Annayum Rasoolum-2013/உலகசினிமா/இந்தியா/ மலையாள நெய்தல் மண்ணின் காதல்.




காதலும் காமமும் மனித இனங்களில் ஆதார சுருதி..
.ஆனால் இந்த ஆதார  சுருதி நம் நாட்டில்  ஒழுங்காய் மீட்டப்படவில்லை என்பதே உண்மை.. இத்தனைக்கு கஜரோகா கோவில் சிலைகள் முலம்  தலை முறை, தலை முறையாக காமத்தை கற்றிக்கொடுத்து, காமத்துக்காகவே  நிறைய அத்தியாயங்கள் எழுதிய நாடு...ஆங்கிலேயர்கள் வருகைக்கு பிறகு நம் கலாச்சாரம் அடியோடு மாறிவிட்டது என்பதையும்  நாம் மறுக்க முடியாது.

தனக்கு பிடித்த பெண்ணை ,தன் நகரத்தில்  வாழும் பெண்ணை, இத்தனைக்கு வேறு நாட்டு பெண் கூட அல்ல.தன் தெருவில் வசிக்கும் பெண்ணை எனக்கு  பிடித்த இருக்கின்றது என்று சொல்லவே தலையால் தண்ணி குடிக்க வேண்டி இருக்கின்றது. அப்படியே பிடித்து இருக்கின்றது என்று இவன்   நடையாய் நடந்து தன் விரூப்பத்தை சொல்லி,  அந்த பெண் நிறைய யோசனைக்கு பிறகு அந்தக்காதலை  அந்த பெண் ஏற்றுக்கொண்டு ஓகே சொல்லி...  வீட்டில் பிரச்சனையாகி ஓடிப்போய் திருமணம்  செய்து கண்கான தேசத்துக்கு சென்று வாழலாம் என்றால் அப்படியாவது விட்டு விடுமா? அங்கேயும் சாதிப்பேய் துரத்தி வரும்....   சமீபத்தில் இறந்து போன இளவரசன்  இதற்கு நல்ல  உதாரணம்...

12 வயதில் ஆண் வயதுக்கு வருகின்றான்... அதே போல பெண்களும்.. பிறப்பில் இருந்தே காம  இச்சை துவங்கி விடுகின்றது... என்று சிக்மன் பிராய்ட் சொல்லி இருக்கின்றார்..ஆனால்  இந்தியாவில் வயதுக்கு வந்த ஆண் தன் உடல் பசியை போக்கி கொள்ள 15 வருடங்களுக்கு மேல் காத்து இருக்க வேண்டியதாக இருக்கின்றது..  அடிப்படை தேவையான காதலையும் காமத்தையும் பெறவே பாடாத பாடு படும் போது அப்புறம் எப்படி மற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளில் கவனத்தை செலுத்தறது...?

காதலிக்க கூடாது...

மதம் ஒரு பெரிய தடை..

 சரி  ஒழிஞ்சி போகட்டும் ஒரே மாதத்தில் திருமணம் செய்து கொள்கின்றேன்...
அங்கே சாதி எட்டி பார்க்கும்,

அப்ப ஒரே சாதியில்  காதலித்து கல்யாணம் பண்ணிக்கொள்கின்றேன்...
அப்ப தராதரம் எட்டி பார்க்கும், 


சரிடா  விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கு.... பீலிங் வந்தா  பணம் கொடுத்து முடிச்சிக்கறேன்..

ச்சே அது நம்ம கலாச்சாரத்தை கெடுத்து குட்டி சுவர் ஆக்கிடும். இப்படி எல்லா பக்கமும் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்றால்  ஒரு மிடில் கிளாஸ் இந்திய இளைஞன் என்ன செய்வான்.?

கைலி  கட்டிக்கிட்டு கைல புடுச்சிக்கிட்டு மல்லாக்க படுத்துக்கிட்டு விட்டத்தை பார்த்துக்கிட்டு பொரண்டு படுக்கவேண்டியதுதான்.



காதல் திரைப்படத்துக்கு பிறகு  லைவ்வாக ஒரு காதலையும் அதன் இன்ப துன்பங்களை  பார்த்து  வெகுநாள் ஆகிவிட்டது.. இன்னும் தமிழ் திரையுலகில் காதல் திரைப்படத்தை போன்று காதலை  அதாவது ஒரே ஒரு ஜோடிகளின் காதலையும் அதன் பிரச்சனைகளையும் லைவ்வாக நம் மனதில் பதிவது போல காதலுக்கு  பிறகு அடுத்த படம் இன்னும் வரவில்லை என்றே நினைக்கின்றேன்....  

ஆனால்  காதலின் லைவ்னஸ்சோடு மலையாளத்தில் சமீபத்தில்  ஒரு திரைப்படம் வந்து இருக்கின்றது.. அந்த திரைப்படத்தின் பெயர் அன்னயும் ரசூலும்.

==========
Annayum Rasoolum-2013/உலகசினிமா படத்தின் ஒன்லைன்..


இரண்டு வெவ்வேறு மதங்களை  சேர்ந்த மிடில்கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் காதலித்தால் இந்தியாவில் என்னவாகும் என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.

=======================
Annayum Rasoolum-2013/உலகசினிமா படத்தின் கதை என்ன?

அன்னா கிருஸ்த்துவ பெண் ஒரு  துணிக்கடையில் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்க்கின்றார்...ரசூல் டாக்சி டிரைவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன்.. இரண்டு பேரும் காதலிக்கின்றார்கள் கை பிடித்தார்களா, என்பதுதான் மொத்த படமும்.

===============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

லைவ்வாக ஒரு கதையுனுள் வாழ்ந்து முடிந்து விட்ட திருப்த்தி இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அந்த  நிறைவு ஏற்படும்.

படத்தை இயக்கி இருப்பவர் ராஜீவ் ரவி. இவர் மிகச்சிறந்த  ஒளிப்பதிவாளர்..அனுராப் கஷ்யாப்பின் அனைத்து படங்களுக்கு இயர்தான் ஒளிப்பதிவு.... எத்தனை நாளைக்குதான் கேமராவையே புடிச்சிக்கிட்டு இருக்கறதுன்ன வெக்கஷேனுக்கு சொந்த மண்  கேரளாவுக்கு வந்து, ஒர படத்தை டைரைக்ட் பண்ணிட்டு அடுத்த படத்துக்கு கேமரா புடிக்க போயிட்டார்...

பஹத்பாசில்  கேரளாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் பற்றி விரிவாய் எழுதிய பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.

அசத்தி இருக்கின்றார்... காதல் படம் பார்த்த போது பரத்திடம் ஒரு மெக்கானிக்  பையனின் லைவ்னஸ் இருக்குமே,... அப்படி இந்த படத்தில் டிரைவர் கேரக்டரிலும் காதல் வயப்பட்டு  அலையும்  இடங்களிலும்  அசத்தி இருக்கின்றார்... முக்கியமாக போட் பிடிக்க ஓடும் போது அதில் ஆண்ட்ரியாவை பார்த்த சந்தோஷத்தோடு தலை  தெரிக்க ஓடுவது..
போட்டில் அவளை பார்த்து விட்டு மகிழ்ச்சியோடு அவள் அருகே  செல்ல.. அவள் இவனை  சட்ட  செய்யவில்லை என்றதும் முகம் சுருங்கி கதவு ஓரத்துக்கு நிற்க்க... வாவ் என்ன உடல் மொழி..  பஹத் நீ பிறவி கலைஞனய்யா நீர்.. வாழ்த்துகள்.

ஆற்று தண்ணியில் குளிக்கும் போது  ஆண்டிரியா பஹத்திடம்...

கண் செவந்துட்டுண்டு...

தண்ணிக்கடியில  கண் முழிச்சி பார்த்தா  புடிச்ச பொண்ணு தெரியவாளாம்ன்னு அவன் சொல்ல...  அவள்  அவனை ஆழமாக பார்க்க  நான் கண்டுட்டுன்டு என்று சொல்லும் காட்சி எனக்கு படத்தில் பிடித்த காட்சி...

கிம் கிடுக் படத்தின் வசனம் போல  ஆண்டிரியா பேசும் வசனங்கள் இந்த படத்தில் அரை பக்க ஏ  போர் ஷீட்டில் எழுதி விடலாம்...

ஆண்ட்ரியா இந்த படத்தில் நடித்ததை வாழ்வில் அவர் என்றும் மறக்க முடியாது.. என்ன பார்வை என்ன அலட்சியம்... அவனுக்கா கிளம்பி அவள் ஜூரத்தில் வீட்டில் இருக்க ஏமாற்றத்தோடு வீட்டூக்கு போய் அவன்  நினைவாக கடையில் துணி எடுத்து நடக்கும் போது  எதிரில் அவன் நிற்கும் போது ஆண்டிரியா பார்க்கும் பார்வை இருக்கே... நான்சே இல்லை... என்ன பார்வை என்ன நடிப்பு...

இரண்டு வாரம இந்த பாட்டுதான் மைன்ட்ல சுத்திக்கிட்டு இருக்கு...


என்ன ஒரு லைவ்லிநஸ்...???? சான்சே இல்லை.இந்த படத்தோட இன்ர்வல் பிளாக் வரை பார்த்தா... காதலிக்கவே வேண்டாம்ன்னு நினைக்கற ஆம்பளை பொம்பளை எல்லாருக்கும் காதலிச்சே ஆகனும்ன்னு தோணும்....

இன்டர்வெலுக்கு அப்புறம் பார்த்தா காதலிச்சது ரொம்ப தப்போன்னு தோனும்...

பட் பஹத்தும் ஆன்ட்டிரியாவும் அசத்தி இருக்காங்க.... பாட்டை கேளுங்க.. அப்படியே ரெண்டு பேரோட பாடிலாங்வேஜை பாருங்க...





பாலத்தில் நின்று பேசும் போது பகத் இன்னும் ஒரு  நிமிடம் இருந்து விட்டு போ எனும் போது அந்த பிரைட் கண்ணில்  காட்டுவது என்ன சாதாரணகாரியாமா? வாவ் ஆண்டிரியா.. அவர் கேரியரில் மறக்க முடியாத படம்.

இந்த படம் இன்டர்வல் வரை அவள்  காதலை அக்சப்ட்  செய்வதை  மட்டுமே ஒரு படமாக எடுத்து இருக்கலாம்... அந்த அளவுக்கு அற்புதமாய் இருக்கும்.. ஆண்டிரியாவின் முடி  பேருந்தில் காற்றில் பறக்க  அதனை வருடுவதோடு இன்டர்வெல் பிளாக்.. என்ன ஒரு கவிதையான காட்சி.

படத்தின் லோக்கேஷன் அற்புதம்... கேரளாகாரர்கள்  மேல் பொறாமை வருகின்றது...

ஒளிப்பதிவை மது நீலகண்டன் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்...திருமணம்  செய்து கொள்ள ஓடிப்போகும் இடமும் அவர்கள் இருக்கும் மலை கிராமும் வாவ்... அதனை  கேமராவில்  அந்த சந்தோஷத்தை  காட்சி படுத்தி இருப்பது  அருமை.


இந்த படத்திலும் பஹத் ஆண்டிரியாவின் உதட்டை ஒரு வழி பண்ணுகின்றார்... கூட நட்பு கேடில் முடியும் என்பதற்கு பஹத் வாழ்க்கை ஒரு உதாரணம்.. என்னதான் மதப்பிரச்சனை இருந்தாலும் நண்பர்களின் பிரச்சனைதான் அவரை இக்கட்டுக்குள்ளாக்குகின்றது.



கிளைமாக்சில்  பஹத் நடிப்பை  அற்புதம்.

===================
படத்தின் டிரைலர்..


================
படக்குழுவினர் விபரம்.


Directed by Rajeev Ravi
Produced by
K. Mohanan
Vinod Vijayan
Screenplay by Santhosh Echikkanam
Story by
Rajeev Ravi
G. Sethunath
Santhosh Echikkanam
Starring
Fahadh Faasil
Andrea Jeremiah
Sunny Wayne
Soubin Shahir
Music by K
Cinematography Madhu Neelakantan
Editing by B. Ajithkumar
Studio D-Cutz Film Company
Distributed by E4 Entertainments
Release date(s)
January 4, 2013
Running time 167 minutes
Country India
Language Malayalam

===================
பைனல் கிக்.

இந்த படம் அவசியம் பார்த்தே தீர வேண்டியபடம்... காதலிக்கலாம் என்று யோசித்தவர்கள், என் காதலிக்கவில்லை என்று அங்கலாய்ப்பவர்., காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. காதலை எதிர்ப்பவர்கள், காதலுக்கு கவுரவகொலை செய்பவர்கள் அத்தனை பேரும் இந்த திரைப்படத்தை பார்க்கலாம்... ராஜீவ் ரவி சார் இன்னும் நிறைய படங்கள் இது போல  செய்ய  வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்.

========================


படத்தோட ரேட்டிங்.


 பத்துக்கு எட்டு.
==============
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

1 comment:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner