சென்னை அடையார் திரைப்படக்கல்லூரியில் எனது முதல் வகுப்பு.




சென்னை (அடையார்)எம்ஜியார் திரைப்படக் கல்லூரிக்கும் எனக்கு நிறைய சம்பந்தம் இருக்கின்றது...
ஆனால் அங்கே கெஸ்ட் லெக்ட்ராக செல்வேன் என்று 1998 ஆம் அதே வளாகத்தில் சுற்றிக்கொண்டு இருந்த என்னிடம் கடவுளே நேரில் வந்து சொல்லி இருந்தாலும் நான் நம்பி இருக்க மாட்டேன்...

1998இல் ஜெயா டிவி ஆரம்பிக்கும் போது காலை மலர்  நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புக்கு செட்   போட்டு,கேமரா  அசிஸ்டென்ட்டாக அந்த வளாகத்தில் இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி  இருந்து  வேலை பார்த்துஇருக்கின்றேன்...

 இரவு  வேளையில் வெளியே வந்தால் இன்ஸ்டியூட் தெருவில் ஒரு ஈ, காக்கா இருக்காது..   பிலிம் இன்ஸ்டியூட்டுக்கு  பக்கதில் இருக்கும்  சின்ன கிராமத்தில் இரவு டிபன் முடிக்க வேண்டும்.. அதுவும்  ஒன்பது மணிக்கு எல்லாம் கடையை சாத்திவிடுவார்கள்...

 எந்த பக்கம் திரும்பினாலும் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும்.. நந்தினி,சபாஷ், என்றென்னும் காதல் திரைப்படம் ஷூட்டிங்குகள் அப்போது  பார்த்து இருக்கின்றேன்.இன்று  அந்த இடங்கள் எல்லாம் கான்கீரிட் காடுகளாக மாறி விட்டன... கடைசியாக மதுரை காமராஜரில் எம்ஏ மாஸ் கம்யூனிகேஷன்  படித்த போது  என் பேட்ஜ் மாணவர்களோடு அதனுள் சென்று இன்டஸ்ட்ரி விசிட் அடித்து வந்து இருக்கின்றேன்... அதே கட்டிடத்தில்  என்னுடைய கெஸ்ட் லெக்ட்சர்  கொடுப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை...

ஐந்து வருடங்கள்... மாணவ மாணவிகளுக்கு வகுப்பு எடுத்த அனுபவம்  எனக்கு இருக்கின்றது என்றாலும் நான்கு வருடங்கள் கழித்து திரும்பவும் சாக் பீஸ் கையில் எடுத்த போது எனக்கே என்னை பிடித்து இருந்தது.  

அதீத நெருக்குதல் காரணமாக தந்திடிவியில் வேலையை விட்டு வெளியே  வந்தாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகின்றது..  நிறைய படம் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். வேறு சேனல்களில் டிரை செய்து கொண்டு இருக்கின்றேன். 

இந்த நேரத்தில்தான் கெஸ்ட் லெக்ட்சர் கொடுக்க  வேண்டும் என்று டைரக்ஷன் டிப்பார்ட்மென்ட்டில் இருந்து ஆனந்த என்ற  மாணவரும் இயக்குதல்  துறை தலைவர்  மோகன கிருஷ்ணன் அவர்களும் என்னை அழைத்தார்கள்.....ஓ தாரளமாக  செய்து விடலாம் என்று சொன்னேன்... கடந்த  செவ்வாய்கிழமை முழு நாளும்  அவர்களுக்கு வகுப்பு எடுத்தேன்... மிக மிக  மன நிறைவான நாள்  கடந்த  செவ்வாய்க்கிழமை என்று அடித்து சொல்லலாம்...

12 மாணவர்களோடு ஆரம்பித்த  வகுப்பு மதியத்துக்கு மேல் 30 க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் புடை சூழ உட்கார்ந்து இருந்தார்கள்...

ஒரு நடிகரின் மகனோ, ஒரு இயக்குனரின் மகனோ, ஒரு ஒளிப்பாதிவாளரின் மகனோ அங்கே படிக்கவில்லை...பிரசாத்  மற்றும் எஸ்ஆர்எம் பிலிம் இண்ஸ்டீயூட் போல   அவர்கள் செல்வ செழிப்பு குடும்ப பின்னனி  உள்ள மாணவர்கள்  அவர்கள்  அல்ல... ஆனாலும் அவர்கள் கண்களில் எதிர்கால   சினிமா பற்றிய லட்சியங்கள் அவர்களிடத்தில் காண்கின்றேன்.

காலையில் மாணவர்களிடம் நான் முன் வைத்த முதல் கேள்வி...  உங்கள் பெயர், குடும்ப பின்னனி ?,ஏன் இந்த துறையை தேர்ந்து எடுத்தீர்கள்..? இந்த  துறையை தேர்ந்து எடுக்க  காரணமாகவும், பாதிப்பை ஏற்ப்படுத்திய திரைப்படம் என்ன? என்று கேள்வி கேட்க.. வித்யாசமான  பதில்கள் ரசிக்க தக்க அளவில் வந்து விழுந்து காலை  வேளையை சுவாரஸ்யபடுத்தின.....  

நிறைய படங்களை குறிப்பெடுத்துக்கொள்ள சொல்லி இருந்தேன்.. அந்த திரைப்படங்களை அவசியம் பார்க்க வேண்டும் என்றேன்... நிறைய படங்கள் எழுதிய காரணத்தால் எந்த  சந்தேகம்  கேட்டாலும் உடன் பதில் சொல்ல  முடிந்தது... ஏன்  அதிகம்  திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் ? நீங்கள் திரைப்படம் எடுக்கும் போது   ஷாட் கம்போஸ்  செய்ய அது ரொம்பவே யூஸ்புல்லாக இருக்கும் என்றேன்..

 நான் ஒரு படம் இயக்கினால் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய ஜானி கதார் இந்தி படத்தில் வரும் இன்ட்ர்வெல் பிளாக் போல ஷாட் வைப்பேன் என்று சொன்ன போது அந்த படத்தை பார்க்கவேண்டும் என்று மாணவர்கள் ஆர்வப்பட்டார்கள். எனக்கு  நல்ல திரைப்படத்தை அறிமுகபடுத்த அப்போது ஆள் இல்லை அதனால் நல்ல திரைப்படங்களை தொடர்ந்து என் வலையில் அறிமுகபடுத்திக்கொண்டு வருகின்றேன் என்று சொன்னேன்.


தமிழ் சினிமாவின் எதிர்காலம், லோ பட்ஜட் படங்கள், எல்லாம்  விவாதங்களாக போயின....  மதியம் மூன்று மணியளவில் டைரக்ஷ்ன் மாணவர்களிடம் 36 டிராமேட்டி சூழ் நிலைகள் தெரியுமா? என்று கேட்டேன்.. தெரியாது என்றார்கள்...

1996 ஆம் ஆண்டு சென்னையில் மேற்கு மாம்பலம் கணபதி தெருவில் உதவி இயக்குனர் நண்பர்களோடு நான் தங்கி இருந்த போது 26 சிட்ச்சிவேஷன்., 32 சிட்ச்சிவேஷன்,22 மட்டுமதான்   என்று ஜல்லி அடித்துக்கொண்டு இருந்தார்கள்.... அதை என்ன என்று சொல்லி தர மாட்டார்கள்... ஜல்லி அடித்தவன் குளிக்க போகும் போது ,திருட்டுமனமாக  டைரி பிரித்து எழுதிய சம்பவங்கள் எல்லாம் நண்பர்களுக்கு  உண்டு. அது தெரிந்த உடன் சினிமா தெரிந்து  விட்டாதாக காலரை தூக்கி விட்டுக்கொண்டு நடந்தவர்களை நான் அறிவேன்...

ஆனால் இன்று  இணையத்தில்  அவைகள் சல்லிசாக கிடைக்கின்றது... விக்கிபிடியாவில் யார் படித்தாலும் படிக்காவிட்டாலும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன நண்பர்களே நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்.. ஆனால் அதை வைத்துக்கொண்டு  திரைக்கதைடிய என்னால் மட்டுமே சிருஷ்ட்டிக்க முடியும் என்று தலைகணத்தில் ஆடவேண்டாம் என்று  வேண்டிக்கொண்டேன்...உங்களை சுற்றி இருக்கும் கதைகள் ஒரு படத்துக்குமேல தாங்காது.. ஆனால் நிறைய படங்களும், நாவல்களும் , புத்தக வாசிப்பு மட்டுமே உங்களை நிலைநிறுத்துக்கொள்ள முடியும் என்றேன்..

 சில வாரங்களுக்கு முன்  டப்பிங் திரைப்படம்  வளர்ச்சி வீழ்ச்சி பற்றி கேப்ட்ன் டிவி  நேரலையில் நான் பங்கு கொண்டேன்.. அங்கே பகிர நேரம் இல்லாத பல கருத்துக்களை,  இங்கே  மாணவர்களிடத்தில் விவதாமாக வைக்கலாம் என்று  நினைத்தேன்... நேரம் இல்லாத காரணத்தால் பிறகு ஒரு நாளில் கண்டிப்பாக வந்து வகுப்பெடுக்கின்றேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

வகுப்பு முடியும் போது மாணவர்கள்   மற்றும்   துறைதலைவர்  மோகனகிருஷ்ண்ன் அவர்கள் எஸ் ரா அவர்கள் எழுதிய சிறுது வெளிச்சம் என்ற புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்கள்...


நல்வாய்ப்பை வழங்கிய துறைதலைவருக்கும் மாணவர்களுக்கும் எனது நன்றிகளை தெவித்தேன்..  என் தளத்தை வாசித்து என்னை  பற்றி அறிமுகபடுத்திய  நாளையை இயக்குனர்  (மாணவர்கள்) பாரதிதாசன் மற்றும் அனந் அவர்களுக்கு நன்றி. மற்றும் இரண்ண்டாம் ஆண்டு மாணவர்கள், வகுப்பு நடக்கும் போது எடிட்டிங் , சவுன்ட் என்று மற்ற வகுப்புகளில் இருந்த மாணவர்களும் ஒன்று  சேர்ந்து பாடத்தை கவனித்தனர்..

தமிழில்  வகுப்பு நடத்தியது... இன்னும் சந்தோஷம்...

மாணவர்களிடம் விடை பெறும் போது எனது தளத்தை அறிமுகபடுத்தி   எனது மெயில் ஐடி கொடுத்து விட்டு வந்தேன்...



இரண்டு பேர் பதில் போட்டு இருந்தார்கள்...அவர்களுக்கு என்  நன்றிகள்.

I'm bharathidasan frm FTIT.

Inga neenga solli kodutha 36 situation pathi than ore pechaaga irukkirathu.


 Ungaloda bodylanguage oru teacher ku uriyathaagavum ketporai elithil ulvaangi kollakoodiyathaagavum irunthathu.

Melum ungaloda blog la vara padangala note panni vachu download panni parthuttu irukom ellorayium athu polave seyyavum sollirukom.

Collegeku director anniki vara irunthathaala sila kularupadigal erpatrukalam mannikkavum.

Ungalal etho oru vagayil engal manavargaluku
"sirithu velicham" kidaithullathu

nantri sir.

=================


im mohankumar from film institute.ur class is nice.
within limited hour  u gave good lectures.this give idea about situation separation in
script.

we cordially thank u very much for ur joyable honorary
class.

Let continue ur guidance our direction students .









========================
மாணவ செல்வங்கள்  அனைவரும் நடுத்தர குடும்பம் லட்சயத்தோடு குடும்ப பொறுப்புகளும் இருக்கின்றன.. அப்படி பட்ட மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த வகையில் நான் பெருமைபடுகின்றேன்...1945 ஆம் ஆண்டு துவக்ப்பட்ட இந்த  பாரம்பரிய திரைப்பட கல்லூரியில் பயிலும் மாணவர்கள்  இன்னும்  எதிர்கால சினிமாவை திரும்பி பார்க்க வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கின்றது.


நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நாளைய இயக்குனர்களே...

