THE LAST STAND-2013/ தி லாஸ்ட் ஸ்டேன்ட்/என் நேர்மை விற்பனைக்கல்ல...

 அன்னைக்கு சினிமா பார்க்க கையில காசு இல்லை...
.(இன்னைக்கு மட்டும் என்ன வாழுதாம்?)  என்னோட பிரண்ட் சுபாஷ் மற்றும்   ஆட்டோ டிரைவர் புட்டி , நாராயணன் எல்லாரும்  சினிமாவுக்கு போயிட்டாங்க.. 

கடலூர்ல சினிமாவுக்கு போய் இருந்து எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... 

பாண்டிக்கு அதுவும் ரத்னா தியேட்டருக்கு படத்துக்கு   என் கண் எதிர கிளம்பி போறானுங்க.... செம கடுப்பாயிட்டேன்... வீட்டுக்கு போனேன்.. என்னோட ஹெட் போனை ரொம்ப நாளை ஒருத்தன்   விலைக்கு கேட்டுக்குட்டு இருந்தான்.. பதினைஞ்சு ரூபாய்க்கு அதை  அவன்கிட்ட அடமானம் வச்சேன்... பாண்டி பஸ் ஏறிட்டேன்.. அவன்க போய் ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கும்...  என்ன படம்ன்னு கூட அப்ப  எனக்கு தெரியாது.... 

 தியேட்டருக்கு டெம்போ ஏறி போயிட்டேன்...

ரத்னா தியேட்டர்ல    அர்னால்டு நடிச்ச கமாண்டோ படம் போட்டு இருக்கான்..கூட்டம் ரொம்பி வழியிது , குபேர் பஜார் தெருவே டிராபிக்ல மாட்டிக்கிட்டு முழிக்குது.,என்னடா  செய்யறதுன்னு தெரியலை.. ?

எட்டு ரூபாய் டிக்கெட் இருக்கு...  ஆனா அதுல போவ நமக்கு வக்கு இருக்கா இல்லையே? இரண்டு ரூபாய் டிக்கெட்டுல கூட்டம் அம்முது...  நான் எதை பத்தியும் யோசிக்கலை. டக்குன்னு கவுண்டர் மொட்டை மாடிக்கு பக்கத்துல இருந்த , கழியை புடிச்சி ஏறி, சிலாப்லேயே நடந்து போய், கவுண்டர் கிட்ட கீழ குதிச்சி , கூட்டத்துல பூந்து இரண்டு ருபாய் டிக்கெட்டை  எடுத்து வெளிய வந்து டிக்கெட்டை கிழிச்சிக்கிட்டு உள்ள வந்து சீட்டுல  உட்கார்ந்துட்டேன்.. 
நம்ம ஊர் பசங்க எங்கன்னு  தேடி பார்த்தா எவனையும் காணோம். 

படத்தை வேற போட்டு விட்டான்... படம் ஓடுது.. எங்க பசங்க எல்லாம் படம் ஓடிக்கிட்டு இருக்கும் போது  இருட்டுல தடவி  தடவி உள்ளே வரானுங்க... சீட்டு இல்லை.... முழு படத்தை நின்னுக்கிட்டே பார்த்தானுங்க... அவனுங்க உள்ளே வந்ததும்  சுபாஷூன்னு கத்தினேன்...  அவனுங்களுக்கு ஒரே ஆச்சர்ய்ம்.. எப்படி ? ஜாக்கி முன்னாடி வந்தான்..? எப்படி? என்று  எல்லோருக்கும் ஒரே கேள்விகள்...  அதுக்குதானே கத்தினது....

பட் சினிமா  பார்க்க அப்படி எல்லாம் மூளை எப்பயும் எனக்கு வேலை செய்யும்.. அந்த  அளவுக்கு எனக்கு சினிமா பிரியம்.
  
ஆனா அதே சினிமாதான் எனக்கான வேலையை இன்னைய வரைக்கும்  கொடுக்காம என்னை இப்ப வரைக்கு அலைய வச்சி ,அலை கழிக்குது.. பட் ஒரு நாள் என்காதலை அது புரிஞ்சிக்கும் நம்பறேன்.  ஓகே லெட் மு கம் டூ த பாயிண்ட்.

 ஆர்னால்டு படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். டெர்மினேட்டர் படத்துக்கு  சென்னை அலங்கார் தியேட்டர்ல  ஒரு பத்து நாள் பிளாக்ல டிக்கெட் வித்து என்  வயிற்றை கழுவி இருக்கேன். அர்னால்டு ஏதோ ஒரு விதத்துல என் பசியை போக்கி இருக்கின்றார். ஆனால் அது அப்போ... இப்ப அவருக்கு  65 வயசு ஆயிடுச்சி... இன்னத்த புடுங்கி இருக்க போறார் ?என்று இந்த படத்தை பார்க்காமல் வைத்து இருந்தேன்...
   
பட் டைரக்டர்  Kim Ji-woon என்றதும் எனக்கு இந்த படத்தை பார்க்கவேண்டிய ஆர்வத்தை உண்டு பண்ணி விட்டார்கள்.

Kim Ji-woon  பிட்டர் சுவீட் லைப் படத்தின் இயக்குனர்... சோ அவரோட படைப்பு இந்த திரைப்படம் என்றுதும் ஆர்வம் மேலிட இந்த படத்தை பார்க்க முடிவு செய்தேன்... அர்னால்டு அசத்தி இருக்கின்றார்.... கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்று நிரூபித்து இருக்கின்றார்...

============

THE LAST STAND-2013 படத்தின் ஒன்லைன்..


சைக்கோ குற்றாவளி மெக்சிக்கோவுக்கு காரில் தப்பி செல்கின்றான் அவனை எப்படி பிடித்தார்கள் என்பதுதான்  படத்தின் ஒன்லைன்.

========================

THE LAST STAND-2013 படத்தின் கதை என்ன?

 
ஆர்னால்டு ரிட்டயர் ஆகி  மேக்சிக்கோ பார்டரில் இருக்கும் Sommerton நகரத்தில் ஷெரிப்பாக இருக்கின்றார். எப்பிஐ கஸ்ட்டியில் இருக்கும்  போதை பொருட்கள் விற்ப்பனை தலைவனும், சைக்கோவுமான  கேப்ரியல் தப்பி விடுகின்றான்... அவனை  எப்பிஜ பிடிக்க  ததிகனத்தோம் போடுகின்றது... Sommerton நகரத்தை கடந்து விட்டால் அவன் மெக்சிக்கோ போய்விடுவான்... 

அப்படி போய் விட்டால்  அவனை யாராலும் பிடிக்க முடியாது.. ஆனால் Sommerton நகரில் இருக்கும் ஷெரிப்பு அர்னால்டுக்கு தகவல் போகின்றது.. அவர் எங்கே பிடிக்க போகின்றார் என்று அலட்சியமாக இருக்கின்றார்கள்.. காரணம் 4 பேர் உதவியுடன் அவர் என்ன செய்து விட முடியும்?- 

அவர் அவனை  பிடித்தாரா இல்லையா? என்பது  மீதிக்கதை

==================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.


 தென்கொரிய இயக்குனர் Kim Ji-woon  க்கு  முதல்  ஹாலிவுட் புரொடக்ஷன் திரைப்படம் இந்த  லாஸ்ட் ஸ்டேன்ட்.

பி இன் ரோம் என்பது போல ஹாலிவுட் மசாலாவை விட்டு விடாமல் தன் ஸ்டைலில் இந்த படத்தை  இயக்கி இருக்கின்றார்.2003 ட டெர்மினேட்டர் மூன்றாம் பாகத்தில் இருந்து  நான்கு அல்லது ஐந்து படங்களில் நடித்து இருப்பார்.. அதில் எல்லாம் பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு என்பது போல தலையை காட்டி  இருப்பார்...  சரியாக   பத்து வருடங்களுக்கு பிறகு நாயகனாக இந்த படத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார்...


Kim Ji-woon படத்தில் ஒரு கேரக்டர் தலையில்  பைக்கில் போகும் போது போட்டுக்கொள்ளும் தொப்பி கண்ணாடி அணிந்து ஒரு கேரக்டர் எப்படியும் இருக்கும் இந்த   படத்திலும்  அதில் வித விலக்கல்ல..

 முதல்  சீனில் சைக்கோ   எப்பிஐக்கு தண்ணிகாட்டி விட்ட தப்பிக்கும் காட்சி ஆவ்சம்.


 சோளக்காட்டில் நடக்கும் கிளைமாக்ஸ் பைட்..ஒரு வயதான கிழவி துப்பாக்கியால் சுடுவது  படம் நெடுக சுவாரஸ்ய கொத்தமல்லி தூவல்கள்....


 சைக்கோ 20 மில்லியன் 30 மில்லியன் என்று கெஞ்ச... அர்னால்டு கம்பீரமாக என் நேர்மை விற்பனைக்கல்ல என்று சொல்லும் காட்சிக்காக இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.======================
படத்தின் டிரைலர்.================
படக்குழுவினர் விபரம்.


Directed by Kim Ji-woon
Produced by Lorenzo di Bonaventura
Written by Andrew Knauer
Jeffrey Nachmanoff(uncredited)
Starring Arnold Schwarzenegger
Forest Whitaker
Johnny Knoxville
Rodrigo Santoro
Luis Guzmán
Jaimie Alexander
Eduardo Noriega
Peter Stormare
Zach Gilford
Génesis Rodríguez
Music by Mowg
Cinematography Kim Ji-yong
Editing by Steven Kemper
Studio di Bonaventura Pictures
Distributed by Lionsgate
Release date(s)
January 18, 2013
Running time 107 minutes[1]
Country United States
Language English
Budget $30 million
Box office $37,150,299

==================
பைனல் கிக்.

இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்.. முக்கியமாக இயக்குனர் Kim Ji-woon இயக்கத்திற்காக... நடக்கு பேச சிரமபடுவது போல அர்னால்டு நடித்து இருந்தாலும் இன்னும் ஆக்ஷன் பிளாக்கில் வெளுத்து வாங்குகின்றார்... இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்.


================


படத்தோட ரேட்டிங்

பத்துக்கு ஆறரை.

=====================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

6 comments:

 1. அர்னால்ட் படங்கள் என்றால் எனக்கும் பிடிக்கும்...
  விமர்சனம் படம் பார்க்கலாம் என்கிறது.

  ReplyDelete
 2. இளமை நினைவுகளுடன் ஓர் இனிய விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
 3. அண்ணே கோவபடலேன்னா ஒன்னு சொல்லவா,
  வல்லின 'ற' கர மெய் எழுத்துக்கு பின் மெய் எழுத்து வரக்கூடாது.
  எனவே என் நேர்மை விற்பனைக்கல்ல தான் சரி

  சங்கர் திருநெல்வேலி

  ReplyDelete
 4. சங்கர் இதுல என்ன தப்பா நினைக்கறதுக்கு இருக்கு... தப்பை சொல்லி இருக்கே திருத்திட்டேன்.. மிக்க நன்றி.

  ReplyDelete
 5. நன்றி குமார், சுரேஷ், அருள்...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner