INSOMNIA-2002/இன்சோமியா/துப்பறிவாளனின் தூக்கமின்மை.




கிரிஸ்டோபர் நோலன்...
திரைக்கதை வெற்றியாளராக  இன்று அனைவருக்கும் தெரியும்.. அவருடைய இயக்கதில் அனைவரது கவனத்தையும் , பாராட்டையும் பெற்ற  திரைப்படம் எது என்றால்  ? மெமன்ட்டோ திரைப்படத்தை  குறிப்பிட்டு சொல்லலாம்.... அதன் பிறகு எடுக்ப்பட்ட இன்சோமனியா திரைப்படம் அவரை இன்னும் சரக்கு உள்ள இயக்குனர் என்று அவரை உலகுக்கு அறிமுகபடுத்தியது... 


அது மட்டும் அல்ல இரண்டு பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகள் ஆல்பசினோ மற்றும் ராபின்  வில்லியம்ஸ் இரண்டு பேரையும் கட்டி மெய்த்தில் இருந்தே அவருடை திறமையை கண்டு கொள்ளலாம்...280 பேர் இருக்கும் ஒரு  நகரத்தில் இளம்பெண் கொலையாகின்றாள்.. ஏன் கொலையானால் என்று இந்த படம் விவரிக்கின்றது.

==============

INSOMNIA-2012/இன்சோமியா படத்தின் ஒன்லைன்.


அலஸ்காவில் நடந்த டீன் ஏஜ் கொலையை கண்டுபிடிக்க இரண்டு டிடெக்ட்டிவ் லாஸ் ஏஞ்ஜல் நகரத்தில் இருந்து வருகின்றார்கள்.. அவர்கள் கொலையாளியை கண்டு பிடித்தார்களா? என்பது தான்  படத்தின் கதை ஒன்லைன் எல்லாம்.

================

INSOMNIA-2012/இன்சோமியா படத்தின் கதை என்ன?

அலாஸ்காவின் மீன் பிடி நகரமான  நைட் மியூட் வில் 17 வயதான இளம்பெண் கே கொலையாகின்றாள்... கொலையாளி யார் என்று கண்டு பிடிக்க  லோக்கல் போலிஸ் திணருகின்றது.. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து டீடெக்ட்டிவ்   அல்பாசினோ (டோமர்) மற்றும் அவரது நண்பர் மாட்டின் டோனவன் (ஹாப்) இரண்டு பேரும் அலாஸ்கா வருகின்றார்கள். 

அவர்கள் இருவரும் சேர்ந்து கொலையாளியை கண்டு பிடித்தார்களா? என்பதுதான் படத்தின் கதை.


=============
படத்தின் சுவாரஸ்யங்கள்.


 இந்த திரைப்படம் ஒரு  ரீமேக் திரைப்படம். 1997 இல் இதே பெயரில் நார்வேஜியன் திரைப்படமாக வெளிவந்தது...  நோலன் இந்த திரைப்படத்தின் கதையை சிறிதும் மாற்றம் செய்யாமல்   படத்தின்  நடித்த  கேரக்டர்களின் தன்மையை முற்றிலும்  மாற்றினார்...


 முக்கியமாக protagonist  கேரக்டர்களை வடிவமைத்த விதத்தில்  இந்த திரைப்படதின் வெற்றியை உறுதி செய்து  இருக்கின்றார்... உதாரணம்.. மெயின்  கேரக்டர் அல்பாசினோ மற்றும் ராபின் வில்லியம் இருவரையும் அமெரிக்கர்கள் தடிப்பையும்  முரண்பாடுகளையும் ,பாடி லாங்வேஜயும் அதிகம் பிரதிபலிக்கும் படி  பார்த்துக்கொண்டதே இந்த படத்தின் ரீமேக்  வெற்றிக்கு அடிகோலியது.


 இந்த படத்தை வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கவும் நோலனை தங்கள்   பட்டறையில்  சேர்த்துக்கொள்ளவும் பெரும் உதவியாக இருத்வர்... எனது பேவரிட் டைரக்டர் ஓஷன் 11 எடுத்த ஸ்டீவன் ஸ்டோபெர்க்.


 சரி இன்சோமனியான்னா இன்னா தலைவா என்று கேட்பவர்களுக்கு, தூக்கம் வரவே வராத ஆட்களுக்கு இன்சோமனியான்னு  சொல்லுவாங்க...  தூக்கம் வராத பிரச்சனைக்கு பெயர்..


 அல்பசினோ தூக்கம் வரலைன்னு  நடிக்கும் காட்சிகள் அற்புதம்.. கமல் எந்த  அளவுக்கு  இந்ம நகடிர் மேல இன்ஸ்பயர் ஆகி  இருக்கார் என்பது அவரை நடிப்பை மேனாரிசத்தை பார்த்தாலே தெரியும்.


 நல்ல வெயில் அடிக்கும் பகலில்  அல்பாசினோ.. இப்ப இன்வஸ்டிகேஷன்   போகலாம் என்று சொல்ல இப்போது இரவு  பத்தரை என்று சொல்லும்  போது  நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்.. காரணம் அங்கு முன்று மாதத்துக்கு பகல்தான்  இரவே இருக்காதாம்.. அதே போல மூன்று மாதத்துக்கு இரவுதான்  சூரியனே வராதாம்...


நைட் மியூட் நகரத்தில் மொத்த மக்கள் தொகையே 280 பேர்தான்...


வில்லியம்சை துரத்த ஆற்றில்  மரங்கள் அறுத்து, செல்ல அல்பசினோ அதில் விழுந்து உயிருக்கு அலைபாயும் காட்சி அருமை.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நகரான  ராபின் வில்லியம்ஸ் இந்த படத்தில் வில்லன்.. அசத்தி இருக்கின்றார்.


கடைசியாக துப்பாக்கி தோட்டவை எடுத்து நான் இதனை  வீசிவிடுகின்றேன்.. நீயும் பார்க்கலை நானும் பார்க்கலை என்று சொல்ல... அதற்கு அல்பாசினோ வேண்டாம் உன் வழியில் நீ  செல்  என்று கண் மூடிவது... ஒரு நாள் நீச்சயம்  நான் ஏன் என் பார்டனரை சுட்டேன்னு உனக்கு தெரியும் என்பதாக சொல்லாமல் சொல்லும் காட்சி டைரக்டர் டச்.



இன்வெஸ்ட்டிகேஷன் செய்ய அல்பாசினோ காரில் போக சைடில் நீர்விழ்ச்சி பொங்கி ஊற்றிக்கொண்டு இருக்க ஆள் ஆராவரம் இல்லாத அந்த அருமையான இடத்தை பார்க்கையில் நம்ம குற்றால அருவி நினைவுக்கு வந்து தொலைத்தது.


============
படத்தின் டிரைலர்



===================
படக்குகுழுவினர் விபரம்


Directed by Christopher Nolan
Produced by Broderick Johnson
Paul Junger Witt
Andrew A. Kosove
Edward L. McDonnell
Screenplay by Hillary Seitz
Christopher Nolan
(uncredited)[1]
Based on Insomnia 
by Erik Skjoldbjærg
Nikolaj Frobenius
Starring Al Pacino
Robin Williams
Hilary Swank
Music by David Julyan
Cinematography Wally Pfister
Editing by Dody Dorn
Studio Alcon Entertainment
Section Eight
Distributed by Warner Bros. (USA)
Buena Vista International
(UK and AU)
Release date(s)
May 24, 2002
Running time 118 minutes
Country United States
Language English
Budget $46 million
Box office $113,714,830
===================
நோலன் அல்பாசினோவின் ஒரு ஜாலி இன்டர்வியூ.



===============
பைனல்கிக்.

இந்த திரைப்படம் அருமையா சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம்.... கிரிஸ்ட்டோபர் நோலன் இயக்கத்தில் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்கையில் இன்னும் நிறைய விஷயங்கள்  உங்களுக்கு புரிபட்டுக்கொண்டே இருக்கும் அதுதான் நோலனின் திறமை. இந்த திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் என்று பரிந்துரைக்கின்றேன்... விக்கென்ட மூவீயாக இந்த படத்தை பார்த்து கொண்டாடலாம்.

======================
 படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு ஏழு..



====================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

  1. this came in 2002 says imdb.. pls correct it jakie..

    ReplyDelete
  2. இந்த திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் என்று பரிந்துரைக்கின்றேன்...

    சரி...

    வெளிநாட்டில் இருக்கும் எங்களைப் போன்றோர் இணையத்தில் பார்க்க இணைய முகவரி கொடுத்தால் நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  3. Please Correct the year of the movie. Insomnia 2012 to 2002

    ReplyDelete
  4. Mr. Se. Kumar - you can search in youtube (through google) or in dailymotion. Or just download Utorrent software and films available in kat.ph (kickass torrents).. its simple.

    ReplyDelete
  5. now kat.ph change to kickass.to for your info...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner