MUST HAVE BEEN LOVE -2012/"En som deg"/உலகசினிமா/நார்வே/உண்மைக்காதல் தோற்பதில்லை.
அவனை அவளுக்கு  பார்த்த நொடியில் ரொம்பவே பிடித்து விடுகின்றது..
ஒரு நாள் இரவு முழுவதும் அவன் பக்கத்தில்தான்  அவள் படுத்து இருந்தாள்.. அவனின்  விரல் நகம் கூட அவள்மீதுபடவில்லை அதனாலே அவனை அவளுக்கு பிடித்து இருந்தது.. அவனுக்கும்தான்..

இரண்டு பேரும் உதட்டோடு உதடு பொருத்தில் முத்தம் கொடுத்துக்கொள்ளுகின்றார்கள்.. அந்த மூத்தம் ஒரு இரண்டு நிமிடம் மட்டும் தோடருமேயானால் அவர்கள் உடை அவிழ்ந்து உடலுறவு மேற்க்கொள்ள வேண்டியதுதான் பாக்கி,.. அப்படி ஒரு முத்தம்.... விடாது முத்தம்...

(பச்சக் முத்தம்)

 முத்த சத்தத்தின் ஊடே அவள்தான்  முதலில் ஆரம்பித்தால் ...

நான்  ஒன்னு கேட்கட்டுமா?

(பச்சக் முத்தம்)

கேளு...

(பச்சக் முத்தம்)

நீ கட்டிக்க போறவளை ஏன் பிரிஞ்சே?

(பச்சக் முத்தம்)

அது வந்து அப்புறம் சொல்லறேன்..

(பச்சக் முத்தம்)

இப்ப சொல்லு, அமை கேட்கலைன்னா எனக்கு தலை வெடிச்சிடும்.

(பச்சக் முத்தம்)

இல்லை இப்ப அதை சொல்லறதுக்கான   நேரம் இது இல்லை...

(பச்சக் முத்தம்)

இல்லை

(பச்சக் முத்தம்)

கண்டிப்பா சொல்லியே ஆகனுமா,?

(பச்சக் முத்தம்)

சொன்னா நல்லா இருக்கும்

(பச்சக் முத்தம்)

இந்த இடம் அதை   விளக்கி சொல்ல சரியான நேரம்  அல்ல ... என்றவுடன் அவளால் மேற்க்கொண்டு அவனை  முத்தமிட மனசு இடம்  கொடுக்கவில்லை.... எல்லா மேட்டரும் முடிச்சிட்டு நம்மலை நடுத்தெருவுல நிக்க வச்சி டீல்ல விட்டுட்டான்னா? என்ன செய்யறது... ஆனாலும் அவனை அவளுக்கு ரொம்பவே பிடிக்கின்றது.. மறுநாள் அவனை போய் பார்க்கலாம் என்று பார்த்தால் அவன் அறை காலியாக இருக்கின்றது.. அவர்கள் இரண்டு பேரும் ஏதாவது ஒரு புள்ளியில் இணைந்தார்களா? என்பதை வெண்திரையில் பாருங்கள்..

====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..


எல்லா காதல் கதைகளும்  நெஞ்சில் ஒட்டிக்கொள்வதில்லை.. சில திரைப்படங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே நம்மில் வந்து  பச்சக்கி கொள்வார்கள்.. அப்படி பச்சக்கிகொண்ட நார்வே நாட்டு திரைப்படம்தான் மஸ்ட் ஹேவ் பீன் லவ்.

கைசான்ற கேரக்டர்ல  பமீலா தோல அற்புதமா நடிச்சி இருக்காங்க...அந்த கண் ஆயிரம் விஷயங்களை பேசுது...

இஸ்தான் புல் போர்ஷன் செம ஜாலி... இரண்டே கேரக்டர்... அவன் மேல இருக்கும் காதலில்   அவனை போலவே இருக்கும் நபரிடம் காதல கொள்வது,  அப்படியே வாழ்ந்து விடலாம் என்று அவன் மீது காதலை செலுத்தினால் அவன் அதை புரிந்து கொள்ளாமட்ல அவளை தவிக்க விடுவது... இப்படியே போனால்  பிற்காலம் நகரமாக மாறிவிடும் என்பதால் அவனை ஒரு நாளில்  உதறுவது என்று அசத்தி இருக்கின்றார்.உடலுறவு முடிந்து நாளை எங்கே என்று கேட்க.. நிறைய மீட்டிங் எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது என்று சொல்வதும் உடனே  சொல்லாமல் கிளம்புவதும்.. கிளைமாக்ஸ் கவிதை...


இயக்குனர் Eirik Svensson எழுதி இயக்கி இருக்கின்றார்... ரோமான்டிக்கான ஆள்தான்..

====================
படத்தின் டிரைலர்.


=====================
படக்குழுவினர் விபரம்.


Director: Eirik Svensson
Writers: Eirik Svensson, Jyrki Väisänen
Stars: Pamela Tola, Espen Klouman-Høiner, Laura Birn 

Country: Norway | Finland
Language: Finnish | Norwegian | English
Release Date: 19 October 2012 (Finland)====================
பைனல்கிக்.
  காதல் படங்கள் நிறைய பார்த்து இருந்தாலும்  வேற்று  நாட்டு படங்கள்  பார்க்கும் போது அது முற்றிலும் வேறாக இருக்கின்றது.. இந்த படத்தில் பாடல்கள் அனைத்து மனதை மயக்கும் வகையிலும் காதல் பீலிங்கை அதிகம் ஏற்ப்படுத்தும் வகையில் இருக்கும்.. இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்...12 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அவசியம் பார்க்கலாம். 


===============
படத்தோட ரேட்டிங்

பத்துக்கு  ஆறரை.

=============================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

2 comments:

  1. Waiting for your "Kavignar VALLI's tribute". அவசர அவசரமாக கட்டுரை எழுத வேண்டாம். வாலி கடந்த ஒரு வருடமாக நிறைய பேட்டிகள் கொடுத்துள்ளார். அனைத்தையும் கூர்ந்து கவனித்து அனைத்து கருத்துகளையும் கவர்ந்து எழுதவும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner