சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.2/7/2013


ஆல்பம்.

ஒரு கிராமம் இரண்டு கிராமம் அல்ல..
. மொத்தம் 4200 கிராமங்கள்  நிலச்சரிவினாலும் வெள்ளத்தினாலும்  பாதித்து இருக்கின்றன... ஒன்னரை லட்ச  மக்களுக்கு மேல் இறந்து போய் இருக்கலாம் ஆனால் ஆளும் காங்கிரஸ் அரசு உண்மையை மூடி மறைக்கின்றது...  

சேறுகளில் சிக்கி மடிந்தவர்கள்  ஆயிரக்கணக்கில் இறந்து போய் இருக்கலாம்....ஆனால் பத்தாயிரம் பேர் இறந்து இருப்பார்கள்  என்று திரும்ப திரும்ப அதே பல்லவியை சொல்லிக்கொண்டு இருக்கின்றது.....அதே போல மற்ற மாநில உதவிகளை கோருவதில் அப்படி என்ன வெட்கம்  என்று தெரியவில்லை... தலைக்கு மேல வெள்ளம் போயிடுச்சி ஜான் போனா என்ன? முழம் போனா என்ன?

===============

2500 கோடி மொத்த பணம்... அதை தவிர நகைகள்... சொக்கா....... சொக்கா... அவனை கூப்பிடக்கூடாதுன்னா கூப்பிடக்கூடாது.. ஏன்  கூப்பிடனும்? எதுக்கு கூப்பிடனும்-?  கத்தி கத்தி குரலு போனதுதான் மிச்சம்... பாம்பேயில... 4 லாரியில....2500 கோடியை டிரெயின்ல பார்சல் பண்ண இருந்த போது கைப்பற்றி இருக்காங்க.... அட தேவுடா..?  நான் எல்லாம் வீடு மாத்த பேக்கர்ஸ் ஆண்டு மூவர்ஸ்ல லாரிபுக் பண்ணிதான் பழக்கம்...எந்தனை பேர் கூட்டுகளவானியா இருந்து வாங்கிய லஞ்சபணமோ? அல்லது  பாகம் பிரிக்கறதுல பிரச்சனை வந்து  போட்டுக்கொடுத்துட்டானுங்களான்னு தெரியலை...? 2500 கோடி எல்லாம்  எனக்கு வேண்டாம்... ஒரு 25 லட்சம் இருந்த போதும்  வீட்டு கட்னை அடிச்சிட்டு நிம்மதியா, கசினோ தியேட்டர்ல மாவ துப்பறவன் பக்கத்துல  உட்கார்ந்துக்கிட்டு  தெலுங்கு படத்தை பார்த்துட்டு போறேன்... அப்ப கூட  சத்தியத்துல படம் பார்ப்பேன் சொல்ல வாய் வரமாட்டேங்குது-.. அதான் இன்னும் வளராம இருக்கேன் போல இருக்கும்... சரிய்யா சத்தியத்துல படம் பார்த்துடுவோம்...

===========
சரி இதெல்லாம் விடுங்க. ... எனக்கு தெரிஞ்சி  கடலூர் பெரிய ஆஸ்பத்திரியில் இருக்கற கம்பவுன்டர் எங்க அம்மா கிட்ட 50 பைசா லஞ்சம் வாங்கி இருக்கார்... அதே போல கட்டு கட்டும் இடத்துல களிம்பு மருந்து கொடுக்க ஒரு கம்பவுன்டர் 25 பைசா லஞ்சம் வாங்கி இருக்கின்றார். 200  கோடி லஞ்சம் வாங்கிய கம்பவுண்டர் கைதுன்னு  பேப்பர்ல பார்த்து திக்குன்னு தூக்கி  வாரி போட்டுடிச்சி... சொக்கா... அவனை கூப்பிடக்கூடாது? ஏன் கூப்பிடனும் எதுக்கு கூப்பிடனும்????
=========
விடுதலை புலிகளின் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என்று ஈழத்தாய் என்று செல்லமாக போற்றப்படும் நம் அம்மாவின் அரசு வக்கில்  கோர்ட்டில் நம்ம வைகோ  அவர்கள் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக வாதிட்டு இருக்கின்றார். மத்திய அரசை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை.. பட் இதுவே கருணா நிதியாக இருந்து இருந்தால் திட்டி தீர்க்க இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கும்.. ஆனால்  ஈழத்தாய் அம்மா அவர்களின் ஆட்சியில் இலை மலர்ந்தால்  ஈழம் மலரும் என்று சொன்னவர்களால் பிரபாகரன் படத்தை கூட் பொதுவெளியில் வைத்து கூட்டம் நடத்த முடியவில்லை  என்பதே உண்மை...
=============
இந்தியாவின் நேவிகேஷனல் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ் -1ஏவை சுமந்தபடி பிஎஸ்எல்வி சி 22 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக ஏவி இருக்கின்றார்கள்... இந்திய நேரப்படி சரியாக இரவு 11.41 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் இந்தியா முதல் முறையக ஒரு ராக்கெட்டை ஏவுவது இதுவே முதல் முறையாகும்.  வாழ்த்துகள்.. விஞ்ஞானிகளின் உழைப்புக்கும் ... உறுதிக்கும்.
===========
மிக்சர்.

பரிதி  அம்மா கட்சியில் ஐக்கியமானார்... பரிதியின் பேச்சில் இருக்கும் எள்ளலை நாளெல்லாம் ரசிக்கலாம்.. சட்டசபையில் பரிதி வேட்டியை உருவி அவமானப்பட்டதை  பொதுக்கூட்டத்தில் பேசும் போது கண்ணீரே வந்து இருக்கின்றது.. அப்படி பட்டவர் இன்று அம்மா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்...  அரசியலில் நிரந்த எதிரி நிரந்தர நண்பன் இல்லை என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம். உயிர் வாழ தகுதி உடையது மட்டுமே உயிர் வாழும் இதுவும்  உண்மை.

==================
 நாகரீகம் வளர வளர மனிதாபிமானம் குறைந்து வருகின்றது... உதாரணத்துக்கு ரோட்டுல ஒருத்தன் அடிபட்டு விட்டான்னு வச்சிக்கோங்க... சட்டை ரத்தமாகிறதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்காது கிராமத்து செனம்.... ஆனால் சென்னையில வேலைக்கு போறவன் எதிர்ல எவனாவது  பைக்குல இருந்து விழுந்துட்டா.. இன் கலஞ்சிடும்ன்னு கீழ உழுந்தவனை  தூக்கி  விட கூட யோசிக்கிறானுங்க... நேற்று ராயபேட்டையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் மாலில் மூன்றாவது மாடியில் இருந்து  கீழே விழுந்து ஒரு இளைஞர்  தற்க்கொலைக்கு முயற்ச்சித்து இருக்கின்றார்.. ஆனால் உயர் போகாமல் குத்துசிறும் கொலை உசிறுமாக உயிருக்கு போரடிக்கொண்டு இருந்து இருக்கின்றார்... 20 நிமிடம் துடித்துக்கொண்டு இருக்கின்றார்... அங்கே மாலில் வேலை செய்த செக்யூரிட்டிகள்  விழுந்த  நபருக்கு  உதவி செய்ய  பொதுமக்களை அனுமதிக்கவில்லையாம்... பொதுமக்கள் சாலை மறியல் செய்து இருக்கின்றார்.. வழக்கம் போல அங்கே  இருந்த  சிசி கேமரா  வேலை செய்யவில்லையாம்... அட அட என்ன உலக தரம்????

============================
இங்கே பெரிய மாலில் சிசிடிவி வேலை  செய்யவில்லை... ஆனால் சென்னையில் ஒரு நகரில் அந்த அமைப்பு வைத்து இருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் நிர்வாண திருடனை பிடித்து இருக்கின்றார்கள் போலிசார்..
 பெண்கள்  உடை மற்றும் சிலின்டர்களை அபேஸ் செய்யும் நிர்வாண திருடனின் செயல்கள் சிசிடிவியில் பதிவாகி திருடனை பிடித்து இருக்கின்றார்..  எந்த ஏரியான்னு மறந்துட்டேன்... நிர்வாணமாக திருட வேண்டும் என்பதை விட ,யாராவது பார்த்துவிட்டால் அதிர்ச்சி கொடுக்கவேண்டும் என்ற எண்ணமா? அல்லது மாட்டிக்கொண்டால்  பைத்தியம்  என்று நடிக்கலாம் என்ற நினைப்பா?  அந்த திருடனுக்குதான்  தெரியும்.
=========

இப்பதான் கட் பண்ணாம கரன்ட் விட்டுக்கிட்டு இருக்கானுங்க... இப்ப நெய்வேலி ஸ்டிரைக் ஆரம்பிக்க போவுது...  திரும்பவும் மின் வெட்டா-?? ஹூம் நாம் வாங்கி வந்த வரம் அப்படின்னு நினைக்கிறேன்... அழகன்

============
பேஸ்புக்கில் பதிந்தவை..

நேற்று டாக்டர்கள் தினம்... 


காதல் மன்னன்  என்று பெயர் எடுத்த  காலம் சென்ற பிரபல நடிகர் மகள் நடத்தும் பிரசவ ஆஸ்பத்திரியில்  மருத்துவ தொழிலுக்கான சேவை நோக்கமே இல்லை என்றும், காசு காசு என்று வல்லாவற்றிலும் காசு பார்க்கின்றார்கள் என்றும்  அங்கு போய் வந்த  தம்பதிகள் வேதனைப்பட்டார்கள்... முதலில் கர்பமாக இருக்கும் பெண்ணை பயமுறுத்தி அவர்கள் செய்ய சொல்லும் எல்லா டெஸ்ட்டுகளையும் பூம் பூம் மாடு போல எடுக்க வைக்கவே அந்த பமுறுத்தலாம்..... முக்கியமாக டெஸ்ட் டியூப் பேபி உருவாக்குகின்றேன் என்று லட்சக்கணக்கில் பணம் கறக்கின்றார்களாம்... 

முதல் முறையாக டேஸ்ட்டியூப் பேபி வேண்டும் என்று போகின்றவர்களுக்கு...முதல்  சிட்டிங்கில் யாருக்குமே குழந்தை உருவாகாதாம்...முதல் சிட்டிங்கில் உருவாகதுதான்... ஆனால் 100 பேரில்  பத்து பேருக்கு கூட  முதல் சிட்டிங்கில் உருவாகது என்பதுதான் வேதனையான விஷயம்.. எப்படியும் இரண்டு லட்சம் ஸ்வாக செய்த பின்பு   அடுத்த சிட்டிங்கில்தான் குழந்தை உருவாகுமாம்...

டெஸ்ட்யூப் பேபி பற்றி படிக்காமல் போகும் அளவுக்கு பாமரன் யாரும் அங்கு செல்வதில்லை.... அங்கே 100 பேர் செல்கின்றார்கள்  என்றால்...100ல் பத்து  பேருக்கு கூடவா முதலில் தங்காது.... யாருக்குமே தங்காது..அதான் உண்மை... யாருக்குமே முதல் முறையாக  தங்கவில்லை என்பதுதான் கொடுமை... அதே போல கர்பம் ஆனா எல்லாருக்குமே 5 மாசம் முடிந்ததும் கர்ப்பையோட வாயை தைக்கிறாங்க... இதுல எல்லாத்தையும் விட கொடுமை...  நார்மல் டெலிவிரிக்கு போகின்றவர்களுக்கு கூட பேபி வீக்காக இருக்குன்னு 8 மாசத்துல கொழந்தைய வெளியில எடுத்துட்டு  கம்பள்ச்சரியா இன்கு பேட்டர்ல வச்சிடுவாங்க... குழந்தை இன்குபேட்டர்ல இருக்கு ஒரு நாள் சார்ஜ் எவ்வளவு தெரியுமா? பத்தாயிரம் ரூபாய்...  அப்ப இரண்டு மாசத்துக்கு  ஒரு நாளைக்கு பத்தாயிரம்ன்னு கணக்கு போட்டு பார்த்துக்கோங்க.... அங்கே  போய் சிகிச்சைக்கு போய் விட்டு வந்த  நண்பர் பகிர்ந்து கொண்ட சேதி... 