=========

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

20 comments:

  1. அனுபவம் சுவாரஸ்யமானது அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான அனுபவம்! அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. நிறைய எழுதினால் கூட சரியாக வகுப்புகள் எடுப்பது என்பது கடினம் தான் பன்முகத் திறமை வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  4. ஜாக்கி அண்ணா வாழ்த்துக்கள். எல்லாம் யாழினி வந்த நேரம்.
    வாழ்வின் துயரத்தை தாண்டி இந்த நிலையை அடைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணே....

    ReplyDelete
  5. ஜாக்கி அண்ணே வாழ்த்துக்கள்.எல்லாம் யாழினி வந்த நேரம்.
    வாழ்வின் துயரத்தை எதிர்கொண்டு, உழைப்பின் முலம் இந்நிலையை அடைந்தது, வாழ்த்துக்கள் அண்ணே .

    ReplyDelete
  6. Very nice Jackie.... Keep it up !!
    Engalukkum andh "situations" pathi oru Post la sollungalen,
    neenga sonna adhu elimaiyaa irukkum understand panna.

    ReplyDelete
  7. பொறுப்புகள் அதிகமாகியுள்ளது. எழுத்துப்பிழையின்றி, புதிய எழுத்து நடையில் எழுத வேண்டிய நேரமும் கூட.

    ReplyDelete
  8. மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு வந்த சந்தோஷத்தையும் திருப்தியையும் உங்களது பகிர்வில் காண முடிகின்றது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. Wish u all sucees to get best career job

    ReplyDelete
  10. இந்த வாய்ப்பு தங்களுக்கு தன் நிறைவை கொடுத்துள்ளது ஜாக்கி அண்ணே.
    இந்த தன் நிறைவு எப்போதும் வருவது இல்லை தனக்கு பிடித்த நிகழ்வு ஏற்படும் போது அல்லது ஏற்படுத்திக்கும் போது மட்டுமே வருவது .இந்த துறையில் உங்களுக்கு அதீத ஆர்வம் எனவே அதை பத்தி தெரிவிக்க ஒரு வாய்ப்பு அமையும் போது சரியான முறையில் பயன் படுத்தியுள்ளீர்கள்.
    ஒரு கலைஞன் தன்னை மெழுகேற்றுவதற்கான அச்க்ஆனி தான் நீங்கள் செதுக்கியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. Can u please share the presentation you gave to those students in your blog.

    ReplyDelete
    Replies
    1. Jackie's presentation on on template it is word...a flow one thing to another

      Delete
  12. நல்லதொரு அனுபவப் பதிவு. இது பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும்.....முத்து ஐயர்

    ReplyDelete
  13. மென்மேலும் வளர

    நெஞ்சார்ந்த வாழ்த்துகள

    ReplyDelete
  14. WISHING YOU ALL THE BEST JAKI SIR, AND YOU SHOULD OFFER YOUR KNOWLEDGE AND EXPERIENCES TO SO MANY STUDENTS.

    ReplyDelete
  15. நாங்க தான் சார் உங்களுக்கு நன்றி சொல்லணும். பலமுறை அழைத்தும் வராதவர்களுக்கு மத்தியில் ஒருமுறை அழைத்ததுமே எங்களுக்காக வந்த உங்கள் மனதினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எவ்வளவோ அறிவில் பின்தங்கி இருந்த எங்களை இயன்றவரை அந்த ஒரு நாளில் மேதைகளாக்க முயற்சித்த உங்கள் முயற்சிக்காகவே நாங்கள் மேதைகளாக மாற முயற்சி செய்கின்றோம். குறிப்பாக, எவரிடம் கேட்டும் பெற முடியாத திரைக்கதையின் சூட்சமத்தை கேட்காமலே எங்களுக்கு நீங்கள் உரைத்த அந்த நொடி முதலே எங்கள் மனதில் மனதிற்கினிய மானசீக குருவாகிவிட்டீர்கள் நீங்கள்.. முடிவாக எங்கள் களம், உங்கள் தளம் இரண்டையும் அறிமுகபடுத்தியதர்க்கு மிக்க நன்றி. இந்த நன்றி நீங்கள் எங்கள் மீது காட்டிய அக்கறைக்கு. மீண்டும் நல்லதோர் நேரத்தில் உங்களை சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்.....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner