REVANCHE-2008/உலகசினிமா/ஆஸ்திரியா/ எதுவும் நம் கையில் இல்லை.பொதுவாக நமது பிளாக் அண்டு ஒயிட்  திரைப்படங்களில் 
எப்படி பட்ட  கெட்டவனாக  அல்லது கெட்டவளாக இருந்தாலும், சரியாக கடைசி  இரண்டு ரீலுக்கு முன்னாடி எல்லாத்தையும்  மறந்து விட்டு திருந்தி கடைசி பிரேமில் , முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த  எல்லோரும் ஒன்றாக  நின்று சிரித்தபடி போஸ் கொடுப்பார்கள்.. அப்படி கொடுக்கும் போது வணக்கம் போட்டு முடிப்பது நமது திரைப்ப மரபு.

ஆனால் இயல்பு வாழ்க்கை அப்படியானது  அல்ல...பங்காளிகளுக்கு அடித்துக்கொண்ட சண்டை தலைமுறை தலைமுறையாக  தொடர்ந்து கொண்டு இருப்பதை உயர்நீதிமன்றத்தில் நிலைவையில் உள்ள வழக்குகள் பரைசாற்றுகின்றன. யாரும் சடுதியில்  சட்டென யோக்கிய அவதாரம் எடுத்து மனம் மாறி  விட மாட்டார்கள்....ஆனால் அந்த அபத்த காட்சிகளில் இருந்து இப்போது வெளிவந்து விட்டோம் என்றால் இல்லை... மெல்ல மெல்ல வெளிவந்துக்கொண்டு இருக்கின்றோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கிளைமாக்ஸ் என்பது நம்மை பொருத்தவரை இவன் இவளோடு வாழ்க்கையை துவக்கினான் அவள் இவனோடு சேர்ந்தால் என்று  பொட்டில் அடித்தது போல காட்ட வேண்டும்,... அப்படி காட்டிய திரைப்படங்கள்தான்  வெற்றிப்படங்கள் ஆகி  இருக்கின்றன...

விக்ரம் திரைப்படம் வந்த  நேரம் படம் பார்த்து விட்டு பள்ளிக்கு வந்த  நண்பர்கள்  மண்டை குழப்பி போனார்கள்.....  கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டு நாயகிகள் கமலோடு காதல் புரிந்தவர்கள்..... கமலுக்கு  இரண்டு பேருமே முக்கியம்... இரண்டு பேரின் மீதும் கமலுக்கு காதல்  உண்டு.... இந்த பக்கம் போனால் அவன் அழைக்கின்றாள்...  அவள் பக்கம் போனால் இவள் அழைக்கின்றாள்... எந்த பக்கம் போவது என்று தெரியாமல் இரண்டு பேருக்கு நடுவில் கமல் ஒடுவார்... மச்சான் யாரை கமல் கல்யாணம் பண்ணிக்குவான்.. இவளையா? அவளையா? அக்னி புத்ரு, சலோமியா, சத்தியராஜ் , மீண்டும் மீண்டும் வா, ஜனகராஜ்,எல்லோரும் மறந்து  போனார்கள்.. கமல் கேரக்டர் விக்ரம் யாருடன் வாழ்வான்..? எவளோடு படுத்து புணருவான்.? இவளா? அவளா? என்ற பெருங்குழப்பத்துடன் விக்ரம் படம் பார்த்து விட்டு வீடு வந்தான்.. இரவு கனவில் இரண்டு பேரிடமும்  விக்ரம்   ஒட்டு துணியில்லாமல் புணர்ந்தான். இப்படித்தான் கிளைமாக்ஸ காட்சிகள்  மாற்றி வைத்தாலும் குழப்த்தோடு வீடு வந்தான்.

திருடா திருடா  திரைப்படத்தில் கடைசியா ஆனந், பிரசாந் இரண்டு பேரையும் ஹீரா துரத்திக்கொண்டு ஒடுவதாக காட்சி அமைத்து இருப்பார்... யாருட்டன் வாழ்வாள் என்ற பெருங்குழப்பம் இந்த படத்தில் என் நண்பர்களிடத்தில் இருந்தது... அப்படி ஒரு கிளைமாக்ஸ் யாருடன் ஹீரா வாழ்வார் என்பதை   காரண காரியத்துடன் பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்.