ஆத்துல வருது மணல்ல சொருவுதுன்னு இருக்கறவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.,. ஆனா நல்லா டாக்டர்ன்னு உள்ள போற மிடில் கிளாஸ் நிலைமைய நினைச்சி பாருங்க.... ???? உண்மையோ? பொய்யோ அய்யும் பொய்யும் ஆண்டவனே அறிவான்...நேர்மையான டாக்டர்களுக்கு டாக்டர் தின நல்வாழ்த்துகள்.


===================
சென்னையில் கொளுத்தும் வெயிலில் லக்சுரி ஏசி கார் பின்னால் சென்று கொண்டு இருக்கும் போது , காரி துப்பியது போல திடிர் என்று உங்கள் முகம் பிசு பிசுவென ஈரமானால்,பின்னால் வருபவர்கள் பற்றி கவலைபடாமல் கார் கண்ணாடியை துடைக்க சோப்பு நுரை தண்ணீரை ஆன் செய்து பீய்ச்சி அடிக்க வைத்து இருக்கின்றார்கள் என்று அர்த்தம்....
============

உடலுறவுக்கு முன் ஆண் அதிகம் பேசுகின்றான். காரியம் நடக்கவேண்டும் என்பதற்காக.உடலுறவுக்கு பின் பெண் அதிகம் பேசுகின்றாள். கழட்டி விடக்கூடாது என்பதற்காக.
==========
குன்றேறி யானை போர் பார்த்தது அந்தக்காலம், நோவாம பேஸ்புக்ல அடுத்தவங்க போடுற சண்டையை ரசிக்கறது இந்தக்காலம். # ஜாக்கிசேகர் அவதானிப்பு.
================
படித்ததில் பிடித்தது...

சுகா: முந்தி ஒரு முறை சுபமங்களா பேட்டியில, “திருநவேலியில ஒரு ஆயிரம் ரூவா சம்பளத்துல ஒரு பலசரக்குக் கடைல வேலை கெடைச்சா ஊருக்குத் திரும்பிப் போய்ருவேன்”ன்னு சொல்லியிருந்தீங்க, இப்பவும் அப்படித்தானா?

வண்ணநிலவன்: இப்பவும் எனக்கு அந்த ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்யுது. திருநெல்வேலியில இருக்கலாம் அப்படின்னுதான் தோணுது. இப்ப கல்யாணில்லாம் பாக்கியவான்தான். அவரைப் பாத்தா பொறாமையா இருக்கு. அங்கேயே இருக்கறதுக்கு அவர் குடுத்து வச்சிருக்கணும் பாத்தேளா? திருநெல்வேலி மாறிட்டு. அதையும் நான் ஏத்துக்கிடுதேன். ஆனா எனக்கு திருநெல்வேலி பிடிச்சிருக்கு. இந்த மாதிரி ஒரு வீடு குடுத்து எளுதுய்யா அப்படின்னா எளுதத்தான் செய்வேன். இந்த ஊர்ல ஒட்ட முடியல. ஒட்டலியே. முப்பத்து அஞ்சு வருஷம் ஆச்சு. இந்த ஊர்ல எனக்கு ஒட்ட முடியலயே. இருக்கேன். ஆனா இருக்கேனே தவிர இந்த ஊரோட மனசு தோய மாட்டேங்கு. திருநெல்வேலிக்குப் போயி இருக்க முடிஞ்சதுன்னா எனக்கு ரொம்ப இதுவாத்தான் இருக்கும். இங்க வீடெல்லாம் இருக்கு. போக முடியாது. அது சாத்தியமே இல்லை.

குருவிக்கத ஒண்ணு இருக்குல்லா. ஒரு துறைமுகத்தில் கப்பல் நிக்கும். கப்பல்ல தானியங்கள்லாம் சிந்தியிருக்கும். குருவி அதைப் பொறுக்கித் தின்னுகிட்டு இருக்கும். கப்பல் புறப்பட்டுருது. அந்த ருசியில அது அந்தக் கப்பல்லயே உக்காந்திருது. கப்பல் போயிருது. ரொம்ப தூரம் போயிருது. சாப்பிட்டு முடிச்சதும் நம்ம இடத்துக்குப் போகணுமே, கரைக்குப் போகணுமேன்னு பாத்தா கடல். கொஞ்ச தூரம் பறக்கும் அப்புறம் கப்பலுக்கு வரும். மறுபடியும் கொஞ்ச தூரம் … இப்படி… போகவே முடியல. கடைசில கப்பல்லயே இருந்திரும். போகவே முடியாது. இனிமே கரைக்குப் போகவே முடியாது.

அந்தக் குருவி மாதிரிதான் ஆகிப்போச்சு என் வாள்க்கையும்’

- See more at: http://solvanam.com/?p=27348#sthash.USSNAtzT.dpuf

இப்படித்தான் சென்னையில் வசிக்கும் பலருடைய  சொந்த ஊர்   பற்றிய ஏக்கங்கள் இருக்கின்றன. எவ்வளவு அழகா குருவி  கதை மூலம்  சொல்லிட்டார் வண்ண நிலவன் சார்...... நன்றி சுகா சார்.


======================
நான்வெஜ்18+

Q: Three words to ruin a man's ego...?

A: "Is it in?"

=================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

9 comments:

 1. Kuruvi kathai super. I m also in Hyderabad as same.

  ReplyDelete
 2. சாண்ட்விச் அருமை...

  சொல்வனத்தில் வண்ணநிலவன் ஐயா அவர்களின் பேட்டி படித்தேன். நிறைய சிந்த வைக்கும் அருமையான பேட்டி.

  ReplyDelete
 3. உடலுறவுக்கு முன் ஆண் அதிகம் பேசுகின்றான். காரியம் நடக்கவேண்டும் என்பதற்காக.உடலுறவுக்கு பின் பெண் அதிகம் பேசுகின்றாள். கழட்டி விடக்கூடாது என்பதற்காக.
  Jackie rocks again...Singam returns

  ReplyDelete
 4. yuva anna kitta thitta vangum mun "அந்தக் குருவி மாதிரிதான் ஆகிப்போச்சு என் வாள்க்கையும்" change pannuvum

  ReplyDelete
 5. “திருநவேலியில ஒரு ஆயிரம் ரூவா சம்பளத்துல ஒரு பலசரக்குக் கடைல" please change this also நெல் podala he he he

  ReplyDelete
 6. உங்களோட சொக்கா சொக்காவை ரொம்ப ரசித்தேன் ஜாக்கி. சூப்பர் சாண்ட் விச். எனக்கும் அதே மாதிரி பீலிங்தான், ஆனால் பணம் என்பது ஒரு பவர். ஒரு அளவுக்கு தான் நம்மால் தாங்க முடியும். 25 லச்சம் உங்கள் சாய்ஸ். 250 கோடி நம்ம கிட்ட கொடுத்தா என்ன ஆகும்ன்னு நினைச்சு பாருங்க. 70 வயசுல சாக விதி இருக்கிறவன் 35 வயசுலேயே ஆடாத ஆட்டம் ஆடி போய்டுவோம்.

  இப்போது நிறைய போஸ்ட் போடுகிறீர்கள். வேலையில் இருக்கிறீர்கள் தானே என்ற கேள்வி மனதை ஒவ்வொரு போஸ்ட் படிக்கும் போதும் கலக்குகிறது. நல்ல வேலையில் நிறய சம்பளத்துடன் இருக்க வேண்டுகிறேன்.

  வண்ண நிலவன் சார் கதை சூப்பர். இப்போது என் ஊருக்கு போனாலும் அன்னியமாகதான் தெரிகிறது. 20 வருடத்தில் எவ்வளவோ மாறிவிட்டது.

  ReplyDelete
 7. இப்போது நிறைய போஸ்ட் போடுகிறீர்கள். வேலையில் இருக்கிறீர்கள் தானே என்ற கேள்வி மனதை ஒவ்வொரு போஸ்ட் படிக்கும் போதும் கலக்குகிறது. நல்ல வேலையில் நிறய சம்பளத்துடன் இருக்க வேண்டுகிறேன்.--// ராஜ் முத்து குமார்.. உங்களை போன்றவர்களின் அன்பு எனக்கு போதும்.

  ReplyDelete
 8. மோகன்...

  அவர் எனக்கு நண்பர் , அவர் எனக்கு ஆசான் இல்லை... அதை புரிஞ்சிக்கோங்க..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner