இயற்கைக்கு மீறிய எந்த விஷயத்தை செய்தாலும் அது கடைசியில் அது துன்பத்தில்தான் போய் முடியும்... இதுதான் உலகவிதி..
அதனால்தான் மனித சமுகத்தில் இன்னும் தப்பிபிழைத்த ஒரு சில சமுக ஆர்வலர்கள் இயற்கையோடு இயந்து வாழ பழகுங்கள் என்று தலைப்பாட அடிச்சிக்கறாங்க..சென்னையில் தேர்வுக்கு படிக்கும் பல மாணவ மாணவிகள் தேர்வுக்கு முன் போதை மாத்திரை கொஞ்சம் எடுத்துக்கொண்டு படிக்கின்றார்கள்.. காரணம் அது மூளையை பிரஷ் பண்ணுகின்றது என்று காரணம் சொல்லுகின்றார்கள்.. இன்னும் சிலர் கஞ்சா ஒரு பப் இழுத்து விட்டு படிக்கின்றார்கள்..... இப்படி படிக்கும் செய்திதான் நம் காதுக்கு வருகின்றதே ஒழிய.. அவர்கள் என்னமார்க் எடுத்து கிழித்தார்கள் என்று அதிகாரபூர்வ தகவல்கள் கிடைப்பதில்லை.... மூளையை பிரஷ் செய்துக்க கொஞ்சமாக எடுத்துக்கொண்ட போதை பொருள் இவர்களை முழுவதும் விழுங்கிவிட்டதா? என்பதும் தெரியவில்லை.....
=====
சார்...
என்னய்யா?
வயாக்கரா போட்டுகிட்டு மேட்டர் பண்ண... சும்மா அரைமணிநேரத்துக்கு ஒரு இழுப்பு இழுத்துடலாம்...
இடியட் அரை மணிநேரம் பண்ணி என்ன கின்னஸ்சாதனையா பண்ண போற???இன்னைக்கு மாத்திர போட்டு அரைமணிநேரத்துக்கு ஆசைபடறே... பட் மாத்திரை போட்டு உடம்பு தளர்ந்துடுச்சின்னா? அரை செகன்டுக்கூட எழுந்து நிற்காது... அப்புறம் அறையில் மூலையில உட்கார்ந்து கிட்டு எழுந்துரு அஞ்சலி.. எழுந்துரு அஞ்சலி எழுந்துரு என்று சொல்லிக்கொண்டு இருப்பதை தவிர வேறு வழியில்லை......
இப்படி இயற்க்கைக்கு மாற ஒரு மாத்திரையை நம்பும் எழுத்தாளன் பற்றி கதைதான். லிமிட்லெஸ் படத்தின் கதை.
LIMITLESS-(2011) படத்தின் கதை என்ன??
எடி... (Bradley Cooper) ஒரு பிரபல எழுத்தாளர்...பத்தாம் தேதிக்குள்ள ஒரு கதையை கொடுக்கனும்னு டெட் லைனில் இருக்கும் எழுத்தாளர்.. பட் எழுத மூட் இல்லை.. பரதேசிகோலமா ரோட்டில் அலைந்து கொண்டு இருக்கும் போது, எடியோட முன்னாள் பொண்டாட்டியோட தம்பி அவனை பார்த்து விட்டு, என்னதான் இருந்தாலும் பழைய மாமா இல்லையா? அந்த பாசத்துல...எடிகிட்டு மாமா நான் இப்ப டிரக் பிசினஸ் பண்ணிகிட்டு இருக்கேன்... நாங்க ஒரு மாத்திரை கண்டு பிடிச்சி இருக்கோம்.. அந்த மாத்திரையை போட்டுகிட்டா எந்த ஒரு விஷயத்தை செஞ்சாலும் 100 பர்சன்ட் அறிவு வந்துடும் பரபரப்பா மாறிடுவிங்கன்னு சொல்லறான்... சரி இருக்கட்டும் கழுதைன்னு சாம்பிள் மாத்திரை வாங்கிகிட்டு வீட்டுக்கு போகும் எடி... கதை எழுத உட்கார்ந்தா ஒரு கண்றாவியும் நினைவுக்கு வரவில்லை...
சரி முன்னாள் மச்சான் கொடுத்த மாத்திரையை ஒன்னு எடுத்து போடுவமேன்னு எடுத்து போட்டா மூளை பரபரப்பாகி புத்தகமா எழுதி தள்ளறான் இப்படி கூட எழுத முடியமான்னு பப்ளிஷர் அதிர்சி அடையறாங்க.. அந்த அளவுக்கு நாவல் சூப்பரா இருக்கு...
சரி அந்த மாத்திரை இன்னும் கொஞ்சம் வாங்கி வச்சிக்குவோம்ன்னு சொல்லிட்டு பழைய மச்சான்கிட்ட போன அவன் செத்து கிடக்கின்றான்... காரணம் அந்த மாத்திரைக்கு இருக்கும் டிமாண்ட் அதனாலதான்... அவனை கொலை செய்து இருக்கின்றார்கள்...
இருப்பினும் மாத்தரையை இவனும் தேட ஒரு பை நிறைய மாத்திரைகள் எடுத்துக்கன்றான்.. அதன் மூலம் அவன் இன்னும் பேமஸ் ஆகின்றான். ஆனால் அந்த மாத்திரையை திருட ஒரு கும்பல் சுத்திகிட்டே இருக்கு... அவனுடைய முதல் பொண்டாட்டி பைத்தியக்காரி போல ரோட்டில் பார்க்கின்றான்.. தம்பி கொடுத்தான் ஒரு மாத்திரையை சாப்பிட்டேன்.. அது இப்ப கெடக்கறதில்லை அதனால் உடல் எயிட்ஸ் பேஷன்ட் போல ஆயிட்டேன் என்று வருத்தபடுகின்றாள்..
எழுதறவேலையை விட்டு விட்டு அதிகமா பணம் சம்பாதிக்க டிரேட் பிசனசில் இருக்கும் பிசினஸ்மேன் ராபர்ட் டிநிரோவோடு கை கோர்க்கின்றான் எடி.பணம் விளையாடும் பிசினிஸ்.... எல்லாம் அந்த மாத்தரையை நம்பி..... இந்த டிரேட் பிசினஸ்க்கு வரான் ..ஆனால் அந்த மாத்திரை ஒரு சுபயோக சுபதினத்தில் காணமல் போகின்றது... எடி கதி என்ன படத்தை பாருங்கடி கதையை கேட்டுக்குனு......
==================
படத்தின் சுவாரஸ்யகளில் சில...
Bradley Cooper இப்பதான் இந்த ஆளை ஹேங்ஓவர்ல பார்த்து சிரிச்சிட்டு வந்து கொஞ்சநாள் கூட ஆகலை அதுக்குள்ள Bradley நடிச்ச இந்த படத்தை பார்த்தால் செம விறு விறுப்பு பரபரப்பு...
இயக்குனர் Neil Burger இல்லுசனிஸ்ட் படத்தை எடுத்தவர்...எப்பயுமே நாவலை படமாக்குவதுதான் இவருக்கு பிடிக்கும் போல....
எழுத்தாளர்Alan Glynn எழுதிய The Dark Fields என்ற நாவலின் திரைவடிவம்தான் இந்த திரைப்படம்...
ரொம்ப நளைக்கு அப்புறம் ராபர்டி நீரோ நடித்த படத்தை பார்க்கின்றேன்.. உடல் தளர்ந்து விட்டாலும் இன்னும் அந்த கர்ஜனை உடல் மொழி இன்னும் மாறவில்லை....
ஒரு கட்டத்தில் மாத்தரைஇல்லை உயிர் போய் விடும் என்று நினைத்து இருக்கும் வேளையில் கொஞ்சநேரத்துக்கு முன் இறந்தவனின் ரத்தத்தில் அந்த மாத்திரை கலந்து இருப்பதை தெரிந்ததும் அந்த ரத்தத்தை நாய் போல நக்குவது சிறப்பான டுவிஸ்ட் காட்சி..
அதே போல கதாநாயகி Abbie Cornish எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள என்ன செய்து என்று அறியாமல் முழிக்கும் போது அந்த மாத்திரையில் ஒன்று எடுத்து வாயில் போட்டுககொள்ள மூளை சுறு சுறுப்பாக எதிரிகளிடம் இருந்து சமயோஜிதமாக தப்பி செல்வது அழகு....
Abbie Cornish இந்த பெண்ணின் போதை கொள்ளும் இந்த கண்களை எங்கேயோ பார்த்து இருக்கின்றோமே என்று நினைத்துக்கொண்டே இருந்தேன்.. ம் நினைவுக்கு வந்து விட்டது.. 2004ல் ஆஸ்திரேலியபடமான சம்மர்சால்ட் படத்தின் ஹீரோயின்...எழு வருடம் கழித்து சற்று பெருத்த குட்டியாக பார்ப்பதால் அடையாளம் சட்டென தெரியவில்லை... சம்மர் சால்ட் படத்தினை வாசிக்க இங்கே கிளிக்கவும்
மாத்திரையை சாப்பிட்டு விட்டதும் நாலு நாளைக்குள் ஒரு நாவல் எழுதுகின்றான்... கேசினோவில் சம்பாதிக்கின்றான்..ஒரு கொலை பழியில் சிக்குகின்றான்... என்று சுவாரஸ்யம் கூட்டி இருக்கின்றார்கள்... படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பெண்டு கழ்ன்டு இருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகின்றது....
மாத்திரையை நம்பி நிறைய கமிட்மென்ட் உருவாகி விட அந்த மாத்திரை டிமான்ட் ஆக இருக்க, மாத்திரைக்காக பல கொலைகள் நடக்க ,கிளைமாக்ஸ் அசத்தல்....
===========
படக்குழுவினர் விபரம்...
Directed by Neil Burger
Produced by Leslie Dixon
Ryan Kavanaugh
Scott Kroopf
Screenplay by Leslie Dixon
Based on The Dark Fields by
Alan Glynn
Starring Bradley Cooper
Abbie Cornish
Robert De Niro
Music by Paul Leonard-Morgan
Cinematography Jo Willems
Editing by Tracy Adams
Naomi Geraghty
Distributed by Relativity Media
Release date(s) March 18, 2011
Running time 105 minutes
Country United States
Language English
Budget $27 million[1]
Gross revenue $145,526,120
===============
படத்தின் டிரைலர்..
===================
பைன்ல்கிக்....
இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படம்... காரணம் பரபரப்பான திரைக்கதைக்கான... அடுத்து என்ன அடுத்து என்ன என்ற கேள்வியை இந்த படம் ஏற்படுத்துவதால் ....
இந்த படம் சென்னை...அலிபாய் ,மூவிஸ்நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது.. செல்..90031 84500
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
ReplyDeleteமேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!
இடியட் அரை மணிநேரம் பண்ணி என்ன கின்னஸ்சாதனையா பண்ண போற???இன்னைக்கு மாத்திர போட்டு அரைமணிநேரத்துக்கு ஆசைபடறே... பட் மாத்திரை போட்டு உடம்பு தளர்ந்துடுச்சின்னா? அரை செகன்டுக்கூட எழுந்து நிற்காது... அப்புறம் அறையில் மூலையில உட்கார்ந்து கிட்டு எழுந்துரு அஞ்சலி.. எழுந்துரு அஞ்சலி எழுந்துரு என்று சொல்லிக்கொண்டு இருப்பதை தவிர வேறு வழியில்லை......
ReplyDeleteTHIS IS TRUE. ALL KIND OF VIAGRAS + SPRAYS ONLY ACT FOR FIRST TIME.
சற்று பெருத்த குட்டியாக பார்ப்பதால் அடையாளம் சட்டென தெரியவில்லை...
I LIKE THESE HUMOR SENTENCES..