OLYMPUS HAS FALLEN. வெள்ளை மாளிகை வீழ்ந்தது.



ராஜீவ் காந்தி போல வேஷம் போட்டு அனுபம்கேர்  நடிச்சார்...
அவ்ளவுதான்..  அந்த படம் நம்ம நாட்டுல ரிலிஸ் ஆச்சான்னு பல பேருக்கு தேரியவே தெரியாது... இதுல இது ஜனநாயநாடு வேற....குற்றப்பத்திரிக்கைன்னு  அந்த படத்துக்கு பேரு...... ராஜிவ்காந்தி கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்...1991 ஆம் ஆண்டு ஆரம்பிச்ச படம்  சென்சார்ல் சிக்கி தவிச்சி... ஏகப்பட்ட கட்டுகளோடு 2007 ஆம் ஆண்டு ரிலிஸ் ஆச்சி.. மொத்தம் 13 வருஷம்... இதுதான் நம் தேசம்...


இங்க எல்லாத்தையும் புனிதமாதான்  பார்க்கின்றோம்...அப்படித்தான் நாம் மூளை சலவை செய்யப்பட்டுள்ளது... சின்ன கவுண்டர் படம் வந்த நேரம்...மரியாதையான கவுண்டர் விஜயகாந் கேரக்டருக்கு பெட்ரூம் சாங் வச்சி இருக்க வேண்டாம் என்று என் உறவுக்கார பெண்மணி படம் பார்த்துவிட்டு வந்து அங்கலாய்த்துக்கொண்டு இருந்தார்...


 காமம் இயல்பு என்பது அவர்களுக்கு புரியவேயில்லை... உன்னதமான ஊர்தலைவன் முதலிரவு பாடலில் நடித்ததையே ஏற்றுக்கொள்ள அவரின் மனம் இடம் கொடுக்கவில்லை..அப்படி பட்ட மனநிலைகொண்டவர்கள் வாழும் பூமியில் பிரதமர் தன் மனைவிக்கு முத்தம் கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

குற்ற பத்திரிக்கை திரைப்பட அலைகழிப்புக்கு பிறகு,.. இங்க தமிழ்சினிமாவில் முதல்வர் போர்டு காட்டி வாய்ஸ் ஓவரில் பல படங்களை முடித்து இருக்கின்றார்கள்.. முதல்வன் படத்தில் முதல்வர் பிம்பத்தை  காட்டியதும் மதுரையில் அந்த படத்துக்கு எதிர்ப்பு ஏழுந்ததை அறிவோம்... 


இரண்டு பெண் முதல்வர்கள் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் பெண் முதலமைச்சரை நாம் காட்சி படுத்தியதே இல்லை..ஆண் முதல்வர்களைதான்  பிம்பமாக காட்டி  இருக்கின்றோம்.

சமீபத்தில் வெளியான இந்தி படமான ஷாங்காய் திரைப்படம் பெண் முதல்வரை கதையில் சித்தரித்து இருந்தது...

ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை... பிரசிடென்ட் மிஸ்டர் பிரசிடென்ட் என்று சாதாரண வேலைக்காரன் அவரை  அழைப்பான்..பிரசிடென்ட் கள்ளக்காதல் பண்ணுவார்,பிரசிடென்ட் உடலுறவில் ஈடுபடுவார், பிரசிடென்ட் கடத்தப்படவர், பிரசிடென்ட் முகத்தில் ஓங்கி குத்தி உதடு கிழிப்பார்கள், அவர் கொலையாளியாக சித்தரிக்கப்படுவார், பூட்ஸ்காலால் குளோசப்பில் உதை வாங்குவார்... அவர்களை பொறுத்தவரை அது திரைப்படம்..ஒலம்பஸ் பாலின் டவுன் திரைப்படம்   நம்மவர்கள் பார்த்தால் இப்படி ஒரு திரைப்படம் நம் ஊரில் எடுக்க வாய்ப்பில்லை என்று ஒவ்வோரு  காட்சியும் இந்த படத்தை பார்க்கும் போது நமக்கு உணர்த்தும். ஒரு  பேச்சுக்கு  ராஷ்ட்ரபதி பவன்   வீழ்ந்தது என்று ஒரு போதும்  நம்மால் திரைப்பபடம் எடுக்க வாய்ப்பே இல்லை.

========================

OLYMPUS HAS FALLEN படத்தின் ஒன்லைன்.



 அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை வீழ்த்தி தீவிரவாதிகள் அதிபரை சிறைபிடிக்கின்றார்கள்.. அவர் என்னவானார் என்பது படத்தின் ஒன்லைன்.


========================

OLYMPUS HAS FALLEN படத்தின் கதை என்ன?

 மைக்(Gerard Butler) அமெரிக்க அதிபரின் சீப் செக்யூரிட்டி,  அதிபரோடு கான்வாயில் பயணம்  செய்யும் போது, விபத்தில் அதிபரை மட்டும்  காப்பாற்றி அவரின் மனைவியை  காப்பாற்ற முடியாத வேதனையில் பதவியை விட்டு விலகி டிரஷரி டிப்ப்பார்ட்மென்ட்டில்  பணி புரிகின்றான். 


கொரியாவின் தலைவர் அமெரிக்க அதிபரை சந்திக்க வரும் போது, அவரோடு திவிரவாதிகளும் வெள்ளை மாளிகையில் நுழைந்து அதிபரை பினைகைதியாக்குகின்றார்கள்...


 மைக் எப்படி?தனி ஒருவனாக இந்த சதியை முறியடித்தான் என்பதுதான் விரல் நகம் கடிக்க வைக்கும் மீதிக்கதை.

===============================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.

டுவின் டவர் இடிப்புக்கு முன்னமும் சரி பின்னமும் சரி... ஒரு பொட்டுப் பட்டாசு வெடித்தால் கூட அமெரிக்க உளவுத்துறைக்கு தெரியும்... டுவின் டவரே கொஞ்சம் அசந்த நேரம் பார்த்து அடித்து வீழ்த்தியது.. அதனால்  அவர்கள் எப்போது தங்கள் கற்பனை எல்லைகளை  நால திசையும் பறக்க விட்டு அவர்கள்  நினைத்ததை எடுப்பார்கள். இது அழிஞ்சி போன எப்படி இருக்கும்? அது வெடிச்சா எப்படி இருக்கும் என்று பிரமாண்டமாய் சிந்திப்பார்கள். அப்படி  கற்பனையை பறக்க விட்டு  ஒயிட்  ஹவுசயும் விட்டு வைக்கவில்லை.

ஒரே கதையை அடிச்சி தமிழில் தள்ளுவதோ இளமை, பாய்ஸ் போன்ற படங்களை நம்மவர்கள்  எப்படி எடுக்கின்றார்களோ அதே போலத்தான் ஹாலிவுட்டிலும் இந்த வருடம் மட்டும்  ஒயிட் ஹவுசை அழிப்பது போல இரண்டு திரைப்படங்கள் வந்து இருக்கின்றன..  ஒன்று இந்த படம் மற்றது வரும் வெள்ளிக்கிழமை ரிலிஸ் ஆக போகின்றது அந்த படத்துக்கு பெயர் ஒயிட் ஹவுஸ் டவுன்.

 படம் பரபரப்பாய் இருக்கின்றது...ஒயிட் ஹவுஸ் விழ்ந்து விட்டதை தொலைகாட்சியில் செய்தி வாசிக்கின்றார் செய்திவாசிப்பாளர், எப்படி தெரியுமா? பூமி பந்தின் மிக பாதுகாப்பான இடம் என்று கருதப்படும் வெள்ளை மாளிகை வீழ்ந்த்து  என்று...

அதிபரின் மகன் கார்னரை கண்டு பிடிக்கும் இடமும் காப்பாற்றும் இடமும் சூப்பர்.. அவர்கள் எல்லாவற்றிர்க்கும்  கோர்ட் வேட் வைத்து இருக்கின்றார்கள்.. அதிபரின் மகனுக்கு ஸ்பார்க் பிளக்  சேப் என்கின்றார்கள்...

மார்கன் பிரிமேன் அசத்தி இருக்கின்றார்.. ஆக்டிங்  ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு பிரச்சனை முன் வைக்கும்  போது ரிலாக்சாக ஒரு காபி சொல்லி விட்டு பணிகளை தொடர்வது அருமை.

அதிபரை காப்பாற்றி விட்டு, ஒயிட்  ஹவுஸ் பாதி காலி அதை காப்பாற்ற முடியலை என்று சொல்லும் போது, அதை இன்ஷூர் பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கறேன் என்று அதிபர் தமாஷ் பண்ணுகின்றார்.

 இயக்குனர் Antoine Fuqua இயக்கிய முந்தைய பரபரப்பான படங்கள் என்று டிரைனிங் டே மற்றும் ஷூட்டர் திரைப்படத்தை சொல்லலாம்.

============
படத்தின் டிரைலர்


=================
படக்குழுவினர் விபரம்

Directed by Antoine Fuqua
Produced by Gerard Butler
Alan Siegel
Mark Gill
Written by Creighton Rothenberger
Katrin Benedikt
Starring Gerard Butler
Aaron Eckhart
Morgan Freeman
Angela Bassett
Robert Forster
Cole Hauser
Finley Jacobsen
Ashley Judd
Melissa Leo
Dylan McDermott
Radha Mitchell
Rick Yune
Music by Trevor Morris
Cinematography Conrad W. Hall
Editing by John Refoua
Studio Millennium Films
Distributed by FilmDistrict
Release date(s)
March 20, 2013 (France[1])
March 22, 2013 (United States)
Running time 120 minutes[2][3]
Country United States
Language English
Korean
Budget $70 million

Box office $161,025,640


====================
பைனல் கிக்..
பரபரப்பான ஆக்ஷன் பேக்கேஜ் திரைப்படம் ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ரொம்பவே பிடிக்கும், இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

============
படத்தோட  ரேட்டிங்.

பத்துக்கு ஆறு.

======================
படத்தை பத்தி ஆர்ட்டிஸ் என்ன சொல்றாங்க?




================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

==================

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

5 comments:

  1. செம படம்...
    படம் ஆரம்பிச்சதிலர்ந்து முடியிறவரை நான் உட்கார்ந்து இருந்த இடத்தை விட்டு நகரலை.
    கோட் சொல்லமாட்டேன்னு அடம்பிடிக்கிற செக்ரடரி, அவளை காப்பாத்தறதுக்காக ப்ரெஸிடெண்ட் ஆர்டர் போட்டதும், ”யெஸ் சர்” என்று கோட் சொல்வது; நிறைய டாக்குமெண்ட்ஸ் முடிக்கவேண்டியது இருக்கு என்று மைக் மனைவியிடம் பொய் சொல்வது போன்ற இடங்கள் அருமை.
    ப்ரெஸிடெண்டை மைக் வெளியில் கூட்டிவரும்போது, அவர் மனைவி டிவியில் அதைப்பார்த்து திகைப்பார் என்று நினைத்தேன். வேறு மாதிரி எடுத்திருந்தார்கள்.

    ReplyDelete
  2. ராஜன் விரிவான பகிர்தலுக்கு மிக்க நன்றி. அதே போல படத்தை ஒரு முறை நன்றாக பாருங்கள்.. அந்த காட்சியில் எற்கனவே நகரம் அல்லோலபட்டுக்கொண்டு இருப்பதை மருத்துவமனையில் மனைவி பார்த்துக்கொண்டு இருப்பார்... நிறைய வேலை இருக்கு என்று சொல்லும் போதே மனைவிக்கு கேமரா குளோஸ் போகும்.. கண்டிப்பாக கணவன் வெள்ளை மாளிகையில்தான் இருக்கின்றான் என்பதை கண்டு பிடித்து விடுவாள்.. அதுக்கு முன் அவள் போன் கணவனுக்கு செய்யும் போது நாட் ரீச்சபிலில் இருக்கும்.

    ReplyDelete
  3. Usually you will put the movie release year! why this time you didnt put it?

    ReplyDelete
  4. //கணவன் வெள்ளை மாளிகையில்தான் இருக்கின்றான் என்பதை கண்டு பிடித்து விடுவாள்//
    ஆமா , கண்டு பிட்சிட்டா...

    செம படம்...
    வெள்ளை மாளிகையை விட்டு வெளியே வரும் செக்ரெட்டரியை காப்பாற்றும் காட்சி கிரேட்...
    கேமராவில் பேசும்போது,
    Villain : shut him down.
    Hero : you can't. i'm here to stay.

    Villain : i i underestimated u. This will not happen again.
    Hero : There is no again. you gonna die here.

    செம டயலாக்...

    ReplyDelete
  5. //கணவன் வெள்ளை மாளிகையில்தான் இருக்கின்றான் என்பதை கண்டு பிடித்து விடுவாள்//
    ஆமா , கண்டு பிட்சிட்டா...

    செம படம்...
    வெள்ளை மாளிகையை விட்டு வெளியே வரும் செக்ரெட்டரியை காப்பாற்றும் காட்சி கிரேட்...
    கேமராவில் பேசும்போது,
    Villain : shut him down.
    Hero : you can't. i'm here to stay.

    Villain : i i underestimated u. This will not happen again.
    Hero : There is no again. you gonna die here.

    செம டயலாக்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner