கஷ்டப்படும். உங்கள் திறமை,
உங்கள் தகுதிபற்றி
உங்களுகே ஒரு தீர்மானமும் நம்பிக்கையும்
வேண்டாமா ?
உங்களை நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டுமா ?
அப்படி என்ன அவசியம் சினிமாவுக்கு ?
சினிமாவுக்கு வருகிற உன் போன்றவர்களின்
ஊக்கத்தைக் குறைப்பதோ,
உறுதியை குலைப்பதோ எனது எண்ணம் இல்லை. நிறைய
பேர் வரவேண்டும்.
உங்களது வருகையும் இருப்பும் உங்களது
முழு பரிணாமத்தையும் காட்ட வேண்டும்
என்பதுதான் எனது ஆசை.
ஆனால் திட்டமோ.கவனமோ,இல்லாமல் இங்கு வந்து,
தயக்கமும் பயமுமாக நீங்கள் ஒவ்வொருவரையும்
அணுகி வாய்ப்புக்
கேட்பது எனக்குச் சங்கடம் தருகிறது.
ஒரு மனிதனுக்கு காதல் என்பது அவசியம். தன்
மீதான காதல்.
நீங்கள் முதலில் உங்களை நேசியுங்கள். உங்கள்
உடலை நேசியுங்கள்.
அதற்கு மரியாதை செய்யுங்கள். ஆரோக்கியமான
உடலும்
கூர்மையான மனசும்தான் சிறந்த படைப்புகளை தர
உதவும்.
ஒரு சின்ன வேலையைத் தேடிக்கொள்ளுங்கள்.
அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
அடிமனதில்,
சினிமா ஒரு பொறியாக உங்களுக்குள்
கனன்றுகொண்டு இருக்கட்டும்.
அதே அணையவிடாது. அந்த கனலுடன் இருங்கள்.
அந்தக் கனலின் வீரியம்கூடிக் கொண்டுதான்
இருக்கும்.
வயிற்று பசி இல்லாமல் முகத்தில் தெளிவும்.
மனம் முழுக்க உங்களது திறமை குறித்த
தனம்பிகையும் -
' என்னால் சாதிக்க முடியும் '
என்கிற உறுதியும்கொண்டு,
நீங்கள் ஒருவரிடம் வாய்ப்பு கேட்பது மிகவும்
ஆரோக்கியமானதாக இருக்கும்.
அப்போது உங்களிடம் தேவையற்ற தயக்கம்
இருக்காது..,
கூச்சம் இருக்காது..,
உறுதி இருக்கும். நம்பிக்கை இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேல் வாய்ப்பு
கிடைக்காவிட்டால்,
நீங்கள் நிச்சயம் கூசிப்போக மாட்டீர்கள்.
உங்களுக்கு பொருந்தி வரக்கூடிய மற்றொருவரைத்
தேடி,
அதே கம்பீரத்துடனும் தெளிவுடனும் நீங்கள்
செல்வீர்கள்...
அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேளையில்
சேரும்பட்சத்தில்
அதிலேயே மூழ்கி நம்முடைய பிரதான லட்சியம்
மங்கிப் போகுமோ
என்கிற சந்தேகம் இயல்பாகவே வரலாம்.
ஆனால் அப்படி அவசியம் இல்லை. எல்லா கதைகளும்.,கலைகளும்
சுற்றி உள்ள சமுகத்தில் இருந்து தான்
உருவாகின்றன.
உங்களுக்கான காலம் கனியும் வரை நீங்கள்
உங்களை தயார் செய்துகொண்டு இருங்கள்.
நீங்கள் என்ன வேலை செய்தாலும். எதில்
ஈடுபட்டு இருந்தாலும்,
உங்களை சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள் தான்.
சுற்றி இருக்கிற ஒவ்வொருவோரும் பாத்திரங்கள்
தான்.
அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பது மட்டும்
தான் உங்கள் காரியம்.
அதைக் கைக்கொண்டுவிட்டால் அதன் பின் ஒவ்வொரு
விநாடியும் நீங்கள்
கூர் தீட்டபட்டுக்கொண்டு இருகிறீர்கள் என்பது
தான் உண்மை.
நீங்கள் நடிகனாக விரும்பலாம்.,
டைரக்டர் ஆக விரும்பலாம். கதை.,
வசனமோ.,பாடலோ எழுத விரும்பலாம்.
எதுவாக ஆக விரும்பினாலும் உங்களுக்கான
கச்சா பொருட்கள் உங்களைச்சுற்றி நிகழ்கிற
சம்பவங்களிலும்
உலவுகிற மனிதர்களிடத்திலும் இருக்கின்றன..
தவிர, நிறைய வேற்று மொழிப் படங்களைப் பார்ப்பது
உங்களைச்
செழுமைபடுத்தும். நான் பார்த்த ஒரு வேற்று
மொழி படம்
நினைவுக்கு வருகிறது '
rape in the virgin forest ' எனும் படம்.
பழங்குடி வாழும் ஒரு காட்டில் '
நாகரிக ' மனிதர்கள் நுழைகிறார்கள்.
இவர்களது தேவைகளுக்காக விறகு வெட்ட பழங்குடி
மக்களையே
உபயோகிக்கிறார்கள். அந்தப் பழங்குடி
பெண்களில் ஒருத்தியை
ஒருவன் நதியோரத்தில் கெடுப்பதற்காக விரட்டிச்
செல்கிறான்.
அவள் ஓடுகிறாள். மற்றொரு இவனுக்காகப்
பழங்குடி
ஒருவன் பிரமாண்டமான ஒரு மரத்தை வெட்டிச்
சாய்கிறான்.
நெடிதுயர்ந்த அந்த மரம் வீழ்கையில் அந்த
பெண்ணின் கதறல் பின்னணியாக ஒலிக்கிறது.
அப்படியே ஆடிப் போய்விட்டேன். இப்போது அந்த
கதறல் மனதில் கேட்கிறது.
மரம் விழுவதற்கு அந்த பெண்ணின் கதறல் எவ்வளவு
பொருத்தமான பின்னணி இசை..!
இதுபோன்ற படங்கள் நமக்குளே இருக்கும்
திரியைத் தூண்டிவிடுவதுபோல் ஒரு தூண்டலாக
இருக்கின்றன.
அன்றாடத் தேவைகளின் முக்கியத்தை உணர்ந்து,
அதை நிறைவேற்றியபடியே
உனது அடுத்த இலக்குக்காக முயல்வதும்...
உன்னை மேலும் மேலும் தயார்செய்து கொண்டு,
வாழ்வை கவனித்து கவனித்து உனது கலை மனசை
கூர்மைபடுத்திக் கொள்வதும்தான் அதிமுக்கியமாகப்படுகிறது.
ஆனால், இவற்றைவிடவும் பெரிதான ஒன்று உண்டு.
இந்த பாடத்தை எனக்குக் கற்று தந்தவர் எனது
மாமா..
ஒரு நாள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.
ஒரு சிறு பருக்கை கிழே சிதறிவிட்டது.
அவர் புனகையோடு சொன்னார்,"
இந்தப் பருக்கையோட நிலையைப் பாத்தியா பாவம்
!"
நான் வியப்பாக " ஏன் ?
" என்றேன்.
" இந்தப் பருக்கை எத்தனை இடத்தில்
தப்பிசிருக்கு,
அறுவடையில, களத்து மேட்டுல,
அரவை ஆலையில, கடையில ,
அரிசி களைகையில,
சாதம் வடிக்கையில... அப்படின்னு எத்தனை
இடங்கள்..!
எங்கேயும் தவறாம அதோட பயனுக்காக எவ்வளவு
தூரம் கடந்து வந்துச்சு,
இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து.,
கடைசி நொடியில் தவறி விழுந்துடுச்சே...
எவ்வளவு பாவம் அது..!"
நான் அதிரிந்து,
அப்படியே சிலையாக நின்று விட்டேன்.
எவ்வளவு எளிமையான மனிதரிடம் இருந்து
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்..!
நம்முடைய பிறப்பும் அந்த அரிசி போலத்தான்.
நாமும் எத்தனை இடங்களில் இருந்து தப்பித்
தப்பி
வாழ்வைக் கடந்து கொண்டு இருக்கிறோம்.
நாம் ஒரு போதும் இந்த அற்புதமான வாழ்வை
வீணாக்கிவிடக் கூடாது.
நம்முடைய பிறப்பும் அந்த அரிசி போலத்தான்.
நாமும் எத்தனை இடங்களில் இருந்து தப்பித்
தப்பி
வாழ்வைக் கடந்து கொண்டு இருக்கிறோம்.
நாம் ஒரு போதும் இந்த அற்புதமான வாழ்வை
வீணாக்கிவிடக் கூடாது.
கடைசி நிமிடத்தில் தவறிய அந்த பருக்கைபோல்
தவறிப்போனவர்கள்தான் எத்தனை எத்தனை பேர்..!
இதைச் சொல்வதற்கு காரணம் உண்டு.
மிகப் பெரிய கனவும் உழைப்பும்கொண்டு நீ
சினிமாவில்
வெல்ல முயலலாம். வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ஆனால், அப்படி ஆக முடியாது போனால் அது
ஒன்றும் குறைபாடு இல்லை.
சினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது.
பெருமை உடையது. பிரபலம் இல்லாத மனிதனாக
வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியம் இல்லை.
உன்னை, என்னை உருவாக்கி,
இப்போது
நாம் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து
சேர்த்திருப்பது வரை,
உன் பெற்றோர், என் பெற்றோர் உள்ளிட்ட பல பிரபலமற்றவர்களின்
பங்கு இருக்கிறது.
இதுவரி கிழே தவறி விழாத சோற்றுப் பருக்கையாக
நீயும் நானும்
இப்போது நாம் இருக்கும் இடத்தில் நிற்கிறோம்.
இந்த உதாரனத்தை எனக்கு சொல்லிக் கொடுத்த என்
மாமாவும்க்கூட...
பிரபலமாகாத ஓர் எளிய விவசாயிதான்.. !
- மகேந்திரன் (இயக்குனர்)
================
மைதிலிக்கான இந்த வருடத்துக்கான உதவி தொகை கிடைத்து விட்டன... நிறைய மெயில்கள்.... எல்லோருக்கும் பதில் சொல்ல முடியவில்லை... இன்னும் பணம் கட்டவில்லை... இன்று அல்லது நாளைக்குள் பணம் கட்டி விட்டு விரியாய் பதிவிடுகின்றேன்..
அதனால் அக்கவுண்ட் நம்பர் கேட்ட நண்பர்களுக்கு அதனால்தான் தரஇயலவிவ்லை. மன்னக்கவும்.
நேற்று இரவு ஒரு தலைமையாசிரியர்..... வேலூரில் இருந்து மெயில் செய்து உதவி கோரி இருந்தார்...போன் நம்பர் கேட்டு இருக்கின்றேன்... போன் செய்ய சொல்லி இருக்கின்றேன்.. பார்போம்.
=========
ஜாக்கி சார், இந்த பிளாக் இப்ப தான் பார்த்தேன். எனக்கு ஒரு உதவி தேவை. செய்வீங்க என நினக்கற.( Living at Vellore district Tamilnadu)1)எங்கள் பள்ளியில் 11வது வகுப்பு படிக்க 10 வது மார்க் சீட் வாங்க ரூ5000/- கொடுத்து (10/-கந்துவட்டி வாங்கி) 29/7 இன்று தான் சேர்ந்தான். அவன் படித்த பள்ளியில் 418/500 எடுத்து முதல் மாணவன்.அவனுக்கு நாங்களே கஷ்ட்த்தை உணர்ந்து பணம் கட்டி சேர்த்தேன். ஆனால் சீருடை வாங்க பணமில்லை. உதவ முடியுமா?
2) தாய், தந்தை இழந்து தவிக்கும் 11வ்து படிக்கும் மாணவிக்கு நானே முன்னின்று பள்ளியில் சேர்த்தேன். சுட்டி அவள். குடிசை வீட்டில் வயதான பாட்டியுட்ன் வறுமையால் கூலி வேலைக்கு செல்ல உள்ள அவள் 410/500 மார்க் எடுத்தாள். அம் மாணவிக்கு தாங்களால் புதிய துணிமனிகள் எடுத்து கொள்ள உதவ முடியுமா,Headmaster.vijay
================
சென்னையில் சென்னை எக்ஸ்பிரசை ஓட்டாம
விடமாட்டங்க போல இதுவும் ஒரு மார்க்கெட் உத்திதான்...ஷாருக் ஜி... எங்கையோ
போயிட்டிங்க.
===================
நான்வெஜ் 18+
Woman: Doctor my husband's 300% impotent!!!
Doctor: i Don't get it. Can you be elaborate??
Woman: well, the fist one you know. now he's also burnt his tongue and broke his fingers!!
===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

தெலுங்கானா பிரச்சனையில் ஆப்பசைத்த குரங்கு நம் ப.சி. தான்! சோனியாவிற்கு பிறந்த நாள் பரிசாக தெலுங்கானா மாநிலத்தை அறிவித்து சிறிய தீ பொறியை நன்றாக ஊதி பெரிய அளவிற்கு வளர்த்து விட்டார்! இப்போது சௌகரியமாக நிதிமந்திரியாகி அந்த துறைக்கு தன் பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறார். அதற்க்கும் ரூபாயின் கீழ்நோக்கி செல்லும் வேகத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்று எனக்குத்தெரியவில்லை!
ReplyDeleteநினைப்பது அல்ல நீ
ReplyDeleteலுங்கி அணிந்தவர்கள் மத்தியில் இருந்து வந்த பிரபுதேவா தான் பாலிவுட்டையும் ஆடவைத்தவர் என்பதை ஷாருக் மறக்கக்கூடாது. அவருக்கு பரா கான் choreography செய்கிறார் என்பதற்காக எமது லுங்கியை நக்கல் விடுவது மோசம்.
ReplyDeleteலுங்கி அணிந்தவர்கள் மத்தியில் இருந்து வந்த பிரபுதேவா தான் பாலிவுட்டையும் ஆடவைத்தவர் என்பதை ஷாருக் மறக்கக்கூடாது. அவருக்கு பரா கான் choreography செய்கிறார் என்பதற்காக எமது லுங்கியை நக்கல் விடுவது மோசம்.
ReplyDeleteDear Jakie ,
ReplyDeleteஉங்கள் எண்ணம் வாழ்க,
மேலும் தகவலுக்கு வந்த உடன் பகிரவும் , என்னால் முடிந்ததை செய்கிறேன்
சந்தான கிருஷ்ணன்
உங்கள் எண்ணம் வாழ்க,
ReplyDeleteமேலும் தகவலுக்கு வந்த உடன் பகிரவும் , என்னால் முடிந்ததை செய்கிறேன்
சந்தான கிருஷ்ணன்