மெமரிஸ் ஆப் மார்டர் திரைப்படம்  எனக்கு தெரிந்து  இதுவரை  நான் பார்த்த திரைப்பட கிளைமாக்ஸ்களில் இந்த  கொரிய திரைப்படம் பெரிய அதிர்வலையை எனக்குள் ஏற்ப்படுத்தியது என்பேன்.. அப்படி ஒரு கிளைமாக்ஸ் நான் இதுவரை பார்த்தது இல்லை.... அது போல இந்த  ஆஸ்திரியா படமான REVANCHE படத்தின் கிளைமாக்சும் மிக  அற்புதமாக இருந்தது...

===================

REVANCHE படத்தின்  ஒன் லைன்.

ஆடி போய் ஆவனி வந்தா  டாப்பா வந்துடலாம்ன்னுதான் நிறைய பேர் நினைச்சிக்கிட்டு இருக்கோம் சில நேரத்துல ஆவனி , புரட்டாசி, ஐப்பசி  எல்லாம் போயிக்கிட்டே இருக்கும்.. டாப்பு மட்டும் வராது.. அப்படி டப்பா வராதாவன் பற்றிய கதைதான் இந்த திரைப்படத்தோட ஒன்லைன்.

============================
REVANCHE படத்தின் கதை என்ன?

அலக்ஸ் ஒரு லாட்ஜ் கம் ஓட்டலில் அடியாளாக வேலை செய்கின்றான்... விபச்சாரம் அந்த ஓட்டலில் பிரதான தொழில்.. யுக்ரைன்  நாட்டு விபச்சார பெண்ணான தமராவுக்கும் அலக்சுக்கும் ரகசிய காதல் இருக்கின்றது.. இரண்டு பேருக்குமே பணத்தேவைகள் இருக்கின்றன. அதனை தீர்க்க  பேங்கை கொள்ளையடிக்க போகின்றார்கள்.. அந்த கொள்ளை சம்பவத்தில் போலிசுட தமராவின்  உயிர் பிரிந்து விடுகின்றது..  தன் விபச்சார காதலியின் மரணத்துக்கு காரணமானவளை கண்டு பிடித்து பழிக்கு பழி வாங்கினானா? என்பதை வெண்திரையில் பார்த்து  தெரிந்து கொள்ளுங்கள்..

================
படத்தின் சுவாரஸ்யங்களில்  சில.  அற்புதமான திரில்லர்... நிறைய படங்கள் பார்த்து விட்டு அவன்தான் கொலைக்காரன்... இப்படி இருக்கலாம்  அப்படி இருக்கலாம்..  என்று நாம் நினைத்துகொண்டு இருக்க....  அப்படியும் இல்லை.. இப்படியும் இல்லை.. என்று ஊசி பட்டாசை வெடிக்க விட்டு படத்தை முடித்து விடுகின்றார் இயக்குனர் Götz Spielmann

மிக அழகாய் கேரக்டர்களை செதுக்கி  இருக்கின்றார்...  படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர்  கிராமபுரத்தில்  இருக்கும் அலக்ஸ் தாத்தா கேரக்டர்...

மற்ற திரில்லர் திரைப்படங்கள் போல வேகமான காட்சிகளில்   படத்தை நகர்த்தும் பேச்சுக்கே இடம் இல்லை.... மிக மெதுவாக நகரும் திரைக்கதை... மரத்தின் கிளையில் வெகுதூரம் பறந்த வந்த பறவைகள், இளைப்பாறுவது போல... கதாபாத்திரங்கள் மிக அழகாய் இளைப்பாறுகின்றன.


சென்னை 28 இல் ஜெய், சிவா தனியாக உன்க்கிட்ட பேசனும் என்று அழைத்து போக .. பாலத்துக்கு கீழே இருக்கும் பிரேம்ஜி ஏதோ பெரிய சண்டை நடக்க போகின்றது என்று நண்பர்களுக்கு எல்லாம் போன் செய்ய.. கடைசியில்  நினைத்தற்கு மாறாக  சண்டை போடாமல் கட்டிப்பிடித்துக்கொள்ளுவார்களே... அது போல இந்திரைப்படத்தில் டெம்பை ஏற்றி சாகடிக்கின்றார் இயக்குனர்...

அவன் கோபத்தின் இயலாமைகளை  மரம் அறுப்பதிலும், மரதுண்டுகளை உடைப்பதிலும் காட்சி அவன் மன  சோர்வை நீக்குவதாக  காட்சி அமைத்து இருக்கின்றார்...


ஏரி அருகே போலிஸ்காரன் ராபர்ட் உட்காரும் காட்சியும், அங்கே அலக்ஸ் வந்து முதன் முறையாக பேசும் காட்சியும், அதற்கு ரோபர்ட் சொல்லும் காட்சியும் வாவ்... அங்கேயே படம் முடிஞ்சிடுச்சி.. பட் அதுக்கு அப்புறம் அந்த பைனல் பேச்சு இரண்டு பேருமே லாக் ஆகி விட்டார்கள் என்பதை காண்பிக்க...

முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் மனதுக்கு மிக நெருக்கமாக நமக்கு பக்கத்தில் வந்து அமர்ந்துக்கொண்டு நம்மை கைபிடித்து அழைத்து செல்கின்றார். முக்கியமாக ராபர்ட் வீட்டுக்கு வெளியே   சேரில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது வைத்து இருக்கும் பிரேம் ஏதோ சீனரி என்று   நினைக்கத்தோன்றும்... அப்படி ஒரு  காட்சி...


=========
படத்தின் டிரைலர்.===============
படக்குழுவினர் விபரம்

Directed by Götz Spielmann
Produced by Heinz Stussak
Mathias Forberg
Götz Spielmann
Sandra Bohle
Written by Götz Spielmann
Starring Johannes Krisch
Irina Potapenko
Ursula Strauss
Hanno Pöschl
Cinematography Martin Gschlacht
Editing by Karina Ressler
Studio Prisma Films
Spielmann Film
Distributed by Filmladen
Release date(s)
16 May 2008
Running time 122 minutes[1]
Country Austria
Language German
Russian
Austrian dialect
Box office $192,451
============
படம் வாங்கி தள்ளிய விருதுகள்..

Berlin International Film Festival 2008
European Cinemas Label as Best European Film of the Panorama section
Art-Cinéma-Award 2008 of the CICAE (Confédération Internationale des Cinémas D´Art et Essai)
Femina film award of the Verband der Filmarbeiterinnen to Maria Gruber for the production design
Diagonale 2008:
Grand Award as Best Austrian feature film
Spezial Award of the Jury for actress Ursula Strauss
Diagonale-Prize of the Association of Austrian Cinematographers to Martin Gschlacht for best cinematography in a feature film
Tromsø International Film Festival 2008 (Norway):
FIPRESCI Award
First Prize Aurora
Palm Springs International Film Festival 2008: FIPRESCI-Award as Best Foreign Language Film of the Year
Awards from smaller film festivals: at the Filmkunstfest 2008 in Mecklenburg-Vorpommern (Fliegender Ochse as best feature film), at the Monterrey International Film Festival 2008 (Best Screenplay and Audience Award), at the Fünf Seen Filmfestival in Starnberg (First Prize Star 2008), and at the International Filmfestival Motovun 


=

பைனல்கிக்.

சிறந்த அயல்நாட்டு மொழிதிரைப்பட கேட்டகரியில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம்.... நல்ல திரில்லர்.. நல்ல மேக்கிங், அற்புதமான சினிமோட்டோகிராபி  என்று பாராட்டினாலும் முக்கியமாக  அற்புதமான கிளைமாக்ஸ் .. ஐரோப்பிய சினிமாக்களில் இந்த திரைப்படம் குறிப்பிட தகுந்த திரைப்படம். என்பதில் ஐயம் இல்லை.. இந்த திரைப்படத்தில் அரை  நிர்வாண உடலுறவு காட்சிகள் இருப்பதால் இந்த திரைப்படம் வயதுக்கு வந்தோருக்கானது.. இந்த திரைப்படம் சினிமா ஆவலர்கள் பார்த்தே தீரேவேண்டிய திரைப்படம்... படத்தை பரிந்துரை செய்த கீதப்பிரியன் கார்த்திக்கு  என் அன்பும் கனிவும்.


================
படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு எட்டு.


===========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

10 comments:

 1. ungalukku mattum eppadi time kidaikkuthu anne...nanum rendu masama oru post ezhutha try panran mudiyala..

  ReplyDelete
 2. நான் இன்னும் பாக்கலை,முதல் வேலையா பாத்துடறேன்,நன்றி

  ReplyDelete
 3. கலியபெருமாள் கண்ணு வைக்காதைய்யா..

  ReplyDelete
 4. சேகுமார், நாடோடி பையன், கார்த்தி அவசியம் பாரு.., நன்றி லக்ஷ்மி.

  ReplyDelete
 5. தல, உங்களலமட்டும் எப்படி முடியுது, நானெல்லாம் வீட்ல லேப்டாப் தொட்டாலே திட்டு விழுது (திட்டுமட்டும்தான்..)

  ReplyDelete
 6. SIR MARIYAN PADATHUKU UNGA REVIEW INNUM VARLA

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner