All That Matters Is Past( "Uskyld" )-2012/உலகசினிமா/நார்வே/சகோதரர்களின் பகை

.

பக்கத்து வீட்டு ,
அக்கத்து வீட்டுக்காரனுக்கு பொறாமை அதிகம்  இருக்கின்றதோ இல்லையோ? நம்ம கூட பொறந்த பொறப்புகளுக்கு அதிகமாவே இருக்கும்… முக்கியமா ஆம்பளை பசங்களுக்கு...அந்த பொறமையில் காமம் கலந்து விட்டால்….. என்னவாகும்.???

==================

All That Matters Is Past( "Uskyld" )-2012/உலகசினிமா/நார்வேபடத்தின் கதை என்ன?


அடர்ந்த காட்டுக்கு நடுவே போட்டில் போய்க்கொண்டு இருக்கின்றீர்கள்.. உங்களுக்கு இயற்கை உபாதை ஏற்படுகின்றது.. போட்டை ஓரமாக நிறுத்தி விட்டு சிறு நீர் கழிக்கின்றீர்கள்.. என்னவோ உங்கள் மனதை நெருட… அந்த அடர்கானகத்தில் உள்ளே ஒரு  15  மீட்டர் உள்ளே  சென்று பார்க்கின்றீர்கள்…யாரோ சின்ன குடில் அமைத்து வாழ்ந்து இருக்கின்றார்கள்... கொஞ்சம் தள்ளி பார்த்தால் ஒரு ஆண் சடலம் புழுபூத்து இறந்து கிடக்கின்றான்.. 

பக்கத்தில் ஒரு பெண்ணின் உடல்.. போலிசுக்கு தகவல் கொடுக்கின்றீர்கள்… போலிஸ்    சம்பவ இடத்துக்கு வருகின்றது… அந்த பெண் உடலுக்கு உயிர் இருக்கின்றது… அதே போல கொஞ்சம் தள்ளி இன்னோரு ஆணின் சடலமும் இருக்கின்றது…. அவர்கள் ஏன் ஆங்கே வந்தார்கள் ?எப்படி கொலையானார்கள் என்பதுதான் இந்த படத்தின்  மீதிக்கதை.  அந்த பெண் கொலையாளியா? அல்லது   பாதிக்கப்பட்டவளா? என்பதை வெண்திரையில் காண்க.

=========================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.
நான் லீனியர் திரைக்கதை வடிவில் இந்த படத்தை இயக்கி இருப்பவர் Sara Johnsen என்ற பெண்மணி…


நிறைய உலக படங்களில் பெண் இயக்குனர்களின் திரைப்படங்கள் ஒரு மென்சோக கதைக்களமாகவே இருக்கும்.. முக்கியமாக பெண்களின்   மன உணர்வுகளை  பூசி மெழுகாமல்  திரைக்கதை ஆக்கிவிடுவார்கள்.
உதாரணத்துக்கு இந்த படத்தில் ஒரு காட்சி..

ஜேன் டீச்சராக இருக்கின்றான்.. வில்லியம்  அவளை பார்க்க வருகின்றான்..

ஜேன் கேட்கின்றாள்… ஏன் இப்ப வந்தே?
வில்லியம் சொல்கின்றான்.. உன்னை பார்க்கனும்ன்னு தொனுச்சி,
எனக்கு திருமணம் ஆகிடுச்சி…இரண்டு குழந்தைக்கு ஸ்டெப் மதர் என்று சொன்னாலும் அடுத்த முறை பார்க்கும் போது பொட்டி படுக்கையுடன் குழந்தை துணியை மோந்து தன் அன்பை வெளிப்படுத்தி விட்டு  செல்லும் காட்சி அழகு…

இழந்து போன காதலையும் காமத்தையும் யாருமற்ற  தனிமையில் அனுபவிக்கும் போது பொறாமை காரணமாக  அவர்கள் என்னவானார்கள் என்பதுதான் படத்தின் கதை..

===================
படத்தின்  டிரைலர்.


==============
படக்குழுவினர் விபரம்



Written by Sara Johnsen
Starring Maria Bonnevie
Cinematography John Andreas Andersen
Release date(s)
7 September 2012 (TIFF)
2 November 2012 (Norway)
Running time 105 minutes
Country Norway
Language Norwegian
================
பைனல் கிக்.
இந்த திரைப்படம் டைம் பாஸ் திரைப்படம்,  மிக மெதுவாய் நகரும் திரைக்கதை… ஆனால்  சுவாரஸ்யம் மிக்க காட்சிகள் படத்தில் நிறைய... கிரைம் திரில்லர் என்பதால் அவசியம் பார்க்கலாம்… முக்கியமாக அந்த கானக காட்சிக்காக.. அதே போல வயதுக்கு வந்தவர்களுக்கான திரைப்படம் என்பதையும  நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


===========
படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு நான்கு.

================================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS... 

4 comments:

  1. உன்னோட விமர்சனத்துலயே படு மொக்கையான விமர்சனம் இதுதான் அண்ணே. ஏன் இப்படி ?

    ReplyDelete
  2. அந்த பெண் கொலையாளியா? அல்லது பாதிக்கப்பட்டவளா? என்பதை வெண்திரையில் காண்க.// படத்தோட முடிச்சி அவுண்துருச்சுனு நெனைகிறேன்.என்னோட guess அந்த பெண் கொலையாளி?

    ReplyDelete
  3. படம் குறித்த நீண்ட விமர்சனம் கொடுக்கும் நீங்கள்... இதில் சப்பென்று முடித்தது போல் தோன்றுகிறது...

    ReplyDelete
  4. இது போல் ஸ்லோ மோசன் படங்களே எனக்கு பிடிப்பது இல்லை. நல்லா விறுவிறுப்பா இருந்தாதனே நமக்கு பிடிக்கும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner